Pages

November 10, 2008

இவளா என் மனைவி

இந்த வார இறுதிக்கு திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி ஆம்பூர், குல தெய்வம் கோயில் என்று ரொம்பவே ஊர் சுற்றித் திரிந்தாயிற்று. திருநெல்வேலியில் நெல்லையப்பரை விட்டால் போவதற்கு வேறேங்கும் இடம் இல்லை. நம்ம டமேஜ் நாள், சாரி மரேஜ் நாள் வேற வருதே, இப்பவே அட்வான்ஸா ஏதாவது வாங்கிடலாம் என்று காயத்ரியைக் கூட்டிக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்திருக்கும் ஆரெம்கேவி சென்றேன்.

கொஞ்சம் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள். ஒரு சிறு ஃபிளாஷ் பேக். அப்படியே ஒரு 4 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், (கல்யாணம் ஆவதற்கு முன், நிச்சயம் ஆனதற்குப்பின்) தீபாவளிக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று, சென்னை ஆரெம்கேவிக்கு கூட்டிச் சென்றிருந்தேன். என்னிடம், "உங்க பட்ஜெட் என்ன" என்றாள். முதல் தடவையாக கடைக்குக் கூட்டி வந்திருக்கிறேன். பட்ஜெட்டெல்லாம் சொல்லி இமேஜைக் கெடுத்துக் கொள்ளவேண்டாமென்று, "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. உனக்கு எது பிடிச்சிருக்கோ அதியே வாங்கிடலாம்" என்றேன். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காததில் ஒன்று, துணிக்கடைகளில் நேரம் கழிப்பது. போனோமா, எது முதலில் பிடிக்கிறதோ, அது நம் பட்ஜெட்டுக்குள் அடங்கி விட்டால் உடனே "பேக் செய்யுங்கள்" என்று சொல்லி விடுவேன்.


என் அம்மாவும் தங்கையும் துணி செலக்ட் செய்து முடிப்பதற்குள் என் பொறுமையே போய் விடும். நான் பாட்டுக்கு ஒரு ஓரத்துக்குப் போய் இ.தி.கு போல் முகத்தை உர்'ரென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுவேன். முதல் முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை துணிக்கடைக்கு கூட்டி வந்திருக்கிறேன், ஆண்டவா நிறைய பொறுமையைக் கொடு என்று வேண்டிக்கொண்டேன்.

புடவைக் கடைக்குள் நுழைந்தவள், சில்க் காட்டன் எந்த செக்ஷன் என்று கேட்டுக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள். "காஞ்சி காட்டன், பியூர் காட்டன் தெரியும், இதென்ன சில்க் காட்டன். புது ஃபேஷனா" என்று கேட்டுத் தொலைத்தேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவள், "இல்லையே, இதெல்லாம் ரொம்ப பழைய ஃபேஷன் தான்" சொல்லிவிட்டாள். "சரி, நமக்கு தெரியலை போலும்" என்று நினைத்துக் கொண்டு, அவள் என்ன தான் செலக்ட் செய்கிறாள் பார்ப்போம் என்று அவள் நின்ற செக்க்ஷனுக்குப் போனேன். இவள் எந்த ரேஞ்சுக்குப் புடவை எடுக்கப் போறாளோ என்ற உதறல் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது.

சில புடவைகளைப் பார்த்தாள். விரித்துக் காட்டச் சொன்னள். நானும் என் பங்கிற்கு, அந்தப் புடவையை எடுத்துப் போடுங்க, இந்தப் புடவயை எடுத்துப் போடுங்க்கன்னு கொஞ்சம் ஷோ காட்டினேன். பின்ன, எனக்கு புடவையெடுப்பதில் இஷ்டமே இல்லையென்று நினைத்து விட்டால்?? ஒரு புடவையை எடுத்துக் காட்டி, "இது நல்லா இருக்கா" என்றாள். எனக்கும் அது பிடித்திருக்கவே "நல்லா இருக்கு" என்று தலையாட்டினேன். ("அன்று ஆட்டத்தொடங்கியது, இன்னும் நின்ற பாடில்லையா"ன்னெல்லாம் பின்னூட்டத்தில் கேட்கப்படாது!!)

