Pages

December 18, 2008

என்று முடியும் இந்த....

எப்படித் தான் இந்த மெகா சீரியல்களைக் கண் கொட்டாமல் பார்க்கிறார்களோ, என்று நினைத்துக் கொண்டிருந்த நான், இப்போது வேறு வழியில்லாமல் அந்த கருமாந்திரத்தையும் பார்த்துத் தொலைக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆஃபீஸ் முடிந்து 7 மணிக்கு மேல் வந்தால் ஆனந்தம் என்ற பெயரில் சோகமே உருவான முகங்களுடன் ஓடுகிறது ஒரு மெகா சீரியல். எத்தனை வருடங்களாக ஓடுகிறதென்று தெரியவில்லை. முடிவு கண்ணில் தெரிவதாக இல்லை. சுகன்யாவிற்கு இரண்டாவது இன்னிங்க்ஸ். ரிடையர்ட் ஹர்ட் ஆனால் நன்றாக இருக்கும்.

எட்டு மணிக்கு மேல் வந்தால் ”திருமதி.செல்வம்” ஓடுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு நாள் இந்த சீரியலைப் பார்த்த போது (வேண்டாம் என்று போனாலும் அதுவாக வந்து காதில் விழுந்த ஒரு மாலைப் பொழுது) திருமதி.செல்வமாகப் போகும் பெண்ணை பெண் பார்க்கும் எபிசோட். அந்தப் பெண் பாவம், வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாங்கு மாங்கு என்று வேலை செய்வாள். முகத்தை பாவமாக வைத்துக் கொள்வாள். அவள் அம்மா அப்பாவைத் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் இவள் ஒரு பெரிய பாரம்.

இவள் கல்யாணம் செய்து கொண்டு இன்னும் எத்துணை கஷ்டங்களை அனுபவக்கிறாள் என்பது மீதி இரண்டு வருடங்களுக்கு ஜவ் மிட்டாய் போல் இழுக்கப் போகிறார்கள் என்று அன்றே தெரிந்து விட்டது. அன்றுள்ள எபிசோடில் அவளைப் பெண் பார்க்க வரும் பையன் இவளை நிராகரிக்கப் போகிறான் என்று ஆரூடம் சொன்னேன். பின்ன, அவளைப் பெண் பார்க்க வந்த பையன் பெயர் செல்வம் இல்லையே! அதன் பின் அவளை எவ்வளவு பேர் வந்து நிராகரித்தார்களோ, தெரியவில்லை. இப்போது தான் கல்யாணம் ஆகியிருக்கிறது. இன்னும் இவள் படப் போகும் அல்லல்கள் வரவில்லை. அதெல்லாம் முடிவதற்குள் 2011 உலகக் கோப்பை முடிந்து விடும்.

8 மணிக்கு மேல் கிளம்பி, டிராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வீட்டுக்கு 8.30 மணிக்கு வந்தால் கலசம். ரம்யா கிருஷ்ணன், சீரியல் உலகத்திற்கு சினிமாவிலிருந்து வந்த லேட்டஸ்ட் வரவு. சுதா சந்திரனை காண சகிக்கலை. யாராவது அவர் வீட்டு முகவரி தெரிந்தால் அந்தப் பக்கமே போகாமல் இருக்கலாம்.

ஆஃபீஸில் வேலை அதிகமாயிருந்து 9 மணிக்கு வந்தால் கோலங்கள். இதற்கு பேசாம ஓலங்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள். ”ஐயோ பாவமே. ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கஷ்டங்களா”ன்னு பார்ப்பவர்கள் எல்லோரும் சொல்லணும் என்பது தான் இயக்குனரின் திட்டமோ என்னவோ. தேவ்யானிக்கு பேரக் குழந்தை பிறந்தாலும் கோலங்கள் முடிவடைவதாகத் தெரியவில்லை.

ஆஃபீஸில் பிழிந்தெடுத்து அப்பாடா என்று வீட்டுக்கு 9.30 மணிக்கு மேல் வந்தால் முறைத்து முறைத்துப் பார்க்கும் அரசி். 9.30 மணி ஸ்லாட்டை ராதிகாவிற்கு சன் டி.வி நிறுவனம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. தொண தொணன்னு ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் சிங்கபெருமாளைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ராதிகாவின் எல்லா படைப்புகளிலும் தலை காட்டிவிடும் அஜய் ரத்னம் எப்போதும் ஒரு மஞ்சளோ பிங்கோ, சிகப்பு கலரில் சட்டையும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத டையும் கட்டிக் கொண்டு முகத்தை இருக்க வைத்துக் கொண்டு, யப்பா, எப்படித் தான் முடிகி்றதோ!!??

