Pages

February 02, 2009

ரயில் பயணங்களில்

சில பேருக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். முதல் நெடுந்தொலைவுப் பயணம், நெல்லையிலிருந்து பம்பாய் போய், அங்கிருந்து அஹமதாபாத் போய்விட்டு வந்தது தான். இன்னும் சிறிது நேரம் ரயில் பயணம் நீடிக்காதா என்று நானும் என் தங்கையும் ஏங்கியதுண்டு. விற்பதெல்லாவற்றையும் வாங்கித் தின்ன ஆசையாயிருக்கும், ஆனால் அப்பா எல்லாத்தையும் வாங்கித் தரமாட்டார். முக்கியமாக எண்ணெய் பலகாரங்கள், ம்ஹும், கிடையவே கிடையாது.

பட்டம் பெற்று சென்னையிலிருந்து பம்பாய்க்கு (சாரி, இப்போது அது மும்பை) தனியாகப் பயணித்தது தான் முதன் முதலில் இவ்வளவு தூரம், தனியாகப் பயணித்தது. தனியாகப் பயணித்தாலும் பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டே போனது, சுவையானதொரு அனுபவம். அவர் சௌதியில் வேலையில் இருப்பவர். குடும்பம், இங்கே இந்தியாவில் அரக்கோணத்தில். தனது குழந்தை பிறந்த பிறகு 1 வருடம் கழித்துத் தான் பார்க்க விடுமுறை கொடுத்தார்களாம். ரொம்பவே பாவமாக இருந்தது. பம்பாயிலிருந்து திரும்பும் போது, சற்று போர் அடித்தது. எல்லோரும் வாயில் பான் போட்டு, மென்று முழுங்காமல் வெளியே உமிழும் ஜாதி. அவர்களைப் பார்த்தாலே இரண்டு வேளை குளிக்கணும், அவ்வளவு அழுக்கு. அதனால் பேச்சும் கொடுக்கவில்லை. எனது பல ரயில் பயணங்களில் மிகவும் போர் அடித்த பயணமென்றாலும், கையில் வேலையுடன் அம்மாவைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் இருந்ததால், அவ்வளவு கஷ்டமாக இல்லை.

அடுத்த நீண்ட பயணம், சென்னையிலிருந்து கொல்கத்தா. இப்போதும், கூட வந்தவர்களில் பெறும் பாலும் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆங்கிலத்தில் பேச்சையெடுத்தாலும், “கீ ஆஷ்சே”, “எந்துக்கு, ஆய்ப்பெயந்தி” என்று அவர்கள் பாஷையிலேயே பதிலளிக்க, நம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா வரை மௌன விரதம் தான். சாப்பிடாமல் வேணுமானாலும் இருந்து விடலாம், ஆனால் பேசாமல் இருப்பது மிகக் கொடுமை. நல்ல வேளை, சிட்னி ஷெல்டன் கையோடு இருந்ததால் பிழைத்தேன். ஆனால் முதன் முதலில் ஒரு புதிய பயணத்தை மேற்கொண்டதால், அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. வழியில் திருநங்கையர் தொல்லை தான் தாங்க முடியவில்லை. பத்து ரூபாய்க்கு குறைவாக வாங்க மறுத்துவிட்டனர்.

ஆனால் ஒரு பயங்கரமான ரயில் பயணம் மேற்கொண்டது, கொல்கத்தாவிலிருந்து, அப்போதைய பீஹாரிலிருந்த ராஞ்சி வரை சென்றது தான். கொல்கத்தாவில் என்னுடைய வேலை, நிலக்கரிச்சுரங்களில் உபயோகப்படுத்தப்படும் மஷின்களைப் பழுது பார்ப்பதும், உபரி பாகங்கள் விற்பனை செய்யும் வேலை. எல்லா கஸ்டமர்களும் இந்திய அரசாங்க கம்பெனிகள் தான். கோல் இந்தியா லிமிடட்டின் சப்சிடியரி கம்பனிகள். அவர்களது சுரங்கங்கள் எல்லாம், பீஹார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் தான்.

ஒரு முறை ராஞ்சி அருகிலுள்ள பிப்பர்வார் என்ற இடத்திற்கு போகவேண்டும். கொல்கத்தாவிலிருந்து இரவு ரயில் பிடித்து காலையில் ராஞ்சி போய் விடலாம். ராஞ்சியிலிருந்து இன்னொரு பஸ் அல்லது டாக்ஸி பிடித்து பிப்பர்வார் போய்விடலாம். இந்த பிப்பர்வார் பற்றி ஒரு சிறு முன்னோட்டம். இது இந்தியாவில் மிகவும் பின் தங்கிய டாப் 5 மாவட்டங்களில் ஒன்று. சாலை, கிடையாது, பஸ் வசதி உண்டு ஆனால் பாதுகாப்பானதில்லை, மறு நாள் காலையில் நியூஸ் பேப்பர் வேண்டுமானால் முந்தைய நாளே சொல்லி வைக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு கிடையவே கிடையாது, மின்சார வசதி ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் கிடைத்தால் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம். இவ்வளவு க்ஷேத்திர மஹிமையுள்ள புண்ணியஸ்தலத்திற்குப் போய்வா என்று நெற்றியில் திலகமெதுவும் இடாமல் விடை கொடுத்தனிப்பினார் எனது பாஸ். அதுவும் எதற்காக? மூன்று வருடங்களாக 20 லட்சம் கொடுக்காமல் டபாய்க்கும் ஒரு கஸ்டமரிடமிருந்து பணம் வாங்கி வருவதற்காக. இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.

எப்போதும் கம்பனியில் இரண்டாம் கிளாஸ் ஏ.ஸி தான் முன் பதிவு செய்து தருவார்கள். என் போதாத காலம், ஏ.ஸி கிடைக்கவில்லை. ஸ்லீப்பர் தான் கிடைத்தது. “இளம் கன்று பயமறியாது” என்ற பழமொழிக்கேற்ப, பரவாயில்லை, நான் இதிலேயே போகிறேன் என்று வீர வசனம் முழங்கக் கிளம்பினேன். புறப்படுவதற்கு முன், ஆஃபீஸிலுள்ள ஒரு பிஹாரி என்ன நினைத்தானோ, என்னிடம் வந்து ராஞ்சி வரை போக வேண்டாம், அதற்கு முன்னாலே ஒரு ஸ்டேஷனில் (பெயர் ஞாபகம் இல்லை) இறங்கிக் கொண்டு அங்கிருந்து போனால், பிப்பர்வாருக்குச் சீக்கிரம் போய் விடலாம் என்று ஐடியா கொடுத்தான்.

ரயிலிலும் ஏறி உட்கார்ந்தாயிற்று. ரயில் பெட்டிக்குள் கழிப்பறையிருக்கிறதா அல்லது இந்த ரயில் பெட்டியே ஒரு பெரிய கழிப்பறையா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அவ்வளவு துர்நாற்றம். சீட்டில் உட்கார்ந்த படியே கீழே வெற்றிலையைத் துப்பியிருக்கிறார்கள், நிலக்கடலை மற்றும் வாழைப்பழதொலிகள் கீழே இரந்திருக்கின்றன, மின் விசிறியிலிருந்து காற்றை விட சத்தம் தான் அதிகம் வருகிறது. மின் விளக்கு ஏதோ ஜீரோ வாட்ஸ் பல்ப் போல் எரிகிறது, என் எதிரே உட்கார்ந்திருப்பவன், பிச்சைக் காரனோ என்று எண்ணும் அளவிற்கு அவ்வளவு அழுக்காக இருக்கிறான். கழிப்பறை, சொல்லவேண்டாம், வாந்தியெடுத்து விடுவீர்கள். இந்த நிலையில் ஒரு ரயில் பெட்டியில் இன்னும் 9 மனி நேரப் பயணம் என்று நினைத்தாலே கதி கலங்கிற்று.
நல்ல வேளை ஹௌரா ஸ்டேஷனிலேயே சாப்பிட்டு விட்டதால் இந்த சூழ்நிலையில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டேன்.

