Pages

January 20, 2009

நானும் ஒபாமா கட்சிக்கு மாறிட்டேன்

“உஜாலாக்கு மாறிட்டேன்”னு சொல்லற மாதிரி, நானும் ஒபாமாவுக்கு மாறிட்டேன். இப்போத் தான் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்ட பாராக் ஒபாமாவின் பேச்சு முடிந்தது. அமெரிக்காவை யார் ஆண்டால் என்ன? இந்தியாவிற்கு அதனால் என்ன பெருத்த பயன் வந்துவிடப் போகுது என்பது தான் என்னுடைய கருத்து. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒபாமாவின் பதவியேற்பு உறை ரொம்பவே அழுத்தமாக இருந்தது. நம்மூர் பிரதமரும் பேசுறாரு, பேச்சு. கோடானு கோடி மக்கள் பார்ப்பங்களே என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல், யாரோ எழுதிக் கொடுத்து அதை அப்படியே எந்தவொரு உணற்சியும் இல்லாமல் பேசுவாறு. ஆனால் ஒபாமா, எதையும் பார்த்துப் படிக்காமல் மனதில் உள்ளதை உணற்சிப் பெருக்கோடு பேசுவதைக் கேட்கும் போது, அந்தப் பேச்சில் அப்படியே மயங்கிப் போனேன், என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவரது இந்தியா சார்ந்த கொள்கைகள் எப்படி வேணா இருந்துட்டுப் போகுது. புதுசா எந்த அமெரிக்க் அதிபரும்,இந்தியா மீது பாச மழை பொழியப் போவதில்லை. ஆனால், ஒரு நாட்டின் அதிபர் தன்னை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒபாமா ஒரு நல்ல முன்னுதாரணம்.
பி.கு: ஒபாமா பதவியேற்றத்தால் நாளை பங்குச் சந்தையில் ஒரு 1000 பாயிண்டுகள் சென்செக்ஸ் ஏறினால் நல்லா இருக்கும்.

9 comments:

மேவி... said...

என்ன திடிர்னு.....
உண்மை தாங்க. நாம ஊருல IAS IPS அதிகாரிகளின் ஆட்சி தான் நடக்குது..... நாம தலைவர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மை போல் சொன்னதை சொல்ல்வார்கள்.
ஒபாமா பேச்சு நல்ல இருந்துச்சு.

"பி.கு: ஒபாமா பதவியேற்றத்தால் நாளை பங்குச் சந்தையில் ஒரு 1000 பாயிண்டுகள் சென்செக்ஸ் ஏறினால் நல்லா இருக்கும்."
ரொம்ப தான் ஆசை உங்களுக்கு......

Vijay said...

\\ MayVee said...
என்ன திடிர்னு..... \\

என்ன “என்ன திடீர்னு?

\\நாம ஊருல IAS IPS அதிகாரிகளின் ஆட்சி தான் நடக்குது.....\\
ப்ளீஸ். அவங்க வெறும் தலையாட்டி பொம்மைகள்.

\\ஒபாமா பேச்சு நல்ல இருந்துச்சு.\\
அவருக்கு பேச மட்டும் தான் தெரியும் என்று நிறைய பேர் சொல்கிறார்கள் :-)

\\ரொம்ப தான் ஆசை உங்களுக்கு......\\
Only, The wearer knows where the shoe pinches :-)

மேவி... said...

"Only, The wearer knows where the shoe pinches :-)"
me too hav invested a large amount in funds etc. boss...

மேவி... said...

"\\நாம ஊருல IAS IPS அதிகாரிகளின் ஆட்சி தான் நடக்குது.....\\
ப்ளீஸ். அவங்க வெறும் தலையாட்டி பொம்மைகள்"
no yaar. i said it in an positive note. its their brains oly work for our country.... but the name goes to th politicians

Karthik said...

புஷ் அளவு ஸ்டுப்பிடா இருக்க மாட்டார். தேங்க் காட்.

இந்தியா கூட ரிலேஷன்ஷிப் நல்லாதான் இருக்கும்னு நினைக்கிறேன்.
:)

வாழவந்தான் said...

ஆயிரம் பாயிண்டா!!!!
இனிக்கும் மார்கெட் டொயிங்கு தான்.
bse -321, nse -100 பா..

Divyapriya said...

//ஒபாமா பதவியேற்றத்தால் நாளை பங்குச் சந்தையில் ஒரு 1000 பாயிண்டுகள் சென்செக்ஸ் ஏறினால் நல்லா இருக்கும்.//

ஹி ஹி :)

Poornima Saravana kumar said...

நானும் ஒபாமா கட்சிக்கு மாறிட்டேன்

தேவன் மாயம் said...

ஒபாமாவின் முடிவுகள்
எப்படி என்று பார்ப்போம்