வெகு நாட்கள் கழித்து ஒரே நாளில் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்திருக்கிறேன். எனக்கு ஞாபகமிருந்து, டான் பிரௌணின் டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்ஸும், பொன்னியின் செல்வனின் கடைசி பாகத்தையும் தான் ஒரே நாளில் படித்து முடித்தது. அதெல்லாம் பேச்சுலர் தினங்கள். ரொம்ப நாளாக சேதன் பகத்தின் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றிருந்த ஆர்வம் இந்த வாரம் தான் நிறைவேறியது.
ஒரு ரயில் பயணத்தில் ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கும் போது, தனது முதல் புதினம் பற்றிப் பேச்செழுகிறது. “அப்படியொன்றும் ஆஹா ஓஹோ கதையில்லை”அது என்று அந்தப் பெண் சொல்கிறாள். “தன்னிடம் ஒரு கதை இருப்பதாகவும், அது நிஜமாகவே நடந்ததென்றும், அதை அடுத்த புதினமாக எழுதுவதாக வாக்களித்தால், அந்தக் கதையைச் சொல்கிறேன்”என்கிறாள். முதலில் தயங்கும் சேதன் பகத், ஒரு மாதிரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சரி, எழுதுகிறேன், கதையைச் சொல்லுங்கள்” என்கிறார். இப்படித் தான் ஆரம்பிக்கிறது 290 பக்கங்கள் கொண்ட குறுநாவல்.
ஷ்யாம், வினோத் என்ற வ்ரூம், ப்ரியாங்கா, ராதிகா, இஷா மற்றும் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, இவர்கள் ஆறு பேரும் குர்காவுனிலுள்ள ஒரு கால் செண்டரில் இரவு நேர ஷிஃடில் பணி புரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆங்கிலேயப் பெயர். அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேசும் பொழுது இந்த ஆங்கிலப் பெயரைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.
எல்லோரும் ஒரே டீம். அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து அழைப்புகள் நிறைய வராததால், கால் செண்டர் மூடும் நிலமைக்கு வந்துள்ளது. எல்லோரும் இதற்கு தங்கள் மேனேஜர் பக்க்ஷி தான் காரணம் என்று அவரை எல்லோரும் வெறுக்கிறார்கள். மேலும் ஷ்யாமும் வ்ரூமும் செய்த வேலையை தான் செய்ததாக மேலிடத்தில் (தனது தங்கமணி இல்லை, அமெரிக்க மேலிடம்) சொல்லி நல்ல பெயர் வாங்கப் பார்க்கிறான். எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் வேலையில் விரக்தி, அதிருப்தி.
ஷ்யாம் ப்ரியாங்காவைக் காதலித்து, சம்பாத்தியம் போததால் அவனை ப்ரியாங்காவின் அம்மா ஏற்றுக்கொள்ளாத நிலையில்,ப்ரியாங்காவும் அவனை கைவிட, தான் வாழ்வில் எதற்குமே தான் லாயக்கில்லாதவன் என்ற எண்ணம்.
வ்ரூம்முக்கு நிதமும் அமெரிக்கர்களிடம் பல்லை இளித்துக் கொண்டு, அவர்கள் பேசும் அவதூரான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை.
இஷா சண்டிகாரிலிருந்து தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக டில்லிக்குக் குடிபெயர்ந்து, ஒரு விளம்பர மாடலாக விரும்பும் ஒரு பெண். இதுவரையிலும் உருப்படியாக ஒன்றும் அமையாததால், பகுதி நேரமாக கால் செண்டரில் வேலை பார்க்கிறாள். இஷா மீது வ்ரூம் தனது காதலைச் சொன்னாலும் இஷா அதை ஏற்க மறுக்கிறாள்.
ராணுவ அதிகாரியை அவரது மகன் வீட்டை விட்டே துரத்தி விட்டான்.
ராதிகா காதல் கல்யாணம் செய்திருந்தாலும், அவளது மாமியாருக்கு இவர் மேல் பெரிய அபிப்பிராயம் ஒன்றும் கிடையாது இருந்தாலும் காதல் கணவனுக்காக மாமியார் சொல்லும் சொல்லைக் கேட்டுக் கொண்டு வாழ்க்கை ஓட்டுகிறார்.
ஒரே இரவில் எல்லோருக்கும் ஒரு விதமான பிரச்னை வருகிறது. ராணுவ அதிகாரிக்கு, “இனிமேல் எங்களுடன் எந்தத் தொடர்பு வைக்காதீர்கள்”என்று அவர் மகன் எழுதுகிறான்.