சினிமா போதாதென்று இப்போது சீரியலிலும் டபுள் ஆக்ட் கொண்டு வந்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். அதிலும் இரண்டு ராதிகாவையும் ஒரே ஷாட்டில் காட்டி விட மாட்டார்கள்.

இந்த சீரியல்களை விட அதற்கு பின்னணி இசை தான் ரொம்ப கொடூரம். ”பாங்க ப்பாங்க்” என்று டிரம்பெட்டை காதில் ஊதுவது தலைவலியைத் தான் ஏற்படுத்துகிறது. ஒரு சில சீரியல்களை அம்ருதாஞ்சன் தான் ஸ்பான்ஸர் செய்கிறார்கள். என்ன பொருத்தம்!!

ஏதோ விஜய் டி.வி.யில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 9-10 மணிக்கு வருவதால் கொஞ்ச நாட்களாக இந்த சீரியல் தொல்லை ஒரு மணி நேரம் குறைந்திருக்கிறது அதுவும் இப்போது கடைசி்க் கட்டத்தை நெருங்கி விட்டது. இரண்டு வாரங்களில் முடிந்து விடும். இந்நிகழ்ச்சியைத் திரையிடும் விஜய் டி.வி.யிடம் ஒரு வேண்டுகோள். முடிந்த வரைக்கும் இதற்கு முந்தைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்புங்கள். திரைக்குப் பின்னால் நடந்த காட்சிகள், ரீ-டேக்குகள், சின்மயி காம்பியர் செய்த போது செய்த பிழைகள், லைட்டர் மொமெண்ட்ஸ் அது இதுன்னு ஒரு இரண்டு மூன்று மாசத்திற்கு இழுத்தடிக்கவும். அதற்குள்ளாகவே அடுத்த சூப்பர் சிங்கர் போட்டி ஆரம்பித்து விடலாம். முடிந்தால் அடுத்து ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டி வைக்கவும். விக்னேஷும் கி்ருஷ்ணமூர்த்தியும் பாடிய பாட்டுக்கள் இன்னும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கின்றன.

அதற்குள் இந்த சீரியல் கருமாந்திரஙகளெல்லாம் முடிந்து விட்டால் நிம்மதியாக இருக்கும்.

லஷ்கர்-ஏ-தொய்பா, ஜம்மாத்-உத்-தாவா, .எல்.டி.டி.ஈ போன்ற அமைப்புகளை தடை செய்த மாதிரி இந்த சீரியல்களைத் தடை செய்தால் நாடு சுபிட்சம் அடையும்.

என்று முடியும் இந்த மக்களின் சீரியல் மோஹம்!!

டிஸ்கி1: விஜய் டி.வி. ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளும் எனக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

டிஸ்கி2: சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.

50 comments:

இனியவள் புனிதா said...

//சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்//

கொஞ்சம் பாவம்தான் நீங்க :-))

இனியவள் புனிதா said...

மீ த பர்ஸ்ட்டா? உங்க டெம்ப்ளட்டு சூப்பர்!

புதியவன் said...

//லஷ்கர்-ஏ-தொய்பா, ஜம்மாத்-உத்-தாவா, .எல்.டி.டி.ஈ போன்ற அமைப்புகளை தடை செய்த மாதிரி இந்த சீரியல்களைத் தடை செய்தால் நாடு சுபிட்சம் அடையும்.//

எந்த அளவுக்கு இந்த டீவி சீரியல்களினால்
நீங்க கொடுமை அனுபவிச்சிருகீங்கன்னு
இப்பத் தான் தெரியுது விஜய்...

Karthik said...

என்னை மாதிரி பழைய கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாமே விஜய்? 1970ஸில் நடந்த டெஸ்ட் எல்லாம் பார்ப்பேன். அவங்க ஹேர் ஸ்டைல், ட்ரஸ் எல்லாம் சூப்பரா இருக்கும்.

:)

தங்கவேல் மாணிக்கம் said...

90க்களில் மாத நாவல்கள் ஈசெலென படையெடுத்தன என்று நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் மாத நாவல்கள் முடிவுக்கு வந்தன. அதுபோல் தான் சீரியல்கள். துவக்கத்தில் ஆர்வமாக பார்த்த என மனைவியும் வர வர சீரியல் கதைகள் நகரும் விதம் பற்றி சொல்லுவாள். அதன்படியே இரண்டுமாதம் சென்ற பிறகு சீரியல்களில் வரும்.

வெகு விரைவில் சீரியல்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும். அதுவரை கொசுக்கடியினை ஏற்றுத்தான் ஆகவேண்டும்

Divyapriya said...

// எத்தனை வருடங்களாக ஓடுகிறதென்று தெரியவில்லை.//

ஆனந்தம் ஆரம்பிச்சு குத்துமதிப்பா, நாலு வருஷம் ஆச்சு :)

// சுதா சந்திரனை காண சகிக்கலை//

ஆமா, எனக்கு கூட ரொம்ப பயமா இருக்கு…

// இதற்கு பேசாம ஓலங்கள் என்று பெயர் வைத்திருக்கலாம்.//

என்ன இப்படி சொல்லிட்டீங்க…அபி எவ்ளோ கஷ்டப்படறா தெரியுமா :(

// இந்த சீரியல்களை விட அதற்கு பின்னணி இசை தான் ரொம்ப கொடூரம்.//

எனக்கென்னவோ software கு அப்புறம் reuse concept serial ல தான் நல்லா use பண்றாங்கன்னு தோனுது…நல்லா கவனிச்சு பாத்தீங்கன்னா, back ground “ஆ ஆ” அழுகை மீஸிக் எல்லாம், எல்லா சீரியல்லையும் ஒரே மாதிரி தான் இருக்கும்….

// அதற்குள் இந்த சீரியல் கருமாந்திரஙகளெல்லாம் முடிந்து விட்டால் நிம்மதியாக இருக்கும்.//

இது பேராசை…

// சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.//

அப்படியே காயத்ரியிடம் பூரிக் கட்டையால அடி கூட வாங்கி இருக்கலாம் ;)

Divyapriya said...

சீரியல பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணதுல, ஒன்னு மறந்துட்டீங்க…இப்பெல்லாம் இந்த ரியாலிட்டி ஷோஸ்லையும் கொல்றாங்களே….ஒரு மூனு பேரு சேர போட்டு உக்காந்துட்டு, முக்கா நிமிஷம் ஆடின டான்ஸ, மூனு மணி நேரம் கமெண்ட்ஸ் பண்றாங்களே…வர வர இவங்க இம்சை தாங்க முடியல…

எல்லாம் நல்லா இருக்கு, ஆனா கெமிஸ்ட்ரி பத்தல…இது ஒரு ஸ்டான்டர்ட் கமெண்ட்…
கெமிஸ்ட்ரி மேஜர் எடுத்த எங்க அப்பா, ஒரு நாள் பாவமா முகத்த வச்சுகிட்டு, “இந்த கெமிஸ்ட்ரி பத்தல, பத்தலன்னு சொல்றாங்களே, அப்டீன்னா என்ன?” ன்னு கேட்டாறே பாக்கனும்…LOL :-D

Divyapriya said...

super பதிவு விஜய்..அதான், காலங்காத்தால கமெண்ட்ஸ் போட்டு தாக்கிட்டேன் ;), நிறைய ஆணி இருக்கறது கூட மறந்து போச்சு :((

roger said...

Dear vettivambu"

I have enjoyed your reading about T.V serials...however,why are you dragging L.T.T.E to this issue? For you they might be terriorist but not for us!

GALEEL BHASHA said...

superb post.

Vijay TV comes with some reality shows NEEYA NAANA, ROSE, THAMISH, (but not on week days)

MayVee said...

long long ago ..nobody knows how long ago....ஆனந்தம் started. in b/w my brother finished his studies and got married and hav a kid now. i finished my studies but still the heroine is mom of three year old kid. enna kodumai sami edhu
in reality shows if the jodis lack chemistry means ask them to buy golden chemistry guides... then their chemistry will improve.

