Pages

July 07, 2005

இசையே உன் பெயர் இளையராஜாவா???தமிழ் பாடங்களில் அருஞ்சொற்பொருள் என்றொரு பகுதி உண்டு. இசை என்பது அருஞ்சொல் ஆகி விட்ட நிலையில் (இப்போதுள்ள இசையில் இசையை விட ஓசை தான் மிகுதி), அதற்கு இளையராஜா என்பது பொருத்தமான பொருள். நேற்று மழையையும் பொருட்படுத்தாது 2 கடைகள் ஏறியும் இளையராஜவின் சிம்ஃபனி இசையில் திருவாசகத்தை வெளியிட்டுள்ள ஒலிப்பேழை ( CD ரொம்ப மண்டையைப்போட்டு உடைத்துக்கொள்ள வேண்டாம்) கிடைக்கவில்லை. நானும் என் முயற்சி விடாது மூன்றாவது கடையில் இந்த ஒலிப்பேழையை ஒரு வழியாக வாங்கி ஆகி விட்டது. வீட்டுக்கு விரைந்து வந்து அதைப்போட்டுக்கேட்கலாம் என்றால், கோலங்களும் ரோஜாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் திருவாசகத்துக்கு ஏது இடம். கொஞ்சம் பொறுத்திருக்க நேர்ந்தது. அப்பப்போ இடையில் சிறிது சிறிது பாகமாக கேட்க அனுமதி கிடைத்தது. முதலில் கேட்கும் போது அவ்வளவாக மனம் லயிக்கவில்லை. வீட்டில் எல்லோரும் ஒரே கேலி, எக்காளம். 150 ரூ. தண்டம் என்றெல்லாம். ஏதுடா, சுஜாதா பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகள் இவ்வளவு சிலாகித்து கூறியதா இந்த லக்ஷ்ணத்தில் இருக்கிறது ஒரே மன வருத்தம். இருந்தாலும் எப்படியாவது, இதை ரசித்தே ஆக வேண்டும் என்ற வரட்டு பிடிவாதத்தில் ஆஃபீஸுக்கு வந்து ஹெட் ஃபோன்ஸ் வைத்து எனக்கு மட்டும் கேட்குமாறு கேட்டேன். நம்பினால் நம்புங்கள், I was in for a different kind of a feeling. இது வரை கேட்டறியாத ஆனால் வினோதமான சப்தங்களை கேட்க நேரிட்டது.
இதே ஒலிப்பேழையைத்தான் வீட்டில் போட்டு கேட்டேன். ஆனால் இப்போது உண்டாகும் அனுபம் ஏன் வீட்டில் உண்டாக வில்லை என்று எண்ணிய போது, சில காரணங்களை உணர்ந்தேன்.
1. இதை மற்ற ஒலிப்பேழை மாதிரி எப்போதும் கேட்க முடியாது. மனது அமைதியாக இருக்க வேண்டும்.
2. ஒரு புதிய இசை ஆராய்ச்சியை வரவேற்கும் அளவிற்கு மனது பக்குவப்பட்டிருக்க வேண்டும். பக்தி பாடல்களையெல்லாம் மிருந்தங்கம் தப்லா கடம் போன்ற பக்க வாத்தியங்களுடனே கேட்ட நமக்கு சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ரா போன்ற மேல் நாட்டு சங்கீதத்தோடு கேட்பது முதலில் ஏற்றுக்கொள்வது சற்று கடினம்.
3. இதை music surround system வைத்துக் கேட்பது உசிதம். வீட்டில் உள்ள music system'இல் இந்த வசதி இல்லை. சில ஹெட் ஃபோன்ஸில் இந்த உண்டு.
4. இதை தனிமையிலே மட்டுமே சரிக்க முடிகிறது.

மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது 'பூவேரு கோனும் புரந்தரனும்' என்று பவதாரிணி பாடும் பாடல். இந்த சிம்ஃபனி திருவாசகத்தை விமர்சனம் தகுதி எனக்கில்லை. அதனால் இதில் உள்ள நிறை குறைகளை நான் அலசப்போவதில்லை.

இந்த ஒரு மாபெரும் சாதனையைச்செய்ய இளயராஜா செய்வதற்கு நிறைய பணம் தேவைப்பட்டிருக்கிறது.
எவ்வளவு ஒலிப்பேழை விற்கிறதோ அந்தளவிற்கு இதை வெளியிட்டுள்ள நிறுவனம் பயன் அடையும். அதனால் இதை காசு கொடுத்து வாங்குவோம். தயவு செய்து இதை MP3'ஆக மாற்றி இணையத்தில் ஏற்றி விடாதீர்கள். MP3 முறையில் இதைக்கேட்டால் இதில் கேட்கும் சில அற்புதமான இசை கேட்பதில்லை. நான் ஏற்கனவே மாற்றிக் கேட்டுப்பார்த்து விட்டேன்.

இளையராஜனே, நீ இன்னும் பல இமயங்கள் கடக்க எங்களது வாழ்த்துக்கள்.

1 comment:

Subbu said...

thaliva kalakkitenga.. i appreciate your passion for music. i am also waiting for hearing it.