டிக்கட் பரிசோதகரிடம், நான் இறங்க வேண்டிய இடம் எப்போது வரும் என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “எங்கிருந்து வருகிறாய்” என்றார்.
“கொல்கத்தா” என்றேன்.
“யூஹ் டோண்ட் லுக் லைக் அ பென்ஹ்காலிஹ். ஆர் யூ நியு டு த பிளேஸ். (You don't like a Bengali. Are you new to the place)” என்று பெங்காலியில் கடைந்தெடுத்த ஆங்கிலத்தில் கேட்டார்.
“ஐ ஆம் ஃப்ரம் சென்னை ” என்றேன்.
“இஃப் யூ ப்ஹாண்ட் டு கோ அலைப்ஹ் டு சென்னை, டோண்ட் கெட் டவுன்ஹ் இன் தாட் பிளேஸ். கோ டு ராஞ்சி. (If you want to go alive to Chennai, don't get down in that place. Go to Ranchi)” என்றார்.

ஆஹா, இதென்னடாயிது, இப்படி கிலியைக் கிளப்புறாரே என்று நினைத்துக் கொண்டு, ராஞ்சி வரை போகலாம் என்று நினைத்துக் கொண்டு படுத்துரங்கினேன். சில நேரம் கழித்து, என்னை யாரோ நகர்த்துவது போலிருந்தது. காலில் ஏதோ பட்டது போல் இருந்தது. என்னடாயிது என்று பார்த்தால், என்னை சுற்றி மக்கள், நான் படுத்திருந்த லோவர் பெர்த்தில் இரண்டு பேர், மேல் பெர்த்தில் ஓருத்தன், மிடில் பெர்த் விளிம்பில் இன்னொருத்தன், எல்லா விளக்கும் எரிகிறது. என்னடாயிது என்று பார்த்தால், தான்பாத் ஸ்டேஷனில் இவர்கள் எல்லோரும் ஏறியிருக்கிறார்கள். அடேய் சண்டாளா, இறங்குடா என்று சொல்ல மனம் துடிக்கிறது. ஆனால் ஆஃபீஸில் எனக்கு நூறு முறை புத்திமதி சொல்லியனுப்பியிருந்தார்கள், “யாரிடமும் வம்பு செய்யாதே” என்று. அதனால் என்னுள் உயிர்த்தெழுந்த அந்நியன், அப்படியே அம்பி அவதாரமெடுத்து, “ப்ஹையா, யே, மேரா பெர்த் ஹை. ஆப் கஹீன் ஔர் ஜாயியே (அண்ணேன், இது என் பெர்த், நீங்க வேறெங்காவது போங்களேன்)” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னேன். அதற்கு அந்தாள், “ஹம் நே ப்ஹீ டிக்கட் கரீதி ஹை. ஹம் கோ ப்ஹி யஹான் பைட்னெ கா ஹக் ஹை. (நாங்களும் டிக்கட் வாங்கியிருக்கோம், எங்களுக்கும் இங்கே உட்கார்ந்து போவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது)” என்றான். எதிரே பிச்சைக் காரன் போலிருந்தவன் சொன்னான், “யேஹ் பீஹார் ஹை. குச் மத் போல்னா. (இது பீஹார், இங்கே ஒண்ணும் சொல்லக் கூடாது)”.

அடப்பாவிகளா, உங்க ஊர்லெ ரிசர்வேஷன் என்றொரு கான்செப்டே கிடையாதா என்று நொந்து கொண்டேன். டிக்கட் பரிசோதகரிடம் போய் முறையிடலாமா என்று பார்த்தால், அவர் இந்த மாதிரி ஏறின ஒரு ஆளுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். நல்ல வேளை அடுத்த ஓரிரண்டு மணி நேரத்திலேயே எல்லாக் கூட்டமும் இறங்கி விட்டது.

அப்புறம் எனக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. விடியும் வரை புரண்டு புரண்டு படுத்த படியே, ராஞ்சி வரை சென்றேன். வாழ்வில் இந்த ரயில் பயணம் என்னால் மறக்கவே முடியாதது. திரும்பி வரும் போது, நல்ல வேளை, ஏ.ஸி கோச் கிடைத்ததோ, நான் பிழைத்தேனோ. அதிலும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

46 comments:

ஷாஜி said...

வாங்க விஜய்.. ரொம்ப நாளாச்சு...

Divyapriya said...

