Pages

January 15, 2009

வழக்கொழிந்த சொற்கள்

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்குடி என்றொரு பழமொழியுண்டு. தமிழ்க் குடியே அவ்வளவு பழமையானதென்றால், தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருக்கும். இன்றைய தேதியில் உலக மக்களிடையே புழக்கத்திலுள்ள மிகவும் பழமையான மொழி, தமிழ் மொழியேயாகும்.

அப்படிப் பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் மொழி இன்று பல பரிணாம வளற்சிகளைக் கண்டுள்ளது. தமிழிலுள்ள பல வார்த்தைகள் மற்ற மொழிகளுக்குப் போயுள்ளன. தமிழும் மற்ற மொழிகளிலிருந்து பல வார்த்தைகளை இறக்குமதி செய்திருக்கிறது. இன்று நாம் பேசும் வார்த்தைகளில் தொண்ணூறு விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தைகள் தான்.

தமிழில் வழக்கொழிந்த வார்த்தைகள் என்னவென்று ஆராய்ச்சி செய்ய எனக்கு அவ்வளவு அறிவு போதாது. சமீபத்தில் படித்துத் தெரிந்து கொண்ட வார்த்தைகள் இப்போது தமிழில் புழக்கத்திலேயே இல்லாத வார்த்தைகள் என்று சொல்ல வேண்டும். சுஜாதா அவர்கள் எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்” என்ற புத்தகத்தில், இந்த இரு வார்த்தைகள் பற்றி எழுதியிருந்தார்.

வெருகடி - ஒரு உள்ளங்கை அளவு.

சிறங்கை - மூன்று நான்கு கைகளால் அள்ளும் அளவு.

பெண்மணிகள் இனி சமையல் குறிப்பு எழுதும் போது, ஒரு சிறங்கை அரிசியை கொதிக்க விட்டு ஒர் வெருகடி உப்பு ஜீரகத்தை சேர்த்துக் கொள்ளவும் என்று எழுதலாம்.

ஏதோ, எனக்குத் தெரிந்த தமிழில் வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுத அழைப்பு விடுத்த குந்தவைக்கு அநேக நன்றிகள். ஏற்கனவே நான் வழக்கொழிந்த சொற்கள் பற்றி முன்றோரு பதிவு எழுதியிருக்கேன். முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

சரி என்னை குந்தவை மாட்டி விட்டாங்க. நான் யாரையாவது மாட்டி விடலையென்றல், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது.
யாரை மாட்டி விடலாம் என்று யோசித்துப் பார்த்ததில் இவர்கள் தான் ஞாபகத்துக்கு வந்தனர்.

சாரலாய் வரும் பூர்ணிமா சரன்

சென்னைத் தமிழன் முகுந்தன் எத்தனை அறிதான தமிழ் வார்த்தைகள் சொல்கிறாரென்று பார்ப்போம்.

லொள்ளும் நக்கலைத் தவிர வேறு வேலை வெட்டியில்லாமலிருக்கும் கார்த்திக்.

சீக்கிரம் சொல்லுங்கப்பா, தமிழ் பாட நூலிலிருந்து அருஞ்சொற்பொருள்ளிலிருந்து சுட்டாவது சொல்லுங்கள்.

15 comments:

Divyapriya said...

ஹய்யா...me the first :))
என்னென்னவோ சொல்றீங்க விஜய்...இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்ல :((

MayVee said...

ya. am used to hear different kinds of tamil in hostel since there were atleast 1 person from each district of tamil nadu.
for first three i used to get very confused.
anyways
வெருகடி , சிறங்கை. இந்த இரண்டு வார்த்தைகளும் கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பக்கம் உள்ள கிரமம்களில் வழக்கில் உள்ளன என்று நினைகிறேன்.

Karthik said...

அரசியல்வாதி ஆரம்பிச்சீங்களேன்னு பயத்தோடுதான் படிச்சேன். நல்ல பதிவு. :)

திருக்குறளை எடுத்து பார்த்தால், ஒவ்வொரு குறளிலும் குறைந்தது ஒரு வார்த்தையாவது காணாமல் போயிருக்கும்.

Karthik said...

அரசியல்வாதி மாதிரி.

விஜய் said...

\\ Divyapriya said...
ஹய்யா...me the first :))
என்னென்னவோ சொல்றீங்க விஜய்...இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்ல :((\\

நியாயமா இதை நீங்க சுஜாதா அவர்கள் கிட்ட தான் கேட்கணும். நான் வெறுமென ctrl+c and ctrl+v தான் பண்ணிருக்கேன்.

விஜய் said...

\\வெருகடி , சிறங்கை. இந்த இரண்டு வார்த்தைகளும் கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பக்கம் உள்ள கிரமம்களில் வழக்கில் உள்ளன என்று நினைகிறேன்.\\
அப்படியா? நல்லது :-)

விஜய் said...

\\அரசியல்வாதி ஆரம்பிச்சீங்களேன்னு பயத்தோடுதான் படிச்சேன். நல்ல பதிவு. :)\\
நன்றி கார்த்திக்!! வெட்டிவம்பில் அரசியல் சாயம் எதுவும் படிந்து விடக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனாக இருக்கிறேன். பார்ப்போம் எவ்வளவு நாள் இந்த கவனம் நீடிக்கிறதென்று

\\திருக்குறளை எடுத்து பார்த்தால், ஒவ்வொரு குறளிலும் குறைந்தது ஒரு வார்த்தையாவது காணாமல் போயிருக்கும்.\\
இன்னும் பத்து வருடங்கள் கழித்து திருக்குறளே காணாமல் போனாலும் போகலாம் :-(

MayVee said...

பொன்னியின் செல்வன்ல வர சில வார்த்தைகள்..... அதை படிப்பதற்கு முன் நான் கேட்டதே இல்லை.

PoornimaSaran said...

என்னென்னவோ சொல்லி இருக்கீங்க விஜய்..

வெருகடி , சிறங்கை..
ஆமா இது என்ன மொழி?

PoornimaSaran said...

//நான் யாரையாவது மாட்டி விடலையென்றல், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது.
//

மாட்டி விட்டாச்சா போங்க போயி நல்லா தூங்குங்க:(

முகுந்தன் said...

என்ன விஜய் , என்னை போய் ஹிஹி ...
வழக்கொழிந்த சொற்கள்... என்னவோ போங்க ,
நான் கேள்விப்பட்ட ஒன்னு ரெண்டு சொற்கள் இருக்கு..

கலாட்டா அம்மனி said...

நல்ல பதிவு.

இந்த பதிவினால் இரண்டு நல்ல தமிழ் வார்த்தைகள் (வெருகடி , சிறங்கை) கற்றுக்கொண்டேன்.

Anonymous said...

\\வெருகடி , சிறங்கை. இந்த இரண்டு வார்த்தைகளும் கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பக்கம் உள்ள கிரமம்களில் வழக்கில் உள்ளன என்று நினைகிறேன்.\\
இதைப்படித்த பிறகு தான் எனக்கு நியாபகம் வந்தது. எங்கப்பா அடிக்கடி 'சிறங்கை' உபயோகப்படுத்துவார்கள். ஆனால் 'வெருகடி' எனக்கு புதிது தான்.

நல்ல பதிவு விஜய்.

Karthik said...

ennangana??? enna tag panniteenga?? Valakolintha sorkala theduradhukulla naa tholanji piduven poala irukke!!!

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers