Pages

December 23, 2008

நியானும் மலையாளமும்

எனிக்கும் மலையாளத்துக்கும் நன்னாயிட்டு சம்பந்தமுண்டாக்கும். எனிக்கு நன்னாயிட்டு ஓர்மையுண்டு, எண்ட பாட்டி, அவளண்ட பால்ய காலம் கேரளாவிலே கழிச்சு. எண்ட தாத்தாவுக்கு கேரளத்தில் கஸ்டமர் உண்டு. எண்ட அச்சன் மூக்கைப் பிடித்துக்கொண்டு தமிழ் பரையெங்கில் அதே வல்லிய மலையாளமாக்கும். எண்ட குருவினண்ட பார்யாவுக்கு அம்பலபுழையாக்கும் சொந்த ஊர். எண்ட பார்யாவிண்ட நாடு ஆலப்புழை. இதாக்கும் எண்ட மலையாள சம்பந்தம்.

மலையாளிகளையும், தமிழை மலையாளத்தில் கலந்து தலையாளமாப் பரையும் தலையாளிகளை நியானும் எண்ட சிநெகிதனும் நன்னாயிட்டு களியாக்காம். மலபார் போலீஸண்ட ஒரு தமிழ்ப் படம். ஆ படத்தில் சத்யராஜ் நடிச்சு. அயாள் ஒரு கேரளா போலீஸ். அயாளெண்ட அசிஸ்டெண்ட் கௌண்ட மணி தன்ன. எடா, மலையாளி சத்யாராஜை அயாள் இந்தா இந்தா களிச்சு, எடா நியானும் எண்ட சிநேகிதனும் ஆ படம் கண்டுட்டு உருண்டு புரண்டு சிரிச்சு. ஆ படத்தை எந்த மலையாளி நோக்கினெங்கிலும், அவன் கௌண்ட மணியை கொன்னு களைஞ்சு.

சாரி சாரி, தமிழ் பேசும் நல்லார்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும். இவன் என்னடா பெனாத்துறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? காயத்ரி பேசுவதற்கு ஒரு காதைக் கொடுத்துக் கொண்டே எழுதினேனா எல்லாம் மலையாளமா வந்துவிட்டது. இது ஒரு மாதிரியான ஃபோபியாவோ? தங்கமணி பேசுவதைக் கேட்டாலே சிந்தனையெல்லாம் Malayalify ஆகிறதே நான் மட்டும் கேரளாவிலேயே செட்டில் ஆகியிருந்தால், ஐயோ, வெட்டிவம்பைப் படிப்பவர்கள் என்னைக் கூலிப் படை வைத்துப் போட்டுத் தள்ளியிருப்பார்கள்.

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சக்தி மலையாளத்துக்கு உண்டு.
ஒரு எஃபக்ட் என்று கூடச் சொல்லலாம் அது என்ன? எந்த மொழி பேசுபவரானாலும், அயாள் (பார்த்தீர்களா, எழுதும் போதே மலையாளம் மூக்கை நுழைக்கிறது) அந்த ஆள் கேரளாவிலே செட்டில் ஆனால், அவர்கள் பேசும் மொழிக்கு ஒரு மலையாள மூலாம் பூசினது போலிருக்கும்.

நான் கொல்கத்தாவிலே இருந்த போது என் சக அரையாளன், பாலக்காட்டைச் சேர்ந்தவன். அவன், “சாமான்களை எப்படி கொண்டு போகப் போறே” என்று கேட்பதற்கு, “எடா, இந்த சாமானெல்லாம் எப்படியாக்கும் கடத்தப் போறாய்” என்பான். இவன் பேசுவதை தமிழ் தெரிந்த ஒரு மூன்றாவது மனிதர் கேட்டால் என்ன நினைப்பார். இவனுங்க ஏதோ கஞ்சா கடத்தப் போறாங்க போலிருக்கேன்னு நினைக்க மாட்டார். அவன் கூட ஒரு வருடம் இருந்து விட்டு நெல்லைக்கு வந்திருந்த போது, ஒரு ஆள் என்னிடம், “நீங்க மலையாளியா” என்றார். எனக்கு அப்படியே பத்திண்டு வந்தது.