இஷா மாடலிங்கில் ஒரு வாய்ப்பு கிடைப்பதற்காக ஒரு ஏஜண்டின் காம விளையாட்டுக்கு ஆளாகிறாள். ராதிகாவின் கணவன் இன்னொரு பெண்ணுடன் நட்பு வைத்திருக்கிறான் என்று தெரிய வந்து துவண்டு போகிறாள். ப்ரியாங்கா ஷ்யாமை வெறுப்பேற்றுவதற்கு அவளது அமெரிக்க மாப்பிள்ளையுடன் ஃபோனில் தேனிலவு பற்றி பேசுகிறாள். என்ன தான் பேசுகிறாள் என்று தெரிந்து கொள்ள அவளது ஃபோனை டேப் செய்து ஒட்டுக் கேட்கிறான் ஷ்யாம். இது ப்ரியாங்காவுக்குத் தெரியவர, அவள் மனமுடைகிறாள். வ்ரூமை ஒரு அமெரிக்க வாடிக்கையாளர் தகாத வார்த்தைகள் கொண்டு திட்டுகிறான். இதனால் மனமுடைந்த வ்ரூம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஆறுதல் சொல்ல வந்த இஷாவை அவள் இன்னொருவனோடு படுத்தவள் தானே என்று ஏசி விடுகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது மேனேஜர், கால் செண்டரின் நிலைமை சரியில்லை. நிறைய பேருக்கு வேலை போகப் போகிறது. எதற்கும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் அமெரிக்காவுக்கு மாற்றலாகிப் போகிறேன் என்று இன்னும் எரிச்சலைக் கிளப்புகிறான். இந்த சம்பவங்களால் ரொம்பவே குழப்பமடைந்த அனைவரும் அருகிலிருக்கும் டிஸ்கோத்தெக்குச் சென்று, புண்பட்ட நெஞ்சை போதை போட்டு ஆற்றுகிறார்கள்.
போதையில் வ்ரூம் காரை ஒரு கட்டிடம் கட்டுவதற்காகத் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் ஓட்டி விட, எல்லோருமே, சாகப் போகிறோம் என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். யாருக்காவது ஃபோன் செய்து உதவி நாடலாம் என்றால், சிக்னல் இல்லை. அப்போது ஷ்யாமின் ஃபோன் ஒலிக்கிறது. கடவுளிடமிருந்து அழைப்பு. தாங்கள் எல்லோரும் சாகப் போகிறோமென்றும், தாங்களைக் காப்பாற்றக் கோரியும் கேட்கிறார்கள். இவர்களது கோரிக்கைக்கு பதிலளிக்கும் ஆண்டவன், “இந்த மரணத்திலிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், ஆனால் தினமும் செத்துப் பிழைக்கும் மரணத்திலிருந்து எப்படிப் பிழைக்கப் போகிறீர்கள்? உங்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் உங்களுக்குள்ளே இருக்கும் குரலிடம் கேள்விகேட்டுப் பாருங்கள். அந்த ஒலியிடம் பேசிப் பாருங்கள். அப்போது உங்களுக்கு பிழைக்க வழி கிடைக்கும். எல்லோருக்கும் மூன்று நிமிடம் கொடுக்கிறேன். உங்களுக்குள் இருக்கும் அந்த அந்தராத்மாவிடம் பேசுங்கள். அது சொல்லும் நீங்கள் வாழ்வில் என்னவாக வேண்டுமென்று” என்கிறார்.
“நான் ஒரு சிறு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என் அம்மா எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையைப் பார்த்து அடுத்த மாதமே என்னை அமெரிக்கா அனுப்பப் பார்க்கிறார். நான் எப்படியாவது ஒரு பள்ளி ஆரம்பிக்கவேண்டும் இது தான் எனது ஆசை” என்கிறாள் ப்ரியாங்கா.
“நான் என் கணவனை எவ்வளவோ காதலித்தேன். அந்தக் காதலுக்காக என் மாமியார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டேன். ஆனால் இன்னொருவளோடு தொடர்பு வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும் என் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது, அவனுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும்” என்று ராதிகா சொல்கிறாள்.
“ஒரு மாடலாக வேண்டும் என்ற வேகத்தில் தகாத காரியமெல்லாம் செய்து விட்டேன். ஆனால் இனி எனக்கு வாய்க்காத ஒரு வாழ்விற்கு ஏங்காமல் இருக்கும் வேலையில் மும்முரமாக இருப்பேன்” என்கிறாள் இஷா.
“என் மகனுக்குக் கல்யாணமான பிறகு, என் மருமகள் வேலைக்குப் போவது எனக்குப் பிடித்திருக்கவில்லை. இதனால் அவர்களிடம் அடிக்கடி சண்டை போட்டேன். ஆனால் இப்போது தான் புரிகிறது, இது அவர்களுடைய வாழ்க்கை. அதை எப்படி நடத்த வேண்டுமோ, அப்படிக் கொண்டு செல்வது, அவர்களது இஷ்டம். இதில் நான் குறுக்கிட்டது, என் தவறு. என் பிள்ளையோடு நான் திரும்பிப் போய் வாழ வேண்டும்” என்கிறார் ராணுவ அதிகாரி.