//ஆனால் பேசாமல் இருப்பது மிகக் கொடுமை//

உண்மை தான் :)

//இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.//

ஹா ஹா :D

//If you want to go alive to Chennai, don't get down in that place. Go to Ranchi//

ஆஹாஆஆஆ!!!

//அதிலும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்//

எழுதுங்க எழுதுங்க…ரயில் கொசுவர்த்தி ரொம்ப நல்லா இருக்கு :) அப்படியே வாரணம் ஆயிரம் கதை மாதிரி எதாவது இருந்தாலும் பயப்படாம தைரியமா எழுதுங்க ;)

RAMYA said...

//
அடுத்த நீண்ட பயணம், சென்னையிலிருந்து கொல்கத்தா. இப்போதும், கூட வந்தவர்களில் பெறும் பாலும் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆங்கிலத்தில் பேச்சையெடுத்தாலும், “கீ ஆஷ்சே”, “எந்துக்கு, ஆய்ப்பெயந்தி” என்று அவர்கள் பாஷையிலேயே பதிலளிக்க, நம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா வரை மௌன விரதம் தான். சாப்பிடாமல் வேணுமானாலும் இருந்து விடலாம், ஆனால் பேசாமல் இருப்பது மிகக் கொடுமை. நல்ல வேளை, சிட்னி ஷெல்டன் கையோடு இருந்ததால் பிழைத்தேன். ஆனால் முதன் முதலில் ஒரு புதிய பயணத்தை மேற்கொண்டதால், அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. வழியில் திருநங்கையர் தொல்லை தான் தாங்க முடியவில்லை. பத்து ரூபாய்க்கு குறைவாக வாங்க மறுத்துவிட்டனர்.
//


ஆமா நீங்களும் என் கட்சி தானே
எனக்கும் பேசாமே இருந்தா தலை
வெடிச்சுடும், நெஞ்சு வலி வந்திடும்
இப்படி இல்லாம் பிரச்சனைகள்
இருக்கு, மொழி தெரியாமே
மாட்டிகிட்டால் அவ்வளவுதான்
தெலுங்கு பாஷை சூப்பர் ஒ சூப்பர்

MayVee said...

"ஆனால் அப்பா எல்லாத்தையும் வாங்கித் தரமாட்டார். முக்கியமாக எண்ணெய் பலகாரங்கள், ம்ஹும், கிடையவே கிடையாது."
எல்லா அப்பகளும் இப்படி தானா ........


"தனது குழந்தை பிறந்த பிறகு 1 வருடம் கழித்துத் தான் பார்க்க விடுமுறை கொடுத்தார்களாம்"
ரொம்ப பாவம் அவரு ......

"சிட்னி ஷெல்டன் கையோடு இருந்ததால் பிழைத்தேன்."
same blood ........

"வழியில் திருநங்கையர் தொல்லை தான் தாங்க முடியவில்லை. பத்து ரூபாய்க்கு குறைவாக வாங்க மறுத்துவிட்டனர்."
அட பாவமே......

" மின்சார வசதி ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் கிடைத்தால் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம்."
நாம ஆற்காடு வீரசாமி அப்போ அங்கே minister இருந்த்ருபர் போல

"(If you want to go alive to Chennai, don't get down in that place. Go to Ranchi)”"
அவ்வளவு மோசமான ஊர அது .....

“ஹம் நே ப்ஹீ டிக்கட் கரீதி ஹை. ஹம் கோ ப்ஹி யஹான் பைட்னெ கா ஹக் ஹை. (நாங்களும் டிக்கட் வாங்கியிருக்கோம், எங்களுக்கும் இங்கே உட்கார்ந்து போவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது)”
இது தான் சமத்துவ இந்திய நு நினைசிடங்க போல

RAMYA said...

இந்த பதிவை படிச்சு கொஞ்ச நஞ்சம் இருக்கிற ஆங்கில அறிவு மங்கிப் போச்சு எப்படித்தான் சமாளிச்சீங்களோ
நல்ல அருமையா எழுதறீங்க

எழுதுங்க எழுதுங்க
நம்ப எல்லாம் நிறைய எழுதி ஒரு
காமெடி படம் எடுக்கலாம்
வாழ்த்துக்கள் விஜய் !!!