என் நெருங்கின தமிழ் சிநேகிதன் ஒருவன் பெங்களூரிலிருந்து எரணாகுளத்திற்கு மாற்றலாகிப் போய் விட்டான். சமீபத்தில் அவனோடு தொலைபேசியில் பேசும் போது, “நியான் நியான், புவான் புவான்” என்று ஹார்ன் அடிப்பது பேசுகிறான். “டேய், ஏண்டா இப்படி பேசறே” என்றால், “எந்தா செய்யறது. அப்படியாக்கும் வரது” என்று மூக்கால் தலையாளுகிறான்.

தமிழில் நாம் பேசும் சில வார்த்தைகள் மலையாளத்தில் வேறொரு வார்த்தையாக உபயோகப்படுத்துவார்கள். எங்க பெரியம்மாப் பாட்டி கேரளாவிலே செட்டில் ஆனவங்க. அவங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்த போது, என் தங்கையிடம், “எடி, விளக்கைப் பார்க்கலியோடி. அது இன்னும் கத்தறது”. ”என்னது விளக்கு கத்தறதா” என்று பயந்தே போயிட்டேன். நாம அதுக்கு ஹாரனா ஃபிட் பண்ணி வச்சிருக்கோம்னு பார்த்தா, விளக்கு எரிவதைத் தான் கத்தறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித் தான் இன்னொரு முறை ஒரு பையனை அவன் அம்மா வீட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பாட்டியிடம், பையனப் பார்த்தீகளா என்று கேட்டதற்கு, “அவன் கொல்லப்புறத்துல தணல்ல நிக்கறான்” என்றார். எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, “ஐயோ, தீ ஏதாவது வந்துடுத்தா. பிள்ள தணல்ல நிக்கறான்னு சொல்லறாளே”ன்னு போய் பார்த்தா, அந்தப் பையன் வேப்ப மரத்து நிழலில் விளையாடிக் கொண்டிருக்கிறான். நிழல் என்பதற்குத் தான் தணல் என்று சொல்லுவார்களாம், கேரளாவுல. நல்லா சொன்னாங்க.

இதாவது பரவாயில்லை. ஒரு முறை காயத்ரி என்னிடம் வந்து “இன்னிக்கு ஊர்ல ஆத்துக்கு ஸ்கந்தன் வந்திருந்தானாம்.” ”யாரந்த ஸ்கந்தன்” என்று யோசிப்பதற்கு முன்பாகவே, “அவனோட சின்ன வயசுல கோவில் விசேஷத்துக்கு கூட்டிண்டு வந்திருந்தப்போ, நம்பாத்துல தான் இருந்தான். இந்த வருஷம் கோவில் விசேஷத்துக்கு நம்பாம் வழியா நடந்து போயிண்டிருந்தப்போ தானாவே காம்பவுண்டுக்குள் வந்துட்டானாம்” என்று புல்லரித்துப் போய்ச் சொன்னாள்.

யாரடா இந்த ஸ்கந்தன். சரி, அப்படியே அவன் வந்திருந்தாலும் அதுக்கு ஏன் இவ்வளவு புல்லரித்துப் போகணும் என்று நியானும் குழம்ப, மேலும் சொன்னாள், “இன்னிக்கு அம்மா அவனுக்கு பெரிசா இரண்டு வாய் உண்டக் கட்டியும் வெல்லமும் கொடுத்தாளாம்” என்றாள்.
”யாருடீ இந்த ஸ்கந்தன்” என்றேன். ”ஐயோ பக்கத்து ஊர் கோவில் ஆனையாக்கும்” என்றாளே பார்க்கலாம். வாயடைத்துப் போய் விட்டேன்.

