Pages

December 31, 2008

புத்தாண்டு சபதங்கள்

“இந்த வருடத்திலிருந்து உருப்படியாக என்ன செய்வதாக உத்தேசம்” என்று காயத்ரி கேட்டாள். “சபதமெடுக்க ஒரு நேரம் காலம் வேண்டாமா? புது வருடம் பிறந்ததும், ஒரு நல்ல நாளா பார்த்தா அதைப் பற்றி யோசிக்கலாம்” என்றால் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை மேலிடம். ஜனவரி 1 அன்று எந்த ராகு காலம் யம கண்டமும் பார்க்க வேண்டாம், என்று சொல்லிவிட்டு, நான் மேற்கொள்ளவிருக்கும் புத்தாண்டு தீர்மானங்கள் என் சம்மதமே இல்லாமல் அதுபாட்டுக்கு நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் 1:
உடம்பு எடையைக் குறைக்க வேண்டும்.
கல்யாணத்தின் போது 32’ஆக என் இடுப்பு சுற்றளவு இப்போது 34 ஆகிவிட்டது. வெட்டிவ்ம்பு படிக்கும் நல்லவர்களே, நீங்களே சொல்லுங்கள், இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது. கல்யாணத்திற்குப் பிறகு என்னவள் செயது போட்ட சமையலைச் சாப்பிட்டதன் விளைவு தானே உடம்பு ஏறியிருப்பதற்குக் காரணம். “நான் குண்டாகியிருப்பது உன் சமையலுக்கு நான் கொடுக்கும் காம்ப்ளிமண்ட் தானே” என்று சொன்னால் அதையும் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறாள். நாளையிலிருந்து ஐந்தறை மணிக்கு அலாரம் அலறும் என்று வானிலை அறிக்கை மாதிரி அறிவிக்கிறாள்.

தீ்ர்மானம் 2:
அடிக்கடி கோபப் படக்கூடாது. டென்ஷன் ஆகக் கூடாது.
கோபத்தின் ரிஷி மூலம் நதி மூலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தோமேயேனால், நமக்குப் பிடித்த ஒருவர் நமக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது ,கோபம் வருகிறது. இப்போது சொல்லுங்கள், நான் அடிக்கடி கோபப் படுகிறேனென்றால் அது எதனால், யாரால்? இதைச் சொன்னால், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. இனிமேல் தேவையில்லாமல் கோபப் படக்கூடாது” என்று இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 3:
உருப்படியாக வெட்டிவம்பு எழுதணும். சும்மா தங்கமணியை வாரி, நாலு பேரை நக்கல் அடிக்காமல் எழுதணும்.
இதைச் சொன்னதும், ”இது தான் நான் எழுதும் கடைசி பதிவு" என்று நினைத்து விட்டேன். நம்ம பதிவை நாலு படிக்கறதுக்கு முக்கிய காரணமே தங்கமணியை நக்கல் அடிப்பதால் தான். முதலுக்கே முடிவு கட்டினால் நான் என்ன செய்ய முடியும்? இதோடு நின்று விடாமல், “வெட்டிவம்பைப் படிப்பவர்கள் சிந்திக்கற மாதிரி எழுதணும்” என்றொரு உபரி தீர்மானமும் வேற, ஒரு அடெண்டமாக. “சிந்திக்கற மாதிரின்னா, புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமான்னு எழுதலாமா. எல்லாரும் மோட்டு வளையைப் பாத்துக் கிட்டு சிந்திக்க் ஆரம்பிச்சுடுவானுங்க” என்று சொன்னால் முறைக்கிறாள்.

தீர்மானம் 4:
மேலும் ஒரு புத்தகம் வாங்காமல் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்கணும்
எனக்குள்ள ஒரு கெட்ட பழக்கம் ஒரு புத்தகம் படித்து முடிப்பதற்குள்ளாகவே இரண்டு புத்தகம் வாங்கிவிடுது. “அலமாரியெல்லாம் வழிந்து நிறைகிறது. எதை மேல வைக்கலாம் என்று கேட்டாலும், அதை இன்னும் படிக்கலை என்றால் எப்படி” என்று காயத்ரி கடிந்து கொள்கிறாள்.

பார்ப்போம், என் வி்ருப்பமில்லாமல் அவளாகவே நிறைவேற்றிக் கொண்ட எத்தனை சபதங்கள் அபத்தங்களாகின்றன என்று?

36 comments:

Anonymous said...

மீ த ஃபர்ஸ்ட்டு :-)

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)

Anonymous said...

காய்த்ரியின் தீர்மானங்கள் நிறைவேற வாழ்த்துகள். அவை தீர்மானங்களாய் தோன்றவில்லையெனக்கு விஜய்...அவர் உங்கள் மீது வைத்துள்ள அக்கறையாய்.. காதலாய்தான் புரிந்துக் கொள்ள முடிகிறது :-)

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

எல்லாமே நல்ல விஷயம்தானே, தாராளமா நிறைவேற்றலாம் , கண்டிப்பா செய்யுங்க‌

Divya said...

சூப்பரா தீர்மான பட்டியல் போட்டிருக்காங்க காயத்ரி:))))

Divya said...

விஜய் & காயத்ரி,
உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மேவி... said...

wish u a happy new year boss.
let th 2009 be a memorable one for both.

மேவி... said...

"“இந்த வருடத்திலிருந்து உருப்படியாக என்ன செய்வதாக உத்தேசம்”"
as usual, spend th time in thinking itself.

"நான் குண்டாகியிருப்பது உன் சமையலுக்கு நான் கொடுக்கும் காம்ப்ளிமண்ட் தானே”"
aiyo da. nice complement.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இனிமேல் தேவையில்லாமல் கோபப் படக்கூடாது”
for me th problem is tht am not getting angry at all.

