என்ன தான் அமெரிக்க அரசியல்வாதிகள் குள்ள நரித்தனத்தோடு செயல் பட்டாலும், சில விஷயங்களை அவர்களிடமிருந்து நம்மூர் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளலாம்:
தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்.
நம்மூரில் நடப்பதென்ன? இவன் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டான். தேர்தல் இயந்திரத்தில் கோளாறு. இவன் ஜெயிச்சது செல்லாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கலை. பணநாயகம் தான் ஜெயித்திருக்கிறது. அப்படி இப்படின்னு அறிக்கை விடாமல், மற்றவறது வெற்றியை ஒப்புக் கொண்டு, வெற்றி பெற்றவர் மக்கள் பணியாற்றுவதில் உதவி செய்ய வேண்டும்.
"If you can't accept defeat, you have no rights to celebrate victory" என்று யாரோ சொன்னது ஞாபகம். யாரும் சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் சொன்னதாகவே வச்சுக்கலாம்.
எந்த ஒரு அரசியல் பதவியிலும் இரண்டு தடவைக்கு மேல் இருக்கலாகாது
இந்தியத் திருநாட்டில் மட்டும் தான், அரசியல் வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் கிடையாது. உயிருள்ள வரை பதவியிலிருக்கலாம். ஒருவர் மூத்த பதவியிலிருந்து தானாக விலக வேண்டுமென்றால், ஒன்று அவருக்கு உடல் ஆரோக்கியம் கை கொடுக்காமலிருக்க வேண்டும். நம்ம வாஜ்பாய் தாத்தா மாதிரி. அல்லது மக்கள் மத்தியிலும் கட்சியிலும் செல்வாக்கு குறைய வேண்டும். வி.பி.சிங் மாதிரி. இவ்விரண்டும் இல்லையென்றால், ஜ்யோதி பாசு, கருணாநிதி போல் 4-5 தடவை ஒரே பதவியிலிருந்து அடுத்தவர்களுக்கு வழி விடாமலிருப்பது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும். ஒரே ஆள் மீண்டும் பதவிக்கு வருவதை மக்கள் தான் தடுக்க வேண்டும்.
யார் நாட்டை ஆளப் போகிறார்கள் என்பதை முன்பே சொல்லிவிடுவது நல்லது
நம் நாட்டில் தான் (அதுவும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் தான்) மக்கள் தேர்தலுக்குப் போகும் போது, இந்தக் கட்சி ஜெயித்தால் யார் நாட்டை ஆளப் போகிறார்கள் என்று தெரியாமல் சமீப காலமாக ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1989’ல் வி.பி.சிங்குக்கும் சந்திர சேகருக்கும் இடையே போட்டி. யார் பிரதமராவதென்று? 2004’ல் சொல்லவே வேண்டாம். மன்மோஹன் சிங்கே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார், தாம் பிரதம மந்திரி ஆவோம் என்று. மற்ற மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தலிலும் இந்தக் குளறுபடி நடந்த வண்ணமே இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஜெயித்தால் யார் முதல் மந்திரி ஆவார்கள் என்றே தெரியாததால் மக்கள் பி.ஜெ.பி’க்கு ஓட்டுப் போட்டார்கள். "A known devil is better than an Unknown Angel" என்று மக்கள் நினைத்தார்களாவெனத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் நேஷனல் கான்ஃபரன்ஸுக்குள்ளேயே குழப்பம், ஃபரூக் அப்துல்லாவா, அவரது மகனா என்று. இப்படியிருக்க மக்களுக்கெப்படி நம்பிகை வரும். அதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர் தான் பிரதம/முதல் மந்திரி ஆவார் என்று முன் கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.
பதவியேற்பு விழாவை பொது மக்களிடையே நடத்துவது
எனக்குத் தெரிந்து 1990’ல் சந்திர சேகர் மட்டுமே வெட்ட வெளியில் பதவியேற்றுக் கொண்டார். ஒருவர் நாட்டின் தலைவராகப் பதவியேற்பதை ஏன் ராஷ்டிரபதி பவனிலும் ஆளுநர் மாளிகையிலும் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களை இந்தப் பதவியில் மக்கள் தானே? அப்படிப் பட்ட மக்களுக்கு மத்தியிலல்லவா இவர்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அது இதுவென்று சொல்வதெல்லாம் வெறும் சால்ஜாப்பு. After all, A Democracy is at least by the people, if not for and of the people, right?