இதே போல் ஒரு முறை, எனக்குத் தெரிந்த ஒருவர் கேரளாவிலுள்ள உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறார். உறவினர் மருந்துக் கடை வைத்திருந்தாராம். மருந்து வாங்க வந்த ஒருத்தன், “கேசவனுக்கு பனியாணு (கேசவனுக்குக் காய்ச்சலாம்). நூறு க்ரோஸின் இல்லெங்கில் நூறு பாராசிடமோள் குடுக்காம்” என்றானாம். கடைக் காரர் பயந்து போய், “நூறு பராசிடமோள் கழிச்செங்கில் அயாள் மரிச்சு போகும். அயாள் எவட?” என்றார். மருந்து வாங்க வந்தவன், மீண்டும் அதே பல்லவியைப் பாடியிருக்கிறான். இதைப் பார்துக் கொண்டிருந்தவர், “அந்த ஆள் எங்கே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு மருந்து வாங்க வந்தவன், ”கேசவன், இவட வர மாட்டான்.” என்றான்.
”ஏன்” என்றதற்கு “அவன் ஆனை” என்றானாம்.

மலையாகளின் மிருகங்கள் மேலுள்ள பரிவை என்னவென்று புகழ?

ஆஃபீஸிலிருந்து லேட்டாப் போனால் என்ன காரணம் சொன்னாலும், காயத்ரி “நியான் இதை விஷ்வசிக்கணுமா” என்கிறாள். குப்பையாக ஒரு இடம் இருந்தால், அவள் அதிகாரியில், அது, ”ஒரு விருத்தி கெட்ட ஸ்தலம்”. ஏதாவது கேலி செய்தால், “களியாக்க வேண்டா” என்பாள். இண்டரஸ்டிங்காக கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தால், “களி தீர்ந்ததா” என்பாள். முந்தைய களிக்கும் இந்த களிக்கும் என்ன வித்தியாசமோ?

தனது மலையாளத் தோழியிடம் பேசும் போது, “நாட்டில் எல்லோரும் சுகம் தன்னே” என்று வினவுவாள். “ஆஹா வீட்டிலுள்ளவர்கள் மட்டும் சுகமா என்று கேட்காமல் நாட்டிலுள்ளவர்கள் பற்றி விசாரிப்பதைப் பார்க்கும் போது, “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா” என்ற அழகன் பாட்டுத் தான் ஞாபகம் வருகிறது.

ஆக இப்படியாக நியானும் மலையாளத்தோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன். My Tryst with Malayalam continues.

டிஸ்கி: யப்பா யாரும் வுட்டுக்கு போன் போட்டு நான் இப்படியெல்லாம் எளுதியிருக்கேன்னு சொல்லிப்புடாதீங்க. பயமெல்லாம் ஒண்ணும் இல்ல, இருந்தாலும்...... ஒரு முன்னெச்சரிக்கை அறிக்கை.

47 comments:

Poornima Saravana kumar said...

me the 1st

Poornima Saravana kumar said...

படித்திட்டு வர்றேன்

Divyapriya said...

hayyo mudiyala vijay...mudiyala...
sirichu sirichu vayiru valikkudhu :D
ROTFL, seriously...
best of ur posts...innum sirichitte irukken...

Mathu said...

Hehe...வாசித்தேன்..சிரித்தேன்...was interesting to read. Had a good laugh :) பகிர்ந்ததற்கு நன்றி..

Divya said...

Chancey illa Vijay............superrrrrrrrrr good post:))

sirichchu rasichu...........2 times padichutu than comment podavey vanthein:))

semaya irukku post, dhool!!!

Divya said...

unga humurous way of writing ku hats off;))

Divya said...

Vijay,unga post......en amma ku & en friends ku email la fwd panirukirein:))

avanga padichutu enna sonanganu ......comments la apruma solrein:))

Poornima Saravana kumar said...

நன்கு சிரித்தேன் ( மலையாளர்கள் மன்னிக்கவும்)

Poornima Saravana kumar said...

விஜய் உங்கள் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்குங்க :)

Poornima Saravana kumar said...

