Pages

December 01, 2008

ஜொள்ளெனப் பெய்யும் மழை

இரண்டு மூன்று நாட்களாக தீவிரவாதிகள் மேல் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த ராணுவத்தினரையும், தீப்பிடித்தெரியும் தாஜ் மஹல் ஹோட்டலையும் பார்த்து, இரவில் படுத்தால் தூக்கமே வரவில்லை. கண்ணை மூடினாலே துப்பாக்கிச் சத்தமும், ஸ்ரீநிவாசன் ஜெயினும் பர்கா தத்தும் தான் கண் முன் நிற்கிறார்கள். சரி, இந்த வயிற்றெரிச்சல் சமாசாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், குருதிக்கொதிப்பு தான் அதிகமாகிறது. அதைக் குறைப்பதற்கான வழியைத் தேடலாமென, அருகிலிருக்கும் டி.வி.டி கடைக்குப் போய், ஏதாவது உருப்படியாக இருக்கிறதா என நோட்டம் விட்டேன்.

வீட்டம்மா வெகு நாட்கள் நச்சரித்து மௌன விரதமிருந்து பிடிவாதம் பல பிடித்தும் "போக முடியாது” என்று மறுத்த "பச்னா ஏ ஹஸீனோ"
என்ற ஹிந்தி படம் கண்ணில் பட்டது. (ஹிந்தியே கூடாது, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுபவனல்ல நான். ஏனோ, ரன்பீர் கபூரை பிடிக்கவில்லை. தீபிகா படுகோன் போயும் போயும் இவனுக்கு கெர்ள் ஃப்ரெண்டாக இருக்கிறாளே என்ற காண்டாகக் கூட இருக்கலாம்) போனால் போகிறது, வேறொன்றும் உருப்படியாக இல்லையே என்ற ஆதங்கத்தோடு அதை எடுத்துப் போனேன்.

புத்தம் புது படம், நல்ல ப்ரிண்டாகவும் இருந்தது இரட்டிப்பு சந்தோஷம். அதுவும் சப்-டைடிலோடு இருந்ததனால் என்ன பேசறாங்க என்ன சொல்லறாங்க என்ற வீட்டம்மாவின் நச்சரிப்பு இல்லை.

நாயகனுக்கு இந்தப் படத்தில் செம ப்ளே பாய் ரோல். படத்தில் மூன்று நாயகிகள். எடுத்தவுடன் ஜில்லென்ற சுவிட்ஜர்லாண்டில் ஆரம்பிக்கிறது கதை. இரண்டு பெண்களை காதலிப்பது போல் நடித்து, பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார் இந்த ப்ளே பாய் நாயகன். ஆஸ்திரேலியா போய் அங்கே, நிஜமாகவே ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அவளிடம் காதலைத் தெரிவிக்கையில்,
அவள் காதலை நிராகரிக்கிறாள். அப்போது தன்னால் புண்பட்ட மனங்களின் வேதனையை அறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்க அவர்களைத் தேடிப் போய் படத்தின் இரண்டாம் பாதி தொடர்கிறது.

படத்தில் அங்கங்கே தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே வாடை அடிக்கிறது. படத்திலேயே நாயகன் DDLJ ஷாருக் கான் போல் சேஷ்டை செய்கிறேன் என்று சொல்வது ரசிக்கத்தக்கது. படம் கடைசி வரை போரடிக்காமல் இருக்கிறது. ரன்பீர் கபூர் கொஞ்சம் ஷாருக் கான் போல் செய்ய பிரயத்தனப் பட்டிருக்கிறார்.

ஆனால் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது தீபிகா படுகோன். (Note the Point, அவர் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லை)

சில நடிகைகள் அழகு சொட்டுவார்கள், ஆனால் திரைப்படத்தின் கதா பாத்திரத்தோடு ஒத்துப் போக மாட்டார்கள். ஐஷ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், தியா மிர்ஜா இந்த ரகம் தான். நல்ல வசீகரிக்கும் அழகு, ஆனால் திரையில் தோன்றினால் எதிலுமே ஒட்டாத ஒரு celluloid முகம். அசின் கூட பாலிவுட் போன பின் இந்த லிஸ்டில் சேர்ந்து விடுவாரோ என்று அச்சமாக இருக்கிறது. சில
நடிகைகள் இருக்கிறார்கள், அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் திரையில் தோன்றினால், பார்ப்பவர்களையெல்லாம் தன் பக்கம் பார்க்கும் படி செய்யும் திறன். காஜோல் மற்றும் சிம்ரன் ஏன் அந்தக் காலத்து சாவித்திரி சரிதா கூட இந்த ரகம் தான்.

