Pages

July 20, 2009

வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை

ரொம்ப நாள் கழித்து இரண்டு நல்ல சினிமாக்கள் பார்க்க நேர்ந்தது. இரண்டுமே சமீபத்திய ரிலீஸ் தான். இரண்டுமே, அமெரிக்காவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். ஒன்று ஹிந்தி படமான நியூ யார்க்.

9/11’க்கு பிறகு அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பதை நியூ யார்க் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். FBI'இனால் தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவன், தீவிரவாதியாகிறான். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது என்று அதே FBI அதிகாரி கூறுவது உண்மையென்றாலும், ஒரு பாதிக்கப்பட்டவன் அப்படி நினைப்பானா என்று தெரியவில்லை.

சந்தேகத்தின் பேரில் எவ்வளவு பேரை சிறையில் பிடித்தடைத்து, விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து, பிறகு சாட்சிகள் இல்லாததன் பேரில் விடுதலை செய்வதைப் பார்த்தபிறகு, அமெரிக்கா மீதான மதிப்பு போய் வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

9/11’க்கு பிறகு 1200 பேரை அமெரிக்க அரசும் உளவுத்துறையும் கைது செய்து அவர்களை காண்டனமோ பே என்ற சிறைச்சாலையில் அடைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று படம் முடிந்தவுடன் குறுன்ஞ்செய்தி போடும் போது, அமெரிக்கா மீதான மதிப்பு போய், வெறுப்பு தான் மிஞ்சுகிறது. சுதந்திரம் சுதந்திரம் என்று கூறிக்கொள்வதெல்லாம், வெள்ளைத் தொல் கொண்டவர்களுக்குத் தான் போலிருக்கு.

தீவிரவாதியாக இருப்பானோ என்று சந்தேகப்படுபவனையே சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இங்கே, நம் நாட்டில் என்னடான்னா, தீவிரவாதி என்று 100% தெரிந்திருந்தும், தீவிரவாதச் செயல் புரியும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டும், அவனுக்கு அரசு செலவில் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டு, இவன் புரிந்தது, தீவிரவாதச் செய்ல தானா என்று ஆலோசிக்கும் இந்திய அரசாங்கம் எங்கே?

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடம், FBI அதிகாரியாக வரும் இர்ஃபான் பேசும் ஒரு வசனம். “ஒரு தீவிரவாதி உருவாவதற்கு நாம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது. ஒரு தனி மனித கோபம் என்பதை ஒரு நாட்டிற்கெதிராகத் திருப்புவதை யாராலும் எப்போதும் ஒத்துக் கொள்ள முடியாது”. உண்மையான வார்த்தைகள். இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு மஹாத்மா காந்தி மீதான மரியாதை அதிகரித்திருக்கிறது.

ஓர் அரசாங்கத்திற்கெதிராக அவர் நடத்திய போராட்டம், அந்த அரசாங்கத்தை ஒழிப்பதற்காக அல்ல. அவர்களை மாற்றி, அவர்களும் வாழ்ந்து நாமும் நமது உரிமைகளோடு வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட Inclusive Agitation. அவர்கள் இருந்தால் நம்மால் நமது உரிமைகளைப் பெற முடியாது. அவர்களை ஒழித்துக் கட்டினாலொழிய நம் உரிமைகள் நமக்குக் கிடைக்காது என்று கிளர்ச்சி கொண்ட Exclusive Agitation ’ஆக அது இருந்திருக்கவில்லை. அவரும் ஆயுதத்தை கையிலேந்தியிருந்தால் அவருக்கும் தீவிரவாதி என்ற பட்டமே கிடைத்திருக்குமோ என்னவோ? என்னைப் பொறுத்த வரை வீரத்திற்கு ஒரு புதிய அர்த்தம் கொடுத்தார் என்று தான் தோன்றியது. வீரம் சக மனிதனின் மனதை வெல்வதற்கே, கொல்வதற்கு அல்ல என்பது தான். I think, that is why Mr. Mohandas Karamchand Gandhi has outgrown all others in stature.

