கடந்த இரு வாரங்களும் மிக நீளமான வார விடுமுறைகள். தேர்தல், ஆஃபீஸ் மாற்றம் என்று சென்ற வாரத்துக்கு முந்தைய வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஆஃபீஸ் இருந்தது. நான்கு நாட்கள் விடுமுறையை அனுபவித்து விட்டு, மனமே இல்லாமல் திங்களன்று ஆஃபீஸ் போனால், மீண்டும் நாலே நாட்களில் மீண்டும் ஒரு விடுமுறை. உழைப்பாளர் தினமாம். அன்று ஒரு நாளாவது உருப்படியா வேலையைப் பாருங்கடா என்று சொல்லியிருக்கலாம். ஆனால், உழைப்பாளர்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் விடுமுறை விட்டுவிட்டார்கள். போன மாதம் தான் கோவா போய் நிறைய செலவழித்து விட்டதால், காயத்ரியே எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
ஊரில் என்ன தான் நடக்கிறது என்று பார்த்ததில் கிரேஸி மோஹனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்துக்கான விளம்பரம் ஹிண்டுவில் தென்பட்டது. நல்ல வேளை டைம்ஸ் ஆஃப் இந்தியா வாங்கியிருந்தால் அதுவும் தெரிந்திருக்காது. ரொம்ப நாளாகவே நாடகம் பார்க்க வேண்டும் என்று ஆசை. இப்போது தான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. நான் கிரேஸி மோகனின் பரம விசிறி நான். சிறு வயதிலேயே, அவருடைய சில நாடக காஸெட்டுகளை வாங்கி, டேப் கிழியும் வரை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டதுண்டு. நிஜமாகவே மாது மிரண்டால் நாடக டேப் கிழிந்தே போய் விட்டது. ஏன் கமல்ஹாசனின் காமெடிப் படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோஹன் வசனங்களே காரணம் என்று சொல்லலாம்.
டிக்கட் வாங்க போன் செய்தால் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள். பெங்களூர் பசவங்குடியிலுள்ள ஒரு சபாவில் நாடகம். நான்கு மணி காட்சிக்கு 3.30 மணிக்கெல்லாம் போயாகிட்டது. கார் பார்க்கிங் செய்யக்கூட இடமில்லை. ரோட்டில் தான் பார்க் செய்தேன். அவ்வளவு கூட்டம். 15 வருடங்கள் கழித்து இப்போது தான் பெங்களூரில் நாடகம் போடுகிறாரார்களாம். அரங்கம் நிறைந்திருந்தது. இவ்வளவு தமிழ் மக்களை ஒரு இடத்தில் பார்க்க ரொம்பவே சந்தோஷமாயிருந்தது. சென்னை திருவல்லிக்கேணியே நாடகத்துக்கு வந்திருந்தது போலிருந்தது.
போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.
நாடகம் என்றால் பள்ளிக்கூட ஆண்டு விழாவில் போட்ட நாடகங்கள் தான் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு காட்சி மாறும் போதும், திரையைப் போட்டு, செட்டை மாற்றிப் போடுவதற்குள், போன காட்சியில் என்ன நடந்தது என்று நாடகம் போடும் எங்களுக்கே மறந்து போகும் அளவிற்கு நாடகம் போடுவோம். பார்வையாளர்கள் பொறூமையிழந்து போய்விடுவார்கள். இது எப்படியிருக்கப் போகிறதோ, மேடையில் இருப்பவர்கள் தெரிவார்களா மாட்டார்களா என்று பலதரப்பட்ட உதறல்கள்.