இவர்களுக்கு இருக்கும் screen presence முதலில் குறிப்பிட்ட நடிகைகளுக்குக் கிடையாது. இன்னொரு ரகம் உண்டு. நல்ல வசீகரிக்கும் அழகு மற்றும் படம் பார்ப்பவரையும் தன் பக்கம் ஈர்க்கும் திறன். ஸ்ரீதேவி, பத்மினி, ஜெயலலிதா, வைஜெயந்தி மாலா, மாதுரி தீக்‌ஷித் போன்றவர்கள் இந்த ரகம். ’கஜினி’ அசின் கூட இந்த ரகம் என்று சொல்லலாம். தீபிகா படுகோனும் இந்த ரகம் தான்.

சிங்காரவேலன் கமல் மாதிரி சொல்ல வேண்டுமானால், “அது... அது வந்து ... நல்லாவே இருக்காம்மா!. ஓஒஹோ” என்று பெரிய ஓ

போடலாம். தீபிகாவிற்காகவே அவர் வரும் காட்சிகளை இன்னொரு முறை பார்த்தேன். அதற்கு மேல் வீட்டம்மா பார்க்க விடவில்லை.

ஆனால் எனக்கும் எனக்குப் பிடித்த நடிகைகளுக்கும் ஒரு ஏழாம் பொறுத்தமுண்டு. முதலில் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத போது,
அவர்கள் மார்க்கெட் ஆஹா ஓஹோ வென்று இருக்கும். நடிப்பதென்னவோ, கேவலமான படங்களென்பதால், நான் அவற்றை பார்க்க மாட்டேன். திடீரென ஒரு நல்ல படத்தில் தோன்றி, என்னை அவர்களது முழுமுதல் விசிறியாக மாற்றிய பின் அவர்களது அடுத்த படத்தை எதிர் நோக்கினால், மார்க்கெட் இழந்து போவார்கள், இல்லை ஏதாவது கிசு கிசுவில் சிக்கி சின்னாபின்னமாவார்கள், இல்லை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிடுவார்கள்.

இப்படித் தான் சுகன்யாவை முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. (ஹலோ என்ன என் ரசனை இவ்வளவு மட்டமான்னா பார்க்கறீங்க. சுகன்யாவுக்கு கமலே உம்மா கொடுத்தவராக்கும்) மஹாநதி பார்த்த பிறகு சுகன்யாவை ரொம்பவே பிடித்த்ப் போனது. அவரது பேட்டி, நடனம் என்று எது எந்தப் பத்திரிகையில் வந்தாலும், தேடித் தேடிப் படித்தேன், பார்த்தேன் ரசித்தேன். அவரது அடுத்த படத்தை எதிர் நோக்கினால், அந்நாள் அமைச்சருடன் கிசுகிசுக்கப்பட்டு மார்க்கட் இழந்து போனார்.

ஹம் ஆப்கே ஹைன் கௌன் வந்த பிறகு தான் மாதுரி எனக்குப் பிடிக்கலானார். ஆனால் அதுவே அவரது கடைசி வெற்றிப் படமானது.

சிம்ரன் ஃபீல்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் கழித்துத் தான் எனக்குப் பிடிக்கலானார். வாலி வார்த்து விட்டு சிம்ரன் பைத்தியமாகி விட்டேன். இன்றளவும் சிம்ரன் என்றால் ஒரு தனி இது தான். கமலோடு இரண்டு படங்கள் செய்து உச்சாணிக் கொம்பில் இருந்த போதே கல்யாணம் செய்து கொண்டு ஓடிப் போய்விட்டார்.

கஜினி பார்த்து விட்டு அசின் விசிறியானேன். எவ்வளவு அட்டுப் படமாக இருந்தாலும் பரவாகயில்லை என்று ஆழ்வார் முதற்கொண்டு
பார்த்தேன். அசினுக்காக எம்.குமரனில் ஜெயம் ரவியின் காட்டுக் கூச்சலைப் பொறுத்துக் கொண்டேன். தசவதாரம் எப்போதடா ரிலீஸாகும் என்று ஆஸ்கர் ரவியைவிட நான் டென்ஷன் ஆனேன். ஆனால் பாருங்கள், எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு, இந்திக்குப் போய் விட்டார்.

