Pages

December 26, 2008

காணக் கண்கள் கோடி வேண்டும்

காலை 5.00 மணி. பெங்களூர் மார்கழிக் குளிரில் ஜாகிங் வாக்கிங் போகும் கடமை கண்ணாயிரங்கள் கூட இழுத்துப் போர்த்தி உரங்கும் நேரத்தில் நான் என்ன செய்கிறேன். மார்கழி மாசத்தில் அதிகாலையில் கோவிலுக்கு வரச் சொன்ன்னாள் அம்மா. அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு, ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம். பெருமாளென்றால் சேவிக்கணும். சிவன் பிள்ளையார் முருகன் இவர்களையெல்லாம் கும்பிடணும்.

இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, பித்து மனம் கொண்ட தாய் மனது.

பெங்களூரில் எங்கள் வீட்டருகுலிருக்கும் இந்தப் பெருமாள் மட்டும் தான் அதிகாலையிலேயே எழுந்திருக்கிறார். IT மக்களால் பூஜிக்கப் பட்டு வரும் அருகிலிருக்கும் பிள்ளையாரை 7 மணி வரை யாரும் தொந்தரவு செய்வதில்லை.

சிறு வயதில், மார்கழி மாதத்தில் அம்மா வீட்டுக்கு முன்னால் பெரிய பெரிய கோலமெல்லாம் போடுவாள். ஒரே நேரத்தில் இரட்டை இழையில் கோலம் போடுவாள். ஸ்கேலே இல்லாமல் நேர்கோடுகளும் காம்ப்ஸ இல்லாம ஆர்க் வரைவதும், கோலப் பொடி அவள் இடும் கட்டளையை செவ்வன செய்யும். இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வப்போது தூங்கிய விழிக்க மறுக்கும் விழிகளோடு என் தங்கை செம்மண் இடுவாள். அம்மாவுக்குத் துணையாக வாசலில் காவல் காப்பது என் வேலை.

ஒரு கோஷ்டி கையில் ஜால்ரவெல்லாம் எடுத்துக் கொண்டு,
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

என்று பஜனை பண்ணிக் கொண்டு போகும். இவர்களோடு பஜனை பண்ணிக் கொண்டு போனால், பெருமாள் கோவிலில் சுடச் சுட வெண்பொங்கலும் பானகமும் கிடைக்கும். அதிகாலையில், அந்த துளசி நறுமணம் கமழ, லக்‌ஷ்மி பூமாதேவி சமேதராகப் பெருமாளை தரிசிக்க, ஆஹா காணக் கண்கள் கோடி வேண்டும்.

இப்போது மணி மீண்டும் 5.20. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவடைந்து ஊரே நித்திரா தேவியை ஆரத்தழுவிக்கொண்டு உரங்கிக் கொண்டிருக்கும் வேளை. குளிர் இன்னம் கூடியிருக்கிறது. பாதரசம் சென்ற வாரத்தை விட இரண்டு இலக்கங்கள் கீழே இறங்கியிருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

ஆஸ்திரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் டையே பாக்ஸிங்க் டே டெஸ்ட் மேட்ச் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கிழக்கே உதிக்கும் ஆதவன் உதயமாகத் தவறினாலும் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங்க் டே அன்று மெல்பேர்ன் நகரத்தில் டெஸ்ட் மேட்ச் நடப்பது தவறாது. எந்த நாடு அஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறதோ, அந்நாட்டோடு டிசம்பர் 26 மெல்பேர்ன் நகரத்தில் டெஸ்ட் மேட்ச் நடக்கும். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மெல்பேர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டெஸ்ட் மேட்ச் பார்க்க, ஆஹா, காணக் கண்கள் கோடி வேண்டும்.

டிஸ்கி: இதுக்கு மட்டும் முழிப்பு வருமாக்கும் என்று அம்மா இடித்துக் காட்டுவது, பின்னாலிருந்து கேட்கிறது.

27 comments:

MayVee said...

"ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம்"
my mom will chase us to kovil with a dhoti and t shirt. i thik u r lucky.

"அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்”"
if i say ths to my mom. her reply will be " i know what work u did yesterday, putting mokkai cant be considered as work"
"இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்."
i know a girl of ths sort.

nice post. me used to wake up early in my childhood days in december to get kovil pongal....
th happiness will never returns

புதியவன் said...

// இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். //

உண்மை தான்...
இந்த அழகிய பண்பாடு தொடர வேண்டும்...

RAMYA said...

//
இதுக்கு மட்டும் முழிப்பு வருமாக்கும் என்று அம்மா இடித்துக் காட்டுவது, பின்னாலிருந்து கேட்கிறது.