ஆனால் ராக்கெட் பறப்பது போல் எடுத்தவுடனேயே காமெடியில் கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார் மாது பாலாஜி. ஒரு ஜோக்குக்கு சிரித்து முடிப்பதற்குள் அடுத்து சில ஜோக்குகள் வந்து போய்விடும். ஒரு கட்டத்தில் என்னால் சிரிக்கவே முடியவில்லை. வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. இதற்கும் முதல் 15 நிமிடங்களுக்கு கிரேஸி மோஹன் எந்தக் காட்சியிலும் தோன்றவில்லை. அவர் வந்ததும் இன்னமும் களைகட்டிவிட்டது. எல்லாமே டைமிங் ஜோக்குகள் தான். வாழ்க்கையில் ரொம்பவே விரக்தி அடைந்திருக்கும் ஒருவனுக்கு கிருஷ்ணரே நேரில் வந்து அவன்
பிரச்னைகளைத் தீர்த்து, கடவுளை மட்டுமே நம்பாதே, உன்னையும் நம்பு என்பது தான் நாடகத்தின் கரு. இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. சில மாயாஜால மேஜிக் வித்தைகளெல்லாம் வேற காட்டி அசத்திவிட்டார்கள். நடிகர் ரமேஷ் அரவிந்த் சிறப்பு விருந்தினர்.
எல்லாம் சரி தான், ஆனால் எதற்காக இன்னும் அந்தக் காலத்து ஸ்டைலிலே மேடையில் நான்கு மைக் வைத்து, அதற்கு முன் நின்று கொண்டு இன்னும் வசனம் பேசுகிறார்களோ? தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டதே, ஒரு வயர்லெஸ் காலர் மைக் வைத்துக் கொண்டு பேசப்படாதா? அதை மட்டும் கொஞ்சம் மாத்துங்க மோஹன் சார். மீண்டும் கிரேஸி மோஹன் எப்போது அடுத்த நாடகம் போடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த ஞாயிறன்று ஸ்ரீ ராமநவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஸ்ரீ ராம் சேவா மண்டலி ஏற்பாடு செய்திருந்த சுதா ரகுனாதன் கச்சேரி. இரண்டு வாரங்களாகவே நிதமும் கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கின்றன. எனக்குத் தான் தெரிந்திருக்கவில்லை. மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கச்சேரியெல்லாம் கூட இருந்திக்கிறது. ரொம்பவே வருத்தப்பட்டேன்.
கச்சேரிக்கும் நல்ல கூட்டம். பெரும் பாலும் எல்லாம் ரிடையர்ட் கேஸ்கள் தான். கர்நாடக முன்னாள் முதல்வர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவும் வந்திருந்தார். கர்நாடகத்தில் தேர்தல் முடிந்துவிட்டது, மஹாராஷ்டிர ஆளுனர் பதவியிலிருந்தும் கல்தா கொடுத்தாகிவிட்டது, வீட்டிலிருந்து பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தவரை, விழாவுக்குத் தலைமை தாங்கக் கூட்டி வந்திருப்பார்கள் போல. ஆனால், என்ன ஆச்சர்யம், ஒரு முன்னாள் முதல்வருக்கு எந்த வித பாதுகாப்பும் இருந்த மாதிரி தெரியவில்லை. மருந்துக்கு கூட ஒரு போலீஸையும் காணவில்லை.
ஆனாலும் ஐயாவுக்கு தெனாவட்டு ஜாஸ்தி தான். பின்ன காங்கிரஸில் இருந்து கொண்டு, ராமநவமி கொண்டாட்டங்களுக்கு வந்திருக்காரே, சோனியா காந்தியிடம் அனுமதி வாங்கினாரா என்று தெரியவில்லை!! தேர்தலோ முடிந்துவிட்டது என்று எண்ணியிருப்பார் போல.
முதலில் ஒரு ஏழெட்டுப் பேர் கன்னடத்தில் மாத்தாடினார்கள். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு தான் கச்சேரி ஆரம்பமானது. கச்சேரியின் ஹைலெட்டே எங்களுக்கு இரு வரிசைகள் முன்
அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தான். 35 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதுப் பெண்மணி. யப்பா என்னமா தலையை ஆட்டி, தாளம் போட்டு ரசிக்கிறார். அவர் காட்டிய சேஷ்டைகளில் நிறைய பேர் அவரையே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் வீட்டில் மூவோ, ஜண்டு பாமோ இருந்தால் நல்லது. இவ்வளவு ஆட்டியும் அவருக்கு கழுத்து வலி வரவில்லையென்றால், அது பெரிய சாதனை தான். வாயும் அசைந்ததைப் பார்த்தால், அவரும் கூடவே பாடுகிறார் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது, அம்மணி வெறும் தாளமும் தலையை
மட்டும் தான் ஆட்டுகிறார் என்று. ஏதோ அவர் வாயசைக்க சுதாரகுநாதன் பிளேபேக் பாடுவது போல் இருந்தது.
