என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை? நம்மளை யாருமே பிரத்தியேகமா அழைக்கலியே, அழைக்காமலேயே அழை விருந்தாளியாக இந்தத் தலைப்பில் எழுதிடலாமான்னு நிறைய யோசித்திருக்கிறேன். போனாப் போகட்டும், இவன் எழுதுவதையும் தமிழ் பேசும் நல்லுலகம் படித்துத் தொலைக்கட்டும் என்று அழைப்பு பிச்சை விடுத முகுந்தனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. "இன்று போய் நாளை வா" என்ற பாக்கியராஜ் படத்தை பார்க்க விடாமல் அழுது கொண்டிருந்ததையும், அப்பா என்னை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்ததையும் அம்மா சொல்லியிருக்கிறாள். சித்தப்பாவோடு "அலைகள் ஓய்வதில்லை" போய் வாடி என் கப்பக்கழங்கே பாட்டு கேட்டது மட்டும் நினைவில் நிற்கிறது. முழுதாக விவரம் தெரிந்து பார்த்த படம், காக்கிச் சட்டை. சிங்காரி சரக்கு நல்ல சரக்கு பாட்டுக்கு ஆட்டம் போட்டு, வீட்டுக்கு வந்த பின் அம்மாவிடம் வாங்கிக் கொண்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சிறு வயதில் படங்களில் வரும் சண்டைகளைப் பார்க்கும் போது, இப்படி குதிப்பவர்களை ஒலிம்பிக்ஸிற்கு அனுப்பினால் இரண்டு மெடலாவது தேரும் என்று உணர்ந்தேன்.
2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இணையத்திலுள்ள விமர்சனத்தை படித்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று ஏமார்ந்து போய் நேற்று ஏகன் போனோம். படம் பார்த்து விட்டு என் மனைவி காயத்ரிக்கு வந்த தலைவலி இன்னும் போக வில்லை. அமர்ந்து என்று சொல்வதை விட கொட்டாவி விட்டுக்கொண்டே பார்த்தேன் என்று சொல்லலம். எப்போடா படம் முடியும், வீட்டுக்கு கிளம்பலாம் என்று On a march என்று ரெடியாக இருந்தோம். படம் விட்டதும், ஓடியே வந்து விட்டோம்.
3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ்ப் படம், "ராமன் தேடிய சீதை". எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெண்ணைப் பார்த்து விட்டு, அவளைக் கட்டிக் கொண்டோம். ஆனால், சேரன் இப்படி ரவுண்டு கட்டி பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்து காதில் கொஞ்சம் புகை வந்தது. அதெப்படி சேரன் படத்திற்கு மட்டும் இப்படி அம்சமாக கதாநயகிகள் கிடைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அரங்கிலன்றிப் பார்த்த தமிழல்லாத படம், "The Punisher". தன் குடும்பத்தை கொன்றவர்களை கொன்று குவிக்கிறான். வீட்டில் ஹோம் தியேடர் வாங்கி பார்த்த முதல் படமும் இது தான்.
4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இரண்டு படங்கள். மகாநதி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால். இரண்டு படங்களையும் 6 முறை அரங்கில் போய்ப் பார்த்தேன்.