"இதை பில் போட்டுடுங்க சார்", என்று சொல்லிவிட்டாள். புடவையும் 1500 சொச்சம் தான். "இதற்கு பிளௌஸ் எடுக்க வேண்டாமா" என்றதற்கு, "இந்தப் புடவை பிளௌஸ் அட்டாச்ட் தான். அதனால் வேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அப்பாடா, பிளௌஸ் செலவும் மிச்சம் என்று சொல்லிக் கொண்டேன். அன்றைய தினம் என் மனைவியாகப் போகிறவள் புடவை செலக்ட் செய்ய எடுத்துக் கொண்டது வெறும் எட்டே நிமிடம் தான். என் கஸின் அக்காவிடம், இந்த விஷயத்தை சொன்னதற்கு, "இப்படி ஒரு அதிசயப் பிறவியா? நீ கொடுத்து வச்சிருக்கடா" என்று வாழ்த்தினாள்.

மீண்டும் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள்.


ஃபிளாஷ் பாக் முடிந்தது.

மீண்டும் ஆரெம்கேவி, ஆனால் திநெல்வேலியில். நான் உள்ளே போனதும், "சார், சில்க் காட்டன் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்றேன். "என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "கொஞ்சம் சும்மா இருக்க முடியுமா" என்று சொல்லிவிட்டு, "இல்ல சார், சில்க் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்று கேட்டாள். என்னிடம் பட்ஜட் எதுவும் கேட்கவில்லை. "சார், 3000-4000 ரேஞ்சுல உள்ள புடவை எடுத்துக் காட்டுங்க" என்றாள். நிறைய புடவைகளை அலசினாள். நிறைய புடவைகளை தன் மீது வைத்துப் பார்த்தாள். போதாதற்கு கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டாள்.

எவ்வளவோ புடவைகளை நான் நல்லா இருக்கு என்று சொல்லியும் திருப்தி அடையவில்லை. "இங்க ஒண்ணும் சரியா இல்லை. நல்லியில் போய் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டாள். ஆட்டோ பிடித்து 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள நல்லிக்குப் போனோன். அங்கேயும் இதே கதை தான். மீண்டும் நிறைய புடவைகள், நிறைய விரித்துப்பார்த்தல், அதே முகம் சுளிப்பு, எதையுமே பேக் செய்யவில்லை.

"எல்லா நல்ல புடவைகளும் தீபாவளிக்கே விற்றுப் போயிருக்கலாம். இருக்கறதுல நல்லதா பார்த்து எடுத்துக்கோ" என்று நான் சொன்னதற்கு எந்த வித ரியாக்ஷனும் இல்லை. பக்கத்துல தானே போத்தீஸ் இருக்கு, அங்கே போகலாம் என்றாள். என் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இ.தி.கு.போல் மாற ஆரம்பித்தது. ஆனால் காட்டிக்கொள்ள வில்லை.

போத்தீஸில் மட்டுமென்ன பார்த்தவுடனேயே புடவையை எடுக்கப் போகிறாளா ? "அம்மா, 3000-4000 ரூபாய்க்கெல்லாம் நீங்க எதிர்பார்க்கும் டிசைன் கிடைக்காது. அதெல்லாம் 5000'க்கு மேல" என்று கடைக்காரரும் சேர்ந்து அவர் பங்குக்கு என் குருதிக்கொதிப்பை இரட்டிப்பு செய்தார். "அப்படின்னா, அந்த ரேஞ்சுலயே எடுத்துப் போடுங்க'என்று சொல்லிவிட்டாள். என் முகம் முற்றிலும் இ.தி.கு. போல் மாறி விட்டத்தை ஒரு வாறாகப் புரிந்து கொண்டவள், மள மளவென புடவைகளைக் களைந்து 5-6 புடவைகளை அதிலிருந்து ஃபில்டர் செய்து, முக்கால் மணி நேர அலசலுக்குப் பிறகு ஒன்றை மனதே இல்லாமல் பேக் செய்யச் சொன்னாள்.