//


Repetaiiiiiiiiiiiiiiii

RAMYA said...

//
இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, பித்து மனம் கொண்ட தாய் மனது.
//

அம்மா என்ற ஒரு தெய்வம் தான்
நமக்கு எல்லா சலுகைகளும் தரும்
அம்மாவை நினைக்கும் போதே
நெஞ்சு நிறைந்துவிடும் விஜய்
பதிவை படித்து முடிக்கும்போது
ஒரு அருமையான மார்கழி
மாதத்தில் உலா வந்த உணர்வு ஏற்பட்டது
அருமை அருமை வாழ்த்துக்கள்

RAMYA said...

//
MayVee said...
if i say ths to my mom. her reply will be " i know what work u did yesterday, putting mokkai cant be considered as work"
//

இதை நான் கன்னா பின்னாவென்று
வழிமொழிகின்றேன்

Divyapriya said...

//ஒரே நேரத்தில் இரட்டை இழையில் கோலம் போடுவாள்//

நான் கூட தான் போடுவேன்…:)

//அம்மாவுக்குத் துணையாக வாசலில் காவல் காப்பது என் வேலை.//

எனக்கும் கூட அதே வேலை தான் :)

//இதுக்கு மட்டும் முழிப்பு வருமாக்கும் என்று அம்மா இடித்துக் காட்டுவது, பின்னாலிருந்து கேட்கிறது.//

அதான? ;)

Karthik said...

தமிழ் சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தாங்கள் வரவு புரிந்து, சிலவிருதுகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்... இதோ உங்களுக்கானஅழைப்பிதழ்..


http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_26.html


மறக்காம வாங்க... அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டாச்சு... அப்றோம்நிலவரம் கலவரம் ஆயிடும்... சொல்லி புத்தேன்....


PS: Post perusssssssu!! Viral reagigal pathiram!!! Padhikum pothu glows pothu padikavum!!!!

gayathri said...

இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

atheppadi neenga solluvenga. naan kuda inraya thalaimurai பெண் than.naan kuda than kolam poduvan enga vettu mattum illa enga pakkathu vettuku kuda poduven .
athepadi neenga sollalam

Karthik said...

//மெல்பேர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டெஸ்ட் மேட்ச் பார்க்க, ஆஹா, காணக் கண்கள் கோடி வேண்டும்.

:))))

தாரணி பிரியா said...

//அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு, ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம்//

இதுக்கு குடுத்து வெச்சு இருக்கணும் விஜய். குளிர், வெண்மையா பனி இதுக்கு நடுவில கோயில சாமி கும்பிடும்போது மனசு அப்படியே நிறைஞ்சு போயி அன்றைய தினமே அழகா ஆரம்பிக்கும்.

தாரணி பிரியா said...

//இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, பித்து மனம் கொண்ட தாய் மனது.//

:) அம்மாவிக்கு பெருமாளை விட பிள்ளைதான் பெரிது

தாரணி பிரியா said...

நான் கோலம் போடுவேன் ஆனா அது நல்லா இருக்குமான்னுதான் தெரியலை :)

விஜய் காயத்ரி அவங்க போட்ட கோலத்தைதான் நான் ஆர்குட்ல பார்த்தேனே சூப்பரா போடறாங்க. அவங்களை பக்கத்துல வெச்சுகிட்டே இந்த தலைமுறை பொண்ணுங்க கோலம் போடறது இல்லைன்னு புகார். ரங்கமணிகள் சங்க தலைவர் வேலையை மட்டும் சரியா பாக்கறீங்க :)

தாரணி பிரியா said...

என்னை கேட்டா உங்க அம்மா அடிச்சே கேட்டு இருக்கலாம் :)

விஜய் said...

\\nice post. me used to wake up early in my childhood days in december to get kovil pongal....
th happiness will never returns\\

may be we were more fascinated in our younger days to have received free pongal. If you go to some perumal kovil you still get some vennpongal in the morning. என்ன பெங்களூரில் குளிர் ஜாஸ்தியா இருக்கறதுனால சீக்கிரம் ஆரிப்போயிடறது :-)

விஜய் said...

\\உண்மை தான்...
இந்த அழகிய பண்பாடு தொடர வேண்டும்...\\
கருத்துக்கு நன்றி. பசங்க கோலம் போட கற்றுக் கொள்வோமா?

விஜய் said...

\\ RAMYA said...
விஜய்
பதிவை படித்து முடிக்கும்போது
ஒரு அருமையான மார்கழி
மாதத்தில் உலா வந்த உணர்வு ஏற்பட்டது அருமை அருமை வாழ்த்துக்கள்\\

ரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. ஃபாலோவர் ஆனதுக்கும் நன்றி :-)

விஜய் said...

