Pages

January 06, 2009

பயணப்பட்டோம்

புது வருஷப்பிறப்புக் கொண்டாட்டங்களெல்லாம் முடிவடைந்து மறு நாள் ஒரு மினி-தீர்த்த யாத்திரைக்குத் தயாரானோம். காஞ்சிபுரமும் பாண்டிச்சேரியும் போய் வருவது தான் பிளான். ரொம்ப நாட்களாக போகணும் போகணும் என்று நினைத்துக் கொண்டிருந்து இப்போது தான் போவதற்கு நேரம் காலம் எல்லாம் அமைந்தது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறையெடுத்தால் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், ஊரில் நிறைய பேர் தங்களது சொந்த ஊருக்குப் போய்விட்டனர். அதனால் ரயிலில் தத்கால் கற்காலென யார் காலில் விழுந்தாலும் டிக்கட் கிடைக்கப் போவதில்லை. அதனால், காரிலேயே போகலாம் என்று முடிவானது.

பெங்களூர் சென்னை சாலையில் கார் செலுத்துவது ஓர் தனி இன்பம் தான். அமெரிக்காவில் கூட 70 மைல் வேகத்துக்கு மேல் போக முடியாது, ஆனால் நம்மூரில் 140 கி.மி. வேகத்தில் கூடப் போகலாம், அப்படி இருக்கிறது, பெங்களூர் சென்னை நால்வழிப் பாதை. என்ன 75 கிலோமீட்டருக்கு டோல் கேட் என்ற பெயரில் வழிப்பறைக் கொள்ளையடிக்கிறார்கள்.

காலை 5 மணிக்கே கிளம்பணும் என்று நினைத்தாலும், பெங்களூர் குளிராலும் பனியினாலும் 6.30 மணிக்குத் தான் கிளம்ப முடிந்தது. காஞ்சிபுரத்தில் சங்கர மடம், காமாட்சியம்மன் கோவில், குமரகோட்டம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கெல்லாம் போய்விட்டு, இரவு மடத்திலேயே சாப்பாடு. சிம்பிளாக இருந்தாலும் சுவையாக இருந்தது.

மறு நாள் காலை 4 மணிக்கெல்லாம் மார்கழி மாத பூஜைக்கு வரும்படி இளைய சுவாமிகளே சொல்லிவிட்டதால் மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து 4.15 மணிக்கெல்லாம் மடத்தில் ஆஜர். மடத்திலும் நேரம் துல்லியமாகக் கடைபிட்க்கிறார்கள். அரசியல் கூட்டம் போலல்லாமல், 4.20’க்கு தனுர் மாத பூஜை ஆரம்பம். காலை வேளையில் கஜ பூஜை கோ பூஜையெல்லாம் பார்க்க முடிந்தது. ஆனால் இது எதையும் படம் பிடிக்க முடியவில்லை. அது ஏன் மடம், கோவில் மாதிரி இடங்களில் புகைப் படம் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதி வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. சுவாமி சிலையப் படம் பிடித்தால் அருள் குறைந்து விடுமா? எங்கள் ஊர் தெருக் கோயிலில் சுவாமியைப் படம் பிடிக்கலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. கொஞ்சம் பிரசித்தி பெற்ற கோவிலில் தான் இந்த மாதிரி கெடுபிடிகளெல்லாம்.

காலை பூஜை முடிந்த பிறகு, பிரசாதமாக சுடச் சுட வெண் பொங்கல். கூட சட்னியும் கொடுத்திருந்தால் வெகு ஜோராக இருந்திருக்கும். இல்லாதிருந்தாலும் நன்றாகவே இருந்தது. காலை 8.30 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவில். கோவில் தான் எவ்வளவு அழகு? கோவில் சுவரெங்கும் கல்வெட்டுக்களாக செதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். சரித்திரம் பயிலும் மாணவர்கள் இந்தக் கோயிலில் இருக்கும் கல்வெட்டுக்களைப் படித்து ஆராய்ச்சி செய்யலாம். சரித்திரம் பயிலும் மாணவர்கள் இருக்கிறார்களா என்ன?

