Pages

August 22, 2008

ப்ளீஸ் சார்.....

கமல்ஹாசன் மர்மயோகி என்று ஆறாம் நூற்றாண்டைப் (திருத்தம் சொன்ன ஜிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்) பின்னணியாகக் கொண்ட படத்தை எடுக்கப்போவதுப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். படத்தை நல்லபடியாக எடுத்து, தயாரிப்பளர் தலையில் துண்டு விழாமலும், என் போலல்லாத ரசிகர்களையும் கமல் ஏமாற்றமாட்டார் என்றே நம்புவோம். ஆனால், கமல் இப்படியொரு கதையைப் படமாக எடுக்கப்போகிறார் என்றவுடன், எனக்கு சற்றே ஏம்மாற்றமாக இருந்தது.

தமிழார்வலர்கள் நிறைய பேர் படிக்க மறக்காத காவியம் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். தமிழ் நாவல் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படித்திய ஒன்று (அய்ய தோடா அப்படியே இவரு பெரிய சுஜாதாவாகிட்டாரு). வலைப்பாதிவாளர்கள் நிறைய பேரது ஃபேவரிட் புத்தகங்களில் பொன்னியின் செல்வன் மறக்காமல் இடம் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனும் "பொன்னியின் செல்வனைப் படித்திருக்கிறேன்" என்று பேட்டியில் சொன்னதாக ஞாபகம். அப்படியிருக்க இந்தக் காவியத்தை, ஏன் இது வரை எவரும் படமாக எடுக்க முன் வரவில்லை.

பொன்னியின் செல்வனில் இல்லாத கதையா? அதில் இல்லாத சூழ்ச்சியா? அதில் இல்லாத ராஜ தந்திரமா? அதில் இல்லாத காதலா? அதில் இல்லாத சோகமா? பாட்டுக்களுக்கூட பஞ்சமில்லாமல் கல்கியே நிறைய பாட்டு எழுதிக்கொடுத்து விட்டுப் போயிருக்கிறாரே. ஓர் படமெடுக்க என்னென்ன அம்சங்கள் வேண்டுமோ அத்தனையும் நிரம்பியிருக்கிறது. அப்படியிருக்க கமல்ஹாசனோ, மணிரத்னமோ ஏன் அதை படமாக்க முன் வரவில்லை என்று தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் தயவில் பொன்னியின் செல்வனை பொதுவுடமை ஆகி விட்டது. அதனால் அதன் மீது யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது.

உலகத்தரம் உலகத்தரம் என்று அடித்துகொள்கிறார்களே ஒரு ராஜா காலத்துக் கதையை உலகத்தரத்தில் வழங்க முடியாதா? ஓர் ராஜா காலத்துக் கதையைக் கொண்ட பென்ஹர் தானே இன்று வரை நிறைய ஆஸ்கர் வென்ற படமாக இருக்கிறது. Lord of the Rings ஓர் ராஜா காலத்து விட்டலாச்சாரியார் படம் தானே. Gladiator'உம் ராஜா காலத்து படம் தானே? இவையெல்லாம் வெற்றி பெற வில்லையா? அட, தசாவதாரத்திலேயே கூட முதல் 15 நிமிடங்கள் தான் நன்றாக இருக்கிறது, என்று எல்லோரும் சொல்லவில்லையா? இப்படி ஊக்கமூட்டும் நிறைய சாட்சிகளிருந்தும், பொன்னியின் செல்வனை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று மனம் ஆதங்கப் படுகிறது.

சரி இந்தப் படத்தை ஏன் நான் கமல்ஹாசனோ மணிரத்னமோ எடுக்க வேண்டும் என்று சொல்கிறேன். பொன்னியின் செல்வன் என்பது ஏதோ ஓர் சாதாரண கதையல்ல. பலதரப்பட்ட புனைக்கதைகளை அதனுள் அடக்கி வைத்திருக்கிறது. சோழர்களின் உன்னதமான காலத்தைகுறிக்கும் பொன்னியின் செல்வன் மிகப் பிரம்மாண்டமான முறையில் திரை வடிவில் வழங்கப் பட வேண்டும். உதாரணத்திற்கு, முதல் காட்சியிலேயே பழுவேட்டறையரின் அணிவகுப்பைக் காட்டவேண்டுமானால், அதற்கு ஏற்றார் போல் தொழில் நுட்பத்தை பயன் படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் காட்சி வடிவமைப்பது கமலையும் மணி ரத்னத்தையும் தவிற வேறெவரால் முடியும் என்று தெரியவில்லை? (ஷங்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்) ஒப்பனையிலும் மிக நுட்பமான நுணுக்கங்கள் தேவை.