ஆனாலும் God is Great. வெற்று நிலமாய்க் கிடந்த என் மனத்தில் தீபிகா படுகோன் என்ற பூந்தோட்டத்தையே உருவாக்கியிருக்கிறார். முதல் படமான ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் கான் செய்த கொடுமையால் தீபிகாவையும் பிடிக்காமல் போயிற்று. ஆனால் பச்னா ஏ ஹஸீனோ பார்த்த பிறகு இவருக்கு பரம விசிறியாகி விட்டேன். என்ன ஒரே கொடுமையென்றால் நான் இவருக்கு விசிறியாவதற்கு முன்னாலேயே இவர் ரன்பீர் கபூரோடு கிசு கிசுக்கப்படுகிறார். பார்ப்போம், தீபிகா என் மன வானில் எத்தனை நாள் வட்டமடிக்கிறார் என்று.

டிஸ்கி: கன்னடத்திலும் ஓரிரு படங்கள் செய்திருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அது எவ்வளவு பெரிய ஈத்தர படமானாலும் பார்த்துடணும் என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

49 comments:

தாரணி பிரியா said...

அட இந்த டெம்ப்ளேட் இன்னும் அழகா இருக்குது விஜய்


//சில நடிகைகள் இருக்கிறார்கள், அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் திரையில் தோன்றினால், பார்ப்பவர்களையெல்லாம் தன் பக்கம் பார்க்கும் படி செய்யும் திறன். காஜோல் மற்றும் சிம்ரன் ஏன் அந்தக் காலத்து சாவித்திரி சரிதா கூட இந்த ரகம் தான்.//

வழிமொழிகிறேன். இன்னைக்கு வரைக்கும் என் பேவரைட் கஜோல்தான். அவங்க கண்ணு ஒண்ணு போதும். நாள் முழுக்க பார்த்துகிட்டு இருக்கலாம்.

அசின் ஊஹீம் எனக்கு பிடிக்காது. என்னோவோ ஒரு மாதிரி அப்படின்னு தோணும். அதனால அவங்க திரும்ப தமிழுக்கு வர வேண்டாம். மாதிரி அய்யோ அவங்க சிரிப்பு ஒண்ணு போதுமே. அதே மாதிரிதான் சிம்ரன். எல்லாத்திலும் கலக்கின ஆள்.

அப்ப தீபிகா சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குவாங்கன்னு சொல்லறீங்களா? :)

மன்மதக்குஞ்சு said...

பதிவுலகத்துக்கு நான் கடந்த இரண்டு மாதமாகத்தான் அறிமுகம். எதை படிக்க எதை விட என திக்கற்ற காட்டில் தேடி கண்டெடுத்த பிடித்தவரில் தங்கள் வலைப்பூவும் ஒன்று. வீட்டம்மாவின் கண்காணிப்பில் இல்லாமல் அலுவலுக்கிடையில் அலுவௌக்கிடையில் படித்து ரசித்து பதிலிடுகிறேன்.

இப்பதிவில் உள்ளது மாதிரி நானும் இந்த வகை தான். பானுப்ரியாவை நான் சேர்த்துக் கொள்வேன். சமீபத்தைய ‘குத்து’ ரம்யாவை பொல்லாதவனிலிருந்து எக்கசக்கசக்கமாய் தொடர ஆரம்பித்துள்ளேன். அவரும் மார்க்கெட்டை விட்டு போகாமல் இருக்க பிரார்த்திக்கிறேன்.

தொடரட்டும் தங்கள் பணி.

Poornima Saravana kumar said...

டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. ஆமா என்னோட டெம்ப்ளேட் பற்றி எதுவும் கம்மெண்ட் சொல்லலை..

//அசினுக்காக எம்.குமரனில் ஜெயம் ரவியின் காட்டுக் கூச்சலைப் பொறுத்துக் கொண்டேன். தசவதாரம் எப்போதடா ரிலீஸாகும் என்று ஆஸ்கர் ரவியைவிட நான் டென்ஷன் ஆனேன். ஆனால் பாருங்கள், எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு, இந்திக்குப் போய் விட்டார்.
//

எனக்கும் அசினை கஜினியிலிருந்து ரொம்ப பிடிக்கும்..