இந்தக் கோயிலில் பெருமாள் மாடியில் இருக்கிறார். படியேறிப் போவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. எனக்கில்லை, எங்கம்மாவுக்கு. ஆனால் இந்தக் கோவிலிலுள்ள இன்னொரு கட்டுப்பாடு மனதை நெருடச் செய்தது. உள் பிரஹாரத்தினுள் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்று பலகை வைத்திருக்கிறார்கள். கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றான பிறகு ஹிந்துவென்ன முஸ்லீமென்ன கிறிஸ்தவர்களென்ன? இல்லை, ஹிந்து அல்லாதவர்களுக்கு அருள் பாலிக்க மாட்டேனென்று பெருமாள் திரும்பி உட்கார்ந்து கொள்ளப் போகிறாரா?

ஒரு வழியாக வரதராஜ பெருமாளை சேவித்து விட்டு பாண்டிச்சேரி நோக்கிப் பயணப்பட்டோம். செங்கல்பட்டு வரை காரை செலுத்துவது ஒரு சவாலாக இருந்தது. ஒரு குழியில் கார் இருக்க ஸ்டியரிங்கை வேறு பக்கம் திருப்பினால் அங்கே இன்னொரு குழி. செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரை மீண்டும் நால்வழிப்பாதை. ஆனால் நம்மூர் லாரிக் காரர்களை நம்ப முடியாது. எந்த சமயத்தில் ராங்க் சைடில் வருவார்கள் என்று சொல்ல முடியாது.

12.30’க்குப் பாண்டிச்சேரி. என்னமோ பாண்டிச்சேரியில் தெருக்களெல்லாம் சீராக நேராகவும் குறுக்காகவும் தான் இருக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கடற்கறை அருகிலுள்ள ஒரு சதுர கிலோமீட்டர் இடம் மட்டும் தான் இப்படி இருக்கிறது. மற்ற இடங்களெல்லாம் சுமாராகத்தான் இருக்கிறது.

நிறைய இடங்களில் BAR என்று கொட்டக் கொட்ட எழுத்துக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.





நிறைய அயல் நாட்டவர்கள் அலைகிறார்கள். ஃப்ரென்சு மற்றும்
ஐரோப்பிய கொடிகள் பறக்கின்றன.










தெருப் பெயர்களெல்லாம் ஃப்ரென்சு மொழியில்
வித்தியாசமாக
இருக்கின்றன.






அந்தக் காலத்து லேடீஸ் சைக்கிளெல்லாம் பார்க்க முடிகிறது.



ஆரோபிந்தோ ஆஷ்ரமத்தில் தங்கி நிறைய சேவை செய்கிறார்கள்.ஆரோவில் போகணும் என்ற ஆசை மட்டும் நிறைவேற வில்லை. அடுத்த முறை போகும் போது கண்டிப்பாகப் போகணும். ஆனால் நிறைய கெடுபிடிகள் இருக்கின்றனவாம். அரவிந்தர் எழுதிய நான்கைந்து புத்தகங்கள் வாங்கினேன்.

காருக்குப் பெட்ரோல் போடுவதற்குப் போனால் லிட்டர் 43’ஏ ருபாய் தானாம். இவ்வளவு மலிவாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், கூட ஒரு கேன் கொண்டு போய் ரொப்பிக் கொண்டு வந்திருக்கலாம். பெட்ரோலே இவ்வளவு மலிவா இருக்கே, மற்ற சரக்கெல்லாம் எவ்வளவு மலிவாக இருக்கும். சும்மாவா விடலைப் பசங்க, வீக்கெண்டுன்னா பாண்டிச்சேரிக்கு ஓடறாங்க!

ஈ.சி.ஆர் ரோட் பிடித்து சென்னைக்கு வந்து மறு நாள் மதியம் கிளம்பி ஒரு வழியாக பெங்களூர் வந்து சேர்ந்தோம்.

36 comments:

M Arunachalam said...

Hi Vijay,

You have a flair for writing man. I enjoyed your travelogue post & intend to complete reading your blog fully when I get the time in the coming days.

Pl keep writing.

Arun

Vijay said...