“நான் ஒரு இணையதள வடிவமைப்பு நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தேன். ஆனால், இது நாள் இது வரை அது கனவாகவே இருந்து வந்துள்ளது. எனது மற்ற நண்பர்களிடம் நிறைய பணம் இருக்கும் போது, நான் மட்டும் ஏழையாய் இருப்பது பிடிக்கவில்லை. அதனால் தான் வேண்டா வெறுப்பாக இந்த வேலையில் இருக்கிறேன். ஆனால், இந்த வேலையை உதறிவிட்டு, எனது லட்சியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்கிறான் வினோத் என்கிற வ்ரூம்.
கடைசியாக பேச ஆரம்பிக்கும் ஷ்யாம், “இது நாள் வரையில் நான் எதற்கும் பயனற்ற ஒரு மனிதனாகவே இருந்திருக்கிறேன். எனது அம்மா முதல் உறவினர் வரை எல்லோரும் என்னை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. என்னை ப்ரியாங்காவின் அம்மா இப்படிச் சொன்ன போது எனக்கு அவர் மேல் கோபம் வந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கையில், அவர் சொன்னதிலும் நியாயம் இருந்திருக்கிறது. வாழ்வில் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும், ப்ரியாங்கா மாதிரி ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருக்க வேண்டும்” என்கிறான்.
இவர்களது கோரிக்கைகளைக் கேட்ட ஆண்டவன், உங்கள் உள்ளுணர்வுகள் சொன்னதைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் உள்ளுணர்வாக இருந்து உங்களிடம் பேசியது நான் தான். உங்கள் ஒவ்வொருக்குள்ளும் நான் இருக்கிறேன். இப்போது இந்த மரண விளிம்பிலிருந்து தப்பிப்பதற்கும் உங்கள் உள்ளுணர்விடமிருந்தே பதிலைப் பெறுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறார்.
இந்த ஆறு பேரும் தங்கள் உள்ளுணர்விடம் பேசி, பிழைத்தார்களா, கால் செண்டர் வேலை என்னவானது, ராதிகா, இஷா, ராணுவ அதிகாரி என்ன ஆனார்கள், பக்க்ஷி என்ன ஆனான், ப்ரியாங்கா ஷ்யாம் காதல் கை கூடியதா, இது மீதி 30 பக்கங்கள்.
கடவுள் பேசுவதெல்லாம் கொஞ்சம் நம்பக் கூடியதாக இல்லாவிட்டாலும், கடைசியில் அதைப் பற்றி சேதன் பகத்தே விளக்கம் கொடுத்திருப்பது சுவாரஸ்யம். ப்ரியாங்கா ஷ்யாம் காதல் ஃப்ளாஷ் பேக் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த கதையையே ஷ்யாமின் கோணத்திலிருந்து சேதன் கூறியிருப்பது இன்னும் சுவாரஸ்யம். இதற்கு முன் இந்தியக் கதாபாத்திரங்கள் கொண்ட ஆங்கிலப் புதினங்கள் அவ்வளவாகப் படித்ததில்லை. சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் போன்றவர்கள் எழுதிய ஒன்றிரண்டு புதினங்களைக் கஷ்டப்பட்டு 100 பக்கங்கள் படித்தும் ஒன்றும் மண்டையில் ஏறாததால் தூக்கிப் போட்டிருக்கிறேன். ஆர்.கே.நாராயணனின் “சுவாமி அண்டு ஃப்ரண்ட்ஸ் ” படித்தாலும் இந்திய கதாபாத்திரங்களை ஆங்கிலத்தில் படிக்கும் போது மனதில் நிலைக்க வில்லை.
ஆனால் இந்தக் கதையில் வருபவர்கள் எல்லோருமே இருபத்தியோறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இன்றைய இளைஞர்கள் சகஜமாக இவ்வளவு ஆங்கிலம் பேசுவார்கள் என்று உணரும் போது, ஒரு விதமான செயற்கைத் தனம் தெரியல்லை. ஒவ்வொருக்கும் ஒரு விதமான பிரச்னை இருந்த போதிலும் அதை கையாண்ட விதம் ரசிக்கும் படி இருக்கிறது.