//ஹலோ என்ன என் ரசனை இவ்வளவு மட்டமான்னா பார்க்கறீங்க.//

ஹா ஹா ஹி ஹி

// திரையில் தோன்றினால், பார்ப்பவர்களையெல்லாம் தன் பக்கம் பார்க்கும் படி செய்யும் திறன். காஜோல் மற்றும் சிம்ரன் ஏன் அந்தக் காலத்து சாவித்திரி சரிதா கூட இந்த ரகம் தான்.
//

// தாரணி பிரியா said...
கஜோல். அவங்க கண்ணு ஒண்ணு போதும். நாள் முழுக்க பார்த்துகிட்டு இருக்கலாம். //

காஜோல் மற்றும் சிம்ரன் அழகான, திறமையான நடிகைகள்..

//தீபிகாவிற்காகவே அவர் வரும் காட்சிகளை இன்னொரு முறை பார்த்தேன். அதற்கு மேல் வீட்டம்மா பார்க்க விடவில்லை.
//

வீட்டம்மாவே இதை கவனிக்கவும்.

Anonymous said...

ரெம்பவே சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். ( மற்றபடி நடிகர், நடிகைகளை பற்றி கமென்ட் சொல்ற அளவுக்கு நமக்கு ஞானமில்லீங்கோ )

//தீபிகாவிற்காகவே அவர் வரும் காட்சிகளை இன்னொரு முறை பார்த்தேன். அதற்கு மேல் வீட்டம்மா பார்க்க விடவில்லை.

சொன்ன பேச்சைக் கேட்டு நீங்களும் நல்ல பிள்ளையா மாறிட்டீங்களா?

Vijay said...

\\தாரணி பிரியா said...
அட இந்த டெம்ப்ளேட் இன்னும் அழகா இருக்குது விஜய்\\
ரொம்ப நன்றி.

\\அசின் ஊஹீம் எனக்கு பிடிக்காது\\
அழகாக இருக்கும் பெண்களை பெண்களுக்குப் பிடிக்காதாம். :-)

\\அப்ப தீபிகா சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குவாங்கன்னு சொல்லறீங்களா? \\
ஐயையோ. அப்படி ஏதும் நான் சொல்லலியே. அவர் சேவை பாலிவுட்டிற்கும் இன்னும் தேவை. :-)

Vijay said...

\\ மன்மதக்குஞ்சு said...
பதிவுலகத்துக்கு நான் கடந்த இரண்டு மாதமாகத்தான் அறிமுகம். எதை படிக்க எதை விட என திக்கற்ற காட்டில் தேடி கண்டெடுத்த பிடித்தவரில் தங்கள் வலைப்பூவும் ஒன்று.\\
I am flattered. ரொம்ப நன்றி. www.tamilish.com போய்ப் பாருங்கள். நிறைய வலைப்பூக்களுக்கு லின்க் கிடைக்கும்.

உங்கள் புனைப்பெயர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது :-)

Vijay said...

\\ PoornimaSaran said...
டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. ஆமா என்னோட டெம்ப்ளேட் பற்றி எதுவும் கம்மெண்ட் சொல்லலை.\\
நீங்க டெம்பிளேட் மாற்றினதை உடனேயே பார்த்துவிட்டேன். பின்னூட்டம் போடததற்கு ரொம்ப சாரி. :-)

\\எனக்கும் அசினை கஜினியிலிருந்து ரொம்ப பிடிக்கும்..\\
ஐக்கிய அசின் மஹாசபை ஒன்று ஆரம்பித்து விடுவோமா?

Vijay said...

\\ரெம்பவே சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். ( மற்றபடி நடிகர், நடிகைகளை பற்றி கமென்ட் சொல்ற அளவுக்கு நமக்கு ஞானமில்லீங்கோ )\\

ரொம்ப நன்றி.

\\சொன்ன பேச்சைக் கேட்டு நீங்களும் நல்ல பிள்ளையா மாறிட்டீங்களா?\\

மாற முடியாட்டாலும் ஃபிலிம் காட்டிடுவோம்ல :-)

மேவி... said...