மகாநதியை இப்போது சமீபத்தில் பார்த்தபோது, ஷோபனா தூக்கத்தில் புலம்பும் காட்சியை காண முடியவில்லை. என்னையும் அறியாமல் கண்களில் உதிரமே கொட்டுகிறதோ என நினைத்தேன்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எப்போது சினிமாக்காரர்கள் அரசியலில் புகுந்தார்களோ அப்போதே சினிமாவிலும் அரசியல் புகுந்து விட்டது. என்னைத் தாக்கிய சம்பவம் என்பதை விட எரிச்சலூட்டிய சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் இயக்கிய சண்டியர் படத்திற்கு சாதிச் சாயம் பூசி படப்பிடிப்புக்கு நிறைய நெருக்கடி கொடுத்த அரசியல் சம்பவம் ரொம்பவே எரிச்சலூட்டியது. அதனால் படத்தின் பெயரையே விருமாண்டி என மாற்ற வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் சண்டியரென்பது தெனாவட்டா திரிபவர்களைத் தான் சொல்லுவோம். இதற்கு எந்த சாதியும் விதிவிலக்கல்ல.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
I feel that we live in an era, where technology has reached its zenith. அப்படியிருக்க சமீபத்தில் வெளிவந்துள்ள சிவாஜி, தசாவதாரம் மற்றும் ஏனைய சினிமாக்களில் வெளிக்காட்டப்படும் தொழில் நுட்பம் அவ்வளவாக பிரமிக்க வைப்பதில்லை. இன்ரைய சினிமாக்காரர்களுக்கு மென்பொருள் துறை ரொம்பவே உதவுகிறது.
ஆனால் எந்த வித தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட விட்டலாச்சாரியார் படங்கள் தான் என்னை மிகவும் கவருகின்றன. அதிலும் சந்திரலேகா, ஔவையார், பாதாள பைரவி , மாயா பஜார் போன்ற படங்களில் வந்த தொழில் நுட்பத்தை ரொமபவே மதிக்கிறேன். பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்.
6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இணையதளத்தில் சினிமா பற்றிய செய்திகள் வாசிப்பதுண்டு. வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிய காலத்தில் சினிமா செய்திகள் அதில் படிப்பதுண்டு.
7)தமிழ்ச்சினிமா இசை?
என்றென்றும் இளையரஜா. அதிலும் S.P.பாலசுப்பிரமணியம் ஜானகி கூட்டணியில் வந்த டூயட் பட்டுக்கள் ரொம்பவே பிடிக்கும்.
சில ஏ.ஆர்.ராஹமான், வித்யாசாகர் பாட்டுக்கள் பிடிக்கும்.
8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கொல்கத்தாவில் இருந்த போது வாராவாரம் ஹிந்தி படத்துக்குப் போய் விடுவேன். என்னல்லாமோ ஹிந்தி படம் பார்த்தேன்.
கல்யாணம் ஆவதற்கு முன் ஏதாவது நல்ல ஆங்கிலப் படம் பார்ப்பதுண்டு. கல்யாணம் ஆன பிறகு, எப்போதும் கிரிக்கட்டே பார்க்கிறேன் என்பதற்கு தண்டனையாக அவ்வப்போது களியுஞாலு, ஸ்வப்பனக்கூடு கிளாஸ்மேட் போன்ற மலையாளப் படங்களும் பார்க்க நேரிடுகிறது. வெருதே ஒரு பார்யா என்ற மலையாளப் படத்தை எப்படியாவது பார்க்க வைத்து விடவேண்டும் என்ற சபதத்தை காயத்ரி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
சிறு வயதில் தூர்தர்ஷனில் போடும் மாநில மொழித் திரைப்பட வரிசையில் சில தெலுங்கு படம் பார்த்த ஞாபகம். குறிப்பிட்டுச் சொன்னால் தியாகையா, சங்கராபரணம், தான வீர சூர கர்ணா.
சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும் பாதித்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பார்க்கமலேயே எப்படி பாதித்தது என்று சொல்ல?
9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
கள்ளத் தொடர்பு கூட கிடையாது. கமல்ஹாசன் சிம்ரன் ரம்யாகிருஷ்ணன் தவிர வேறெந்த திரைத் துரையினரையும் பார்த்ததில்லை. முடிந்தால் அசினைப் பார்த்து அடோகிரஃப் வாங்க வேண்டும்.
என் தந்தையின் ஒண்ணு விட்ட மாமா தியாகராஜனுக்கு (பிரஷாந்த் அப்பா) உதவியாளராக இருந்திருக்கிறார். கொம்பேரி மூக்கன், மலையூர் மம்புட்டியான் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிறு வயதில் அவரை பார்த்திருக்கிறேன். மற்றபடி வேறெந்தத் தொடர்பும் கிடையாது.