பெண்கள் கூட சகஜமாக டிஸ்கோதே சென்று மது அருந்துகிறார்கள், பாய் ஃப்ரெண்டோடு உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் போன்ற பக்கங்களைப் படிக்கும் போது மட்டும், இப்படிப்பட்டவர்களை ராம் சேனா தாக்குவதில் தப்பில்லை என்று தோன்றுகிறது. ஆண்கள் மட்டும் மப்பு ஏத்திக்கலாமான்னு கேக்கப்படாது. :-)
கால் செண்டரில் வேலை பார்ப்பவர்கள் பற்றி நான் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய விடியலின் மறுபக்கம் ஞாபகம் வந்தது. இருந்த போதிலும், நல்ல நகைச்சுவை இழையோடும், தரமான நாவல். Timing Jokes நிறைய. முதலில் படிக்கும் போதே ரசித்தால் தான் உண்டு. கடைசி 10 பக்கத்தில் கொஞ்சம் ஹிந்தி சினிமா போலிருந்தாலும், பரபரப்பாகவே இருந்தது. சேதன் பகத் முதலில் எழுதின Five Point Some One படிக்க ஆரம்பித்து விட்டேன்.

41 comments:
me th 1st
ஹையா நான் கூட டான் பிரவுனின் digital fortress ஒரே நாளில் படித்தேன்.எடுத்தால் கீழே வைக்க மனமேயில்லை. அப்புறம் இந்த புத்தகம் வாங்கிப் படிக்கணும். ஒரு சின்ன வேண்டுகோள் புக்கை இவ்ளோ டீப்பாக அலசாதீர்கள். கதையை முழுவதும் படித்துவிட்ட எண்ணம் வருகிறது. Sorry no offense meant:)
"ஓர் இரவில் ஒரு கால் செண்டரில்"
நானும் இந்த நோவேல் யை இரண்டு நாளில் படித்து முடித்தேன் .......
நல்ல இருக்கும்......
இந்த நோவேல் யில் சொல்லிருக்கும் விஷயம் எல்லாம் நான் முன்னாடியே கேள்விப்பட்டது தான் ஆதனால் என்னகு ஒன்னும் அச்சிரியம் தர வில்லை
டேன் பிரவுன் உடையே da vinci code படித்துள்ளேன்......
மற்ற இரண்டு நோவேல் வாங்கி இருக்குகிறேன்..... ஆனால் இன்னும் படிக்க வில்லை.....
நான் பொன்னியின் செல்வன்னை பத்மவாசன் மற்றும் மணியன் படம்கள் உடன் படித்து இருக்கேன்....
ஆதனால் கதையோடு பயணம் செய்து இருக்கிறேன்.....
சூப்பர் ஆன அனுபவம் அது......
அந்த நோவேல் படிக்கும் போது நந்தினி மற்றும் குந்தவை மேல் காதல் கொண்டேன்.......
அந்த காதல் அனுபவமே தனி தான் பாஸ்........
பத்மவாசன் படம்கள் உடன் ஒரு முறை நீங்கள் படித்து பாருங்க ..... அப்ப தெரியும் என் காதல்
ராம் சேனா செய்தது சரியே....
ஆனால் செய்த முறை தான் தப்பு.....
five point someone இத விட செம superaa இருக்கும் விஜய்...கண்டிப்பா படிங்க...
Nanri!
எப்படி இவ்வளவு டிடேய்லா விமர்சனம் எழுத முடியுது விஜய்??
ஸ்பெஷல் டேலண்ட்!!
ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கிறீங்க!
ஆங் சொல்ல மறந்துட்டேன்.....புது டெம்ப்லேட் சூப்பரோ சூப்பர்!!!
சீக்கிரம் பாலிவுட் படத்தில் வரும் இந்த கதை
@ vijay anna
Chetan Bagathoda ella booksumae super, athey Mathirithaan Dan Brownum - avorada naallu bookumae oru oru naala padichi mudichen- college la benchukku adiyilla utkarnthu kudaa davinci code padichi iruken- infact ennoda record speed reading naa Harry Potter last part non stopa ore nallukul (sumara 8 hours without food water- break) padichi mudichathu than...
//பெண்கள் கூட சகஜமாக டிஸ்கோதே சென்று மது அருந்துகிறார்கள், பாய் ஃப்ரெண்டோடு உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் போன்ற பக்கங்களைப் படிக்கும் போது மட்டும், இப்படிப்பட்டவர்களை ராம் சேனா தாக்குவதில் தப்பில்லை என்று தோன்றுகிறது. ஆண்கள் மட்டும் மப்பு ஏத்திக்கலாமான்னு கேக்கப்படாது. :-)//
ithu konjam aanathikka varthaya irukku - namma naadu KAMASUTRA padaitha naadu - innum poi pengal kattu pettigal athu ithunu pesrathu siripai varavalaikirathu...
\\ MayVee said...
me th 1st\\
Yes you are always No.1 :-)
\\ வித்யா said...