அப்போது தான் எனக்கு இந்த எண்ணம் உதித்தது. செகண்ட் லேடி என்ற ஆங்கில நாவலில், அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியின் உருவம் கொண்ட ஒரு பெண்ணை பக்காவாக தயார் செய்து, ஜனாதிபதியின் மனைவியைக் கடத்தி விட்டு, இவளை அந்த இடத்தில் மாற்றி விடுவார்கள், ரஷ்ய உளவுக்துறையான கே.ஜி.பி. காரர்கள். எனக்கும் அது போல் நேர்ந்து விட்டதா? எட்டே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் காயத்ரியை கடத்திவிட்டு அவள் போலுள்ள வேறொரு பெண்ணை என் மனைவியாக இருக்கும் படி செய்து விட்டார்களோ? எட்டு நிமிடத்தில் புடவை செலக்ட் செய்த காயத்ரி எங்கே? 3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து, மனமே இல்லாமல், என் பர்ஸுக்கு வேட்டு வைத்து புடவை வாங்கும் இவள் யார். இவளா(?!) என் மனைவி?!

டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நான் ஒரு ஓரத்துல உட்கார்ந்து விட்டேன். அரை மணி நேரம் கழித்து போகலாம் என்று சொன்னது தான் ஞாபகம் இருக்கு.

டிஸ்கி 2: இ.தி.கு என்று 3-4 இடங்களில் குறிப்பிட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு கண்டுபிடித்தால் சொல்லிவிடாதீர்கள்.

40 comments:

தாரணி பிரியா said...

கண்டிப்பா அர்த்தம் சொல்ல மாட்டேன்

இதுவே காயத்ரி அவங்ககிட்ட கேட்டா அன்னிக்கு பட்ஜெட் எல்லாம் இல்லை சொன்னவர் எங்கே இன்னிக்கு 4,000 க்கு இ.தி.கு. ஆகறவர் எங்கே. மாத்திட்டாங்களோன்னுதான் நானும் யோசிக்கிறேன்னு சொல்லுவாங்க்

தாரணி பிரியா said...

அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள்

Divyapriya said...

ஒஹ்ஹ்...திருமண நாள் Special post ஆ? super...நல்லா சிரிச்சேன் :-D

ஆனாலும், இப்படி உங்க மனைவிய பதிவு போட்டு கலாய்க்கறீங்க... காயத்திரி கையால நல்லா அடி வாங்கணும் வேண்டிக்கறேன் ;)

Divya said...

திருமணநாள் வாழ்த்துக்கள் விஜய்!!

Divya said...

\\இ.தி.கு என்று 3-4 இடங்களில் குறிப்பிட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு கண்டுபிடித்தால் சொல்லிவிடாதீர்கள்.\\எனக்கு அர்த்தம் தெரில........ஸோ ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்......'இஞ்சி தின்ன குரங்கு' அப்படின்னு சொல்றா......அது தான் அர்த்தமா விஜய்????

Divya said...

\\(கல்யாணம் ஆவதற்கு முன், நிச்சயம் ஆனதற்குப்பின்)\\

இது தான் 'கோல்டன் பிரீயட்' அப்படின்னு கல்யாணம் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க:)))

விஜய் said...

\\தாரணி பிரியா said...
கண்டிப்பா அர்த்தம் சொல்ல மாட்டேன்

இதுவே காயத்ரி அவங்ககிட்ட கேட்டா அன்னிக்கு பட்ஜெட் எல்லாம் இல்லை சொன்னவர் எங்கே இன்னிக்கு 4,000 க்கு இ.தி.கு. ஆகறவர் எங்கே. மாத்திட்டாங்களோன்னுதான் நானும் \\

ஒரு மனுஷன் இப்படி நொந்து போயி இருக்கான், அவன் மேல் பரிதாபப்படாம, இப்படி சேம் சைட் கோல் போடறீங்க. இந்த பொம்பளைங்களே இப்படித் தான் போலிருக்கு.

விஜய் said...

\\ divyapriya said...
ஒஹ்ஹ்...திருமண நாள் Special post ஆ? super...நல்லா சிரிச்சேன் :-D

ஆனாலும், இப்படி உங்க மனைவிய பதிவு போட்டு கலாய்க்கறீங்க... காயத்திரி கையால நல்லா அடி வாங்கணும் வேண்டிக்கறேன் ;)\\

திருமண நாளுக்கு இன்னுமொரு மாசம் இருக்கு.