யப்பா யாரும் வுட்டுக்கு போன் போட்டு நான் இப்படியெல்லாம் எளுதியிருக்கேன்னு சொல்லிப்புடாதீங்க.

அம்புட்டு பயமா!!!!!!!!!!!

Poornima Saravana kumar said...

me the 10th

முகுந்தன் said...

hey vijay,

you made my day!!! rolling rolling laughing laughing...

was very busy for the past few weeks..

morning read ur post and i could not stop laughing :))

hilarious!!

தமிழ் said...

சுவைத்தேன்

புதியவன் said...

//சாரி சாரி, தமிழ் பேசும் நல்லார்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும்.//

மன்னிச்சாச்சு...

புதியவன் said...

//“நாட்டில் எல்லோரும் சுகம் தன்னே” என்று வினவுவாள். “ஆஹா வீட்டிலுள்ளவர்கள் மட்டும் சுகமா என்று கேட்காமல் நாட்டிலுள்ளவர்கள் பற்றி விசாரிப்பதைப் பார்க்கும் போது//

மலையாளிகளிடம் இது எனக்கு
ரொம்ப பிடிச்ச விசயம்...

புதியவன் said...

//யப்பா யாரும் வுட்டுக்கு போன் போட்டு நான் இப்படியெல்லாம் எழுதியிருக்கேன்னு சொல்லிப்புடாதீங்க. பயமெல்லாம் ஒண்ணும் இல்ல, //

நம்பிட்டோம்...

மேவி... said...

"வெட்டிவம்பைப் படிப்பவர்கள் என்னைக் கூலிப் படை வைத்துப் போட்டுத் தள்ளியிருப்பார்கள்."
no chance. malayalam has poetic note. it will nicce to hear.
its not nice to read tayalam.

"“எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா"
ya. but ths lines come in bharatiyaar song with diff. note.

chanceless. was laughing while reading ths.
malayalse love their language.

தாரணி பிரியா said...

ஞான் இபோஸ்டினை வாயிட்சுட்டு சிரிக்கான் தொடங்கிட்டு இன்னியும் நிறுத்தான் பட்டின் இல்யா. இதுன வேண்டிட்டு காயத்திரியிடத்து நின்னு அடி வாங்கிகாண்டா நோக்கி கொள்ளூக‌.

இதே போல் நிறைய போஸ்ட் இடண‌ம்.

நன்னி

தாரணி பிரியா said...

ஓவரா தங்கமணிகளை வாரிட்டு இருக்கிங்க. ரங்கமணி சங்கம் ஆரம்பிக்கற மாதிரி ஏதாவது யோசனை இருக்கா என்ன?


அப்படி ஏதாவது இருந்தா இதையும் யோசிங்க. எங்க சுத்துனாலும் கடைசியா வீட்டுக்குதான் போகணும் :)

Vijay said...

\\Divyapriya said...
hayyo mudiyala vijay...mudiyala...
sirichu sirichu vayiru valikkudhu :D
ROTFL, seriously...
best of ur posts...innum sirichitte irukken...\\

பார்த்து இடைவெளி விட்டு சிரிக்கவும். நான் ஒண்ணும் கமெடி கீமடி பண்ணலியே!!

Vijay said...

\\ Mathu said...
Hehe...வாசித்தேன்..சிரித்தேன்... \\

ஏதோ நம்மால முடிந்தது.

நாலு பேரை சிந்திக்க வைக்க முடியாட்டாலும் சிரிக்க வைக்க முடிகிறதே :-)

Vijay said...

\\Divya said...
Chancey illa Vijay............superrrrrrrrrr good post:))

unga humurous way of writing ku hats off;))
\\

எல்லாம் உங்க கிட்டேர்ந்து கற்றுக் கொண்டது தான்.

\\ Divya said...
Vijay,unga post......en amma ku & en friends ku email la fwd panirukirein:))

ஓ அவங்க வேற வந்து வாரப் போறாங்களா?? :-(

Vijay said...