சோழர் காலத்து மாளிகைகளையும், ஈழத்துப் போரையும், வந்தியதேவனும் அருள் மொழி வர்மனும் புயலில் சிக்கிக் கொள்ளும் காட்சி, கடற்கொள்ளையரிடமிருந்து வந்தியத்தேவன் தப்பிக்கும் காட்சி, நாகை புயல்(இது கூட சுனாமி தானோ, கல்கி கடல் பொங்கிற்று என்று எழுதியிருந்ததாக ஞாபகம்), மற்றும் வெள்ளம், இவையனைத்தும் தொழில் நுட்பத்திற்கே சவால் விடும் காட்சிகள். ஏதாவது கத்துக்குட்டி இயக்குனர், ஆர்வ மிகுதியில் இக்கதையை படமாக்குகிறேன் பேர்வழி என்று கெடுப்பதற்குள், திரைத்துறையில் கோலோச்சும் கமல் மணி ரத்னம், ஷங்கர் இவர்களில் யாராவது இக்கதையை படமாக்கினால் நல்லது. பொன்னியின் செல்வனை இன்னும் அதைப் படிக்காத மக்களுக்கு, அதை எடுத்து செல்ல இது அற்புதமான வழி.

அப்படி பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்கும் பட்சத்தில், எந்தெந்த கதாபத்திரத்துக்கு யாரைப் போடலாம்? என் பதிவைப் படிப்பவர்கள் அதையும் சொன்னால் நல்லதாக இருக்கும்.

என்னைக்கவர்ந்த சில கதாபாத்திரங்களுக்குஇது தான் என் சாய்ஸ்:

வந்தியத்தேவன் : சூர்யா
குந்தவை : சிம்ரன்
அருள் மொழி வர்மன் : விக்ரம்
வானதி : அசின்
ஆதித்த கரிகாலன் : மாதவன்

நந்தினி : ஜோதிகா
ஆழ்வார்க்கடியான் : விவேக் (கொஞ்சம் தொப்பை வேண்டும்)
அனிருத்தப்பிரம்மராயர் : கமல்ஹாசன்(சாரி அருள் மொழி வர்மனாக உங்களை என்னால் பாவிக்க முடியவில்லை)

சேந்தன் அமுதன் : சித்தார்த்
பூங்குழலி : ஸ்நேஹா
வைத்தியர் மகன் பினாகபாணி அல்லது ரவிதாசன் : ஜே.கே ரித்தீஷ் :-)

கமல் சார், மணிரத்னம் சார், ஷங்கர் சார், ப்ளீஸ் சார்.....

டிஸ்கி:

இதையே மெகா சீரியலாக யாரோ எடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி ஏதாவது பண்ணி இந்தக் காவியத்துக்கு களங்கம் ஏற்படுத்திடாதீங்கப்பா

பொன்னியின் செல்வன் எனப்பெயரிட்டு சில வருடங்களுக்கு முன் வந்த தமிழ்ப் படம், நல்ல வேளை கல்கியின் கதையை படமாக எடுக்க வில்லை.

15 comments:

ஜியா said...

//பன்னிரண்டாம் நூற்றாண்டைப் //

athu 6th century.. NOT 12th :)))

Kamal Haasan in Brahmaraayar role?? Brammaraayar role ellaam Vijayakumar maathiri aatkal panra vedam... Arulmozivarmar roleula en kamal vara mudiyaathunnu solreenga?? ThevarMagan character kittathatta porunthi varum paarunga... :))

சந்திரசேகரன் கிருஷ்ணன் said...

பென்ஹரும்...

Ramya Ramani said...

\\இதையே மெகா சீரியலாக யாரோ எடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி ஏதாவது பண்ணி இந்தக் காவியத்துக்கு களங்கம் ஏற்படுத்திடாதீங்கப்பாபொன்னியின் செல்வன் எனப்பெயரிட்டு சில வருடங்களுக்கு முன் வந்த தமிழ்ப் படம், நல்ல வேளை கல்கியின் கதையை படமாக எடுக்க வில்லை.
\\


பொன்னியின் செல்வன் Fanskku இருக்கும் ஆதங்கம் :)

Ramya Ramani said...