என்னோடு தொடர்பு வைத்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் எப்படிப் பட்ட படங்கள் எடுக்கக்கூடாது என்று அறிவுறை வேணாலும் வழங்கலாம்.
10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச் சினிமாவை அரசியலிலிருந்து அகற்றிவிட்டால் கொஞ்சமேனும் உருப்பட வாய்ப்புண்டு. இந்த மாஸ் ஹீரோயிசம், ஹீரொவை கடவுள் போல் காண்பிப்பது நின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஆனால் தமிழ் சினிமா கதாநாயகர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. இவர்களே சென்ற தலைமுறையின் வாரிசுகள் தான். அடுத்த 10 வருடத்தில் இவர்களின் வாரிசுகளைத் தான் சினிமாவில் பார்க்க முடியும்.
11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட
ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஏற்கனவே சப்-ப்ரைம் க்ரைஸிஸால் பொருளாதாரம் தில்லானா மோஹனாம்பாள் ரேஞ்சுக்கு ததிகிணத்தோம் போடுகிறது. எவ்வளவு பேர் வேலையில்லாமல் ஆகப்போகிறார்கள் என தெரியவில்லை. இப்போது சினிமாவும் ஒரு இன்டஸ்ட்ரியகிவிட்டது. ஒரு வருடத்திற்கு தமிழ் சினிமாவே இல்லையென்றால் இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளிகள் பாதிப்பார்கள். விளைவு ரொம்பவே விபரீதமாக இருக்கும். நடிகர்கள், நடிகைகள் எங்காவது போய் கலைவிழா நடத்தி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம் இந்த டெக்னீஷியன்கள், ஒப்பனைக்காரர்கள், லைட்மேன் இவர்களெல்லாம் என்ன செய்வார்கள். கிசு கிசு எழுதும் நிருபர்கள் அவர்கள் மென்ன அவல் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.
வேண்டாம் இது பற்றிப் பேச மட்டுமல்ல, நினைக்கவே வேண்டாம்.
இந்தத் தொடர் என்னோடு நின்றுவிடாமலிருக்க தற்போது பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா ரமணியையும் குந்தவையும் அன்புடன் அழைக்கிறேன்.

12 comments:
me the first...
//இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளிகள் பாதிப்பார்கள். விளைவு ரொம்பவே விபரீதமாக இருக்கும். நடிகர்கள், நடிகைகள் எங்காவது போய் கலைவிழா நடத்தி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம் இந்த டெக்னீஷியன்கள், ஒப்பனைக்காரர்கள், லைட்மேன் இவர்களெல்லாம் என்ன செய்வார்கள். கிசு கிசு எழுதும் நிருபர்கள் அவர்கள் மென்ன அவல் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.
வேண்டாம் இது பற்றிப் பேச மட்டுமல்ல, நினைக்கவே வேண்டாம்.
//
விஜய்,
நெகிழ்ந்துவிட்டேன் ....
me the second :))
superaa irukku vijay...
mukundhan sonnadha prove pannitteenga...kalakitteenga...
//பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா //
haa haa...super, repeat :)
:)))
//The Punisher// Intha padam recentaa incha TVla paathen... over build-up koduthirunthaanga... ithe mattera namma captain panna mattum nakkal panraainga ;))))
nice thodar pathivu
கலக்கல்.. நல்லா இருக்குங்க்னா..
:))))))
//எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெண்ணைப் பார்த்து விட்டு, அவளைக் கட்டிக் கொண்டோம். ஆனால், சேரன் இப்படி ரவுண்டு கட்டி பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்து காதில் கொஞ்சம் புகை வந்தது. //
ஹி ஹி ஹி ..
//சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும் பாதித்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பார்க்கமலேயே எப்படி பாதித்தது என்று சொல்ல?//
எங்கயோ போயிடீங்க..
//பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா //
haa haa...super, repeat :)
\\ முகுந்தன் said...
விஜய்,
நெகிழ்ந்துவிட்டேன் ....\\
அவ்வளவு சென்டியாகவா இருக்கு??? :)
\\divyapriya said...
me the second :))
superaa irukku vijay...
mukundhan sonnadha prove pannitteenga...kalakitteenga...\\
ரொம்ப நன்றி.
\\ ஜி said...
:)))
//The Punisher// Intha padam recentaa incha TVla paathen... over build-up koduthirunthaanga... ithe mattera namma captain panna mattum nakkal panraainga ;))))
nice thodar pathivu\\
எனக்கு ஏன்டா இந்தப் படத்தைப் பார்த்தோம் என்றாகிவிட்டது. அடிக்கிறான், சுடறான், பாம்ப் வைக்கிறான், காதுல பூ சுத்தறதுக்கு ஒரு அளவே இல்லை.
\\saravana kumar msk said...
எங்கயோ போயிடீங்க.\\
எங்கேயும் போகலை. இங்கேயே தான் இருக்கேன். :-)
கொஞ்ச நாளாக உங்களுடைய சுய இரங்கல் கவிதைகளைக் காணோம்.
ஏகன் பாத்துட்டீங்களா? என்ன கொடுமை விஜய் இது? நல்லா விசாரிச்சுட்டு போகமாட்டீங்களா?
இப்ப அஜீத் சொல்லற டயலாக் என்ன தெரியுமா?
I am Back
\\தாரணி பிரியா said...
ஏகன் பாத்துட்டீங்களா? என்ன கொடுமை விஜய் இது? நல்லா விசாரிச்சுட்டு போகமாட்டீங்களா?\\
இணையத்திலுள்ள விமர்சனத்தைப் படிச்சுட்டுத் தான் போனேன். முதல் பாதி போவதே தெரியலை. அவ்வளவு காமெடி என்று எழுதியிருந்தாங்க. எனக்கு வர கோபத்துக்கு அந்த வெப் சைட் எடிடரைப் புடிச்சு நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு.
திருநெல்வேலிக்காரரான உங்களுக்கே இதன் அரசியல் தெரியவில்லயா ? இதுவரை ஏதாவது தாழ்த்தப் பட்ட மக்களைப் பற்றிய படம் தமிழிலில் வெளிவந்திருக்கிறதா ? தேவர்மகன் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரராக எடுக்கப் படாவிட்டாலும் அது முக்குல மக்களிடம் உருவாக்கிய உற்சாகம் பெருமிதம் நமக்கு மறக்கவில்லை . எங்க தாத்தா வக்கீல் என்று பெருமிதம் கொள்வதே , கொள்ளச் செய்வதே இன்னொருவரின் தாத்தாவை , அப்பபாவை படிக்கவிடாமல் செருப்பு தைக்க வைத்த , தெருக் கூட்டவைத்த , மலம் அள்ளவைத்த சமூகத்தில் பாவம் . அத்தகு வெட்டிப் பெருமையை உருவாக்கும் தலைப்புகளை எதிர்த்ததில் தவறொன்றும் இல்லை . ஆனால் அதைப் புரிய வைக்காமல் மேற்கொண்ட வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று .
ஒரு சிறுகதை . தன்னுடயை வேலைக்காரனின் பெயர் பெருமாள் என்றிருப்பதைப பொறுக்காத முதலாளி நிறையp பணம் கொடுத்து வேறு பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னாராம் . அவரும் பெத்த பெருமாள் என்று மாற்றிக் கொண்டு வந்தாராம் என்ற கதையாக இருந்தது. விருமாண்டி அப்பட்டமான முக்குலப் பெயர் .
பூபதி
Post a Comment