"அசினுக்காக எம்.குமரனில் ஜெயம் ரவியின் காட்டுக் கூச்சலைப் பொறுத்துக் கொண்டேன்."

actually when m.kumuran came ; we saw the movie bcause tht time oly "Autograph" gopika was becoming popular.(gopika and asin are from kerala.)until then kerala was famous for "E" actress among us.
during the show i proposed to Asin but she replied to Jeyam Ravi & also kissed him.
enna koduma sir edhu.
anyways nice post

Vijay said...

\\during the show i proposed to Asin but she replied to Jeyam Ravi & also kissed him.
enna koduma sir edhu.
anyways nice post\\
You proposed to Asin??!!தலைவா உங்க காலைக் கொடுங்க! :-)

தாரணி பிரியா said...

\\அசின் ஊஹீம் எனக்கு பிடிக்காது\\
அழகாக இருக்கும் பெண்களை பெண்களுக்குப் பிடிக்காதாம். :-)//



:):):):)

Karthik said...

கலக்கல் டெம்ப்ளேட் விஜய்.

//அதைக் குறைப்பதற்கான வழியைத் தேடலாமென

நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

தீபிகா எனக்கும் பிடிக்கும்.
:)

rapp said...

ஓவர் ஜொள்ளு ஜலதோஷத்திற்கு ஆவாது:):):)(ஏன்னா ஜலதோஷத்திற்கு மூக்கு அத்தியாவசியம், அதால அந்த மூக்க ஒடயாம பாத்துக்கங்க:):):))

rapp said...

me the 15th:):):)

rapp said...

//அதுவும் சப்-டைடிலோடு இருந்ததனால் என்ன பேசறாங்க என்ன சொல்லறாங்க என்ற வீட்டம்மாவின் நச்சரிப்பு இல்லை.
//

தோடா, சொல்லிட்டாரு ஹிந்தி புரபசரு:):):)

rapp said...

//சில நடிகைகள் அழகு சொட்டுவார்கள், ஆனால் திரைப்படத்தின் கதா பாத்திரத்தோடு ஒத்துப் போக மாட்டார்கள். ஐஷ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், தியா மிர்ஜா இந்த ரகம் தான்.//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

//நல்ல வசீகரிக்கும் அழகு மற்றும் படம் பார்ப்பவரையும் தன் பக்கம் ஈர்க்கும் திறன். ஸ்ரீதேவி, பத்மினி, ஜெயலலிதா, வைஜெயந்தி மாலா, மாதுரி தீக்‌ஷித் போன்றவர்கள் இந்த ரகம். ’கஜினி’ அசின் கூட இந்த ரகம் என்று சொல்லலாம். தீபிகா படுகோனும் இந்த ரகம் தான்//

இதையும் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

//முதல் படமான ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் கான் செய்த கொடுமையால் தீபிகாவையும் பிடிக்காமல் போயிற்று//
//எம்.குமரனில் ஜெயம் ரவியின் காட்டுக் கூச்சலைப் பொறுத்துக் கொண்டேன்//

சூப்பர்:):):)

மேவி... said...

he he he....

Vijay said...

வணக்கம் திரு ராப்ப்.
\\ rapp said...
ஓவர் ஜொள்ளு ஜலதோஷத்திற்கு ஆவாது:):):)(ஏன்னா ஜலதோஷத்திற்கு மூக்கு அத்தியாவசியம், அதால அந்த மூக்க ஒடயாம பாத்துக்கங்க:):):))\\

எச்சரிக்கைக்கு ரெம்ப நன்றி.

\\கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)\\

வழிமொழிந்ததற்கு ரொம்ப நன்றி :-)

\\தோடா, சொல்லிட்டாரு ஹிந்தி புரபசரு:):):)\\
எனக்கே சுமாராத் தான் புஇரியும் :-) :-)

முகுந்தன் said...

//ஆனால் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது தீபிகா படுகோன். //

பெண்களூர்வாசிக்கு ஆண்களையா பிடிக்கும்?

this template is very good.

Divyapriya said...

ஜொல்லுப் பெருங்கடல்னு title வச்சிருக்கலாம் :))

Divyapriya said...

template is too good vijay...

Vijay said...

\\முகுந்தன் said...
this template is very good.\\
Thanks a lot :-)

\\ Divyapriya said...

ஜொல்லுப் பெருங்கடல்னு title வச்சிருக்கலாம் :))\\
ஹா ஹா

\\Blogger Karthik said...
கலக்கல் டெம்ப்ளேட் விஜய்.
நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

தீபிகா எனக்கும் பிடிக்கும். :)\\

Thanks a lot Karthik. தீபிகா படுகோன் நற்பணி மன்றம் அரம்பிச்சுடுவோமா??