ஒரு சின்ன வேண்டுகோள் புக்கை இவ்ளோ டீப்பாக அலசாதீர்கள். கதையை முழுவதும் படித்துவிட்ட எண்ணம் வருகிறது. Sorry no offense meant:)\\
வருகைக்கு ரொம்ப நன்றி வித்யா. ஏன் சின்ன வேண்டுகோள் வைக்கறீங்க. பெரிசாவே வைக்கலாம்.
இனிமேல் புத்தகம் பற்றி எழுதும்போது, எனக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டும் எழுதுகிறேன். உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி. இனிமேல் புத்தகம் பற்றி எழுதும்போது கவனமாக எழுதுகிறேன்.
\\ MayVee said...
டேன் பிரவுன் உடையே da vinci code படித்துள்ளேன்......
மற்ற இரண்டு நோவேல் வாங்கி இருக்குகிறேன்..... ஆனால் இன்னும் படிக்க வில்லை.....\\
என்னைப் பொறுத்தவர, டிஜிடல் ஃபோர்ட்ரெஸ் தான் நல்லா இருக்கும். மற்ற மூன்றும் விறுவிறுப்பாக இருந்தாலும், கொஞ்சம் ஓவரா காதில் பூ சுற்றியிருப்பார் :-)
\\ MayVee said...
பத்மவாசன் படம்கள் உடன் ஒரு முறை நீங்கள் படித்து பாருங்க ..... அப்ப தெரியும் என் காதல்\\
படங்களைப் பார்க்காமலேயே குந்தவை மீது காதல் கொண்டேன். உங்களுக்கு அந்தபுத்தகம் எங்கு கிடைக்கும்’னு தெரிந்தால் சொல்லவும்.
\\MayVee said...
ராம் சேனா செய்தது சரியே....
ஆனால் செய்த முறை தான் தப்பு....\\
:-)
\\ Divyapriya said...
five point someone இத விட செம superaa இருக்கும் விஜய்...கண்டிப்பா படிங்க..\\
இன்று படித்து முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
\\ Boston Bala said...
Nanri!\\
பாலா சார், வந்து அட்டண்டென்ஸ் போட்டதற்கு ரொம்ப நன்றி சார் :-)
\\ Divya said...
எப்படி இவ்வளவு டிடேய்லா விமர்சனம் எழுத முடியுது விஜய்??
ஸ்பெஷல் டேலண்ட்!!
ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கிறீங்க!\\
நீங்க இப்படிச் சொல்லறீங்க. வித்யா என்னடான்னா கதையையே சொல்லிட்டீங்க. படிக்கற ஆர்வமெ போயிடுதுன்னு சொல்லறாங்க :-) :-)
Every Woman is different like others'னு சும்மாவா சொன்னாங்க :-)
\\ Divya said...
ஆங் சொல்ல மறந்துட்டேன்.....புது டெம்ப்லேட் சூப்பரோ சூப்பர்!!!\\
எல்லாப் புகழும் btemplates காரர்களுக்கே :-) நன்றி ரஹ்மான் :-)
\\நசரேயன் said...
சீக்கிரம் பாலிவுட் படத்தில் வரும் இந்த கதை\\
ஏற்கனவே சல்மான் கான், அர்பாஸ் கான், காத்ரீனா கைஃப், அம்ரிதா அரோரா இவர்கள் நடித்து ஹலோ என்ற பெயரில் ஹிந்தி படம் எடுத்து விட்டார்கள். ஆனால் கதையைப் படிப்பது போலல்லாமல், ரொம்பவே போர் என்று கேள்விப்பட்டேன். இருந்தாலும் காத்ரீனா கைஃப் இருப்பதால் படத்தை டி.வி.டி.யில் பார்க்க வேண்டும் :-)
\\ Lancelot said...
@ vijay anna
Chetan Bagathoda ella booksumae super, athey Mathirithaan Dan Brownum - avorada naallu bookumae oru oru naala padichi mudichen- college la benchukku adiyilla utkarnthu kudaa davinci code padichi iruken- infact ennoda record speed reading naa Harry Potter last part non stopa ore nallukul (sumara 8 hours without food water- break) padichi mudichathu than...\\
நான் சேதன் பகத்தை கொஞ்சம் நேரம் கழித்துத் தான் படிக்க ஆரம்பித்திருக்கேன். எனக்கென்னவோ ஹாரி பாட்டர் அவ்வளவு பிடிக்கவில்லை. வயசாகிவிட்டதனாலா??? :-)
\\ithu konjam aanathikka varthaya irukku - namma naadu KAMASUTRA padaitha naadu - innum poi pengal kattu pettigal athu ithunu pesrathu siripai varavalaikirathu...\\
அதுக்காகத்தானே, “ஆண்கள் மட்டும் மப்பு ஏத்திக்கலாமான்னு கேக்கப்படாது. :-)” அப்படின்னு எழுதியிருக்கேன். It is self implied that I am against even men relieving their stress by drinking :-)
@ Vijay anna
mannikavum thavaraga interpret seithu vitten...
and he he he vayasaaachulaa :P
புது டெம்ப்லேட் சூப்பரோ சூப்பர்!!!
ennala itha mattum than solla mudium
eaana eanku books padikura pazakkam illa
நல்ல தரமான விமர்சனம் விஜய் சார்..