MayVee said...

ramya said "எழுதுங்க எழுதுங்க
நம்ப எல்லாம் நிறைய எழுதி ஒரு
காமெடி படம் எடுக்கலாம்
வாழ்த்துக்கள் விஜய் !!!"

எல்லாம் ஒரு குரூப் அக தான் இருக்கிங்க போல

MayVee said...

ramya said "எழுதுங்க எழுதுங்க
நம்ப எல்லாம் நிறைய எழுதி ஒரு
காமெடி படம் எடுக்கலாம்
வாழ்த்துக்கள் விஜய் !!!"

எல்லாம் ஒரு குரூப் அக தான் இருக்கிங்க போல

PoornimaSaran said...

//இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.//

நல்லா சொல்லி இருக்கீங்க

இனியவள் புனிதா said...

//சில பேருக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடித்தமான விஷயம்.//

நேக்கும் பிடிக்கும் ;-)

புதியவன் said...

//இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.//

நல்லா எழுதி இருக்கீங்க விஜய்...

Arun Kumar said...

super post boss. i too experienced the same kind of exp in bihar..

Karthik said...

என்னங்க இப்படி பயப்படுத்துறீங்க? இந்த சம்மர் லீவில் கண்டபடி ரயிலில் சுத்தலாம் என்று இருக்கிறோம்.

எனிவே, சூப்பர்ப் போஸ்ட்.
:))

முகுந்தன் said...

विजय साब,
ये पोस्ट बहुत अच्छा है!!

முகுந்தன் said...

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் திருப்பூரில் வேலை செய்த போது ட்ரைனில் சென்னை வருவது சுகமாக இருக்கும்.. ஆனால் திரும்ப போகும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்...

விஜய் said...

\\ ஷாஜி said...
வாங்க விஜய்.. ரொம்ப நாளாச்சு...\\

ஆமாம் பாஸ் கொஞ்சம் வேலை ஜாஸ்தி.

விஜய் said...

\\ Divyapriya said...
எழுதுங்க எழுதுங்க…ரயில் கொசுவர்த்தி ரொம்ப நல்லா இருக்கு :) அப்படியே வாரணம் ஆயிரம் கதை மாதிரி எதாவது இருந்தாலும் பயப்படாம தைரியமா எழுதுங்க ;)\\

நமக்கு எழுதத் தெரிந்தது எல்லாம் கொசுவர்த்திச்சுருள் தான்.

விஜய் said...

\\ RAMYA said...
ஆமா நீங்களும் என் கட்சி தானே
எனக்கும் பேசாமே இருந்தா தலை
வெடிச்சுடும், நெஞ்சு வலி வந்திடும்
இப்படி இல்லாம் பிரச்சனைகள்\\

ஆமாமாம், அதுவும் பொண்ணுங்களுக்கு பேசாமல் இருக்க முடியுமா.

சும்மாத்தான் சொன்னேன். கோவிச்சுக்காதீங்க :-)

விஜய் said...

\\ MayVee said...
எல்லா அப்பகளும் இப்படி தானா ........
\\

உங்க வீட்டுலயும் இதே கதை தானா?

\\நாம ஆற்காடு வீரசாமி அப்போ அங்கே minister இருந்த்ருபர் போல \\


அதை விட மோசம் :-)

\\இது தான் சமத்துவ இந்திய நு நினைசிடங்க போல\\

இருக்கலாம் :-)

விஜய் said...

\\ RAMYA said...
எழுதுங்க எழுதுங்க
நம்ப எல்லாம் நிறைய எழுதி ஒரு
காமெடி படம் எடுக்கலாம்
வாழ்த்துக்கள் விஜய் !!!\\

கண்டிப்பாக. காமெடி டிராக்குக்கு நீங்க வசன கார்த்தாரிணி :-)

விஜய் said...

\\ PoornimaSaran said...
//இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.//

நல்லா சொல்லி இருக்கீங்க\\

ரொம்ப தாங்க்ஸ் அம்மணி :-)

விஜய் said...

\\ இனியவள் புனிதா said...
//சில பேருக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடித்தமான விஷயம்.//

நேக்கும் பிடிக்கும் ;-)\\
அப்படியா ரொம்ப நல்லது :-)

விஜய் said...

