இது என்னவோ ராஜேஷ் குமார் நாவலோ என்று நினைத்து விட்டு ஆல்ட்+F4 செய்து விட வேண்டாம். இது ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகம். ஆங்கிலத்தில் "The Prisoner of Birth".
இரண்டு வாரங்களாக வீட்டில் ஒரு வேலை கூட செய்யாமல் இந்தியாவின் சொதப்பல் கிரிக்கெட்டைக்கூடப் பார்க்காமல், படித்து முடித்தேன்.
"தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; ஆனால் தர்மம் வெல்லும்" இது தான் கதையின் மையக் கரு.
செய்யாத கொலைக்காக டேனியல் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கொலையுண்டது அவன் காதலியின் தமையன். சட்டம் என் கையில் என்று சொல்லிக்கொண்டு, வில்லன் கோஷ்டி அவன் மீது பழி சுமத்துகிறது. சட்டம் ஓர் இருட்டறை என்றதால் அவனை 20 ஆண்டுகள் சிறைச்சாலையில் அடைக்க தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் நிகோலஸ் மற்றும் பிக் அல் என்பவர்களோடு நட்பு ஏற்படுகிறது. ஆ! என்னைப் போல் ஒருவன் இருக்கிறானே என்று நிக்கோலஸும் டேனியலும் ஆச்சர்யப் படுகிறார்கள். 6 வாரங்களில் பரோலில் வெளியே வரப்போகும் நிகோலஸை டேனியல் என்று நினைத்து இன்னோர் கைதி போட்டுத்தள்ளுகிறான். சிறைக் காவலர்கள் கொலையுண்டது டேனியல் தான் என்று நினைத்துக் கோண்டு அவனது இறுதிச் சடங்கை முடித்து விட்டு, டேனியலை நிகோலஸ் என்று நினைத்து பரோலில் வெளியே விட்டுவிடுகின்றனர். நான் அவனில்லை என்று சொல்லாமல், டேனியலும் வெளியே வந்து விடுகிறான்.
வெளியே வந்த டேனியல், டேனியல் மாதிரி சிந்திக்கவும், நிகோலஸ் மாதிரியும் நடந்து கொள்கிறான். தனது சித்தப்பாவிடமிருந்து தனது பூர்வீக சொத்தைக் கைப்பற்றுகிறான். பிறகு தனக்கெதிராகச் சதி செய்தவர்களை பழி வாங்கப் புறப்படுகிறான். இவன் நிகோலஸ் இல்லை, டேனியல் தான் என்று போலீஸுக்குத் தெரியவந்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறான். இம்முறை, நிகோலஸின் சொத்துக்களையும் கொள்ளையடித்ததற்காக நிறைய பழி அவன் மீது. இந்த எல்லாப் பழிகளையும் எதிர்கொண்டு எப்படி வெளியே வருகிறான் என்பது மீதிக்க் கதை.
கதையில் திருப்பங்களோ சஸ்பென்ஸொ எதுவும் இல்லாவிட்டாலும் பயங்கர விறுவிறுப்பான கதை. எந்தவொரு மசாலா ஐட்டங்களும் இல்லை. எல்லோருமே உண்மையைச் சொல்பவர்கள். வில்லனைத் தவிர. இவன் தான் வில்லன். இவன் தான் கொலை செய்கிறான் என்று முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர் சொல்லி விடுகிறார். இருந்தாலும் அதை எப்படி டேனியலும் அவனுக்காக வாதாடும் வக்கிலும் அதை நிரூபிக்கிறார்கள் என்பது தான் கதையின் ஹைலைட். டேனியலுக்காக அவனது வக்கீலின் அப்பா கடைசியில் வில்லனைப் போட்டு குறுக்கு விசாரணை செய்வார். அந்த அத்தியாயங்களை இன்னொரு முறை படிக்க வேண்டும். வில்லனும் ஒரு தேர்ந்த வக்கீல். அவனை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்.
நிகோலஸாக இருந்து அவனது சொத்தை அபகரிக்க முயன்ற குற்றத்திற்காக டேனியலை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் போது, அவனது பழைய கதைகளெல்லாம் நோண்டக்கூடாது என்று நீதிபதி முதலிலேயே சொல்லிவிடுவார். இதை நினைத்து வில்லன் கோஷ்டி பூரிப்படைய, பழைய குற்றத்தைப் பற்றி பேசாமல் இந்த வழக்கில் எப்படி வாதாடுவது என்று டேனியலின் வக்கீல் முழிக்க அப்போது தனது வாத சாதுர்யத்தால் வக்கீலின் அப்பா, பழைய வழக்கை இந்த வழக்கோடு சம்பந்தப்படுத்தும் இடம் அவ்வளவு அழகு.