என்னை பாதித்த இன்னொரு படம், "Crossing Over" என்ற ஆங்கிலப் படம். இதுவும் அமெரிக்காவை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட படம். சட்டத்தை மீறி பிழைப்புக்காக அமெரிக்காவில் குடிபெயர்ந்த மக்களை எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப்படியென்ன தான் இருக்கிறது, அமெரிக்காவில் ? வேலை வாய்ப்பா, சுதந்திரமா, பணமா, அல்லது அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமிதமா? தெரியவில்லை. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு, அமெரிக்கா பற்றி, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

23 comments:

kanagu said...

vaanga anna... welcome back.. :) romba naal aachu...
nalla post na... 'newyork' padam naan innum paakala.. paakanum... :) america mela enaku epavume periya madhipu irundhadu illa.. they are a country of hypocrites.. :(

kanagu said...

me the first eh.. :)

RAMYA said...

நீங்க கூறி இருக்கும் படம் நான் இன்னும் பார்க்கலை
கண்டிப்பா பாக்கனும்னு இப்போ தோனுது.

நன்றி பகிர்வுக்கு.

ஆமா என்னாச்சு உங்க நகைச்சுவை பதிவு? ஒன்னும் போடலையா?

நட்புடன் ஜமால் said...

நெம்ப நாள் ஆச்சி ...


உண்மை

வெல்லத்தான் வீரம் ...

நம்மை வெல்வதே தீரம்.

நட்புடன் ஜமால் said...

தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவன், தீவிரவாதியாகிறான். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது என்று அதே FBI அதிகாரி கூறுவது உண்மையென்றாலும், ஒரு பாதிக்கப்பட்டவன் அப்படி நினைப்பானா என்று தெரியவில்லை]]



ரொம்ப யோசிக்க வைத்து விட்டது

Divyapriya said...

இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா நீங்க இப்படி எல்லாம் பதிவு எழுதனும்? ;)
newyork படம் உடனே பாத்துட வேண்டியது தான்...

மேவி... said...

உண்மையில் நான் சிறு வயதில் அமெரிக்கா மீது மோகம் கொண்டு இருக்கிறேன். ஆனால் பல விஷயம் கேள்விப்பட்ட பின் எனக்கும் அந்த மோகம் போய்விட்டது. ஒரு புத்தகத்தில் அமெரிக்கா தன்னை முதன்மை படுத்தி கொள்ள எடுத்த முயற்சிகளை படித்த பின் இன்னும் அந்த நாட்டை வெறுத்தேன்.


அமெரிக்காவில் மட்டும் அல்ல ... இந்தியவில் கூட நிறைய அந்நியாயம் நடக்குது.

மேவி... said...

"ஒரு தீவிரவாதி உருவாவதற்கு நாம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது. ஒரு தனி மனித கோபம் என்பதை ஒரு நாட்டிற்கெதிராகத் திருப்புவதை யாராலும் எப்போதும் ஒத்துக் கொள்ள முடியாது”.


சரியான வார்த்தைகள். ஆனால் அந்த தனி மனித செயல்களுக்கு இவர்கள் தானே முல காரணம்.....

அதே மாதிரி இவர்களின் செயல்களை நியாய படுத்த முடியாது.....அப்படி நியாய படுத்த முடியாத செயல்களை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்......

மேவி... said...

இன்னொரு விஷயம் .... ரவுடி ன்னு உருவகியச்சு. இமேஜ் maintain பண்ணனும் ல

மேவி... said...

கொல்வதற்கு கோழைத்தனம் தான் வேண்டுமே தவிர .... வீரம் வேண்டாம்.

மேவி... said...

ரொம்ப கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க .... அருமை

அந்த படத்தை முடிந்தால் பார்க்கிறேன்

மேவி... said...

"Divyapriya said...
இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா நீங்க இப்படி எல்லாம் பதிவு எழுதனும்? ;)
newyork படம் உடனே பாத்துட வேண்டியது தான்..."


நீங்க அமெரிக்காவில் இருக்கீங்க .....


நான் broadway இருக்கிறேன் .... அனா இந்த broadway சென்னையில் இருக்கிறது

Karthik said...

வெல்கம் பேக் விஜய்! :)

Karthik said...

again 13? avv!

முகுந்தன் said...

//தீவிரவாதியாக இருப்பானோ என்று சந்தேகப்படுபவனையே சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இங்கே, நம் நாட்டில் என்னடான்னா, தீவிரவாதி என்று 100% தெரிந்திருந்தும், தீவிரவாதச் செயல் புரியும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டும், அவனுக்கு அரசு செலவில் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டு, இவன் புரிந்தது, தீவிரவாதச் செய்ல தானா என்று ஆலோசிக்கும் இந்திய அரசாங்கம் எங்கே?
//

என்ன கொடுமை விஜய் இது ?

