நன்றி: பிளாக்ஸ்பாட் வலைத்தளம்! எதிர்ப்பெதுவும் தெரிவிக்காமல் வாய் மூடி இதை பிரசுரித்ததற்காக!
------------------------------------------------------------------------------------------------
"சுரேஷ் இன்னிக்கு உன் பிறந்த நாள்டா. எழுந்திரு எழுந்திரு." குழந்தைப் பருவத்திலிருந்தே அவனது பிறந்த நாளை அம்மா தான் ஞாபகப்படுத்துவாள்.
சுரேஷ், டீனேஜ் முடிந்து இருபதுகளில் அடியெடுத்து வைக்கிறான். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஆண்டவன் தனக்காக ஒதுக்கப்பட்ட நாட்களில் ஒரு வருடத்தை முழுமையாகக் கழித்துக் கொண்டுவிட்டானே என்ற காரணத்தாலேயே, பிறந்த நாளையும் ஒரு சாதாரண நாள் போலவே கழிப்பவன்.
சுரேஷ் கிண்டி அண்ணா பல்கலைகழகத்தில், பொறியியல் Electronics & Communications இறுதியாண்டு படிக்கும் மாணவன். தாம்பரத்திலிருக்கும் தனது வீட்டிலிருந்து ரயில் பஸ் என மாறி கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கும் day scholar. மாநிறத்துக்கும் சற்றே குறைவான நிறம். வசீகரிக்கும் அழகு இல்லாவிடினும், கண்களாலும் சிரிப்பாலுமே மற்றவரகளை தன் மீது ஈர்க்கும் தோற்றம். நிறைய நண்பர்கள்.
அவனது தோழர்கள் அவன் வீட்டுக்கு வந்திருந்து ராப்பகலாக இருப்பது ரொம்ப சகஜம். அவனது அம்மா அப்பாவையும் அவர்கள், அம்மா அப்பா என்றே கூப்பிடுவார்கள். சில் பேர் சமையலறைக்கே சென்று "அம்மா ஒரு காஃபி கிடைக்குமா" என்று கேட்கும் அளவுக்கு அவ்வளவு நெருக்கம். பெண்களிடம் கடலை போடாவிட்டாலும், ஹாய் ஹலோ என்று ஒரு புன்னகைப்புடன் இருப்பவன். இதனாலேயே பெண்களுக்கு இவன் மேல் ஒரு தனி மரியாதை. அழகான பெண்களை தவறாது சைட்டும் அடிப்பவன். எப்போதுமே கண்களை நோக்கிப் பேசுபவன்.
அம்மா எழுப்பியதும் போர்வையை இழுத்து மூடிக்கொள்ளாமல், உடனே எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாரானான். குளித்து முடித்து அம்மா அப்பாவிடம் ஆசீர்வதம் வாங்கிக் கொண்டு கல்லூரிக்குப் புறப்படலானான். தாம்பரத்தில் ரயிலேறியதுமே, நண்பர்கள் Happy Birth Day வாழ்த்து சொன்னார்கள். எல்லோரது வாழ்த்துக்களையும் ஒரு புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டான்.
சில நண்பர்கள், "என்ன மாப்ளே, காலேஜ் லைஃப்ல இது தான் உன் கடைசி பொறந்த நாளு. பார்ட்டி ஏதும் கிடையாதா?"
"இல்லைடா மச்சான். பிறந்த நாளெல்லாம் எனக்கு அப்படி ஒண்ணும் பெரிய நாளு கிடையாது. "
இன்னொருவன், "இவன்கிட்ட என்னடா கேட்கறது. சாயங்காலம் இவன் வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்டால் ஒரு சூப்பர் treat கொடுக்கப் போறாங்க"
கல்லூரி முடித்து சுரேஷ் வீடு திரும்புவதற்கு முன்னரே சில நண்பர்கள் இவன் வீட்டுக்கு வந்திருந்தனர். அதில் இவனது உற்ற நண்பன் வினோத்தும் இருந்தான். எல்லோரும் இவர்களை அண்ணா தம்பி என்றே நினைத்திருந்தனர். அவ்வளவு அந்நியோன்யம்.