சுமார் மூன்று மணிநேரக் கச்சேரி. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வேறொரு உலகில் சஞ்சாரிக்கும் சுகானுபவம். வயலின் திரு.ரகு, மிருதங்கம் திரு.சதீஷ், மோர்சிங் திரு. ராமன் என்று ஆளாளுக்கு விருந்து படைத்தார்கள்.
பாட்டெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாடுவதற்கு முன், இது இன்ன ராகம், இன்ன தாளம், இவர் இயற்றிருக்கிறார் என்று ஓரிரு வார்த்தைகள் அறிமுகம் கொடுத்தால் என்னைப் போலுள்ள அரைவேக்காடுகள் முக்காவேக்காடுகளாகும் வாய்ப்புண்டு. ஏன் சொல்கிறேனென்றால், பாடகர் ஆலாபனை செய்யும் போது, இது கல்யாணியா காம்போதியா என்று தெரியாது. அட்டானா போலிருக்கும், ஆனந்த பைரவியும் எட்டிப் பார்க்கும். இப்படிப் பார்வையாளர்கள் குழம்பாமலிருக்க பாடல் பற்றிய ஒரு அறிமுகம் அவசியம் என்பது அடியேனின் தாழ்ந்த விண்ணப்பம். கச்சேரி முடிய இரவு 10.30 ஆகிவிட்டது.
இரண்டு வாரங்களில் இசையும் நாடகமும் பார்த்தாச்சு. இந்த இயல் மட்டும் தான் பாக்கி. அப்பாடா, தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வழியா கொண்டு வந்தாச்சு. இந்த வார வெள்ளிக்கிழமை நித்யஸ்ரீ கச்சேரி இருக்கிறதாம். ஆஃபீஸுக்கு அரை நாள் விடுப்பு விடசொல்லியிருக்கிறாள் காயத்ரி. பார்ப்போம் என்றிருக்கிறேன். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.

22 comments:
கலக்குங்க பாஸ். சந்தோஷமா இருந்தா சரி:)
மெயிலுக்கு ரிப்ளை பண்ணவும் :)
me the first ன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் :(
//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.//
:-)) அழகான விமர்சனம்!!
Crazy naavae kalakkal than ippokuda en mp3 player la minimum oru crazy play irukkum...whenever i feel low I will listen to it....
appuram anna naanum dramakaaran endra murayil solren - wireless mics la neraya risk - onnu collar mic irukkanum illati wireless mics stand la vaikanum - kaila vechikittu pesaa mudiyathu becas kai is important for acting... appuram collar mic at times nadakumpothu keela vizhumpothunu , collar mic kalandu villa chances irukku...so old modelnaalum intha wire mics thaan best - but Chennai la sivakaami pethachi mathiri auditorium la - they have fixed mics on the wall - athu avlo effectiveaa irukkathu...
here in Singapore i saw few halls which have some sort of audio arrangement which reproduces even a whisper from the stage actor very loudly through the speakers...
மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே...
//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.//
இந்நேரம் அவங்க இதை படிச்சிருக்க மாட்டாங்களா...?
enakum crazy mohan avargaloduya nadagam migavum pidikkum :)
irundhalum live aaga parthathu kidayathu.. ticket vela romba jaasthi :(
apram.. enakkum karnataga sangeethathukkum romba thoram... enaku rasikka theriyathu :(
last line ah unga wife padichangala??? ;)
\\வித்யா said...
கலக்குங்க பாஸ். சந்தோஷமா இருந்தா சரி:) \\
நன்றி வித்யா!!!
\\Divyapriya said...
me the first ன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் :(\\
ஒவ்வொரு கமெண்டுக்கும் எனக்கு ஒரு மெயில் வந்துடும். உங்க கமெண்டு தான் பெயிலில் மேலோட்டமா இருந்தது. அதைத் தான் முதலில் படித்தேன் :-) So logically you are still the first ;-)
\\இனியவள் புனிதா said...
//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.//
:-)) அழகான விமர்சனம்!!\\
நன்றி புனிதா :-)
\\Lancelot said...