நான் இந்த ஜாதிக் காரன், அந்த ஜாதிக் காரன் என்று சலுகைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்
ஒபாமா, அமெரிக்காவின் முதல் கறுப்பு ஜனாதிபதி, என்று இந்தியாவின் ஊடகங்கள் தவிர வேறெந்த ஊடகங்களும் சொல்ல வில்லை. ஒபாமாவும் தனது தேர்தல் பிரசாரத்தில், நான் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன், தாழ்த்தப்பட்டவன்; அதனால் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லை. ரொம்ப கண்ணியமாக நடந்து கொண்டார். ஆனால், நம் நாட்டில், “நான் தாழ்த்தப்பட்ட ஜாதிக் காரன். அதனால் ஓட்டுப் போடுங்கள்” என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். அரசியல்வாதிகளெல்லாருமே ஒரே ஜாதி தான். ஏமாற்றும் ஜாதி. அவர்களை யாரும் எந்த விதத்திலும் தாழ்த்தி விட வில்லை. அவர்கள் தான் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.
நம் நாட்டு அரசியல்வாதிகள் தங்களது நடத்தையை எவ்வளவோ மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கு. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கேன். என் வீட்டுக்கு ஆடோ சூமோ ஏதும் வராதிருந்தால் நல்லது.
India could still be the largest democracy, in terms of the number of who don't vote.
37 comments:
ya true
here... in my native i have seen ppl fighting after election results being annonced.
it means tht the politicans are honouring the ppl decission and doubting on it
few years back a bus with college students were burnt by th politicians for a judgement given by the court....
now the same party says tht they care for dtudents
when it... the same person sittin in th post for post means.... he will be tend to do the same mistake for all of th years
india is not purely a democratic country..... th ppl are generally asked to vote for a party.... if a party can chose a pm means and wy th govt is spendin unnesscary funds in election..... here th party is just being negotiated to form an govt.
in our country oly a piryani parcel and fifty rupees decide th election. not the ppl s judgement
election are conducted in an socialistic way..... thts wy all use th name of caste to earn vote for earning while thy are in th rule
i hav heard ppl sayin " டேய். அவன் நாம சாதி..... நமக்கு நல்லது தான் பண்ணுவான்"
சூடான அரசியல் பதிவு?
//இவன் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டான். தேர்தல் இயந்திரத்தில் கோளாறு. இவன் ஜெயிச்சது செல்லாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கலை. பணநாயகம் தான் ஜெயித்திருக்கிறது//
தென்னிந்தியாவிலதான் இந்த போக்கு அதிகமா இருக்குமுன்னு எனக்கு தோணும். வடக்கே அட்லீஸ்ட் அடிப்படை நாகரிகத்தையாவது கடைபிடிக்கறாங்களே
//எந்த ஒரு அரசியல் பதவியிலும் இரண்டு தடவைக்கு மேல் இருக்கலாகாதுஇந்தியத் திருநாட்டில் மட்டும் தான், அரசியல் வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் கிடையாது. //
இது இன்னும் ஒரு கொடுமை. மக்களுக்கு நல்லது செய்ய நினைச்ச பதவியில்லாம வெளியில இருந்து அட்வைஸ் செய்யலாமே
அதை விட்டுட்டு சாகும்போது கூட சேர்லதான் சாகணுமின்னு நினைக்கறாங்க போல :)
ஜ்யோதி பாசு, கருணாநிதி
ரெண்டு பேரையும் ஒப்பிடாதிங்க
ஜ்யோதி பாசு பிரதமர் பதவிக்கு அடிப்பட்டப்ப
போகமாட்டேன் சொன்னார்
இங்க நம்ப ஆளு ஈழ தமிழர்கள் எப்படி வேனாலும்
சாகட்டும் எனக்கு பதவி தான் முக்கியம்
உக்காந்துருக்கார்
நீங்க சொன்ன கருத்து சரி தான்
ஆனா ரெண்டு ஒப்பிட்டு சொன்ன விதம் தான்
super post nga vijay.. ungaloda blog Vettivambu nu solladinga super ah irukku..