Poornima Saravana kumar said...

// விஜய் said...
\\ PoornimaSaran said...
டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. ஆமா என்னோட டெம்ப்ளேட் பற்றி எதுவும் கம்மெண்ட் சொல்லலை.\\
நீங்க டெம்பிளேட் மாற்றினதை உடனேயே பார்த்துவிட்டேன். பின்னூட்டம் போடததற்கு ரொம்ப சாரி. :-)

//

சாரி எல்லாம் வேண்டாம், அதர்க்கு பதில் என் பின்னூட்டத்தில் 100 கும்மி போடுமாறு தீர்ப்பளிக்கறேன்.. ஆமா சொல்லிபோட்டோம்..

Karthik said...

Kupidungal Blog sangathai... nambha vijay anna NAMITHA, TAMANNAH, BHAVANA ivangala vithuthaaru list la!!!

Idhunaala namitha sangam saarpaaga ivaruku JK RITHEESH DVD ilavasamaaga thaanga!!!!

baasu.. naanum Bhavana oda muda padatha paarthadula irundhu payangara fan aayiten.... aprom vanda ellame athu padam... KOODAL NAGAR, KILAKKU KADARKARAI SAALAI, DEEPAVALI (alaga irundaanga inda padathula) :P

Karthik said...

eppadinga alwar padatha paathenga??? naa sethuthen... 3 naal thokaame varala.. nite road la evan nadanthu ponaalum oru veala ivan ajitho nu ninaipen....

Karthik said...

Pudu pic kalakireenga... enga edhuthadu?? treat eppa???

Vijay said...

\\ Karthik said...
Kupidungal Blog sangathai... nambha vijay anna NAMITHA, TAMANNAH, BHAVANA ivangala vithuthaaru list la!!!\\
கார்த்திக், நமீதா! ஐயோ. பாவனா ஒகே. தமன்னா நல்லா இருக்காங்க.
எனக்கு அவங்க பண்ணின ராஜ்மஹால் ad ரொம்ப பிடிக்கும். அதனாலயே காயத்ரி என்னை அந்த ad பார்க்க விட மாட்டாள்.
படங்களில் தமன்னாவிற்கு இன்னும் நல்ல கதாபாத்திரம் செய்யலைன்னு நினைக்கிறேன். பாவனாவின் ஜெயம்கொண்டான் பிடித்திருந்தது.
She literally fitted the bill of an innocent small town girl
ஆனா

புதியவன் said...

//நாயகனுக்கு இந்தப் படத்தில் செம ப்ளே பாய் ரோல். படத்தில் மூன்று நாயகிகள். எடுத்தவுடன் ஜில்லென்ற சுவிட்ஜர்லாண்டில் ஆரம்பிக்கிறது கதை. இரண்டு பெண்களை காதலிப்பது போல் நடித்து, பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார் இந்த ப்ளே பாய் நாயகன். ஆஸ்திரேலியா போய் அங்கே, நிஜமாகவே ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அவளிடம் காதலைத் தெரிவிக்கையில்,
அவள் காதலை நிராகரிக்கிறாள். அப்போது தன்னால் புண்பட்ட மனங்களின் வேதனையை அறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்க அவர்களைத் தேடிப் போய் படத்தின் இரண்டாம் பாதி தொடர்கிறது.//

நான் கூட சமீபத்தில தான் இந்தப் படத்த பார்த்தேன். தனக்கு வலி வந்தால் தான் வலியோட வலிமை என்னான்னு தெரியும்ன்னு அழகா சொல்லியிருக்காங்க...ம்ம்ம்...படம் நல்லாத் தான் இருந்தது.

Karthik said...

@விஜய்

//தீபிகா படுகோன் நற்பணி மன்றம் அரம்பிச்சுடுவோமா??

தாராளமாக விஜய். ஆனால் எத்தனை நாளில் மாறுவேன் என்று தெரியாதே!
:)

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...
இன்னைக்கு வரைக்கும் என் பேவரைட் கஜோல்தான்\\


நமக்கும் தாங்கோ. (From DDLJ)

நட்புடன் ஜமால் said...

எளிமையாயிருக்கு உங்க template.