\\Hi Vijay,

You have a flair for writing man. I enjoyed your travelogue post & intend to complete reading your blog fully when I get the time in the coming days.

Pl keep writing.

Arun\\

Thanks a lot Sir. Keep Visiting :-)

மேவி... said...

"அதனால் ரயிலில் தத்கால் கற்காலென யார் காலில் விழுந்தாலும் டிக்கட் கிடைக்கப் போவதில்லை."
u can get the tickets in thakkal through travel agents by paying extra amount.

"பெங்களூர் சென்னை சாலையில் கார் செலுத்துவது ஓர் தனி இன்பம் தான். அமெரிக்காவில் கூட 70 மைல் வேகத்துக்கு மேல் போக முடியாது, ஆனால் நம்மூரில் 140 கி.மி. வேகத்தில் கூடப் போகலாம்,"
in america we cant bribe police.. but here we can do it... if we happen to give some extra amount means th police even salutes us.

"75 கிலோமீட்டருக்கு டோல் கேட் என்ற பெயரில் வழிப்பறைக் கொள்ளையடிக்கிறார்கள்."
ada pavamey.

"இரவு மடத்திலேயே சாப்பாடு. சிம்பிளாக இருந்தாலும் சுவையாக இருந்தது."
there th curd rice will be tasty to eat.

"கொஞ்சம் பிரசித்தி பெற்ற கோவிலில் தான் இந்த மாதிரி கெடுபிடிகளெல்லாம்."
in srirengam if you give some amounts means you can take video coverage itself.

"சரித்திரம் பயிலும் மாணவர்கள் இருக்கிறார்களா என்ன?"
sorry i passed history using malothora guides :-))

"கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றான பிறகு ஹிந்துவென்ன முஸ்லீமென்ன கிறிஸ்தவர்களென்ன?"
once i asked ths to a swamiji... he said tht some cosmic rays will be affected if a person with disbelief enters it. till now i dont hav any abt wat he said.

"ஒரு குழியில் கார் இருக்க ஸ்டியரிங்கை வேறு பக்கம் திருப்பினால் அங்கே இன்னொரு குழி."
ha ha ha.

"விடலைப் பசங்க"
yenn thaney.

nice post.

Divyapriya said...

//அரவிந்தர் எழுதிய நான்கைந்து புத்தகங்கள் வாங்கினேன்.//

இங்க ஒரு new year resolution break ஆன மாதிரி தெரியுதே ;)

nice post...நல்ல useful weekend தான்னு சொல்லுங்க...நாளைக்கு வைகுண்ட ஏகாதேசி, பெங்களூர் பெருமாளப் பத்தியும் ஒரு பதிவு போட்ருங்க...

Subbu said...

Vijay,
Petrol cheapa irunthu enna..100ltr vangi save pannamudiyuma.. ana other liquids are cheap.. and you can store as well ;)

Regarding your Kanchipuram trip.. there are still some "Mada" sambradayam in place ;)

Karthik said...

சூப்பரா எழுதியிருக்கீங்க விஜய். ரெண்டு முறை படிச்சேன்.
:)

Vijay said...

\\ MayVee said...
u can get the tickets in thakkal through travel agents by paying extra amount.\\
May be true. But what if these gues give tickets in different compartments :-)

\\in america we cant bribe police.. but here we can do it... if we happen to give some extra amount means th police even salutes us.\\
True. But I have always paid the fine amount and got the receipt as well :-)

\\"75 கிலோமீட்டருக்கு டோல் கேட் என்ற பெயரில் வழிப்பறைக் கொள்ளையடிக்கிறார்கள்."
ada pavamey.\\
ஆமாம்பா

\\"இரவு மடத்திலேயே சாப்பாடு. சிம்பிளாக இருந்தாலும் சுவையாக இருந்தது."
there th curd rice will be tasty to eat.\\
Very True



\\"சரித்திரம் பயிலும் மாணவர்கள் இருக்கிறார்களா என்ன?"
sorry i passed history using malothora guides :-))\\
Haa Haa. I love history. Got first mark in my class in 10th ;0)

\\once i asked ths to a swamiji... he said tht some cosmic rays will be affected if a person with disbelief enters it. till now i dont hav any abt wat he said.\\
God only knows :-)


\\nice post.\\

THanks dude :-)

Vijay said...