\\Divyapriya said...
//ஒரே நேரத்தில் இரட்டை இழையில் கோலம் போடுவாள்//

நான் கூட தான் போடுவேன்…:)\\

அப்படியா. கிரேட் :-)
\\//இதுக்கு மட்டும் முழிப்பு வருமாக்கும் என்று அம்மா இடித்துக் காட்டுவது, பின்னாலிருந்து கேட்கிறது.//

அதான? ;)\\

Same Side Goal :-)

விஜய் said...

\\ gayathri said...
atheppadi neenga solluvenga. naan kuda inraya thalaimurai பெண் than.naan kuda than kolam poduvan enga vettu mattum illa enga pakkathu vettuku kuda poduven .
athepadi neenga sollalam\\

இந்த வரிகளை எழுதும் போதே, ”டேய் விஜய், இந்த மாதிரியெல்லாம் எழுதாதே டா. பெண்குலத்திலகங்கள் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தாங்கன்னா தாங்க முடியாதுன்னு பட்சி சொன்னது.”

இந்தத் தலைமுறை பெண்களுக்குக் கோலமே போடத் தெரியாது என்று சொல்ல வில்லையே. அப்படிச் சொல்லியிருந்தால் நாளையிருந்து என் மனைவி காயத்ரி காலை 5 மணிக்கு தலையில் தண்ணீர் ஊற்றி, என்னைக் கோலம் போடச் சொல்லிவிடுவாள்.

அவ்வளவாக இல்லை என்று தான் சொன்னேன். எங்கள் உறவுக்காரப் பெண்களுக்கே நிறைய பேருக்கு கோலம் போடுகிறேன் பேர்வழி என்று அலங்கோலம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் நன்றாக கோலம் போடுவீர்களானால் நல்லது :-)

I didn't mean to offend anyone personally. I too am not offended with your comments. Please do comment in this style. :-)

விஜய் said...

\\ Karthik said...
//மெல்பேர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டெஸ்ட் மேட்ச் பார்க்க, ஆஹா, காணக் கண்கள் கோடி வேண்டும்.

:))))\\

கார்த்திக், நீங்கள் ஒருத்தர் தான் இதற்கு ஒரு ஸ்மைலியாவது போட்டிருக்கீங்க. வேற யாருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்க்ட் பிடிக்காது போலிருக்கே. Same Blood ஒண்ணாவது இருக்கே :-)

விஜய் said...

\\ தாரணி பிரியா said...
குளிர், வெண்மையா பனி இதுக்கு நடுவில கோயில சாமி கும்பிடும்போது மனசு அப்படியே நிறைஞ்சு போயி அன்றைய தினமே அழகா ஆரம்பிக்கும்.\\

நீங்க சொல்லறது 200% உண்மை. காலையில் எழுந்து சாமியைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்’னு தானே சொல்லியிருக்கேன்.

ஆனா இந்த 5 மணிக்கு எழுந்திருப்பது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

விஜய் said...

\\ தாரணி பிரியா said...
நான் கோலம் போடுவேன் ஆனா அது நல்லா இருக்குமான்னுதான் தெரியலை :)

விஜய் காயத்ரி அவங்க போட்ட கோலத்தைதான் நான் ஆர்குட்ல பார்த்தேனே சூப்பரா போடறாங்க. :)\\

நான் ஏற்கனவே மேலே பின்னூட்டத்தில் சொல்லிருப்பதை படிக்கவும்.

விஜய் said...

\\ தாரணி பிரியா said...
என்னை கேட்டா உங்க அம்மா அடிச்சே கேட்டு இருக்கலாம் :)\\
எங்கம்மா அதுவும் செய்வாங்க. :-)

PoornimaSaran said...

// தாரணி பிரியா said...
என்னை கேட்டா உங்க அம்மா அடிச்சே கேட்டு இருக்கலாம் :)
//

வழிமொழிகிறேன்

PoornimaSaran said...

//இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். //

என் மாமியார் நல்லா போடுவாங்க.. அதை நல்லா வேடிக்கை பார்ப்பேன் நான்:))

Saravana Kumar MSK said...

உலகமே விழுந்து நொறுங்கினாலும், நான் காலையிலே எழுந்திருப்பது ரொம்ப கஷ்டம்..

தில்லாலங்கடி said...

//Saravana Kumar MSK said...
உலகமே விழுந்து நொறுங்கினாலும், நான் காலையிலே எழுந்திருப்பது ரொம்ப கஷ்டம்..

//

நானும்.................

gayathri said...

I didn't mean to offend anyone personally. I too am not offended with your comments. Please do comment in this style. :-)

hey naan summa than pa appdi poten