"இப்போது வேறு வழியில்லாமல் அந்த கருமாந்திரத்தையும் பார்த்துத் தொலைக்க ஆரம்பித்து விட்டேன்"
my condolences

"ஐயோ பாவமே. ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கஷ்டங்களா"
s. but also the viewers too pavam.

"தற்குள் இந்த சீரியல் கருமாந்திரஙகளெல்லாம் முடிந்து விட்டால் நிம்மதியாக இருக்கும்."
no chance. viewers are sentenced for whole of their life.

விஜய் said...

\\இனியவள் புனிதா said...
கொஞ்சம் பாவம்தான் நீங்க :-))\\

என்னைப் பாவம்னு சொல்லிட்டு ;-) போட்டிருக்கீங்க. :-( இப்படியல்லவோ இருக்கணும் :-((

\\ இனியவள் புனிதா said...
மீ த பர்ஸ்ட்டா? உங்க டெம்ப்ளட்டு சூப்பர்!\\
கருத்துக்கும் தொடர்வதற்கும் ரொம்ப நன்றி. :-)

விஜய் said...

\\ புதியவன் said...
எந்த அளவுக்கு இந்த டீவி சீரியல்களினால்
நீங்க கொடுமை அனுபவிச்சிருகீங்கன்னு
இப்பத் தான் தெரியுது விஜய்...\\

என் நிலமை உங்களுக்காவது புரிகிறதே :-)

விஜய் said...

\\ Karthik said...
என்னை மாதிரி பழைய கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாமே விஜய்?:)\\

சனி ஞாயிறு ஐயா கையில் தானே ரிமோட். Neo Sports & Star Cricket தவிர வேறெந்த சானலும் கிடையாது. போன வாரம் கூட Caribean Kings பார்த்துட்டு வீட்டம்மா போய்ட்டு காய்ச்சிப்புட்டாங்க :-(

விஜய் said...

\\ தங்கவேல் மாணிக்கம் said...
வெகு விரைவில் சீரியல்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும். அதுவரை கொசுக்கடியினை ஏற்றுத்தான் ஆகவேண்டும்\\

வருகைக்கு மிக்க நன்றி தங்கவேல் மாணிக்கம்.
உங்கள் வாக்கு மெய்யாகட்டும்.
அடிக்கடி வந்து வாரிட்டுப்போங்க.

விஜய் said...

\\ Divyapriya said...
super பதிவு விஜய்..அதான், காலங்காத்தால கமெண்ட்ஸ் போட்டு தாக்கிட்டேன் ;), நிறைய ஆணி இருக்கறது கூட மறந்து போச்சு :((\\

நன்றி திவ்யப்ரியா. அடுத்து Reality Shows பற்றி ஒரு பதிவு போட்டுட்டா போச்சு. ஐடியாக்கு நன்றி. :-)

விஜய் said...

\\ Divyapriya said...
அப்படியே காயத்ரியிடம் பூரிக் கட்டையால அடி கூட வாங்கி இருக்கலாம் ;)\\

காயத்ரி ஆமோதிக்கிறாள் :-)

விஜய் said...

\\ roger said...
Dear vettivambu"

I have enjoyed your reading about T.V serials...however,why are you dragging L.T.T.E to this issue? For you they might be terriorist but not for us!\\

Dear Roger, Thanks for your comments. Did I say LTTE as a Terrorist organisation. I didn't. I just quoted some organisations which have been banned. LTTE is still a banned organisation in India. That's why I mentioned it. I have not gone into the intricacies of whether it should be or not. I may have to write another blog for that. Vettivambu deals with only lighter things in life and I don't cross that line, which might people's feelings and sentiments.

But don't stop commenting. You are free to share your views. Whatever it is .

Keep visiting :-)

Vijay

விஜய் said...

\\GALEEL BHASHA said...
superb post.

Vijay TV comes with some reality shows NEEYA NAANA, ROSE, THAMISH, (but not on week days)\\

Thanks a lot for your comments Galeel Basha.
Special Thanks for following me :-)

விஜய் said...

\\ MayVee said...
long long ago ..nobody knows how long ago....ஆனந்தம் started.\\

இன்னும் 20 வருடங்கள் ஓடினாலும் யாருக்கும் வயசாகாது :-)

\\no chance. viewers are sentenced for whole of their life.\\
Please. Don't curse TV viewers like this :-)

PoornimaSaran said...