\\ புதியவன் said...
//இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.//

நல்லா எழுதி இருக்கீங்க விஜய்..\\

ரொம்ப நன்றிங்கண்ணா :-)

விஜய் said...

\\ Arun Kumar said...
super post boss. i too experienced the same kind of exp in bihar..\\
Really, share your experiences too :-)

விஜய் said...

\\ Karthik said...
என்னங்க இப்படி பயப்படுத்துறீங்க? இந்த சம்மர் லீவில் கண்டபடி ரயிலில் சுத்தலாம் என்று இருக்கிறோம்.
\\

போய் வா கார்த்திக். எல்லாமே ஒரு அனுபவம் தான் :0-)

விஜய் said...

\\ முகுந்தன் said...
विजय साब,
ये पोस्ट बहुत अच्छा है!!\\

நன்றி ஹை :-)

kanagu said...

Hi Vijay,

You have been awarded:

http://kanaguonline.wordpress.com/2009/02/03/my-new-horizons-and-more-awards/

RAMYA said...

//
விஜய் said...
\\ RAMYA said...
ஆமா நீங்களும் என் கட்சி தானே
எனக்கும் பேசாமே இருந்தா தலை
வெடிச்சுடும், நெஞ்சு வலி வந்திடும்
இப்படி இல்லாம் பிரச்சனைகள்\\

ஆமாமாம், அதுவும் பொண்ணுங்களுக்கு பேசாமல் இருக்க முடியுமா.

சும்மாத்தான் சொன்னேன். கோவிச்சுக்காதீங்க :-)

//

கோவமா எனக்கா விஜய்
என்னா சி.பிள்ளைத்தனமா இருக்கு ???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நோ பீலிங்க்ஸ் பா

RAMYA said...

//

விஜய் said...
\\ RAMYA said...
எழுதுங்க எழுதுங்க
நம்ப எல்லாம் நிறைய எழுதி ஒரு
காமெடி படம் எடுக்கலாம்
வாழ்த்துக்கள் விஜய் !!!\\

கண்டிப்பாக. காமெடி டிராக்குக்கு நீங்க வசன கார்த்தாரிணி :-)

//

இது மட்டும் நடக்கலை நீங்க அவ்வளவுதான் என்ன நல்லா மாட்டினீங்களா ??

சரி சரி எப்போ ஷூட்டிங்
கால்ஷீட் ரொம்ப இருக்கு
சீக்கிரம் கொஞ்சம் அட்வான்ஸ்
அனுப்பினா கையெழுத்து
போடுவேன்

இல்லே இல்லேன்னா அப்புறம்
கால்ஷீட் பிரச்சனையை வந்திடும்!!!

தாரணி பிரியா said...

பேசாம இருக்கறது சான்ஸே இல்லை :)

//அவர்களைப் பார்த்தாலே இரண்டு வேளை குளிக்கணும், அவ்வளவு அழுக்கு. //

அடடா இந்த மாதிரி ஆளுங்க கூடவா பயணம் நொந்து போக வேண்டி இருந்திருக்கும் :(

//திவ்யா சொன்னது
எழுதுங்க எழுதுங்க…ரயில் கொசுவர்த்தி ரொம்ப நல்லா இருக்கு :) அப்படியே வாரணம் ஆயிரம் கதை மாதிரி எதாவது இருந்தாலும் பயப்படாம தைரியமா எழுதுங்க :)//

இதுக்கும் ஒரு பெரிய ரிப்பீட்டு :)

விஜய் said...

\\ RAMYA said...
கோவமா எனக்கா விஜய்
என்னா சி.பிள்ளைத்தனமா இருக்கு ???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நோ பீலிங்க்ஸ் பா\\

அப்போ சரி, இனி நிறைய வாரலாம் :-)

விஜய் said...

\\ RAMYA said...
இது மட்டும் நடக்கலை நீங்க அவ்வளவுதான் என்ன நல்லா மாட்டினீங்களா ??

சரி சரி எப்போ ஷூட்டிங்
கால்ஷீட் ரொம்ப இருக்கு
சீக்கிரம் கொஞ்சம் அட்வான்ஸ்
அனுப்பினா கையெழுத்து
போடுவேன்\\

என்னதிது வசனகர்த்தா எல்லாம் கால்ஷீட் கொடுக்கும் படி காலம் மாறிவிட்டதா? என்ன கொடுமை சார் இது :-)

விஜய் said...