Aana neenga solra changes ellam nadantha naadu urpadum.. but naama Karunanidhi maari allunga vida maatanga..
Ungalukku enadhu pongal matrum puthandu nalvazhuthukkal..
mooraikkatheenga.. late ah than solli irukken.. sorry .. sorry.. ok
\\ MayVee said...
here... in my native i have seen ppl fighting after election results being annonced.
it means tht the politicans are honouring the ppl decission and doubting on it\\
Politicians doubting people's verdict should be punished by People only.
\\ MayVee said...
when it... the same person sittin in th post for post means.... he will be tend to do the same mistake for all of th years\\
Everybody tends to do Mistakes. But allowing the same person to do the same mistake again and again is a bigger mistake.
\\in our country oly a piryani parcel and fifty decide th election. not the ppl s judgement\\
Very True. But what to do? Such is the state of our country.
\\ தாரணி பிரியா said...
சூடான அரசியல் பதிவு?\\
மிக்க நன்றி. பெண்களுக்கு அரசியல் பிடிக்காதென்று நினைத்தேன். :-)
\\தென்னிந்தியாவிலதான் இந்த போக்கு அதிகமா இருக்குமுன்னு எனக்கு தோணும். வடக்கே அட்லீஸ்ட் அடிப்படை நாகரிகத்தையாவது கடைபிடிக்கறாங்களே\\
தென்னகத்தில் ஆ ஊ என்று குதிக்கிறார்கள். வட இந்தியாவில் சிலெண்டாக இருந்து ஆட்சிக்கே குழி பறிக்கிறார்கள் :-)
\\ மக்களுக்கு நல்லது செய்ய நினைச்ச பதவியில்லாம வெளியில இருந்து அட்வைஸ் செய்யலாமே\\
மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைப்பவன் பதவியிலிருந்து தான் செய்யணும் என்றில்லை. ஆனால் கொள்ளையடிக்கணும் என்றால், பதவியில் இருந்தால் தான் முடியும். ஆனால் இது அரசியல் கட்டமைப்பு சார்ந்த விஷயம். இதை மாற்ற எந்த அரசியல்வாதியும் முன் வர மாட்டான்.
\\ smile said...
ஜ்யோதி பாசு, கருணாநிதி
ரெண்டு பேரையும் ஒப்பிடாதிங்க
ஜ்யோதி பாசு பிரதமர் பதவிக்கு அடிப்பட்டப்ப
போகமாட்டேன் சொன்னார்
இங்க நம்ப ஆளு ஈழ தமிழர்கள் எப்படி வேனாலும்
சாகட்டும் எனக்கு பதவி தான் முக்கியம்
உக்காந்துருக்கார்
நீங்க சொன்ன கருத்து சரி தான்
ஆனா ரெண்டு ஒப்பிட்டு சொன்ன விதம் தான்\\
ஸ்மைல், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நான் கருணாநிதியையும் ஜ்யோதி பாசுவையும், வெகு பதவியில் இருந்தவர், இருப்பவர் என்ற ரீதியில் மட்டுமே பார்க்கிறேன். வேறெந்தெ criteria'உம் இல்லை.
தொடர்ந்து வருகை தாருங்கள் :-)
\\ kanaguonline said...
super post nga vijay.. ungaloda blog Vettivambu nu solladinga super ah irukku..
Aana neenga solra changes ellam nadantha naadu urpadum.. but naama Karunanidhi maari allunga vida maatanga..
Ungalukku enadhu pongal matrum puthandu nalvazhuthukkal..
mooraikkatheenga.. late ah than solli irukken.. sorry .. sorry.. ok\\
வாங்க கனகு. எங்கே ரொம்ப நாளா காணாமப் போயிட்டீங்க?
\\Karunanidhi maari allunga vida maatanga.. \\
விட்டுத் தள்ளுங்க. அடுத்த தேர்தல்ல பார்த்துக்கலாம். என்ன தமிழகத்தில் மாற்று சக்தி, இன்னும் மோசமா இருக்கு :-)
\\Ungalukku enadhu pongal matrum puthandu nalvazhuthukkal..\\
நீங்க வாழ்த்தினதற்காக தங்கமணியை இன்னொரு தடவை சர்க்கரைப் பொங்கல் செய்யச் சொன்னாப் போகுது :-)
//தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்
டெல்லியில் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.