விஜய் ரொம்ப நோந்துட்டீங்க போல!!

PoornimaSaran said...

//சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.
//

ஆமா காயத்ரி இதைப் படிச்சாங்களா??

PoornimaSaran said...

இது எல்லாத்தையும் விட கொடுமை அதில வர்ற நடிகைகளுக்கு எதாவது சின்ன துன்பம் வந்தாக் கூட இவங்க(அதைப் பார்கிறவங்க) கண்ணுல இருந்து வர்ற கண்ணீருக்கு அளவில்லாமப் போச்சு.. தங்களுக்கு வர்ற கஷ்டத்துக்குக் கூட இப்படி அழுவாங்கலாங்கறது சந்தேகம் தான்!!

Divya said...

செமையா கலாய்ச்சிருக்கிறீங்க விஜய்:))

சூப்பரு போஸ்ட்......!!!

Divya said...

\\சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.\\


LOL:))

விஜய் said...

\\ PoornimaSaran said...
விஜய் ரொம்ப நோந்துட்டீங்க போல!!\\
ரொம்பவே :-)

\\ஆமா காயத்ரி இதைப் படிச்சாங்களா??\\
படித்துக் காட்டினேன் :-)

விஜய் said...

\\ Divya said...
செமையா கலாய்ச்சிருக்கிறீங்க விஜய்:))

சூப்பரு போஸ்ட்......!!!
LOL \\

ரொம்ப நன்றி :-)

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

//ஆஃபீஸ் முடிந்து 7 மணிக்கு மேல் வந்தால் ஆனந்தம் என்ற பெயரில் சோகமே உருவான முகங்களுடன் ஓடுகிறது ஒரு மெகா சீரியல்.//

சூபர்

//இவள் கல்யாணம் செய்து கொண்டு இன்னும் எத்துணை கஷ்டங்களை அனுபவக்கிறாள் என்பது மீதி இரண்டு வருடங்களுக்கு ஜவ் மிட்டாய் போல் இழுக்கப் போகிறார்கள் என்று அன்றே தெரிந்து விட்டது.//

தீர்க்கதரிசி ஐயா நீங்கள்!!!

//8 மணிக்கு மேல் கிளம்பி, டிராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வீட்டுக்கு 8.30 மணிக்கு வந்தால் கலசம். ரம்யா கிருஷ்ணன், சீரியல் உலகத்திற்கு சினிமாவிலிருந்து வந்த லேட்டஸ்ட் வரவு. சுதா சந்திரனை காண சகிக்கலை. யாராவது அவர் வீட்டு முகவரி தெரிந்தால் அந்தப் பக்கமே போகாமல் இருக்கலாம்.
//

அப்படி போடுங்க


//ஆஃபீஸில் வேலை அதிகமாயிருந்து 9 மணிக்கு வந்தால் கோலங்கள். இதற்கு பேசாம ஓலங்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். //

விஜய், கோலங்கள் பத்தி படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன்...

//டிஸ்கி2: சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.//

ஒரு மார்கமா தான் இருக்கீங்க, ஆனா எனக்கு என்னமோ நீங்களும் ஏதாவது
ஒரு மெகா சீரியலில் முக்கிய பாத்திரத்தில் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது :)

விஜய் said...

முகுந்தன், என்ன ஆபீஸ்ல போட்டு காய்ச்சி எடுடக்கறாங்களா?

நான்லாம் எந்த சீரியல்லையும் தலையைக் காட்டறதில்லை.

தாரணி பிரியா said...

//எப்படித் தான் இந்த மெகா சீரியல்களைக் கண் கொட்டாமல் பார்க்கிறார்களோ, என்று நினைத்துக் கொண்டிருந்த நான், இப்போது வேறு வழியில்லாமல் அந்த கருமாந்திரத்தையும் பார்த்துத் தொலைக்க ஆரம்பித்து விட்டேன்.
//

இப்ப பாக்க ஆரம்பிச்சாச்சு தானே அப்புறம் என்னங்க. நீங்களும் தொடரோடு தொடரா ஒன்றிடணும்.

தாரணி பிரியா said...

அது ஆனனனந்தம்ங்க. நான் எப்பவாதுதான் பார்ப்பேன். ஒரு மாசத்துக்கு ஒரு முறைன்னு கூட சொல்லலாம். ஆனா எனக்கு அந்த கதை தெளிவா புரியும். இன்ச் பை இன்சாதான் கதையை நகர்த்தறாங்க.