\\ PoornimaSaran said...
நன்கு சிரித்தேன் ( மலையாளர்கள் மன்னிக்கவும்)\\

ஏதேது, இதை யாராவது கேரளாகாரர் படித்து விட்டு, கேரளாவில் வெட்டிவம்பை தடை செய்தாலும் செய்துடுவாங்க போலிருக்கே :-)

\\ PoornimaSaran said...
விஜய் உங்கள் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்குங்க :)\\
உங்கள் அளவுக்கு இல்லை.

\\ PoornimaSaran said...
அம்புட்டு பயமா!!!!!!!!!!!\\

பயமெல்லாம் இல்லைன்னு தானே எழுதியிருக்கேன் :-)

Vijay said...

\\ முகுந்தன் said...
hey vijay,

rolling rolling laughing laughing...\\
Watch out buddy. You might get hurt :-)

\\was very busy for the past few weeks.. \\
Busy!!!! So this was a nice break for you. Happy to have given a break to a person who is so much engrossed with work

Vijay said...

\\ திகழ்மிளிர் said...
சுவைத்தேன்\\
நன்றி திகழ்மிளிர் :-)

Vijay said...

\\ புதியவன் said...
மன்னிச்சாச்சு...\\

அப்பாடா :-)

\\ புதியவன் said...
மலையாளிகளிடம் இது எனக்கு
ரொம்ப பிடிச்ச விசயம்...\\

ஐயா தமிழ் கற்ற மலையாளியோ?? :-)

Vijay said...

\\ MayVee said...
no chance. malayalam has poetic note. it will nicce to hear.
its not nice to read tayalam.\\
Malayalam could be poetic. But I would have written vettivambu in Talayalam :-) That's what I meant.

\\"“எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா"
ya. but ths lines come in bharatiyaar song with diff. note.\\
Even in Azhagan, he mentions that this a twisted version of what Bharathidasan wrote. :-)

\\chanceless. was laughing while reading ths.\\

Feeling Happy to have made a few people laugh out.

Vijay said...

\\ தாரணி பிரியா said...
ஞான் இபோஸ்டினை வாயிட்சுட்டு சிரிக்கான் தொடங்கிட்டு இன்னியும் நிறுத்தான் பட்டின் இல்யா.\\

ஐயோ, அம்மணி தமிழ் நாட்டிலிருக்கும் கேரளப் பெண்ணோ??!!

\\ இதுன வேண்டிட்டு காயத்திரியிடத்து நின்னு அடி வாங்கிகாண்டா நோக்கி கொள்ளூக‌.\\

இதுக்கெல்லாம் பயந்தா தொழில் செய்ய முடியுமா??!!:-)

Vijay said...

\\ தாரணி பிரியா said...
ஓவரா தங்கமணிகளை வாரிட்டு இருக்கிங்க. ரங்கமணி சங்கம் ஆரம்பிக்கற மாதிரி ஏதாவது யோசனை இருக்கா என்ன?\\

நல்ல ஐடியாவா இருக்கே. :-)


\\அப்படி ஏதாவது இருந்தா இதையும் யோசிங்க. எங்க சுத்துனாலும் கடைசியா வீட்டுக்குதான் போகணும் :)\\
வேற வழி :-)

எழுதும் போது அதெல்லாம் ஞாபகம் வருவதில்லை. எழுதி முடித்து விட்டு போஸ்ட் க்ளிக்செய்த பின்பு தான், ஐயையோ, தங்கமணி பற்றி எழுதியிருக்கோமே, வீட்டுல என்ன நடக்குமோ என்ற நினைப்பு வரும்.

தாரணி பிரியா said...

அல்ல அல்ல ஞான் தமிழ்நாட்டிலிருக்கும் கன்னட பொண்ணு. ஆனா எனிக்கு மலையாளம் கொறச்சுக்க வரும்.

தாரணி பிரியா said...

//vijay said

இதுக்கெல்லாம் பயந்தா தொழில் செய்ய முடியுமா??!!:-)//

அது சரிதான்

புதியவன் said...

//விஜய் said...