"என்னம்மா நான் வருவதற்கு முன்னாலேயே இந்த தடியனுங்க கிளாஸ் கட் அடிச்சுட்டு இங்க வந்துட்டாங்களா"
"ஆமாண்டா. இது தானே உன் காலேஜ் லைஃப்'ல கடைசி பிறந்த நாள். அடுத்த வருஷம் யார் யார் எங்கெங்கே இருக்கப் போறீங்களோ. அதான் எல்லாரையும் இங்கேயே இருந்து சாப்பிட்டுப் போகச் சொல்லிட்டேன். அப்பாவுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன். அவரும் உங்க கூட இன்ன்னிக்கு டின்னர் சாப்பிடறதுக்கு வந்துடறதா சொல்லிருக்கார்"
"ரொம்ப thanks மா"
"சீ போடா. எல்லாரும் நம்ம வீட்டு பசங்க தானே. ஒரு நாள் இவங்க எல்லாருக்கும் சமைச்சுப் போட்டா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன். ஆங், சொல்ல மறந்துட்டேனே. நீ இன்னிக்கு மொபைல் கொண்டு போகலியா. விடாம ஒரே வாழ்த்து மெஸேஜா வந்து குவிஞ்சிருக்கு. எடுத்துப் பாரு"
"நான் பாத்துக்கறேன் மா"
"எல்லாரும் சாப்பிட வாங்கபா. Buffet மாதிரி தான். யார் யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துப் போட்டு சாப்பிடுங்க. சுரேஷ் கொஞ்சம் உள்ளே வாயேன்."
சுரேஷ் உள்ளே சென்றவுடன், அம்மா தாழ்ந்த குறலில், "சுரேஷ் உனக்கு இந்த greeting card'உம் வந்திருக்கு. அதுவும் courier'ல"
"கார்டா? யாரு courier பண்ணியிருக்காங்க?"
பிரித்துப் படிக்க ஆரம்பித்த சுரேஷ் அப்படியே உரைந்து போனான். முகம் வியர்த்து விருவிருக்க ஆரம்பித்து விட்டது. கைகள் நடுநடுங்க வாய்கள் டைப் ரைடர் அடித்தது. அப்போது வினோதும் உள்ளே நுழைய, அம்மா சுரேஷிடம் கண்டிப்போடு கேட்டாள், "யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத்தனை நாள் இது நடக்குது"
தொடரும்....

12 comments:
விஜய் நல்லா படம் எல்லாம் போட்டு, கதை அமர்க்கள்மா தொடங்கிருக்கீங்க :))
உங்க கதையோட Character எல்லாம் ரொம்ப எதார்த்தமாவே converse பண்ராங்க..நல்லா போகுது..விரைவில் அடுத்த பாகத்தை போட்டிருங்க ..Eagerly Waiting !!
ஒரு சின்ன Suggestion..கதையின் பெயர் வேற மாத்த போரீங்களா இல்ல இதே தானா..வேற பெயர் வெச்சா எப்படி இருக்கும் ? - It is Just my Opinion :)
விஜய்,
great start ...
விஜய்!!!Join the gang!!! வாங்க…வாங்க…சூப்பர் காலேஜ் கதை…waiting for next part…எப்போ? ஆமா கதை பேரு என்னங்க Sir? பேரு வெக்க மறந்துட்டீங்களா? ;))
//அம்மா எழுப்பியதும் போர்வையை இழுத்து மூடிக்கொள்ளாமல், உடனே எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாரானான். //
இந்த காலத்துல இப்டி ஒரு பய்யனா? நம்ப முடியலயே….நான் இன்னுக்கு குளிச்சப்ப்புறமும் பத்து நிமிஷம் தூங்கிட்டு தான் கிளம்ப ஆரமிப்ச்சேன் :))
//"யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத்தனை நாள் இது நடக்குது"//
அப்டி போடுங்க!!!
அசத்தலான தொடக்கம் விஜய்:))
சுயபுராணமே சூப்பரா எழுதுவீங்க......கதை எழுதுவது பற்றி சொல்லவா வேணும், சும்மா தூள் கிளப்புங்க!!!
அடுத்த பகுதி எப்போ??
