Pages

November 21, 2008



மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 5

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 4

குழந்தைக்குக் கூட கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பற்றி விபரம் தெரிந்தாயிற்று. இந்த கார்ட் நம்முடைய வங்கிக் கணக்கை ஒரு அட்டையில் எப்படி பதிய வைத்திருக்கின்றதோ அப்படியே, நமது செட்-டாப்-பாக்ஸ் கணக்கை ஒரு கார்டில் போட்டு வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் தான் ஸ்மார்ட் கார்ட் (Smart Card). சரி இதற்குப் பெயர் ஏன் ஸ்மார்ட் கார்ட். அப்படியென்ன ஸ்மார்ட்டா இது பண்ணுகிறது?
மாதச் சந்தா கணக்கை சேமித்து வைப்பது ஒன்றும் இன்றைய தேதியில் பெரிய ராக்கெட் விஞ்ஞானம் இல்லையே? ஒரு காந்த ஸ்ட்ரிப்பில் கூட இந்த விபரங்களை அடக்கி வைக்கலாமே? பின் எதற்காக இதற்குப் பெயர் ஸ்மார்ட் கார்ட்? அப்படி ஸ்மார்டாக என்ன இருக்கிறது இதில்?

இந்தக் கார்டில் ஒரு சிறு மைக்ரொ பிராஸஸர் (Micro Processor) இருக்கிறது. இதற்குத் தான் செட்-டாப்-பாக்ஸிற்கு வரும் சிக்னல்களை டிக்ரிப்ட் செய்யும் தில்லாலங்கடி விஷயம் தெரியும். இந்த கார்டே ஒரு சிறு கம்பியூடர் போலத்தான். இதில் ஓடும் மென்பொருள் தான் என்க்ரிப்ட் ஆகியிருக்கும் சிக்னல்களை டிக்ரிப்ட் செய்யும் தந்திரம் அறிந்திருக்கும்.

