Pages

November 29, 2008

சிரம் தாழ்த்தி வணங்குவோம்

நெஞ்சை உறுக்கும் 60 மணிநேர தாக்குதலுக்குப் பிறகு, அனைத்து தீவிரவாதிகளையும், தேசிய பாதுகாப்புப் படையினர் கொன்று விட்டனர். நூற்றுக்கணக்கான அப்பாவி ஜனங்களின் உயிரைக் குடித்த இந்த மிருகங்களை வீழ்த்துவதில், தனது உயிரைப் பணயம் வைத்த அதிகாரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவோம். இது போன்ற தன்னலமற்ற வீரர்களைப் பெற்ற தாய்மார்கள்
புண்ணியவதிகள். இவர்களது இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

தனது அலுவலகத்தில் உட்கார்ண்ந்து கொண்டு ஆணைகள் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்காது, களத்தில் உயிர் நீத்த ஹேமந்த் கார்கரே


களத்தில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரி திரு. விஜய் சாலஸ்கர்
காயமுற்ற காவலரைப் பாதுகாத்து, தீவிரவாதிகளோடு ஒத்தையாளாகப் போரிட்டு இனினயிர் நீத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன்.





களத்தில் விஜய் சாலஸ்கர் மற்றும் ஹேமந்த கார்கரேயொயோடு உயிர் நீத்த போலீஸ் கமிஷ்னர், அஷோக் காம்தே.



இவர்களைப் போல் இன்னும் உயிர் நீத்த் காவலர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குவோம். இவர்களது குடும்பங்களின் சோகத்தில் நாமும் பங்கு பெறுவோம். இது போல் இனியொரு சம்பவம் நடக்காமலிருக்க அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்கள் ஓட்டு வங்கிகளைப் பார்க்காமல் மக்களின் பாதுகாப்பு பற்றி யோசிக்க முனைய வேண்டும்.

இவர்களோடு இன்னும் முகம் தெரியாத 10 காவலர்கள் உயிர் நீத்துள்ளனர். அவர்களைப் பற்றி எந்தவொரு மீடியா சானலுக்கும் அக்கறை இல்லை. இன்று காலை NDTV'யில் அவர்கள் பெயர் ஸ்க்ரோல் செய்தனர். அவர்களது குடும்பங்கள் இவர்களது இழப்பிலிருந்து மீண்டு வர ஆண்டவன் அவர்களுக்கு சக்தி வேண்டிக்கொள்வோம்.

தீவிரவாத முயற்சியில் யார் ஈடுபட்டிரிந்தாலும், அவன் / ள் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையெடுக்க வேண்டும். கல்வியறிவு இல்லாததால் தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் ஒரு சிலர் கூறுகிறார்கள். மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பார்த்தால் கல்வியறிவு இல்லாதவர்கள் மாதிரியா இருக்கிறார்கள்? ஸ்காட்லேண்டில் ஒரு எரியும் ஜீப்பை விமான நிலையத்தில் மீது மோதியவன் கல்வியறிவு இல்லாதவனா?

இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு தாக்கக் கூடாது என உண்ணாவிரத நாடம் நடத்தும் கேடு கெட்ட கூத்தாடி கூட்டங்கள் இது போல் இன்னொரு சம்பவ்ம் நடக்காதிருக்க அரசாங்கம் சட்டங்கள் கொண்டு வரவேண்டி வலியுறுத்தி ஒரு அரைமணி நேர உண்ணாவிரதமாவது மேற்கொள்வார்களா?
இந்த போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்கள் குடும்பங்களுக்கு ஆதரவு குரல்கள் கொடுப்பார்களா?

யார் எப்படியேனும் போகட்டும். நாம் இன்று பாதுகாப்பாக வாழ்வதற்கு, தனது உயிர்களை துச்சமென மதித்து உயிர் விட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன் னஅஞ்சலி செலுத்துவோம்.

ஜெய் ஹிந்த்!!

11 comments:

மேவி... said...

ya. we should also remember them in our action too by taking necessary action in order to avoid these.

a seprate team should be formed in armed force and be trained in all aspects to handle situations like these.

முகுந்தன் said...

இந்த படங்களையும் செய்திகளையும் பார்த்ததும் என்னால் எதுவும் டைப் செய்ய முடியவில்லை....

உயிரிழந்த அனைவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம்...

Karthik said...

இவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Divyapriya said...

இனியும் இது போல எதுவும் நடக்காமல் இருக்கணும்கறது தான், எல்லாரோட பிராத்தனையும்...

Karthik said...

inga 3 naala current illa vijay anna.. engal idame oru theevu poala aayidichi... paper kuda illa... avargalin athmaa shanti adaiya en praathanaigal.. meendhum idhu poala ondru nadakka venaam...

Anonymous said...

என்ன எழுதுவது என்றே தெரியவில்லை விஜய்.
ஒவ்வொரு உயிரையும் உருவாக்க எவ்வளவு தவமிருந்திருப்பார்கள், அவர்களுடைய பெற்றோர்கள். இப்படி அநியாயமாக......

அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதாக. அப்பாவி ஜனங்களை துன்புறுத்தும் இந்த காட்டுமிராண்டி தனம் ஒழிய கடவுளை பிராத்திப்போம்.

Karthik said...

aiaa... anda mumbai kaavalargal RAJ THACKERAY avaroda aatkal appa ennatha pudhinkithu irundaanga nu adha pathiyum eludunga pa!!

Poornima Saravana kumar said...

இவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

rapp said...

:(:(:(

rapp said...

இதுல ஞாநி(பத்திரிக்கையாளர்) சொல்லிருக்க கருத்துக்களை வழிமொழிகிறேன். அம்பி அண்ணன் பிளாக்கில் ஒரு அனானி கொடுத்திருக்கார்.

Divya said...

Post padichutu........konja neram enala vera ethuvum sinthika mudila,
apdiyey kati potuduchu :(

Praying for the families who had lost their loved ones.