\\ புதியவன் said...
மலையாளிகளிடம் இது எனக்கு
ரொம்ப பிடிச்ச விசயம்...\\

ஐயா தமிழ் கற்ற மலையாளியோ?? :-)//

இல்ல விஜய்...
சுத்தத் தமிழ் என் ரத்தத்தில ஓடுது...
மலையாளிகளின் அந்த நல விசாரிப்பு
பிடிக்கும் என்று சொல்ல வந்தேன்...

முகுந்தன் said...

//Happy to have given a break to a person who is so much engrossed with work
//

Yes and Thanks for that

gils said...

:D:D:D:D chanceeeeeelengannnov...pinnipedaladichirukeenga

Subbu said...

Vijay.. inime veetula "CHAKKAI" than breakfast.. "puttu" will be your lunch...

I couldn't control the laugh reading this.

Everytime.. either you or me see the Malabar police clip we rush to the phone to call each other ;)

It should be declared the Movie of the century

RAMYA said...

Hi Vijay,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க
சிரிச்சு சிரிச்சு போங்க ஒன்னும் முடியலை
உங்களை பற்றி இன்னைக்கு தான் தெரியும்
பூர்ணிமா சரண் ப்லாக்லே உங்களை எழுதி
இருதாங்க அதாங்க பட பட பட்டாம்பூச்சி
அப்புறம்தான் உங்க பதிவை பார்த்தேன்

உங்க பதிவை படிச்சா ஒரே சிரிப்பு தான்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

Subbu said...

எண்ட குருவாயுரப்பா... .Vivek style-la..Ningaloda state Kerala va?? Favourite Music "Jandai".. dance "Kathakali"
எனக்கு ஓர்மை உண்டு .. விஜய் விஜய்னு ஒரு மானஸ்தன்(ர்) இருந்ததார்.. where is he..
ஆயாளு எவிடயானு

Karthik said...

ஆஹா, கலக்கறீங்க விஜய்.

இந்த போஸ்ட்டை அப்படியே ப்ரிண்ட் எடுக்கப் போறேன்.
:)

gayathri said...

நல்லா இருக்கு விஜய்

gayathri said...

me they 40

Vijay said...

\\ RAMYA said...
Hi Vijay,
உங்க பதிவை படிச்சா ஒரே சிரிப்பு தான்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்\\

ஹாய் ரம்யா,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. மீண்டும் வருக.

Vijay said...

\\ Karthik said...
ஆஹா, கலக்கறீங்க விஜய்.

இந்த போஸ்ட்டை அப்படியே ப்ரிண்ட் எடுக்கப் போறேன்.
:)\\

நன்றி கார்த்திக்!!

Vijay said...

\\ gayathri said...
நல்லா இருக்கு விஜய்\\
ரொம்ப நன்றி காயத்ரி.

MSK / Saravana said...

படிச்சதுக்கு அப்பறம் கண்டிப்பா ஒரு மலையாளி பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும் தோணுதே..

இதுதான் Malayalifying-ஆ....!!!

MSK / Saravana said...

செம பதிவு விஜய்.. மலையாளம் கேட்கவே ரம்மியமாக இருக்கும்..

MSK / Saravana said...

இதே போல் நிறைய போஸ்ட் இடண‌ம்..

Anonymous said...

என்னை சுற்றி ஒரே மலையாள கூட்டம் தான். எனக்கு இந்த பேச்சு பழகிவிட்டிருந்தாலும், நீங்கள் ரெம்பவே ரசித்து அழகாக எழுதியிருந்ததை ரசித்தேன். பேசியது தங்கமணி ஆச்சே, அதான் தேன் குடித்த ஈ போல எழுதியிருக்கிறீர்கள்.

நாகர்கோவிலில் எல்லா பள்ளிகூடத்திலும் காலேஜிலும் அவங்க கை ஓங்கியிருப்பதால் , வலுக்கட்டாயமாக மலையாளத்தில் பேசுவதை தவிர்ப்போம்(பயங்கர politics) .