விஜய் என்னோட சாய்ஸ் இதோ !

வந்தியத்தேவன் :
சூர்யா - சூப்பரு :)))

குந்தவை : சிம்ரன்

இப்போதைய சிம்ரனுக்கும் அன்றலர்ந்த மலர் போன்ற குந்தவை தேவிக்கும் ஒத்துவராதோனு தோணுது விஜய்..மேலும் அவங்களுக்கு இந்த ராணி வேஷம் கம்பீரமா செட் ஆகாது..

ஜோதிகாவோ,சார்மின்னு ஒரு தெலுங்கு Actressசெட் ஆவாங்கன்னு நான் நினைக்கறேன்

அருள் மொழி வர்மன் : விக்ரம்
Wonderful :)

வானதி : அசின்

hmmmm ok

ஆதித்த கரிகாலன் :மாதவன்
விஷால் - எப்படி??

நந்தினி : ஜோதிகா

இங்க போடுங்க சிம்ரன அந்த வில்லத்தனமான் பார்வை எல்லாம் கலக்குவாங்க அம்மணி

ஆழ்வார்க்கடியான் : விவேக் (கொஞ்சம் தொப்பை வேண்டும்)
Good

அனிருத்தப்பிரம்மராயர் : கமல்ஹாசன்
அடடே!அவடோட பாடி பில்டுக்கு பெரிய பழுவேட்டரையரா போட்டா??

சின்னவருக்கு சரத்குமார்

Vijay said...

ஜி,
தவறை சுட்டிக்காடியதற்கு கோடானுகோடி நன்றிகள்.
பொன்னியின் செல்வன் படித்தபிறகு தேவர் மகனைப் பார்க்கும் போது, எனக்கு அருள் மொழி வர்மனாகத்தான் கமல் என் கண் முன் தோன்றினார். காட் ஃபாதர் படிக்கும் போது மைக்கலும் அப்படித்தான் தெரிந்தான். ஆனால் இன்றைய சூழலில் கமலை அருள் மொழி வர்மனாக பாவிப்பது கொஞ்சம் கஷ்டம். மேலுல் கமல் போன்றவரை சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்க எனக்கு ஆசை. அதனால் தான் கமலை அநிருத்தப்பிரம்மராயர் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தேன். என் தேர்வு தவறாககூட இருக்கலாம். எனது சாய்ஸைத்தான் சொன்னேன்.

விஜய்

Vijay said...

என் பக்கத்திற்கு வந்ததற்கு நன்றி, க்ரிஷ் சந்துரு :-)
பென்ஹரையும் சொல்லியிருக்கேனே, பார்க்கலியா?

Vijay said...

பச்சைக்கிளி முத்துச்சரம் பார்த்தபிறகு, ஜோதிகாவை இந்த வில்லத்தனமான ரோல்களுக்குப் போடலாம்னு நினைத்தேன். மேலும் குந்தவை கதாபாத்திரம் கொஞ்சம் கம்பீரம் கலந்த அழகு தேவை. அதற்கு Simran will fit the bill exactly.

bhavesh said...

HI,
This idea is very good and also i have thought about this many times why don't we do movies like 23rd pulikesi, Gladiator and Alexonder etc.,. I am happy to hear that lot of our indians like this (tamil makkals). We need to include lot of good actors/actress like sathyaraj,Nasar, Vadivelu virumandi groups, Ilaiyaraja/MSV music,Rathika, Revathy, Lakshmi and still lot to select according to characters to give this movie a real big hit for history. Mani, Shanker and kamal can do it well.

Vijay said...

Hi Bhavesh,
Thank you for your suggestion. I too had thought that actors like Lakshmi, Revathy and Sathyaraj have a role to play, if ponniyin selvan is taken as a film.

Thanks for visiting my page.

Vijay

முகுந்தன் said...

சூபர் சாய்ஸ். நான் பொன்னியின் செல்வன் கொஞ்சம் தான் படிச்சிருக்கேன்...
என்ன கொடுமை விஜய் இது :-)



btw, நேத்து நான் போட்ட கமெண்ட் காணோம்..
publish பண்ணதும்
display ஆகவே இல்ல :(

Vijay said...