வெயிட்டீங்ஸ்:((
\\பெண்களிடம் கடலை போடாவிட்டாலும், ஹாய் ஹலோ என்று ஒரு புன்னகைப்புடன் இருப்பவன். இதனாலேயே பெண்களுக்கு இவன் மேல் ஒரு தனி மரியாதை. அழகான பெண்களை தவறாது சைட்டும் அடிப்பவன். எப்போதுமே கண்களை நோக்கிப் பேசுபவன்.\\
பேஷ் ...பேஷ்....இப்படி..இப்படிதான் இருக்கனும்:))
சமத்துப் பையன்!!
\\"யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத்தனை நாள் இது நடக்குது"\\
அதானே, அம்மா கிட்ட கூட சொல்லாம....??
பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலை ஏற்படுத்திட்டு ....தொடரும்னு போட்டுட்டீங்களே விஜய்,
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.
ரம்யா சொன்னா மாதிரி.....கதைக்குன்னு ஏதும் டைட்டில் இல்லீங்களா??
இந்த டைட்டில் ......நல்லாதான் இருக்கு,
ஆனா.......பக்கத்து வீட்டு பாட்டி திண்ணையில உக்காந்துட்டு, போற வர்ர பொடி பசங்களை கூப்பிட்டு "கதை கேளு, கதை கேளு' ன்னு சொல்ற ஒரு எஃப்க்ட் இருக்கிறாப்ல தோணுது:))))
just kidding Vijay.
\\வேற பெயர் வெச்சா எப்படி இருக்கும் ? - It is Just my Opinion :)\\
mine too:))
Sorry for the lates response. For a change had too much of work.
தலைப்பு இல்லை என்று உரிமையுடன் குட்டிய ரம்யா, திவ்யா, திவ்யாப்ரியா மற்றும் இன்னும் குட்டப்போகிறவர்களுக்கும்,
அது என்னமோ தெரியலை, பெயர் வைத்து கதை எழுதப் பிடிக்கலை. அடுத்த வீட்டுல நடக்கும் விஷயத்தை நான் ஒரு கதையாகச் சொன்னால் எப்படி இருக்கும் என்ற முயற்சியில் கதை எழுத ஆரம்பித்தேன். அடுத்த கதைக்கு பெயர் வைத்துவிட்டுத்தான் கதையையே எழுதத்தொடங்குவேன்.
\\ Ramya Ramani said...
விஜய் நல்லா படம் எல்லாம் போட்டு, கதை அமர்க்கள்மா தொடங்கிருக்கீங்க :))
..... உங்க கதையோட Character எல்லாம் ரொம்ப எதார்த்தமாவே converse பண்ராங்க..\\
ரொம்ப நன்றி அம்மணி!!
இது ப்ளஸ் பாயின்டா மைனஸ் பாயின்டா தெரியலை. எனக்கு exaggerate பண்ணி எழுதத் தெரியாது.
\\ முகுந்தன் said...
விஜய்,
great start ...\\
Thanks dude
\\ Divyapriya said...
இந்த காலத்துல இப்டி ஒரு பய்யனா? நம்ப முடியலயே….\\
Thanks for the wishes
இந்தப் பையன் கொஞ்சம் சமத்து
\\Divya said...
அசத்தலான தொடக்கம் விஜய்:))\\
Thanks a lot.
\\Divya said...
அடுத்த பகுதி எப்போ??
வெயிட்டீங்ஸ்:(( \\
வெகு சீக்கிரம் :)
\\Divya said...
சுயபுராணமே சூப்பரா எழுதுவீங்க......\\
நீங்க தான் சொல்லணும் :)
Thanks a lot :)
உங்க கற்பனை குதிரை நல்லாவே ஒடியிருக்குங்க. அடுத்த பாகம் எப்போ எப்போ?
\\தாரணி பிரியா said...
உங்க கற்பனை குதிரை நல்லாவே ஒடியிருக்குங்க. அடுத்த பாகம் எப்போ எப்போ?\\
தாரணி பிரியா
ரொம்ப நன்றிங்க!!
வெகு சீக்கிரத்தில் அடுத்த பாகம்
Post a Comment