\\தாரணி பிரியா said...
அடடா இந்த மாதிரி ஆளுங்க கூடவா பயணம் நொந்து போக வேண்டி இருந்திருக்கும் :(\\

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் நாடு சொர்க பூமி :-)

RAMYA said...

//
விஜய் said...
\\ RAMYA said...
கோவமா எனக்கா விஜய்
என்னா சி.பிள்ளைத்தனமா இருக்கு ???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நோ பீலிங்க்ஸ் பா\\

அப்போ சரி, இனி நிறைய வாரலாம் :-)

//

இதெல்லாம் எங்க பொது வாழ்க்கையில் சகஜம் அப்பா !!!

RAMYA said...

//
விஜய் said...
\\ RAMYA said...
இது மட்டும் நடக்கலை நீங்க அவ்வளவுதான் என்ன நல்லா மாட்டினீங்களா ??

சரி சரி எப்போ ஷூட்டிங்
கால்ஷீட் ரொம்ப இருக்கு
சீக்கிரம் கொஞ்சம் அட்வான்ஸ்
அனுப்பினா கையெழுத்து
போடுவேன்\\

என்னதிது வசனகர்த்தா எல்லாம் கால்ஷீட் கொடுக்கும் படி காலம் மாறிவிட்டதா? என்ன கொடுமை சார் இது :-)

//

நாங்க எல்லாம் கலியுக வசனகர்த்தா
அது .............

Anonymous said...

அண்ணே நான் கூட ஒரிசா-ஜார்க்கன்ட் பார்டரில் உள்ள சோட என்ற இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலை செய்தேன். இரும்பு சுரங்கம், புழுதி வாழ்க்கை. நீங்கள் கூறிய அத்தனை அனுபவத்தையும் பெற்ற சக தமிழன் நானும் கூட (இப்ப உங்களுக்கு கொஞ்சம் மனசு தேறியிருக்குமே). விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும் (ஒன்பது பகுதியாக எழுதியிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை).

http://englishkaran.wordpress.com/2008/12/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/

அன்புமணி said...

என்ன இருந்தாலும் நம்ம தமிழ்நாடு தமிழ்நாடுதான்! பழகிறதிலேயும்,சுத்தத்திலேயும்...

விஜய் said...

\\Sriram said...
அண்ணே நான் கூட ஒரிசா-ஜார்க்கன்ட் பார்டரில் உள்ள சோட என்ற இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலை செய்தேன். இரும்பு சுரங்கம், புழுதி வாழ்க்கை. நீங்கள் கூறிய அத்தனை அனுபவத்தையும் பெற்ற சக தமிழன் நானும் கூட (இப்ப உங்களுக்கு கொஞ்சம் மனசு தேறியிருக்குமே). விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும் (ஒன்பது பகுதியாக எழுதியிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை).\\

வருகைக்கு ரொம்ப தான்க்ஸ் ஸ்ரீ ராம். கண்டிப்பா உங்க வலைத்தளத்துக்கு வந்துடறேன் :-)

விஜய் said...

\\அன்புமணி said...
என்ன இருந்தாலும் நம்ம தமிழ்நாடு தமிழ்நாடுதான்! பழகிறதிலேயும்,சுத்தத்திலேயும்..\\

தமிழ்நாடு எவ்வளவோ தேவலாம். ஆனா குஜராத், பஞ்சாப் நம்மூரை விட நல்லா இருக்கும்’னு கேள்விப் பட்டிருக்கேன். போய்ப் பார்க்கணும் :-)

வருகைக்கு ரொம்ப நன்றி, அன்புமணி :-)

Anonymous said...

rombha super ah ezhuthi irukkenga Vijay.. rayil payangal epothume enaku rombha pidikkum..
bihar.. anga makkala kora solla mudiyathu.. avanga valarchikku yaarume onnume pannala.. TN thavara ella edathulayum apdi than irukkum nu nenaikeren.. Kerala la apdi than irundhudu.. anga thaniya EMU illa nu nenaikeren :(

Adhutha padivukku wait pannitu irukken :)

விஜய் said...