நல்ல எண்ணம் உங்க எண்ணம் :-)

விஜய் said...

\\ divya said...
எனக்கு அர்த்தம் தெரில........ஸோ ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்......'இஞ்சி தின்ன குரங்கு' அப்படின்னு சொல்றா......அது தான் அர்த்தமா விஜய்????\\

தெரிஞ்சா, சொல்லாதீங்கன்னு தானே எழுதியிருக்கேன். சொல்லிப்புட்டீயளே!?

விஜய் said...

\\ divya said...
திருமணநாள் வாழ்த்துக்கள் விஜய்!!\\

டமேஜ் நாளுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அன்னிக்கு மறக்காம வாழ்த்து சொல்லுங்க.

\\ divya said...
இது தான் 'கோல்டன் பிரீயட்' அப்படின்னு கல்யாணம் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க:)))\\

நானும் அப்படித் தான் கேள்விப்பட்டேன். ஆனால், இந்த பீரியட்டில் தான் செல் பில் எகிறியது, நண்பர்களோடு வீட்டு வாடகை பகிர்ந்துகொண்டிருந்து விட்டு, தனி வீடு பார்த்துப் போய், வாடகை நான் மடங்கானது, க்ரெடிட் கார்ட் பில் இந்து இலக்கத்தைத் தொட்டது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். :-)

Anonymous said...

ம்.... என்னிய கூட இப்படி தான் கல்யாணத்திற்கு முன்னாடி கடைக்கு கூட்டிட்டு போய் தாரள பிரபு மாதிரி நடந்துகிட்டாரு என்னோட வீட்டுகாரர்.
தினமும் போன், வாரத்திற்கு ரெண்டு கடிதம், கவிதை......
அப்படியே கவுந்துட்டேன்....
அடடா...... அது ஒரு அழகிய நிலாக் காலம்........
|
|
இப்படித் தான் எல்லோரும் வீட்டம்மாவை புலம்ப வச்சிட்டிருக்காங்களா?
என்னயெல்லாமோ உருண்டு புரண்டு ஆராய்ச்சி பண்ணுறாங்க, கல்யாணம் ஆனா பிறகு ஆம்பிளைங்க ஏன் எப்படி மாறிவிடுகிறார்கள் என்று ( பாவப்பட்ட ஜீவன்களான பெண்கள் சார்பில்) ஆராய்ச்சி செய்யமாட்டேங்கிராங்களே!
just kidding.....

திருமண நாள் வாழ்த்துக்கள்.

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

இதை உங்கள் மனைவி படித்தால்... நெஜமாவே டமேஜ் நாள் தான்
அப்புறம் இ.தி.கு மாதிரியே ஆயிடுவீங்க :))

விஜய் said...

முகுந்தன்,
நான் என்னுடைய எல்லா பதிவுகளையும் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிடுவேன்.

விஜய் said...

\\kunthavai said...
இப்படித் தான் எல்லோரும் வீட்டம்மாவை புலம்ப வச்சிட்டிருக்காங்களா?\\

குந்தவை,
என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.

முகுந்தன் said...

//என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.
//

appadi podunga aruvala...
namma katchi...

Anonymous said...

//என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.
//

ஹ... ஹா.. நீங்க சொல்றது சரிதான்(புலம்பறது நீங்க தான் ).
உங்க வீட்டம்மாவிடம் கேளுங்க,
நான் சொல்றது சரிதான்னு சொல்லுவாங்க.
என்னோட (எல்லா மனைவிமார்களின் ) அனுபவமுங்கோ இது.

ஏதோ பெரியமனசு பண்ணி, யாரும் இதை பெருசா எடுத்துக்கிறதில்லை அவ்வளவு தான்.

//namma katchi...
முகுந்தன், ஆண்பிள்ளைங்க எல்லாம் இந்த விஷயத்தில் ஒரே கட்சிதான் சந்தேகமில்லை.

தாரணி பிரியா said...