\\ Subbu said...
Vijay,
Petrol cheapa irunthu enna..100ltr vangi save pannamudiyuma.. ana other liquids are cheap.. and you can store as well ;)\\
I have mentioned that as well :-) Didn't you read it?

Vijay said...

\\ Divyapriya said...
//அரவிந்தர் எழுதிய நான்கைந்து புத்தகங்கள் வாங்கினேன்.//

இங்க ஒரு new year resolution break ஆன மாதிரி தெரியுதே ;)\\
என்ன பண்ண. இந்தப் புத்தகங்கள் வேறெங்கும் கிடைக்காதே :-)

\\nice post...நல்ல useful weekend தான்னு சொல்லுங்க...நாளைக்கு வைகுண்ட ஏகாதேசி, பெங்களூர் பெருமாளப் பத்தியும் ஒரு பதிவு போட்ருங்க...\\
ஆமாம். மனதுக்கு புதுத் தெம்பு கிடைத்தது. வைகுண்ட ஏகாதசிக்கு பெங்களூர் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டிலிருந்த படியே கோவிந்தா சொல்லிக்க வேண்டியது தான் :-)

Vijay said...

\\ Karthik said...
சூப்பரா எழுதியிருக்கீங்க விஜய். ரெண்டு முறை படிச்சேன்.
:)\\
Thanks Karthik :0)

மேவி... said...

vijay said "Haa Haa. I love history. Got first mark in my class in 10th ;0)"
என்ன இந்த கொலை வெறி

மேவி... said...

நீங்க பிரஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்யா ???

Mathu said...

Very nice writing on ur experience. நல்லா எழுதி இருக்கீங்க. நீங்க கேட்ட கேள்விகள் சிலதில் எனக்கும் உடன்பாடு உண்டு. கடவுள் எந்த மதத்தினர் என்றாலும் அருள் புரிவார்...So I dont think its a big issue to allow everyone into the temple. Ah well..u cant change some traditions..what to do.
Glad u had a good time.

Vijay said...

\\ Mathu said...
Very nice writing on ur experience. நல்லா எழுதி இருக்கீங்க. \\

Thanks a lot Mathu :-)

\\நீங்க கேட்ட கேள்விகள் சிலதில் எனக்கும் உடன்பாடு உண்டு. கடவுள் எந்த மதத்தினர் என்றாலும் அருள் புரிவார்...So I dont think its a big issue to allow everyone into the temple. Ah well..u cant change some traditions..what to do\\
இந்த மாதிரி போர்ட் எழுதிப்போடறவங்களுக்கு கடவுள் தான் அறிவு கொடுக்கணும் :-)

மேவி... said...

to my knowledge. no god hav put board saying tht he will bless only his religion people.

our tradition is prefect but its face has been changes or for tht matter being altered according in order to earn profit and popularity for certain people.

god, as a concept whh is being misused by many for their personal ....

nowadays religion and caste are changing to an cult culture. also people drag god into ths.
god, is not seen as almighty, but as a person or source from whh people can be benefited.

மேவி... said...

its sad tht people who pay 50rs can see god early than people who pay 5rs

மேவி... said...

to my knowledge its only in temple where we can see such kind of boards.......

முகுந்தன் said...

விஜய்,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ... அடுத்த முறை பாண்டி போனால் ,
கடலூர் அருகில் உள்ள திருவேந்திபுரம் பொய் வாருங்கள்..


//நிறைய இடங்களில் BAR என்று கொட்டக் கொட்ட எழுத்துக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.//

ரொம்ப கொட்டிடுச்சு போல இருக்கு :)

RAMYA said...

ஹாய் விஜய, இரண்டு பயணங்கள், super o super

நல்ல அருமையான பயணங்கள்

எனக்கும் சேர்த்து காஞ்சியில்
பெரியவர்களிடம் ஆசீர்வாதம்
வாங்கினீங்களா ???

RAMYA said...