ராம் சேனா செய்வது கலாச்சார தீவிரவாதம். இதுவும் தப்பு தான்..
ஆனால் நீங்க சொல்றமாதிரி கலாச்சார சீர்கேடு கால் சென்டரில் வேலை பார்ப்பதால் மட்டும் வருவதில்லை. 'உன் வாழ்கை உன் கையில்' இதை தப்பா புரிஞ்சுகிட்டு நாம வாழுறதுதான் வாழ்க்கைன்னு இருக்கறதால் வருவது
கதையை ஃபுல்லா எழுதாதீங்க விஜய். என்னை மாதிரி சோம்பேறிகள் படிச்ச கதைதானேன்னு பதிவை படிக்க மாட்டானுங்க. ஹி..ஹி. :))
//அருந்ததி ராய் போன்றவர்கள் எழுதிய ஒன்றிரண்டு புதினங்களைக் கஷ்டப்பட்டு 100 பக்கங்கள் படித்தும் ஒன்றும் மண்டையில் ஏறாததால் தூக்கிப் போட்டிருக்கிறேன்.
நான் 'God of Small Things' ஐ கடைசி பக்கம் படிச்சு முடிச்சதும் உடனே முதல் பக்கம் திருப்பி ரெண்டாவது முறை படிக்க ஆரம்பிச்சேன்.
//Divyapriya said...
five point someone இத விட செம superaa இருக்கும் விஜய்...கண்டிப்பா படிங்க...
Repeat...!
தலைவா Bangalore to frankfurt flightல் 9 மணி நேரத்தில் இந்த புத்தகத்தை படித்தேன்.
பல இடங்களில் IT and BTயை சேத்தன் பகத் சம்மயாக வாரியிருந்தார்.
நல்ல கதையை கெடுக்காத டைரக்டர் கிடைத்தால் அனைவரும் ரசித்து பார்க்க ஒரு அருமையான திரைப்படம் கிடைக்கும்
உள்ளேன் மட்டும் போட்டுக்கிறேன். என்னோட ஆங்கில அறிவுக்கு ஒரு சிறிய புத்தகம் படிச்சாலே ஒரு வாரம் ஆகும் :). டிக்சனரியை துணைக்கு வெச்சுட்டுதான் படிக்கணும் :).
அப்புறம் புது டெம்ப்ளேட் சூப்பர். மாதத்துக்கு ஒரு முறை மாத்திடறீங்க :)
//இவர்களுக்கு தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் எதற்கும் விடுமுறை கிடையாது. இவர்களது வாடிக்கையாளர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களோ அவர்களது விடுமுறைகள் தான் இவர்களுக்கு விடுமுறை.
//
உங்கள் கட்டுரையில் படித்தது ... நான் ஐந்தாண்டுகளுக்கு முன் ரொம்ப
அனுபவ பட்டிருக்கிறேன்... நான் இருந்தது என்னவோ ஒரு வங்கியின் சப்போர்ட் பிரிவில் .எதற்கும் லீவ் கிடையாது திருமணம் ஆன புதிதில் தொடர்ந்து ஒரு மாதம் நைட் ஷிபிட் வேறு. வேலை பளுவால் உடல் கெடுவது தான் மிச்சம்...
// சேதன் பகத் முதலில் எழுதின Five Point Some One படிக்க ஆரம்பித்து விட்டேன்.
//
நானும் படிக்க ஆரம்பித்தேன் ஒரு மாதத்திற்குள் முன் , கொஞ்சம் தான் படித்திருக்கிறேன் . சீக்கிரம் முடிக்க வேண்டும்
" விஜய் said...
படங்களைப் பார்க்காமலேயே குந்தவை மீது காதல் கொண்டேன். உங்களுக்கு அந்தபுத்தகம் எங்கு கிடைக்கும்’னு தெரிந்தால் சொல்லவும். "
விஜய் ....
அது பத்திரிக்கையில் வந்த பொன்னியின் செல்வன் கதை பக்கங்களை கொண்டு bind செய்ய பட்டது........
நான் அதை ஒரு old book stall இருந்து வாங்கினேன்
Anna.. oru valiya book padichiteengala?? CLAP CLAP CLAP!! Akka kitha solli sweet seiya sollunga... Five point someone padichi review podhunga.. eana adhu thaan AAMIR ooda adhutha padamaame... THREE IDIOTS!! :)
Template super appu!!
awesome books... i read all 3 books.....