அய்யோ ஆமாங்க சுதா சந்திரனை பார்த்தா பெரியவங்களுக்கே கொஞ்சம் பயம் வரும். 8.30 மணிக்கு குழந்தைங்க தூங்க போற நேரத்துல ஏந்தான் இப்படி ஒரு கொடுமைன்னு தோணும்.

கோலங்கள் பார்த்து பார்த்து வீட்டுல போடற கோலத்தை பார்த்தா கூட வெறுப்பு வர ஆரம்பிச்சதுதான் மிச்சம். தேவயானி பொண்ணு பெரியவள் ஆன பிறகு அபி கேரக்டரில் இவர் தொடருவாருன்னு அந்த பொண்னை வெச்சு கதையை நகர்த்தறா மாதிரி ஒரு ஐடியா இருக்காம். :)

தாரணி பிரியா said...

எனக்கு அரசி சீரியல் பார்க்கும் போது எல்லாம் டிவியை தூக்கி போட்டு உடைக்கலாமின்னு தோணும். கதையே இல்லாம எப்படி படம் காட்டறதுன்னு இவங்க கிளாஸ் எடுக்கலாம். அதுவும் ராதிகா பண்ற அலும்புதான் ஒவருன்னா இப்ப வந்து இருக்கற அந்த இன்னொரு நடிகை அதுக்கு மேல தாங்கலை.

அய்யோ இந்த ரியாலிட்டி ஷோஸ் அதைவிட மோசம் விஜய். இதுவும் மெகா சீரியல் மாதிரி எழுதி டைரக்ட் செய்யற ஸ்கிரிப்ட்தான். என்ன தொழில்முறை நடிகர்கள் இதுல இல்லை அவ்வளவுதான் வித்தியாசம்.

தாரணி பிரியா said...

இதை எல்லாம் பார்க்கிறதுக்கு பதிலா நல்ல படம் ஒண்ணை டிவிடியில் போட்டு பார்க்கலாம்தான். ஆனா எங்கம்மா விட மாட்டாங்க. ஹீம் என்ன செய்யறது.

இப்ப எல்லாம் டிவி பார்க்கறதே இல்லை அப்படின்ற ரேஞ்சுல வந்து நின்னாச்சு.

தாரணி பிரியா said...

ஆனாலும்.............................2‍வது டிஸ்கியை படிச்சுவுடன் இதெல்லாமே பரவாயில்லைன்னு தோணுதே


ஏன் அப்படி ?

தாரணி பிரியா said...

:) :) :) :)

முகுந்தன் said...

//முகுந்தன், என்ன ஆபீஸ்ல போட்டு காய்ச்சி எடுடக்கறாங்களா?
//

ஆமாம் விஜய், வேலை ஜாஸ்தி, அடுத்தவாரம் சென்னை வருகிறேன்,
பத்து நாள் லீவ்...


நான்லாம் எந்த சீரியல்லையும் தலையைக் காட்டறதில்லை.//


சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால்
எனக்கு என்னமோ நீங்களும் ஏதாவது
ஒரு மெகா சீரியலில் முக்கிய பாத்திரத்தில் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது

விஜய் said...

தாரணி ப்ரியா,

அப்போ நீங்களும் வேற வழியில்லாம இந்த சீரியலெல்லாம் பார்க்கறீங்க !! பாவம் உங்க கணவர்!

\\2‍வது டிஸ்கியை படிச்சுவுடன் இதெல்லாமே பரவாயில்லைன்னு தோணுதே
ஏன் அப்படி ?\\

ஹ்ம்ம், இதைப் படித்துவிட்டு காயத்ரியா விழுந்து விழுந்து சிர்த்துவிட்டு, “நினைப்பு தான் பொழப்பு கெடுக்கும் நான் சொன்னத கேக்கணும்” என்று சொல்லி குத்திக் காட்டுகிறாள் :-)

விஜய் said...

\\ஆமாம் விஜய், வேலை ஜாஸ்தி, அடுத்தவாரம் சென்னை வருகிறேன்,
பத்து நாள் லீவ்... \\
Keshav will be happy. So will be Mrs. Mukundan :-)

gayathri said...