//
காருக்குப் பெட்ரோல் போடுவதற்குப் போனால் லிட்டர் 43’ஏ ருபாய் தானாம். இவ்வளவு மலிவாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், கூட ஒரு கேன் கொண்டு போய் ரொப்பிக் கொண்டு வந்திருக்கலாம். பெட்ரோலே இவ்வளவு மலிவா இருக்கே, மற்ற சரக்கெல்லாம் எவ்வளவு ne இருக்கும். சும்மாவா விடலைப் பசங்க, வீக்கெண்டுன்னா பாண்டிச்சேரிக்கு ஓடறாங்க!
//

அட அட என்னா ஏமாற்றம்
சரி கவலையை விடுங்க
அடுத்த முறை கேன் என்னா
ஒரு பீப்பாய் கட்ட்கிட்டு போயிறலாம்
என்னா விஜய் சரிதானே!!!

RAMYA said...

//
"அதனால் ரயிலில் தத்கால் கற்காலென யார் காலில் விழுந்தாலும் டிக்கட் கிடைக்கப் போவதில்லை."
//

இதை படிச்சி ஒரே சிரிப்பு சிறப்பா வந்தது super ஆ எழுதி கலக்கறீங்க!!!

Vijay said...

\\ MayVee said...
to my knowledge its only in temple where we can see such kind of boards.......\\
God only save people who put put such boards :-)

Vijay said...

\\ முகுந்தன் said...
விஜய்,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ... அடுத்த முறை பாண்டி போனால் ,
கடலூர் அருகில் உள்ள திருவேந்திபுரம் பொய் வாருங்கள்..\\

கண்டிப்பாகப் போகிறேன். தகவலுக்கு ரொம்ப நன்றி :-)



\\ரொம்ப கொட்டிடுச்சு போல இருக்கு :)\\
Hahaha ahahahaha

Vijay said...

\\ RAMYA said...
ஹாய் விஜய, இரண்டு பயணங்கள், super o super

நல்ல அருமையான பயணங்கள்

எனக்கும் சேர்த்து காஞ்சியில்
பெரியவர்களிடம் ஆசீர்வாதம்
வாங்கினீங்களா ???\\
உலக மக்கள் எல்லாருக்கும் சேர்த்து ஆசி வாங்கியச்சு :-)

\\அட அட என்னா ஏமாற்றம்
சரி கவலையை விடுங்க
அடுத்த முறை கேன் என்னா
ஒரு பீப்பாய் கட்ட்கிட்டு போயிறலாம்
என்னா விஜய் சரிதானே!!!\\
ஆமாங்க. கண்டிப்பா எடுத்துட்டுப் போகணும் :-)

Anonymous said...

வர வர ரெம்ப interesting ஆ எழுதுறீங்க. ரசித்து படித்தேன். ஆனா உங்களுக்கு comment எழுதணும்ன்னா sign in பண்ண வேண்டியதிருக்கின்றதே. அதை மாற்றக் கூடாதா?

Vijay said...

\\ kunthavai said...
வர வர ரெம்ப interesting ஆ எழுதுறீங்க. ரசித்து படித்தேன். \\

உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி. ஹச். ஒரு பெரிய தும்மல் :-)

\\ ஆனா உங்களுக்கு comment எழுதணும்ன்னா sign in பண்ண வேண்டியதிருக்கின்றதே. அதை மாற்றக் கூடாதா?\\
முதலில் யார் வேணுமானாலும் வரலாம், வந்து என்ன வாரு வாரணும்னாலும் வாரட்டும் என்ற திறந்த மடமாகத்தான் இருந்தது.
அதில் என்ன நடந்ததுன்னா, சில பேர் ஆடொமேடிக்கா ஏதாவது ஸ்க்ரிப்ட் எழுதி, தேவையில்லாத விளம்பரமெல்லாம் பின்னூட்டத்தில் வர ஆரம்பித்துவிட்டன. அதனால் தான், இந்த லாகின் முறையை உபயோகப் படுத்த வேண்டியதாப் போச்சு. என்னுடைய ரொம்ப பழைய பதிப்புகளைப் பார்த்தீங்கன்னா, சிலதுக்கு 40 - 50 கமெண்ட் வந்திருக்கும். எல்லாம் ஆடொமேடிக் ஸ்க்ரிப்ட். அதனால் தயவு செய்து கொஞ்சம் பொறுமை எடுத்துக் கொண்டு லாகின் செய்து கமெண்ட் போடவும்.

