சென்ற வாரம், கோலிவுட்டில் இதற்கு முன் நடத்தியிறாத ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. தசாவதாரம் ஆடியோ ரிலீஸ். ஒலிநாடா வெளியான மறு நாளே, இணையதளத்திலிருந்து டவுண்லோட் செய்துவிட்டேன் என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எப்படித்தான், இப்படி ஆடம்பர கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ? "நாட்டுக்காக நிறைய உழைத்தாகி விட்டது. மீதி நாட்களை இம்மாதிரியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் தான் செலவிடப் போகிறேன்" என்று அவர் நினைத்திருந்தால், ஆட்சி பொறுப்பை மற்றவரிடம் (அதான் வாரிசு ரெடியா இருக்காரே) ஒப்படைத்துவிட்டு, இவர் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியது தானே?
ஒரு ஒலிநாடா வெளியிடும் விழாவிற்கு இவ்வளவு விளம்பரமா? அவ்வளவு பணமா ஒரு தனிமனிதனிடம்? இதை எவ்வளவோ நல்வழியில் செலவழித்திருக்கலாமே. "இவ்வளவு ஆடம்பரமாக நடத்தும் ஒரு விழாவிற்கு நான் தலைமை ஏற்பது எனக்குப் பிடிக்கவில்லை" என்று முதல்வர் ஒரு போடு போட்டிருக்கலாமே. ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள் போலிருக்கு. கமல்ஹாசனும் ஆஸ்கர்.ரவிசந்திரனும் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ள ஒரு நல்ல அரங்கம்.
அதிலும் மல்லிகா ஷெராவத் வந்திருந்த லட்சணம், ஐயோ! இப்படி ஒரு ஆடையா அணிந்து வரவேண்டும். கவர்ச்சியை மீறி ஆபாசமே மிஞ்சியிருந்தது. மல்லிகா அணிந்திருந்த உடையைவிட, சிவாஜி பட விழாவிற்கு வந்திருந்த ஷ்ரியா, எவ்வளவோ கண்ணியமான உடை அணிந்துவந்திருந்தார். அதற்கே கழகக்கண்மணிகள் சட்டசபையில் கூச்சலிட்டார்கள். இதெல்லாம், அவர்கள் கண்களில் படவில்லையா இல்லை, உறுத்தவில்லையா?
இவ்வளவு பணம் விரயம் செய்து, படம் மட்டும் ஊத்திக்கொண்டதென்றால், தயாரிப்பளர் 'அம்பேல்' என்பது மட்டும் உறுதி.
1 comment:
கருனாநிதியால் வட தமிழ்நாடு தாண்டி அதிகமாக செல்ல முடியாத நிலையில் இப்படி கூத்தாடிகளின் திருவிழாவில் கலந்துகொண்டு தன் இருப்பை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஸ்ரேயா கால்மேல் கால் போட்டதால்தான் சலசலப்பு, ஆடையால் அல்ல என்று படித்த நினைவு.
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
Post a Comment