"வெட்டிவம்பைப் படிப்பவர்கள் சிந்திக்கற மாதிரி எழுதணும்” என்றொரு உபரி தீர்மானமும் வேற, ஒரு அடெண்டமாக. “சிந்திக்கற மாதிரின்னா, புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமான்னு எழுதலாமா"
hmmm. me also thinking of tht oly..

"எனக்குள்ள ஒரு கெட்ட பழக்கம் ஒரு புத்தகம் படித்து முடிப்பதற்குள்ளாகவே இரண்டு புத்தகம் வாங்கிவிடுது."
me to same blood....

nice post... keep rocking

மேவி... said...

me th 11th

Divyapriya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)

முகுந்தன் said...

Wish you a very Happy and Prosperous New Year!!

முதல் ரெண்டு தீர்மானங்களை படித்தவுடன் தலை சுற்றியது..
34 இடுப்பளவுக்கே இப்படீன்னா நானெல்லாம் எங்கே போவது :)

//நமக்குப் பிடித்த ஒருவர் நமக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது ,கோபம் வருகிறது. இப்போது சொல்லுங்கள், நான் அடிக்கடி கோபப் படுகிறேனென்றால் அது எதனால், யாரால்? //

இது தான் சரி...

//உருப்படியாக வெட்டிவம்பு எழுதணும். //

No silly feelings :)

Karthik said...

wish you a happy and rocking new year!
:)

//மேலும் ஒரு புத்தகம் வாங்காமல் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்கணும்

aha, same blood!

Subha said...

அடடா..அருமையான புத்தாண்டு சபதங்கள் விஜய் சார்...:)
மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Vijay said...

\\இனியவள் புனிதா said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)\\
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

\\ இனியவள் புனிதா said...
விஜய்...அவர் உங்கள் மீது வைத்துள்ள அக்கறையாய்.. காதலாய்தான் புரிந்துக் கொள்ள முடிகிறது :-)\\

காயத்ரி உங்களுக்கு ஒரு கோவில் கட்டலாம் என்கிறாள் :-)

Vijay said...

\\ தாரணி பிரியா said...
எல்லாமே நல்ல விஷயம்தானே, தாராளமா நிறைவேற்றலாம் , கண்டிப்பா செய்யுங்க‌\\

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பார்ப்போம், எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேறப்போகின்றன என்று :-)

Vijay said...

\\ Divya said...
சூப்பரா தீர்மான பட்டியல் போட்டிருக்காங்க காயத்ரி:))))\\
அதானே என்னிக்கு தாய்க்குலங்கள் ஒருத்தரையொருத்தர் என்னிக்கு விட்டுக் கொடுத்திருக்காங்க :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Vijay said...

\\ திகழ்மிளிர் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\\

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

புதியவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

gayathri said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)
விஜய் & காயத்ரி

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Karthik said...

puthaandhu vaalthukal...

Mathu said...

Happy New Year to you :) Hope ur dreams come true!

Vijay said...

\\ MayVee said...
"நான் குண்டாகியிருப்பது உன் சமையலுக்கு நான் கொடுக்கும் காம்ப்ளிமண்ட் தானே”"
aiyo da. nice complement.\\

ஹா ஹா. இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் :-)

\\for me th problem is tht am not getting angry at all. \\
நீங்கள் ஒரு அதிசயப் பிறவி நண்பரே :-)

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Vijay said...

\\ Divyapriya said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)\\
ரொம்ப நன்றி :-)

Vijay said...

\\ முகுந்தன் said...
Wish you a very Happy and Prosperous New Year!!

முதல் ரெண்டு தீர்மானங்களை படித்தவுடன் தலை சுற்றியது..
34 இடுப்பளவுக்கே இப்படீன்னா நானெல்லாம் எங்கே போவது :)\\

34’க்கு மேல் இடுப்பளவு இருப்பது நல்லதல்ல என்று நிறைய பேர் சொல்லறாங்க. நானும் ஏதாவது செய்து பார்க்கிறேன். ஒன்றும் ஆக மாட்டேன்கிறது :-)

Vijay said...

\\ Karthik said...
wish you a happy and rocking new year!
:)

//மேலும் ஒரு புத்தகம் வாங்காமல் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்கணும்

aha, same blood!\\
Karthik, Wish you too a Happy New Year Dude.

You know what, I have bought 3 more books :-)

Vijay said...

\\ சுபாஷினி said...
அடடா..அருமையான புத்தாண்டு சபதங்கள் விஜய் சார்...:)\\

சபதமெல்லாம் நல்லாத் தான் இருக்கும். அதை நிறாவேற்றுவதை நினைச்சாத் தான் கதி கலங்குது :-)

Vijay said...

\\ புதியவன் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\\

Wish you the same as well :-)

Vijay said...

\\ gayathri said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)
விஜய் & காயத்ரி\\
ரொம்ப நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Vijay said...

\\ Saravana Kumar MSK said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..\\

\\ Karthik said...
puthaandhu vaalthukal...\\

THanks a lot Saravanan and Karthik.
Wish you too a Very Happy and Prosperous New Year.

Vijay said...

\\ Mathu said...
Happy New Year to you :) Hope ur dreams come true!\\
These are not my dreams :-)
They are resolutions :-( So I have to do something to realise them :-)

Wish me to realise them :-)

Shwetha Robert said...

New year resolutions yellamey super:))

Shwetha Robert said...

BTW belated New year wishes to you!

Vijay said...

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ஷ்வேதா. எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா வலைப்பக்கம் ஆளையெ காணோம் :-)