முகுந்தன் said...

//எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப்படியென்ன தான் இருக்கிறது, அமெரிக்காவில் ? வேலை வாய்ப்பா, சுதந்திரமா, பணமா, அல்லது அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமிதமா? தெரியவில்லை. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு, அமெரிக்கா பற்றி, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
//


சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா?

Vijay said...

\\ kanagu said...
vaanga anna... welcome back.. :) romba naal aachu...
nalla post na... 'newyork' padam naan innum paakala.. paakanum... :) america mela enaku epavume periya madhipu irundhadu illa.. they are a country of hypocrites.. :(\\
அமெரிக்கா எப்பவுமே சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்து வருகிறது. இப்போது கூட அணு சக்தி ஒப்பந்தத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் குள்ளநரித்தனமாகத் தான் இருக்கிறது :-(

\\ RAMYA said...
ஆமா என்னாச்சு உங்க நகைச்சுவை பதிவு? ஒன்னும் போடலையா?\\
சொல்லிட்டீங்கள்ல, சீக்கிரமா ஒண்ணு எழுதிருவோம் :-)

\\ நட்புடன் ஜமால் said...
தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவன், தீவிரவாதியாகிறான். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது என்று அதே FBI அதிகாரி கூறுவது உண்மையென்றாலும், ஒரு பாதிக்கப்பட்டவன் அப்படி நினைப்பானா என்று தெரியவில்லை]]

ரொம்ப யோசிக்க வைத்து விட்டது\\

ஆஹா நம்ப பதிவும் யோசிக்க வைக்குதா ?? :-)

\\ Divyapriya said...
இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா நீங்க இப்படி எல்லாம் பதிவு எழுதனும்? ;)
newyork படம் உடனே பாத்துட வேண்டியது தான்...\\

ஹாஹா. அமெரிக்கா நல்ல நாடு தான். எஞ்சாய் மாடி. 6 வருடங்களுக்கு முன் அமெரிக்கா போன போது, விட்டு வர மனமே இல்லை. :-)

\\MayVee said...
அமெரிக்காவில் மட்டும் அல்ல ... இந்தியவில் கூட நிறைய அந்நியாயம் நடக்குது.\\
ஆமாம். உண்மை தான். இங்கும் எங்கேயாவது குண்டு வெடித்தால், சில மக்களை சந்தேகம் என்ற பெயரில் கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள் :(

\\ MayVee said...
ரொம்ப கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க .... அருமை

அந்த படத்தை முடிந்தால் பார்க்கிறேன்\\

ஆமாம் விசு. ரொம்ப நாளாச்சு. எவ்வளவு நாள் சுயபுராணம் எழுதியே மொக்கை போடுறது?? :-)

\\ Karthik said...
வெல்கம் பேக் விஜய்! :)\\
நன்றி கார்த்திக் :-)

\\ முகுந்தன் said...
//எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப்படியென்ன தான் இருக்கிறது, அமெரிக்காவில் ? வேலை வாய்ப்பா, சுதந்திரமா, பணமா, அல்லது அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமிதமா? தெரியவில்லை. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு, அமெரிக்கா பற்றி, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
//


சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா? \\
Believe it or not. அமெரிக்கா போயிருந்த போது நானும் என் நண்பனும் இந்தப் பாட்டை உரக்கப் பாடிக்கொண்டே ரோட்டில் நடந்து போவோம் :-)

மேவி... said...

"Karthik said...
வெல்கம் பேக் விஜய்! :)"


me welcome front....

YUVA said...

i had been seeing your blog for sometime. Your views are not biased. and your thinking is also straight. Good.

Vijay said...

\\YUVA said...
i had been seeing your blog for sometime. Your views are not biased. and your thinking is also straight. Good.\\
நன்றி யுவா. அடிக்கடி வாங்க :-)

Husain said...

Hi Vijay, good post...This Americans thought all muslims were terriost. I also got suffered. They wanted to do background check for me to give Visa since my name sounds like terriost name. Thye took some 3 months to give work visa.

Karthik said...

hi vijay..

plz receive this 'interesting blogger award'. :)

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.html

Karthik said...

hi vijay..

plz receive this 'interesting blogger award'. :)

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.html