நீங்கள் என்ன வேணும்னாலும் எழுதலாம். அதனால் தான் Author Approval கூட enable செய்யவில்லை.

Poornima Saravana kumar said...

//காலை பூஜை முடிந்த பிறகு, பிரசாதமாக சுடச் சுட வெண் பொங்கல். கூட சட்னியும் கொடுத்திருந்தால் வெகு ஜோராக இருந்திருக்கும்.//

அட அட அட!!!

Karthik said...

//அமெரிக்காவில் கூட 70 மைல் வேகத்துக்கு மேல் போக முடியாது, ஆனால் நம்மூரில் 140 கி.மி. வேகத்தில் கூடப் போகலாம், //


Neenga evalavu veegathula poonenga?? OVER_SPEED poi vaangi kathekiteengala?? :P


//காலை பூஜை முடிந்த பிறகு, பிரசாதமாக சுடச் சுட வெண் பொங்கல். கூட சட்னியும் கொடுத்திருந்தால் வெகு ஜோராக இருந்திருக்கும்//


inda bhakti kalathilum ungalukku oru kikilippu kekudha?? :P


//உள் பிரஹாரத்தினுள் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்று பலகை வைத்திருக்கிறார்கள்.//


Idhu maadhiri maandhargal irukardhunaala thaaan INDIA munnera maathengidhu... ISKCON Bangalore temple la naanga tour vandappa enga class madavetrupaadu illama visit panoom....


//அரவிந்தர் எழுதிய நான்கைந்து புத்தகங்கள் வாங்கினேன்.//


Vada poche maadhiri NEW YR RESOLUTION poche.. Book vaanga maatenu sonnengala?? :P

Nalla writing style.. Apdiye readersai ellam unga travel anupadhuthulla TRANSPORT panniteenga...

En Blogukaana Pinuutam:

Ivan Lendl reached at least one Grand Slam final for 11 consecutive years- 19 finals so far winning 8... Lendl failed to capture Men's Wimbledon but He has Jr Wimbledon (Boys category) under his tag(1978) Losing to PAT CASH was in 1987

Karthik said...

Enakkum NADAL pidikaadhu.. adhukkana kaaranathai 2nd padivula poduren...

Vijay said...

\\ PoornimaSaran said...
//காலை பூஜை முடிந்த பிறகு, பிரசாதமாக சுடச் சுட வெண் பொங்கல். கூட சட்னியும் கொடுத்திருந்தால் வெகு ஜோராக இருந்திருக்கும்.//

அட அட அட!!!\\
ஹஹஹஹஹா

Vijay said...

\\ Karthik said...
Vada poche maadhiri NEW YR RESOLUTION poche.. Book vaanga maatenu sonnengala?? :P\\

இந்தப் புத்தகங்கள் வேறெங்கும் கிடைக்காது. அதனால் தான் வாங்கினேன் :-)

மேவி... said...

விஜய் நீங்கள் .... . நரசய்யா வின் "மதராசபட்டினம்" படித்து பாருங்களேன்.....

Vijay said...

\\ MayVee said...
விஜய் நீங்கள் .... . நரசய்யா வின் "மதராசபட்டினம்" படித்து பாருங்களேன்.....\\
கண்டிப்பாக. பரிந்துரைக்கு மிக்க நன்றி.

Subha said...

எனக்கும் பாண்டிச்சேரி ஆசிரமத்துக்குப் போகணும் னு ஆசை. ம்ம்..எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் போலிருக்கு..:(

Vijay said...

\\ சுபாஷினி said...
எனக்கும் பாண்டிச்சேரி ஆசிரமத்துக்குப் போகணும் னு ஆசை. ம்ம்..எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் போலிருக்கு..:(\\
போயிட்ட் வாங்க. ஒரு நல்ல அனுபவம். அந்த ஏரியாவே நல்லா இருக்கும். :-)

தாரணி பிரியா said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்