//எந்த ஒரு அரசியல் பதவியிலும் இரண்டு தடவைக்கு மேல் இருக்கலாகாது
இது ஒரு நல்ல ஐடியா என்று நினைக்கிறேன்.
romba sorry nga.. enoda time management konjam seri illa athan visit panna mudiyala.. thirumbi vandhutom la.. :)
Pathunga thangamani pongal kodukarathu pathila otha koduthura poranga.. indha maari reason ku :)
romba sorry nga.. enoda time management konjam seri illa athan visit panna mudiyala.. thirumbi vandhutom la.. :)
Pathunga thangamani pongal kodukarathu pathila otha koduthura poranga.. indha maari reason ku :)
\\Karthik said...
டெல்லியில் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.\\
அங்கே வெளிப்படையா திட்டறதில்லை. ஆனால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு குழி பறித்துக் கொண்டே இருப்பார்கள்.
//
இவன் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டான். தேர்தல் இயந்திரத்தில் கோளாறு. இவன் ஜெயிச்சது செல்லாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கலை. பணநாயகம் தான் ஜெயித்திருக்கிறது
//
விஜய் அரசியலிலும் புட்டு புட்டு
வச்சிருக்கீங்க, எல்லா துறையிலும்
நல்ல அறிவு உங்களுக்கு
ஜனநாயகம் மக்களுக்காகவே
வாழ்பவர்கள் தான் சரியான
ஜனநாயக வாதி,
வாக்குக்கள் வாங்க வாக்குக்கள் கொடுத்தால் போதாது என நினைக்கும்
வெகு சாதரண மக்களை ஏமாற்றும் அரசியல் அமைப்பு மாறினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ரொம்ப நல்லது
என்ன விஜய் நான் சொல்லறது சரிதானே!!!
\\ RAMYA said...
ஜனநாயகம் மக்களுக்காகவே
வாழ்பவர்கள் தான் சரியான
ஜனநாயக வாதி,
வாக்குக்கள் வாங்க வாக்குக்கள் கொடுத்தால் போதாது என நினைக்கும்
வெகு சாதரண மக்களை ஏமாற்றும் அரசியல் அமைப்பு மாறினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ரொம்ப நல்லது
என்ன விஜய் நான் சொல்லறது சரிதானே!!!\\
இன்றைக்கு அரசியல் என்பது ஒரு தொழில். ஒரு 50 வருடங்களுக்கு முன்னால் வரை அது ஒரு தர்மம். எப்போது தர்மம் என்ற மனப்பான்மை ஒழிந்து தொழில் என்ற போக்கு துவங்குகிறதோ, அப்போது, தர்மம் ஆகிறது.
என்ன ஒரு ”ஸ்ரீ ஸ்ரீ சத்குரு விஜயானந்தா சுவாமிகள்” எஃபக்ட் கொடுக்கறேனா? :-)
நீங்க சொல்றது 100% கரெக்ட்.
ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்று , கல்வி செல்வங்களில் வளர்ச்சி பெற்ற அமெரிக்க மக்களே இப்பொழுதுதான் முதல் கறுப்பின அதிபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . இந்தியாவில் தேவே கௌட மட்டும் தான் பிற்படுத்தப் பட்ட பிரதமர் . மற்றெல்லோரும் உயர் வகுப்பினர் . ஜாதிபிரிவு என்னும் நோய் இருக்கும் வரையில் அதைப் பற்றி பேசத்தான் வேண்டும் . அதில் அடக்கப் பட்டவர்கள் பெரும் சலுகைகள் அவர்களுக்கு மறுக்கப் பட்ட உரிமைகள். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் தவிர ஏனைய இடங்கள் பொது இடங்கள் தானே . எத்தனை கட்சிகள் அவற்றில் தாழ்த்தப் பட்டவர்களை நிற்கவைக்கின்றன. இந்த இட ஒதுக்கிடும் இல்லாவிட்டால் டி.ஆர்.பாலு போல் ராஜாவால் ஊழல் பண்ண முடியுமா? பூபதி
ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்று , கல்வி செல்வங்களில் வளர்ச்சி பெற்ற அமெரிக்க மக்களே இப்பொழுதுதான் முதல் கறுப்பின அதிபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . இந்தியாவில் தேவே கௌட மட்டும் தான் பிற்படுத்தப் பட்ட பிரதமர் . மற்றெல்லோரும் உயர் வகுப்பினர் . ஜாதிபிரிவு என்னும் நோய் இருக்கும் வரையில் அதைப் பற்றி பேசத்தான் வேண்டும் . அதில் அடக்கப் பட்டவர்கள் பெரும் சலுகைகள் அவர்களுக்கு மறுக்கப் பட்ட உரிமைகள். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் தவிர ஏனைய இடங்கள் பொது இடங்கள் தானே . எத்தனை கட்சிகள் அவற்றில் தாழ்த்தப் பட்டவர்களை நிற்கவைக்கின்றன. இந்த இட ஒதுக்கிடும் இல்லாவிட்டால் டி.ஆர்.பாலு போல் ராஜாவால் ஊழல் பண்ண முடியுமா? பூபதி
கட்டுரையின் கட்சி கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை . தேர்தலில் ஜாதி, மதம் ஒரு குறிப்பிட்ட பங்கை வகித்த போதிலும் பெரும்பாலான வேட்பாளர்கள் அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து தான் வெற்றி பெறுகின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்று , கல்வி செல்வங்களில் வளர்ச்சி பெற்ற அமெரிக்க மக்களே இப்பொழுதுதான் முதல் கறுப்பின அதிபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . இந்தியாவில் தேவே கௌட மட்டும் தான் பிற்படுத்தப் பட்ட பிரதமர் . மற்றெல்லோரும் உயர் வகுப்பினர் . ஜாதிபிரிவு என்னும் நோய் இருக்கும் வரையில் அதைப் பற்றி பேசத்தான் வேண்டும் . அதில் அடக்கப் பட்டவர்கள் பெரும் சலுகைகள் அவர்களுக்கு மறுக்கப் பட்ட உரிமைகள். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் தவிர ஏனைய இடங்கள் பொது இடங்கள் தானே . எத்தனை கட்சிகள் அவற்றில் தாழ்த்தப் பட்டவர்களை நிற்கவைக்கின்றன. இந்த இட ஒதுக்கிடும் இல்லாவிட்டால் டி.ஆர்.பாலு போல் ராஜாவால் ஊழல் பண்ண முடியுமா? பூபதி
உங்கள் கருத்தைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி பூபதி.
என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், ”நான் தாழ்த்தப்பட்டவன்” என்று ஒரு முறை கூட ஒபாமா சொல்லிக் கொள்ள வில்லை. தான் தாழ்த்தப் பட்டவன் என்ற சலுகையை முன்னிறுத்தி ஓட்டு சேகரிக்க வில்லை. இந்த மனப் பக்குவத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். மனப் பக்குவமும் முதிற்சியும் அடைய 300-400 ஆண்டுக் கணக்கெல்லாம் தேவையில்லை.
நீங்கள் தொடர்ந்து வருகை தாருங்கள். உங்கள் கருத்துக்களை உரக்கச் சொல்லுங்கள் :-)
நன்றி.
// ஆனால் கொள்ளையடிக்கணும் என்றால், பதவியில் இருந்தால் தான் முடியும். //
ரொம்ப சரியா சொன்னிங்க விஜய்...
\\தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்\\
ஆம், இதற்காக அவர்களை நாம் கண்டிப்பாக பாறாட்டித்தான் ஆகவேண்டும்.
நான் ஒடுக்கப் பட்டவன் என்று சொல்லிக் கொள்ளாமை அமெரிக்காவில் வெள்ளை இனத்ட்டுதவரின் ஓட்டுக்ககளைப் பெற்றுத் தரும் என்ற தேர்தல் கணக்கு ஒரு மனமுதிர்ச்சியே. இந்தியாவிலும் யாரும் நான் ஒடுக்கப் பட்டவன் என்று சொல்லி ஓட்டுக் கேட்பதில்லை.அதெல்லாம் ரெம்ப நுட்பமாகவே கையாளப் படுகிறது .தவிரவும் ஜாதி மதத்தின் பெயரால் ஓட்டுக் கேட்பது இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. மாயாவதியின் அரசியல் எப்படிப் பட்டதாக இருப்பினும் அவர் பெற்ற வெற்றி ஒபாமவின் வெற்றியுடன் ஒப்பிடத் தக்கதே. பூபதி
\\இந்தியத் திருநாட்டில் மட்டும் தான், அரசியல் வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் கிடையாது\\
rightly pointed out.