என்னங்க விஜய் 9.30 அரசி வரைக்கும் தான் சீரியல் பாப்பீங்கலா.அதுக்கு அப்பறம் சிவசக்தினு ஒரு சிரியல் poduvanga அதயும் பாருங்க.நல்ல இருக்கும்.

gayathri said...

அதிலும் இரண்டு ராதிகாவையும் ஒரே ஷாட்டில் காட்டி விட மாட்டார்கள்.

என்ன கொடுமை விஜய் .நீங்க ஒலுங்க சீரியல் பாக்கலன்னு நினைக்கிறேன்.அரசியும் செல்வியும் ஒன்னு ஆகும் போது.அவங்க ரெண்டு peraum எவ்வளவு கிட்ட காம்சாங்கா நீங்க பாக்கலயா.

விஜய் said...

\\ gayathri said...
என்னங்க விஜய் 9.30 அரசி வரைக்கும் தான் சீரியல் பாப்பீங்கலா.அதுக்கு அப்பறம் சிவசக்தினு ஒரு சிரியல் poduvanga அதயும் பாருங்க.நல்ல இருக்கும்.\\

நல்ல வேளையாக 10 மணிக்கு மேல் எங்க வீட்டுல யாரும் சீரியல் பார்க்கறதில்லை. அதனால் கொஞ்சம் நிம்மதி !

விஜய் said...

\\ gayathri said...
அதிலும் இரண்டு ராதிகாவையும் ஒரே ஷாட்டில் காட்டி விட மாட்டார்கள்.

என்ன கொடுமை விஜய் .நீங்க ஒலுங்க சீரியல் பாக்கலன்னு நினைக்கிறேன்.அரசியும் செல்வியும் ஒன்னு ஆகும் போது.அவங்க ரெண்டு peraum எவ்வளவு கிட்ட காம்சாங்கா நீங்க பாக்கலயா.\\

அதான் சொன்னேனே, இந்த ஏர்டெல் சூப்பர் சிங்கரால் கொஞ்ச நாட்களாக வீட்டில் 9-10 சீரியல் தொல்லை இல்லை.

Anonymous said...

நாங்க எல்லாம் முன்னமே சுதாரிச்சிட்டோமே.
நான் கேபிள் கனெக்ஷனை உருவி ஒரு மூணு வருசமிருக்கும்.
என்ன, என் வீட்டுக்காரருக்கு தான் செய்தி பாக்கமுடியலை கொஞ்சம் வருத்தம்.
நீங்க புலம்புரதோட நிப்பாட்டிட்டீங்க, எனக்கு அதப்பாத்தா பத்திக்கிட்டு வரும்.

முகுந்தன் said...

//Keshav will be happy. So will be Mrs. Mukundan :-)
//

True, but I am the happiest of all :)

Mathu said...

நல்ல funnyaa எழுதி இருக்கீங்க. :)Enjoyed reading it :))

விஜய் said...

\\ kunthavai said...
நாங்க எல்லாம் முன்னமே சுதாரிச்சிட்டோமே.
நான் கேபிள் கனெக்ஷனை உருவி ஒரு மூணு வருசமிருக்கும்.
\\
என்ந்து கேபிள் கனெக்சன் கிகடையாதா? நீங்க ஒரு அதிசயப் பிறவி :-)

விஜய் said...

\\ Mathu said...
நல்ல funnyaa எழுதி இருக்கீங்க. :)Enjoyed reading it :))\\
மிக்க நன்றி மது.

Anonymous said...

//நீங்க ஒரு அதிசயப் பிறவி :-)

எனக்கு டி.வி. பாக்கிறவங்களை பாத்தாதான் அதிசய பிரவியாத் தெரியும்.
ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் தான் வீட்டுக்கு போறோம், மனதில் உள்ளதையெல்லாம் பேசி, சிரித்து, சண்டை போட்டு, அழுது, கொஞ்சி , சீண்டி enjoy பண்ணுறதை விட்டுவிட்டு சதா அழுமூஞ்சி டி.வில என்னதான் தேடுறீங்களோ எனக்கு புரியவில்லை.

அதிரை ஜமால் said...

\\டிஸ்கி2: சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.\\

ஆசை தான் ...

50லிம் ஆசை வரும்.

அட 50வது பின்னோட்டத்தச்சொன்னேங்க.