மொத்த கதையிலும் எல்லோரும் ஒரு மாதிரியான Mind Game விளையாடுகிறார்கள். எந்த வித ஆக்ஷனோ கார் சேஸிங்கோ இல்லாமல் கதை தெளிந்த நீரோட்டமாகப் பயணிக்கிறது.
கதையில் எனக்கு இன்னும் பிடித்த ஒரு பாத்திரம், ஸ்டாம்ப் கலெக்டராக வரும் ஒரு அமெரிக்கர். மனிதர் இரண்டு அத்தியாங்களே வந்தாலும் பிச்சு உதறுகிறார். இவரின் பாத்திரப் படைப்புக்காக ஆர்ச்சர் செய்திருக்கும் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. ஆர்ச்சரின் முந்தைய படைப்புகளான Sons of Fortune, Prison Diary எல்லாவற்றையும் விட இது ரொம்பவே ஸ்வாரஸ்யமானதொரு கதை. புத்தகப் பிரியர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டியதொன்று.

8 comments:
super review vijay...உடனே படிச்சற வேண்டியதுதான்...எனக்கு ஆர்ச்சர் கதைலயே ரொம்ப பிடிச்சது kane and abel, prodical daughter தான்...
//ஆசிரியர் சொல்லி விடுகிறான்.//
'ர்' , 'ன்' ஆய்டுச்சு :)) ...பாத்துக்கோங்க...
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு ரொம்ப நன்றி
Prodigal Daughter'ன் தொடர்ச்சியாக Shall We Tell the President ழுதினாரே, அதைப் படிக்கலையா? சின்ன கதை தான். ஆனால் நன்றாக இருக்கும். என்ன Prodigal Daughter'இல் வரும் ஃப்ளோரென்டினா ரோஸ்னோவ்ஸ்கி பாத்திரம் மட்டும் தான் இந்த கதையில் வரும்.
Haven't you read First Among Equals. Amazing one. A bit slow, but I liked it.
நீங்க எழுதிருக்கும் விதமே படிக்க தூண்டுகிறது கண்டிப்பாக படிக்கிறேன் :))
என்னுடைய பளாகிற்க்கு வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வேலை வெச்சிருக்கேன் ..என்னான்னு தெரிஞ்சிக்கலாம் :)
அட....உங்க விமர்சனம் படிக்கும்போதே கதையை உடனே படிக்கனும்னு தோனுதே!!!
சூப்பரு:))
\\ Ramya Ramani said...
நீங்க எழுதிருக்கும் விதமே படிக்க தூண்டுகிறது கண்டிப்பாக படிக்கிறேன் :)) \\
\\Divya said...
அட....உங்க விமர்சனம் படிக்கும்போதே கதையை உடனே படிக்கனும்னு தோனுதே!!!\\
அம்மணிகளா,
ஆர்ச்சருக்குத் தெரிஞ்சா, "ஏம்மா, என் எழுத்து உங்களைப் படிக்கத்தூண்டலை!! ஏதோ ஒரு சோணாசலமுத்து என்னத்தையோ எழுதிப்புட்டானேன்னு தான் படிக்கத்தோணுதா"ன்னு கேட்டு வைவார் :-)
ஆர்ச்சரை விமர்சிக்கும் தகுதியோ திறமையோ எனக்கில்லை. புத்தகத்தைப் படித்து விட்டு என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டேன். தேவையில்லாமல் எனக்கும் ஆர்சசருக்கும் மனஸ்தாபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள் :-)
//எனக்கு ஆர்ச்சர் கதைலயே ரொம்ப பிடிச்சது kane and abel, prodical daughter தான்...//
Naan kadisiyaa paatha english padam Sholey nga...
\\ஜி said...
//எனக்கு ஆர்ச்சர் கதைலயே ரொம்ப பிடிச்சது kane and abel, prodical daughter தான்...//
Naan kadisiyaa paatha english padam Sholey nga..\\
Excellent loLLu :)
Post a Comment