ஒவ்வொரு பிராட்காஸ்டருக்கும் இந்த என்க்ரிப்ஷன் தான் அவர்களது உயிர்நாடி. டிக்ரிப்ஷன் தவிர சந்தா தாரரின் மற்ற பல விபரங்களையும் இது தெரிந்து வைத்திருக்கும். இந்த மாதம் சந்தா செலுத்தியாயிற்றா போன்ற விபரங்கள் முதற்கொண்டு இந்த கார்டில் பதிந்து வைத்திருக்கும். ஒவ்வொரு செட்-டாப்-பாக்ஸிற்கும் ஒரு அடையாள எண்ணும் உண்டு. இன்னாரிடம் இந்த செட்-டாப்-பாக்ஸ் இருக்கிறது என்ற டேடா பேஸ் (database) பிராட்காஸ்டரிடம் (டாடா ஸ்கை போன்றவர்கள்) இருக்கும்.
அதே போல் ஒவ்வொரு ஸ்மார்ட் கார்டுக்கும் ஒரு அடையாள எண் உண்டு. இந்த ஸ்மார்ட் கார்ட் இந்த செட்-டாப்-பாக்ஸில் இருக்கிறது என்ற விபரமும் இருக்கும். மேலும் அந்த ஸ்மார்ட் கார்டை வேறொரு செட்-டாப்-பாக்ஸில் போட முடியாது. இதை பாக்ஸ் - கார்ட் பேரிங் (Box Card Pairing) என்று சொல்லுவார்கள்.
"லேய், கிளாஸ்ல வாத்தியார் லொள்ளு தாங்க முடியலையேன்னு பார்த்தா, நீ அதுக்கு மேல ராவுதியே"ல நினைக்கீயளா? இருங்க இருங்க. இந்த மாதிரி ஸ்மார்ட் கார்ட், சாஃப்ட்வேர் அது இதுன்னு யாருக்கும் ஒண்ணும் புரியாம இந்த பிராட்காஸ்டர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படியென்று பார்ப்போம்.
ஒரு பிராட்காஸ்டரிடமிருந்து செட்-டாப்-பாக்ஸ் வாங்கிவிட்டால், அவர்கள் கொடுக்கும் ஸ்மார்ட் கார்ட் வைத்துத் தான், நம்மால் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். இந்த செட்-டாப்-பாக்ஸிற்கு ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுப்பதால் அவ்வளவு எளிதாக இன்னொரு செட்-டாப்-பாக்ஸ் வாங்கிட முடியாது. அதாவது ஒரு சன் -டைரக்ட் செட்-டாப்-பாக்ஸில் டாடா ஸ்கை ஸ்மார்ட் கார்டை உபயோகிக்க முடியாது. அதே போல் ஒரு செட்-டாப்-பாக்ஸோடு பேர் செய்து விட்ட ஸ்மார்ட் கார்டை அதே பிராட்காஸ்டரின் இன்னொரு செட்-டாப்-பாக்ஸில் போட முடியாது. இதற்கு Interoperability என்று சொல்வார்கள். எப்படி மைக்ரோசாஃப்ட் தயாரிக்கும் மென்பொருளை விண்டோஸ் இயங்காத வேறெந்த கணினியிலும் எப்படி செலுத்த முடியாதோ அப்படித்தான் இதுவும்.
அது ஏன் இப்படி? எல்லாம் பணம் பண்ணும் யுக்தி தான். இப்போது நிறைய வீடுகளில் ஒன்றிற்கு மேலாக டி.வி.க்கள் வந்து விட்டன. ஒரே கேபிள் இணைப்பு மட்டும் கொடுத்து, அதையே வெவ்வேறு டி.வி.க்களுக்குக் கொடுக்கலாம்.
ஆனால் செட்-டாப்-பாக்ஸில் இந்த சங்கதியெல்லாம் செல்லுபடியாகாது. ஒரே டிஷ் வேணுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு செட்-டாப்-பாக்ஸ் வாங்கியே ஆகணும். ஒவ்வொரு செட்-டாப்-பாக்ஸிற்கும் தனித்தனியாக சந்தா கட்டியாகணும். இப்போது உங்கள் வீட்டில் கீழே ஹாலில் ஒரு டி.வி.யும் மாடியில் இன்னொரு டி.வி.யும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு டி.வி.க்கும் தனித்தனியாக செட்-டாப்-பாக்ஸ் வாங்கியாகணும். சரி பாக்ஸாவது போனால் போகிறது, ஒரு சந்தா மட்டும் செலுத்தினால போதுமென்று நினைத்தீர்களானால், அதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாக்ஸிற்கும் ஒரு தனிப்பட்ட கார்டைத் தான் உபயோகப்படுத்தியாகணும். ஒரு பாக்ஸிலுள்ள கார்டை இன்னொரு பாக்ஸில் உபயோகப்படுத்த முடியாது என்பதற்கு தொழில் நுட்ப ரீதியான எந்தவொரு காரணமும் இல்லை. எல்லாம் துட்டு செய்யும் வழிமுறைகள்.
இந்தத் தில்லு முல்லு பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமால் அரசாங்கமும், வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் தகவல் ஒளிபரப்பு தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் ஒரு நிறுவனம் உள்ளது. அது, Telecom Regulatory Authority of India, சுருக்கமாக TRAI. இந்த நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் தான் இன்று செல் ஃபோன் இணைப்புகள் இவ்வளவு மலிவாக இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு இது வரை பிராட்காஸ்டர்கள் செய்யும் தில்லு முல்லு அவ்வளவாக தெரியவில்லை. வெளிநாடுகளில் என்ன செய்கிறார்களோ, குறிப்பாக இங்கிலாந்தில் என்ன தொழில் நுட்பம் இருக்கிறதோ அதையே ஈயடிச்சான் காப்பி அடிக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த பிராட்காஸ்டர்கள் செய்யும் தில்லு முல்லுகளுக்கு ஆப்பு வைக்கும் படி அடுத்த கட்ட தொழில் நுட்பத்திற்கு மலையேறி விட்டார்கள். இதிலுள்ள கூத்து என்னவென்றால், இந்த தொழில் நுட்பத்திற்கான மென்பொருளை பெரும்பாலும் இந்தியாவில்தான் எழுதுகிறோம். அம்மாதிரி நாடுகளில் இந்த பிராட் காஸ்டர்களில் பருப்பு இனிமேலும் வேகாததால் இந்தியா மாதிரி தொழில் நுட்பம் அவ்வளவாக முன்னேறாத நாடுகளைக் குறி வைத்துப் பண்ணுகிறார்கள்ள்.
அப்படி பிராட்காஸ்டர்களுக்கு ஆப்பு தொழில் நுட்பம் தான் என்ன? இந்த இடைத்தரகர்களான பிராட்காஸ்டர்கள் இல்லாமல், நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் சானல்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சிக்னல்களை அவர்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்லும் தொழில் நுட்பம் தான். அதெப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது? 20 வருடங்களுக்கு முன்னால் எல்லோர் வீட்டு மொட்டை மாடியில் ஆண்டென்னா வைத்து தூர்தர்ஷன் மட்டுமே பார்க்கலியா? (இதற்கு Terrestrial Transmission என்று பெயர்). அது போலவே தான். என்னடா இது "அடியப்பிடிடா பாரதவட்டா"ன்னு இருக்கே. டிஜிடல் சிக்னல்களைப் பார்க்கத் தானே செயற்கைக்கோள் உதவி கொண்டு, செட்-டாப்-பாக்ஸ் மூலமாக டிஜிடல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது மீண்டும் ஆண்டெனா யுகத்துக்கே போகணுமா என்று நினைக்கிறீர்களா? என்ன செய்வது, ஃபேஷன் மாடிரி தொழில் நுட்பமும் ஒரு யு-டர்ண் அடிக்கிறது, சில மாற்றங்களுடன். இந்த Terrestrial Transmission இப்போது வளற்சியடைந்து விட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால் இந்த தொழில் நுட்பம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் படுமா? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