\\ஒரு மனுஷன் இப்படி நொந்து போயி இருக்கான், அவன் மேல் பரிதாபப்படாம, இப்படி சேம் சைட் கோல் போடறீங்க. இந்த பொம்பளைங்களே இப்படித் தான் போலிருக்கு.\\


ஹா ஹா நல்லாவே ரசிச்சேன். சிரிச்சேன்.

தாரணி பிரியா said...

//namma katchi...
முகுந்தன், ஆண்பிள்ளைங்க எல்லாம் இந்த விஷயத்தில் ஒரே கட்சிதான் சந்தேகமில்லை.//

குந்தவை சொல்லறதை நான் மறு மொழிகிறேன்.

தாரணி பிரியா said...

\\vijay said குந்தவை,
என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.\\

நாங்க எல்லாம் புலம்ப ஆரம்பிச்சா நாடு தாங்காதுங்க. அதனாலதான் பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிட்டு இருக்கோம்

விஜய் said...

பெண்களோடு வாதாடௌவதில் எந்தவிதப் பயனும் இல்லை என்பதை அனுபவ ரீதியாக தெரிந்துகொண்டதால், இதற்கு மேல் எதுவும் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால், இவ்விஷயத்தை இத்தோடு விட்டு விடுகிறேன். :-) :-)

தாரணி ப்ரியா, குந்தவை, நீங்க ரெண்டு பேர் சொல்லறதும் சரி தான். :-) :-)

gayathri said...

எல்லா பின்னூட்டமும் பாத்து நல்லா சிரிச்டசேன்

gayathri said...

விஜய் said...
பெண்களோடு வாதாடௌவதில் எந்தவிதப் பயனும் இல்லை என்பதை அனுபவ ரீதியாக தெரிந்துகொண்டதால், இதற்கு மேல் எதுவும் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால், இவ்விஷயத்தை இத்தோடு விட்டு விடுகிறேன். :-) :-)

தாரணி ப்ரியா, குந்தவை, நீங்க ரெண்டு பேர் சொல்லறதும் சரி தான். :-)


அப்படி வாங்க வழிக்கு.
கல்யாணம் ஆக பேகுதுல்லா இனிமே இப்படி தான் எல்லாத்துக்கும் தலை ஆட்டனும் ஒகே

gayathri said...

3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து.

இதுகே இப்படின்னா நாளைக்கு குழந்தை, குட்டி கூட கடைக்கு pona ஒரு நாள் புள்ளா இருக்கனுமே என்ன பன்னுவீங்கா

விஜய் said...

\\ gayathri said...
எல்லா பின்னூட்டமும் பாத்து நல்லா சிரிச்டசேன்\\

வருகைக்கு ரொம்ப நன்றி. தொடர்ந்து படியுங்க. நீங்களும் முடிஞ்ச அளவுக்கு நாலு வாரு வாருங்க.

\\அப்படி வாங்க வழிக்கு.
கல்யாணம் ஆக பேகுதுல்லா இனிமே இப்படி தான் எல்லாத்துக்கும் தலை ஆட்டனும் ஒகே\\

மேடம், கல்யாணம் ஆகி நான்கு வருஷங்கள் முடியப்போது. அதனால அனுபவத்துல சொல்லறேன்னு எழுதினேன். :-)

\\ gayathri said...
3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து.

இதுகே இப்படின்னா நாளைக்கு குழந்தை, குட்டி கூட கடைக்கு pona ஒரு நாள் புள்ளா இருக்கனுமே என்ன பன்னுவீங்கா\\
கையில் ஒரு புத்தகம் கொண்டு போய்டுவேன். ஏற்கனவே இந்த மாதிரி பண்ணியிருக்கேன். என்ன அப்போ, கல்யாணம் ஆகலை :-)

gils said...

//\ divya said...
எனக்கு அர்த்தம் தெரில........ஸோ ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்......'இஞ்சி தின்ன குரங்கு' அப்படின்னு சொல்றா......அது தான் அர்த்தமா விஜய்????\\//

:D :D :D
@divya:
manasukkul mathapuulenthu vanthu vijayku aapu vachiteenga :D :D
chancelanga..supera irunthichi..enaku apdiye RMKV kullara poitu vantha epect :D

விஜய் said...