அண்ணா அப்படியே "3 Mistakes of my life" புக்கையும் படிச்சுடுங்க...
\\ gayathri said...
புது டெம்ப்லேட் சூப்பரோ சூப்பர்!!!
ennala itha mattum than solla mudium
eaana eanku books padikura pazakkam illa\\
ரொம்ப நன்றி. It is high time you start reading books. ஆங்கிலப் புத்தகங்கள் தான் படிக்கணும் என்றில்லை. தமிழிலே அருமையான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கு.நான் வாழ்க்கையில் 21 வருடங்கள் பாழாக்கி விட்டேனே என்று இப்ப்போது ஏங்குகிறேன் :-)
\\ வாழவந்தான் said...
ராம் சேனா செய்வது கலாச்சார தீவிரவாதம். இதுவும் தப்பு தான்..
ஆனால் நீங்க சொல்றமாதிரி கலாச்சார சீர்கேடு கால் சென்டரில் வேலை பார்ப்பதால் மட்டும் வருவதில்லை. 'உன் வாழ்கை உன் கையில்' இதை தப்பா புரிஞ்சுகிட்டு நாம வாழுறதுதான் வாழ்க்கைன்னு இருக்கறதால் வருவது\\
ராம் சேனா செய்வது செய்தது, எதுவுமே சரி இல்லை. வன்முறை, அடக்குமுறை இது எதையுமே சாதிக்காது. நான் ராம் சேனா பற்றி எழுதியது ஒரு லைடர் ஃபீலிங்க் தான். ராம் சேனாவை தடை செய்தால் கூட நல்லா இருக்கும் :-)
கால் செண்டரில் வேலை பார்ப்பதினால் மட்டுமே கலாசார சீர்கேடு நடக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. இந்த கலாசார சீர்கேடு என்று சொல்வதே கூட ஒரு மாதிரியான தப்பான வார்த்தை. ஒழுக்க சீர்கேடு நடக்கிறது என்பது தான் எனது வாதம்.
\\ Karthik said...
நான் 'God of Small Things' ஐ கடைசி பக்கம் படிச்சு முடிச்சதும் உடனே முதல் பக்கம் திருப்பி ரெண்டாவது முறை படிக்க ஆரம்பிச்சேன்.\\
அப்படியா, அவ்வளவு நல்லா இருக்குமா? மீண்டும் ஒரு விஷப் பரீட்சை எழுதிப்பார்த்து விட வேண்டியது தான் :-)
\\ Arun Kumar said...
பல இடங்களில் IT and BTயை சேத்தன் பகத் சம்மயாக வாரியிருந்தார்.
நல்ல கதையை கெடுக்காத டைரக்டர் கிடைத்தால் அனைவரும் ரசித்து பார்க்க ஒரு அருமையான திரைப்படம் கிடைக்கும்\\
அமெரிக்கர்களை இன்னும் செம வாரு வாரியிருப்பார். அதுவும் ஒரு அமெரிக்க பெண்மணி, “உங்களிடம், Dial A Turkey நம்பர் இருக்கிறதா” என்று கேட்கும் இடங்கள்.
ஹலோ என்று ஏற்கனவே சல்மான் கன், காத்ரீன கைஃப் நடித்து ஒரு படம் எடுத்து விட்டார்கள். புத்தகத்தைப் படித்தவர்களால் மட்டும் ரசிக்க முடிந்ததாம் :-)
\\ தாரணி பிரியா said...
உள்ளேன் மட்டும் போட்டுக்கிறேன். என்னோட ஆங்கில அறிவுக்கு ஒரு சிறிய புத்தகம் படிச்சாலே ஒரு வாரம் ஆகும் :). டிக்சனரியை துணைக்கு வெச்சுட்டுதான் படிக்கணும் :).
அப்புறம் புது டெம்ப்ளேட் சூப்பர். மாதத்துக்கு ஒரு முறை மாத்திடறீங்க :)\\
அப்படி அகராதியின் உதவியோடு தான் இந்தப் புத்தகத்தைப் படிக்கணும் என்றில்லை, தாரணி. நல்ல எளிதான ஆங்கிலத்தில் புத்தகம் எழுதப்பட்டிருக்கு. கண்டிப்பாகப் படியுங்கள்.
டெம்பிளேட்டிற்கான புகழெல்லாம் btemplates காரர்களையே சென்றடையும். :-) அப்பப்போ மாத்திக்கிட்டே இருந்தாத்தானே நல்லா இருக்கும் ;-)
\\ முகுந்தன் said...