9 comments:

Karthik said...

avan avan veethuku veethu sun direct nu tamanah adurada paathu vaangalum ninacha ippadi konda thooki podhureenga?? eppadi ungaluku ivalavu visayayum viral nuniyil???

Vijay said...

\\Karthik said...
avan avan veethuku veethu sun direct nu tamanah adurada paathu vaangalum ninacha ippadi konda thooki podhureenga?? eppadi ungaluku ivalavu visayayum viral nuniyil???\\
ஹாய் கார்த்திக், நான் DTH வாங்கக்கூடாதுன்னு சொல்ல வில்லை. இது ஒரு நல்ல தொழில் நுட்பம் தான். ஆனால், இதை வைத்து எவ்வளவு பணம் பண்ணுகிறார்கள் என்பதைத்தான் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க ஆசைப்படுகிறேன். மேலும், இந்த தொழில் நுட்பத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சாய்ஸ் இல்லாமல் போய்விடுவது தான் கொடுமை. "எனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்" - இதற்கு இந்தத் தொடர் கடைசியில் விடை சொல்கிறேன். பெரும்பாலும் அடுத்த பதிவில் இதை முடித்துவிடுவேன். வருகைக்கு ரொம்ப நன்றி

முகுந்தன் said...

விஜய்,
ரொம்ப விரிவா எழுதியிருக்கீங்க ...

//"எனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்" - இதற்கு இந்தத் தொடர் கடைசியில் விடை சொல்கிறேன்.//

செட்-டாப் பாக்ஸ் வாங்கி அடிபட்டு தெரிந்து கொண்டீர்களா?

Vijay said...

\\ முகுந்தன் said...
செட்-டாப் பாக்ஸ் வாங்கி அடிபட்டு தெரிந்து கொண்டீர்களா?\\
வாங்குவதற்கு முன்னாடியே இதுல இவ்வளவு தில்லு முல்லு இருப்பது எனக்குத் தெரியும் :-)

Divyapriya said...

அநியாயத்துக்கு புட்டு புட்டு வைக்கறீங்க...நடத்துங்க...

Karthik said...

adhutha post enga na???

தாரணி பிரியா said...

எத்தனை ஏமாத்து வேலை ஹீம் :(

Karthik said...

http://lollum-nakkalum.blogspot.com/

ennoda pudhu blog.. tamila aarampichiruken.. ungal aadaravu irukumnu nambhuren....

Velusamy said...

ஒன்பது வருடங்களாக நான் தேடிய விஷயம் இப்போதுதான் உங்கள் மூலமாக தெரியவந்து இருக்கிறது....இந்த தொழில் நுட்ப விஷயங்களை இவ்வளவு தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்கிறீர்கள் என்றால் , நீங்கள் மிகவும் மென்பொருள் நுணுக்கம் தெரிந்தவராக இருக்க வேண்டும்....உங்களை தொடர்பு கொண்டு இன்னும் சில விஷயங்களை கேட்க வேண்டும்....உங்கள் தொடர்பு எண் வேண்டும்....எனது மின்னஞ்சல் முகவரி : diamondvelu@gmail.com.