முதுமை காலத்தில் மூளையின் திறன் குறைந்துவிடுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்க நன்கு வயதான நம் ஆரசியல்வாதிகளால் எப்படி பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முடியும்???
என்றுதான் நம் மக்கள் இதை உணரப்போகின்றனரோ....
Office leave ah baasu?? Sema form la avalavu seekiram ivalavu postu!! :O
enna thaan sollunga... nambha ooru election-briyani, election-tv, election-roadu, election-kaasu maadiri obama vaala poda mudiyuma???
//நான் இந்த ஜாதிக் காரன், அந்த ஜாதிக் காரன் என்று சலுகைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்//
varusaa varusam idhai adipadaiyaai vaithe pala katchi aarampikuraanga!!!
//தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்//
amma vin favorite dialog IDHU JANANAYAGAM ILLAI PANANAYAGAM... enakku therinji 2001 la ADMK win pannum podhu kalaignar sonnaru MUDALIL VETRI PETRA AMMAIYAARUKU EN VAALTHUKKAL....
அருமையான் பதிவு. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
\\ PoornimaSaran said...
// ஆனால் கொள்ளையடிக்கணும் என்றால், பதவியில் இருந்தால் தான் முடியும். //
ரொம்ப சரியா சொன்னிங்க விஜய்...\\
நீங்க சொன்னா சரி தான் :-)
\\ கலாட்டா அம்மனி said...
\\தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்\\
ஆம், இதற்காக அவர்களை நாம் கண்டிப்பாக பாறாட்டித்தான் ஆகவேண்டும்.\\
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி, கலாட்டா :-) இது தான் உங்களின் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன். மீண்டும் வாங்க.
\\ Karthik said...
Office leave ah baasu?? Sema form la avalavu seekiram ivalavu postu!! :O
enna thaan sollunga... nambha ooru election-briyani, election-tv, election-roadu, election-kaasu maadiri obama vaala poda mudiyuma???\\
வேலை பிச்சு வாங்கறாங்க. நீங்க வேற!
\\ viji said...
அருமையான் பதிவு. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி\\
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. அப்படியே ஐடியா கொடுத்ததற்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மறுபடியும் வாங்க.
ஐடியா எல்லாம் நல்லா இருக்கு
இது எல்லாம் நடந்தா கண்டிப்பா நம்ம நாட்டை அடித்து கொள்ள உலகில் வேற நாடு இருக்காது
//"If you can't accept defeat, you have no rights to celebrate victory" என்று யாரோ சொன்னது ஞாபகம். யாரும் சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் சொன்னதாகவே வச்சுக்கலாம்.
//
ரொம்ப கரக்ட் விஜய்...
\\ Arun Kumar said...
ஐடியா எல்லாம் நல்லா இருக்கு
இது எல்லாம் நடந்தா கண்டிப்பா நம்ம நாட்டை அடித்து கொள்ள உலகில் வேற நாடு இருக்காது\\
வாங்க பாஸ். அதனால் தான் இப்படியெல்லாம் அடிச்சுக்க ஆள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியெலாம் நடக்க மாட்டிங்குதோ? :-)
\\ முகுந்தன் said...
//"If you can't accept defeat, you have no rights to celebrate victory" என்று யாரோ சொன்னது ஞாபகம். யாரும் சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் சொன்னதாகவே வச்சுக்கலாம்.
//
ரொம்ப கரக்ட் விஜய்...\\
இந்த மாதிரியான பொன் மொழிகளையெல்லாம் பேடண்ட் செய்ய முடியுமா? :-)
vijay said
"
இந்த மாதிரியான பொன் மொழிகளையெல்லாம் பேடண்ட் செய்ய முடியுமா? :-)"
பண்ணி ; என்ன பண்ண போறீங்க ???
Post a Comment