Hi Gils,
karuththukkum varukaikku nanRi.

Tanglish'la ezuthinaa, tanglish'la thaanE rely paNNaNum :-0) Hahahaha

என் பதிவுகள்/En Pathivugal said...

என்னங்க விஜய் இப்பவே சலிச்சுகிட்டா எப்படி?
இன்னும் எவ்வளவோ இருக்கு!!!

விஜய் said...

பூர்ணிமா,
என்ன பண்ணறது, நம்மளால சலிச்சுக்கத் தான் முடியும் :-)

\\இன்னும் எவ்வளவோ இருக்கு\\

அதையெல்லாம் தாங்கிக்கொள்ள ஆண்டவன் தான் சக்தி கொடுக்கணும். ஆண்டவன் கிட்ட இதையெல்லாம் மாற்று என்றால், அவரே முடியாது என்று சொல்லிவிடுவார்.

என் பதிவுகள்/En Pathivugal said...

அதுகூட ஒரு வகையான சந்தோசம்தாங்க!

Saravana Kumar MSK said...

Advance திருமண நாள் வாழ்த்துக்கள்.
:)

Saravana Kumar MSK said...

//முகுந்தன் said...

இதை உங்கள் மனைவி படித்தால்... நெஜமாவே டமேஜ் நாள் தான்
அப்புறம் இ.தி.கு மாதிரியே ஆயிடுவீங்க :))//

RIPPEETTUU....

Saravana Kumar MSK said...

என்னங்கணா.. தாமிரா அண்ணா புலம்பல்கள் மாதிரி இருக்கு..

உங்கள் போன்றோரின் பதிவுகள் படிக்கும் போது, கல்யாணம் என்றாலே பயமாய் இருக்கிறது.. :(

Saravana Kumar MSK said...

//டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நான் ஒரு ஓரத்துல உட்கார்ந்து விட்டேன். அரை மணி நேரம் கழித்து போகலாம் என்று சொன்னது தான் ஞாபகம் இருக்கு.//

தலை சுற்றி மயக்கம் வந்து விட்டதா.
;)

Maddy said...

ஒ அன்னிக்கி பக்கத்துல இ . தி. கு. மாதிரி இருந்தது நீங்க தானா?
தப்பு கணக்கு போட்டுடீங்களே!!! மேல இருக்கற பின்னூட்டத்தை பார்த்த உங்க வீட்டுல பின்னி எடுக்கறாங்கலோ இல்லையோ, இங்க எல்லாரும் உங்களை பின்னிடாங்க போங்க!!

விஜய் said...

\\ saravana kumar msk said...
தலை சுற்றி மயக்கம் வந்து விட்டதா.
;)\\
அந்தளவுக்குப் போகலை. ஆனால், ரொம்பவே நொந்து போயிட்டேன். :-)

விஜய் said...

\\ maddy said...
ஒ அன்னிக்கி பக்கத்துல இ . தி. கு. மாதிரி இருந்தது நீங்க தானா?
தப்பு கணக்கு போட்டுடீங்களே!!! மேல இருக்கற பின்னூட்டத்தை பார்த்த உங்க வீட்டுல பின்னி எடுக்கறாங்கலோ இல்லையோ, இங்க எல்லாரும் உங்களை பின்னிடாங்க போங்க!!\\
இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் பாஸ். எப்பவுமே சேம் சைட் கோல் போடுவாங்க. Thanks for coming!!

ஜி said...

//வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்திருக்கும் ஆரெம்கேவி சென்றேன்.
//

angeyum open pannittaangala?? superappu....

Intha ponnungale ippadithaana?? nalla velai enakku enga amma thangai kitta kooda intha anubavam illa.. avingellaam kooptaale naan escape aayiduvenla ;)))

விஜய் said...

\\ஜி said...
angeyum open pannittaangala?? superappu....\\

ஜி, இப்போ வண்ணாரப்பேட்டையிலும் திறந்துட்டாங்க. அங்கிட்டும் கூட்டம் அலை மோதுது. எங்கிட்டிருந்து தான் வந்து வாங்குவாங்களோ?

ப்ரியா said...

:-)))))))))))))))