Crazy naavae kalakkal than ippokuda en mp3 player la minimum oru crazy play irukkum...whenever i feel low I will listen to it....
appuram anna naanum dramakaaran endra murayil solren - wireless mics la neraya risk - onnu collar mic irukkanum illati wireless mics stand la vaikanum - kaila vechikittu pesaa mudiyathu becas kai is important for acting... appuram collar mic at times nadakumpothu keela vizhumpothunu , collar mic kalandu villa chances irukku...so old modelnaalum intha wire mics thaan best - but Chennai la sivakaami pethachi mathiri auditorium la - they have fixed mics on the wall - athu avlo effectiveaa irukkathu...\\
ஓ. என்னுடைய அறியாமையைப் போக்கியதற்கு ரொம்ப நன்றி லான்ஸ் :-)
உங்க நாடகம் ஏதாவது இணையத்தில் பார்க்க முடியுமா? ஆர்வமாயிருக்கிறேன் :-)
\\ புதியவன் said...
இந்நேரம் அவங்க இதை படிச்சிருக்க மாட்டாங்களா...?\\
அவளுக்குப் படித்துக் காட்டிய பிறகு தான் இந்தப்பத்தியைச் சேர்த்தேன் :-)
\\ kanagu said...
apram.. enakkum karnataga sangeethathukkum romba thoram... enaku rasikka theriyathu :( \\
அது அப்படியொண்ணும் கம்ப சூத்திரம் இல்லை. அதைப் பற்றித் தெரிந்திருந்தால் தான் ரசிக்க முடியும் என்றில்லை.
\\last line ah unga wife padichangala??? ;)\\
புதியவனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும் :-)
கிரேஸி மோகன் நாடகம் வயிற்று வலி வராட்டிதான் ஆச்சரியம். ராகம் , தாளம், பல்லவி எல்லாம் தெரியாது. ஆனா கர்நாடக பாடல்களை ரசிக்க பிடிக்கும். அதுவும் அருணா சாய்ராம் பாடும் போது நிறைய தடவை கண்ணில் நீர் வழியும். அவர்தான் என் சாய்ஸ்.
\\போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.\\
hahaha:)
angey angey ipdi hillariousa ezhuthurathula neenga killadi Vijay:))
asusuall....enjoyed reading ur post with a smile:)
\\இந்த வார வெள்ளிக்கிழமை நித்யஸ்ரீ கச்சேரி இருக்கிறதாம். ஆஃபீஸுக்கு அரை நாள் விடுப்பு விடசொல்லியிருக்கிறாள் காயத்ரி. பார்ப்போம் என்றிருக்கிறேன்.\\
kacheri ku kootitu pogalina........veetula ungalukku nadantha kacheriya post podunga,
Nithyashree kacheriku pona.......antha experiance aa post panunga:))
எனக்கு crazy மோகன் தராம என்றால் ரொம்ப பிடிக்கும்.....
நிறையே பார்த்து இருக்கேன் ..
சாக்லேட் கிருஷ்ணா தான் இன்னும் பார்க்கல
கர்நாடிக் ல நான் ஞான சூனியம் ....
அதனால் அதுக்கு நோ கமெண்ட்ஸ்
http://www.esnips.com/
inge poi crazy mohan drama kellunga
//பாட்டெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாடுவதற்கு முன், இது இன்ன ராகம், இன்ன தாளம், இவர் இயற்றிருக்கிறார் என்று ஓரிரு வார்த்தைகள் அறிமுகம் கொடுத்தால் என்னைப் போலுள்ள அரைவேக்காடுகள் முக்காவேக்காடுகளாகும் வாய்ப்புண்டு.//
ரொம்ப சரியா சொன்னீங்க.
நான் சரியா சொன்னீங்கனு சொன்னது பாடல் என்ன ராகம், தாளம்
பற்றிய உங்கள் கருத்துக்கு தானே தவிர,
அரைவேக்காடு என்று உங்களை நீங்களே புகழ்ந்துகொண்டதற்கு இல்லை :-)
வம்புகாரஅண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
\\போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.\\
நீங்க ரெம்ப நல்லவரா இருக்கீங்களே. எங்கூட்டுகாரருக்கு கொஞ்சம் கூட பயம் வரமாட்டேங்குதுங்க. கண்ட மேனிக்கு என்னை கேலி செய்வார். பயங்காட்டுரதுக்கு என்ன பண்ணனும் சொல்லித்தாங்களேன்.