நானும் படிக்க ஆரம்பித்தேன் ஒரு மாதத்திற்குள் முன் , கொஞ்சம் தான் படித்திருக்கிறேன் . சீக்கிரம் முடிக்க வேண்டும்\\
நானும் படிக்க ஆரம்பித்த அடுத்த நாளே வெளியூர் சென்று விட்டேன்.அதனால் படிக்க முடியவில்லை. ஆனால் இந்த மாதிரி புத்தகங்களைப் படித்து முடிக்க 4-5 மணிநேரம் போதும் :-)
\\ Karthik said...
Anna.. oru valiya book padichiteengala?? CLAP CLAP CLAP!! Akka kitha solli sweet seiya sollunga... Five point someone padichi review podhunga.. eana adhu thaan AAMIR ooda adhutha padamaame... THREE IDIOTS!! :)\\
என்னப்பா பண்ணறது? இப்பல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடித்தாலே விழா எடுக்கணும் போலிருக்கே :-)
ஆமாம், ஆமீர் கானின் அடுத்த படம், Five Point Some one புத்தகத்தின் அடிப்படையில் தான் இருக்காம். ஆனால் ஆமீர்கானை ஒரு கல்லூரி மாணவனாக எப்படிப் பார்க்கப் போகிறோமோ? கடவுளுக்கேவெளிச்சம் :-)
\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
awesome books... i read all 3 books.....\\
\\Sriram said...
அண்ணா அப்படியே "3 Mistakes of my life" புக்கையும் படிச்சுடுங்க..\\
Thanks Rajalakshmi and Sri Ram. I have already stacked up 3 mistakes of my life as my next one :-)
என் வீட்டுகாரருக்கு நாவல் என்றாலே பிடிக்காது. நான், புத்தகத்தை கையில் எடுத்தால் இடியே விழுந்தாலும் அசராமல் படிப்பதை பார்த்து அவருக்கு இன்னும் நாவலில் அதிகம் வெறுப்பு(பொறாமை) வந்துவிட்டது.:(. நீங்கள் அனுபவித்து எழுதுவதை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு.
அலோ...இதெல்லாம் ரோம்ப ஓவரு..நான் ரொம்பநாள் கழிச்சி ஒரு ஆங்கில நாவல் படிச்சி அதப்பத்தி ஒரு விமர்சனம் போட்டா,நீங்களும் அதயே செஞ்சியிருக்கீங்க...அதே மாதிரிதான் 'நான் கடவுள்' விமர்சனமும்.
இந்த புக்'க படிச்சிட்டு அவரோட முதல் நாவல நாளைக்குதான் ஒரு நண்பிகிட்ட இருந்து சுட்டுட்டுவந்து படிக்கலாம்னு இருந்தா,நீங்க அதுக்குள்ள படிக்க ஆரம்பிச்சிட்டிருகீங்க....
என்னமோ போங்க...
You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.html
Sorry nga anna.... naan indha post ah padikala.. andha book ah padikkanum irukken.. padichitu unga post ah padikeren... kada therinjita enaku enaku padikra interest poidum :(
Ippa ellam yen online ke varadhu illa????
Busy?>????
me th 39
ஆளையே காணோம்.. பிஸி??
\\ Saravana Kumar MSK said...
ஆளையே காணோம்.. பிஸி??\\
ஆமாம்பா. வேலை பயங்கரமா இருக்கு. கொடுக்கற சம்பளத்துக்கு வேலையும் செய்யணுமாம், இந்த பாழாப் போற கம்பெனியில :-)
சீக்கிரமே மீண்டும் வருவேன் :-)
//
ராம் சேனா செய்வது செய்தது, எதுவுமே சரி இல்லை. வன்முறை, அடக்குமுறை இது எதையுமே சாதிக்காது. நான் ராம் சேனா பற்றி எழுதியது ஒரு லைடர் ஃபீலிங்க் தான். ராம் சேனாவை தடை செய்தால் கூட நல்லா இருக்கும் :-)
கால் செண்டரில் வேலை பார்ப்பதினால் மட்டுமே கலாசார சீர்கேடு நடக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. இந்த கலாசார சீர்கேடு என்று சொல்வதே கூட ஒரு மாதிரியான தப்பான வார்த்தை. ஒழுக்க சீர்கேடு நடக்கிறது என்பது தான் எனது வாதம்.
//
இது கூட சரியான டெர்ம் தான். ஆனால் எப்படிப்பட்ட சீர்கேடானாலும் சொசைட்டிக்கு அது கால் செண்டரால் மட்டும் வருவதில்லை. இந்த சீர்கேட்டுல IT/ITES இண்டஸ்டிரிக்கு ஒரு ஷேர் இருக்கு.but they are not the one and only or major contributors.
P.S:(கமண்டுக்கு PSஆ??)இன்னிக்குதான் உங்க கமன்டை பார்த்தேன்!!
Post a Comment