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// விஜய் said...
\\ PoornimaSaran said...
டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. ஆமா என்னோட டெம்ப்ளேட் பற்றி எதுவும் கம்மெண்ட் சொல்லலை.\\
நீங்க டெம்பிளேட் மாற்றினதை உடனேயே பார்த்துவிட்டேன். பின்னூட்டம் போடததற்கு ரொம்ப சாரி. :-)

//

சாரி எல்லாம் வேண்டாம், அதர்க்கு பதில் என் பின்னூட்டத்தில் 100 கும்மி போடுமாறு தீர்ப்பளிக்கறேன்.. ஆமா சொல்லிபோட்டோம்..\\

இப்படியெல்லாம் நடக்குதா...

நட்புடன் ஜமால் said...

\\இரண்டு பெண்களை காதலிப்பது போல் நடித்து, பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார் இந்த ப்ளே பாய் நாயகன். ஆஸ்திரேலியா போய் அங்கே, நிஜமாகவே ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அவளிடம் காதலைத் தெரிவிக்கையில்,
அவள் காதலை நிராகரிக்கிறாள். \\

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

அதுவும் இது காதல் வலி ...

Vijay said...

\\ புதியவன் said...
நான் கூட சமீபத்தில தான் இந்தப் படத்த பார்த்தேன். ...ம்ம்ம்...படம் நல்லாத் தான் இருந்தது.\\
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி புதியவன்.

\\Karthik said...
தாராளமாக விஜய். ஆனால் எத்தனை நாளில் மாறுவேன் என்று தெரியாதே!
:)\\
அதனாலென்ன. அடுத்த நற்பணி மன்றம் ஆரம்பிச்சுட்டா போகுது? :-)

\\ அதிரை ஜமால் said...
எளிமையாயிருக்கு உங்க template\\
ரொம்ப நன்றி ஜமால். :-)

Karthik said...

anna neenga director seeman sondakarara???

Karthik said...

Profile visit pannunga.. Ungalukku oru surprise irukunga!!!!

Anonymous said...

romba nalla irundhudunga.. naan kooda deepika oda thevira fan.. aana athuka eetharamaaana padatha ellam paakamaten ;)

unga blog super ah irukku.. naan adikadi visit pannuven..

Vijay said...

\\ Karthik said...
anna neenga director seeman sondakarara???\\
உங்களுக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்? எனக்கும் சீமானுக்கும் எந்த விதத்திலும் ஒற்றுமை கூட கிடையாது.

Vijay said...

\\ kanaguonline said...
romba nalla irundhudunga.. naan kooda deepika oda thevira fan.. \\
வாருங்கள் நண்பரே. தீபிகா படுகோனுக்கு இவ்வளவு தமிழ் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமல் போச்சே :)


\\unga blog super ah irukku.. naan adikadi visit pannuven..\\
ரொம்ப நன்றி :-)

Poornima Saravana kumar said...

hi
hi
hi

Divya said...

Template looks tooooooo good Vijay;))

Divya said...

\\அதுவும் சப்-டைடிலோடு இருந்ததனால் என்ன பேசறாங்க என்ன சொல்லறாங்க என்ற வீட்டம்மாவின் நச்சரிப்பு இல்லை.\\

Ultimate........vijay's touch of humour:))

Vijay said...

\\Divya said...
Ultimate........vijay's touch of humour:))\\
என்ன மேடம் மறுபடியும் ஹைபர்நேஷன் மோடுக்கு போயிட்டீங்களா???

\\ Divya said...
Template looks tooooooo good Vijay;))\\
Thanks a lot Divya!!

Karthik said...

Ilaya thalapathy anna ungala TAG panniruken.. tamil profile vandu paarunga!!!

Karthik said...

neenga paaka seeman madiri irukennga na...

Divya said...

\Blogger விஜய் said...

\\Divya said...
Ultimate........vijay's touch of humour:))\\
என்ன மேடம் மறுபடியும் ஹைபர்நேஷன் மோடுக்கு போயிட்டீங்களா??? \\


Hybernation mode illa Vijay........vocation mode la irunthein:))

ingey long weekend for thanks giving,so vooru suththals la blog pakkam vara mudila:(

now bk to routine.......:)))

MSK / Saravana said...

இதெல்லாம் அண்ணிக்கு தெரியுமா.. ;)

MSK / Saravana said...

49 :)

MSK / Saravana said...

50 ;)