\\முகுந்தன் said...
சூபர் சாய்ஸ். நான் பொன்னியின் செல்வன் கொஞ்சம் தான் படிச்சிருக்கேன்...
என்ன கொடுமை விஜய் இது :-)\\

முதல்ல அதைப் படிச்சு முடிங்க. உங்களால் அதைப் படித்து முடிக்கும் வரை வேறெதுவும் செய்ய முடியாது.
அவ்வளவு captivating'ஆ இருக்கும்


\\btw, நேத்து நான் போட்ட கமெண்ட் காணோம்..
publish பண்ணதும்
display ஆகவே இல்ல :(\\
அப்படியா, I havent' enabled comment authorization by moderator. So, even google sometimes creates buggy software :-)

Divyapriya said...

பொன்னியின் செல்வன் கதைய படமா எடுத்து, அத ஒழுங்கா பண்ணாம கெடுக்கறத விட, பேசாம அப்படியே விட்டுடலாம்ங்கறது, என்னோட கருத்து...

ஒரு புத்தகத்த படிக்கும் போதே, வித விதமா கற்பனைல மிதக்க செய்து, அந்த உலகத்துக்குள்ளே பயனிக்க செய்ய முடியும்ன்னா, அது தான் அந்த புத்தகத்தோட வெற்றி…

அது பொன்னியின் செல்வன்ல எக்கச்சக்கமா கொட்டிக் கிடக்கு...ஒரு படமா அத எடுத்து, சிலத சொல்லி, சிலத விட்டு, சிலபேர satisfy பண்ணி, சில பேர satisfy பண்ண முடியாம, எதுக்கு இந்த risk? அந்த கதை, கதாபாத்திரங்கள், இடங்கள் பத்தின அழகான கற்பனைகளை retain பண்ண முடியாம போய்டும்.

உதாரணத்துக்கு சில பேருக்கு ஸ்னேஹா பிடிக்கலாம், பிடிக்காம இருக்கலாம்…ஆனா பூங்குழலிய எல்லாருக்குமே பிடிக்கும். So, அவங்கவங்க கற்பனைல அவங்கவங்க என்ஜாய் பண்றது தான் பெஸ்டு…

நம்ம தாத்தா பாட்டிக்கும் பொன்னியின் செல்வன் தான் favorite, அப்பா, அம்மா காலத்து மக்களுக்கும் அதே, நமக்கும் அதே தான் favorite புக், இப்படி காலத்த தாண்டி நிக்குற ஒரு கதை, எதுக்கு ஒரு காலகட்டத்துல வந்த படமா மாறனும்?

இவ்ளோ சொல்றியே, படம் வந்தா போய் பாக்கமாட்டியான்னு கேக்காதீங்க…முத ஆளா போய் பாத்துடுவேன் :-))

Divyapriya said...

@ ஜி
//Arulmozivarmar roleula en kamal vara mudiyaathunnu solreenga??//

ஹ்ம்ம், கமல் நடிக்கலாம்...ஆனா என்ன, ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடியே படம எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் ;-)

வெட்டிப்பயல் said...

இது 40 - 50 வருஷத்துக்கு முன்னாடி எடுத்திருக்கனும்...

வந்தியத்தேவன் - ஜெமினி
அருள் மொழி - சிவாஜி

இப்படி நிறைய பேசியாச்சி :)

ஆனா படம் வந்து எல்லார் மனசுலயும் இருக்கறதை கெடுக்கறதைவிட அதை படிச்சி அந்த மாயவுலகத்துல அருமையா வாழலாம்.

கல்கியே எல்லாரையும் நமக்கு அழகா வர்ணிச்சி நம்மையும் அந்த இடத்துக்கு கூப்பிட்டு போயிடறாரு :)

kannanvaruvan said...

வந்தியதேவனும் அருள் மொழி வர்மனும் புயலில் சிக்கிக் கொள்ளும் காட்சி, கடற்கொள்ளையரிடமிருந்து வந்தியத்தேவன் தப்பிக்கும் காட்சி, நாகை புயல்
(இது கூட சுனாமி தானோ, கல்கி கடல் பொங்கிற்று என்று எழுதியிருந்ததாக ஞாபகம்)appadiyum irukkumo.. see, no one could immage those days..now,after tsunami only we can think over it, sometime it may be true as u told.

கல்கியே எல்லாரையும் நமக்கு அழகா வர்ணிச்சி நம்மையும் அந்த இடத்துக்கு கூப்பிட்டு போயிடறாரு
that is fact... we cld. enjoy that world only wen we read the novel.

Vijai ikku ponniyin selvan mael ippadi oru kathalaa.. thattunkal...thirakkalam..
bask