\\kanaguonline said...
rombha super ah ezhuthi irukkenga Vijay.. rayil payangal epothume enaku rombha pidikkum.. \\
எனக்குத் தெரிந்த் இது வரை, யாருமே இதை மறுத்ததில்லை :-)


\\TN thavara ella edathulayum apdi than irukkum nu nenaikeren.. Kerala la apdi than irundhudu.. anga thaniya EMU illa nu nenaikeren :(\\

பஞ்சாப் குஜராட் தமிழகத்தை விட இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். போய்ப் பார்க்கணும் :)

Karthik said...

vaanga anna.. rombha naal aachu?? naan vandhu.. he he

//திரும்பி வரும் போது, நல்ல வேளை, ஏ.ஸி கோச் கிடைத்ததோ, நான் பிழைத்தேனோ. //

S-AC coach kidachi irundaa??? adhaan vijayoda dubukku appan... :P

ponnakk said...

என்னதிது வசனகர்த்தா எல்லாம் கால்ஷீட் கொடுக்கும் படி காலம் மாறிவிட்டதா? என்ன கொடுமை சார் இது :-)

//

நாங்க எல்லாம் கலியுக வசனகர்த்தா
அது .............
why vijai u want to take the part of vasanakartha... why don't u act as hero? is there any objection from anybody... Oh...... from heroine... .. itharkku yaarum ontum seyamudiyathu..
sorry ppaa- but photo paarthaa hero vaa nadikalam...

Karthik said...

nanbha.. naa oru pey kada eludhi irukken... Romance konjam thookala, horror konjam kammiya.. english blog la.. eppadi irukkunu padicithu sollunga!!!

Anonymous said...

//ரயில் பெட்டிக்குள் கழிப்பறையிருக்கிறதா அல்லது இந்த ரயில் பெட்டியே ஒரு பெரிய கழிப்பறையா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அவ்வளவு துர்நாற்றம். சீட்டில் உட்கார்ந்த படியே கீழே வெற்றிலையைத் துப்பியிருக்கிறார்கள், நிலக்கடலை மற்றும் வாழைப்பழதொலிகள் கீழே இரந்திருக்கின்றன, மின் விசிறியிலிருந்து காற்றை விட சத்தம் தான் அதிகம் வருகிறது. மின் விளக்கு ஏதோ ஜீரோ வாட்ஸ் பல்ப் போல் எரிகிறது//

எங்க மாமா , ஏறக்குறைய இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலும் வேலை பார்த்திருக்கிறார். அவர் 'தமிழ்நாட்டை கோவில் கட்டி கும்பிடனும்' என்று தான் சொல்லுவார். அதுவும் பஸ், ரயில், தொழில், பழக்கம் எல்லாவற்றிலும் தொல்லை தராத ஊர் என்றால் அது தமிழ்நாடு தான் என்று கூறுவார்.
நல்ல சிரித்தேன்.....

விஜய் said...

\\Blogger Karthik said...
vaanga anna.. rombha naal aachu?? naan vandhu.. he he\\

ஆமாம், ரொம்ப பிசியா???

விஜய் said...

\\ kunthavai said...
எங்க மாமா , ஏறக்குறைய இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலும் வேலை பார்த்திருக்கிறார்.\\
அவர் டி.டி.ஆரா? கோபிச்சுக்காதீங்க. சும்மா தமாஷு தான். Infactஅவர் கொடுத்து வைச்சிருக்கணும். நம்ம தாய்த்திருநாட்டின் நிறைய பகுதிகளைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நம்மில் எத்தனை பேருக்குக் கிடக்கும்??


\\அவர் 'தமிழ்நாட்டை கோவில் கட்டி கும்பிடனும்' என்று தான் சொல்லுவார். அதுவும் பஸ், ரயில், தொழில், பழக்கம் எல்லாவற்றிலும் தொல்லை தராத ஊர் என்றால் அது தமிழ்நாடு தான் என்று கூறுவார்.
நல்ல சிரித்தேன்.....\\
என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் தெற்கு (கேரளத்தத் தவிர) மற்றும் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், உ.பி, ம.பி, பீஹார், இந்த மாநிலங்கள் கொஞ்சம் மோசம் :-)