சூப்பரா எழுதி இருக்கீங்க..
க்ரேஸி மோகன் நாடகம் எனக்கு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை..
கர்நாட சங்கீதம் பாடறியே படிப்பறியேன் கதை தான். நேரில கச்சேரி கேட்டது போல இருந்தது உங்கள் பதிவு
ரொம்ப நல்லா இருக்கு விஜய். ஏதோ நண்பர்கள் கூட நேரம் போனது தெரியாம ஜாலியா பேசிகிட்டு இருந்தது போல ஒரு பீலிங்.
\\ தாரணி பிரியா said...
அதுவும் அருணா சாய்ராம் பாடும் போது நிறைய தடவை கண்ணில் நீர் வழியும். அவர்தான் என் சாய்ஸ்.\\
அப்படியா, அவுங்க சி.டி. இந்த வாரம் வாங்கிட வேண்டியது தான். தகவலுக்கு மிக்க நன்றி.
\\Divya said...
ahaha:)
angey angey ipdi hillariousa ezhuthurathula neenga killadi Vijay:))
asusuall....enjoyed reading ur post with a smile:)\\
உங்களை மாதிரி பெரும் தலைகளின் ஆதரவு இருக்கும் வரை தெகிரியமா எழுதலாம் :-)
\\ MayVee said...
கர்நாடிக் ல நான் ஞான சூனியம் ....
அதனால் அதுக்கு நோ கமெண்ட்ஸ்\\
நான் என்ன பெரும் புலியா. ரசிக்கறதுக்கு ஞானம் தேவையில்லை. ரசனை தான் தேவை.
\\ முகுந்தன் said...
நான் சரியா சொன்னீங்கனு சொன்னது பாடல் என்ன ராகம், தாளம்
பற்றிய உங்கள் கருத்துக்கு தானே தவிர,
அரைவேக்காடு என்று உங்களை நீங்களே புகழ்ந்துகொண்டதற்கு இல்லை :-)\\
முகுந்தன், கரெக்டா புடிச்சீட்டீங்களே. கில்லாடி ஐயா நீங்க!!!
\\ ராசுக்கண்ணு said...
வம்புகாரஅண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\\
ராசுக்குட்டி, ஓ சாரி, ராசுக்கண்ணு, வந்ததற்கு ரெம்ப நன்றி. உங்க கடைப்பக்கமும் வந்திடுவோம் :-)
\\ kunthavai said...
நீங்க ரெம்ப நல்லவரா இருக்கீங்களே. எங்கூட்டுகாரருக்கு கொஞ்சம் கூட பயம் வரமாட்டேங்குதுங்க. கண்ட மேனிக்கு என்னை கேலி செய்வார். பயங்காட்டுரதுக்கு என்ன பண்ணனும் சொல்லித்தாங்களேன்.\\
பயமா எனக்கா, அப்படின்னா???? இப்படிக்கேட்டேன்’னு தங்கமணிக்கு தெரிஞ்சதுன்னா......
\\ Arun Kumar said...
சூப்பரா எழுதி இருக்கீங்க..
க்ரேஸி மோகன் நாடகம் எனக்கு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை..\\
அடுத்த தடவை ரெண்டு பேரும் சேர்ந்து போவோம் :-)
\\ S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நல்லா இருக்கு விஜய். ஏதோ நண்பர்கள் கூட நேரம் போனது தெரியாம ஜாலியா பேசிகிட்டு இருந்தது போல ஒரு பீலிங்.\\
ரொம்ப நன்றி நவாஸ். அடிக்கடி வாங்க.
//
ஏன் கமல்ஹாசனின் காமெடிப் படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோஹன் வசனங்களே காரணம் என்று சொல்லலாம்.
//
பஞ்ச தந்திரம், வசூல் etc.. crasy-kamal is an excellent pair
//
போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே
//
ஏங்க பல சமயம் மசாலா தமிழ் படத்தைவிட நல்லாத்தான் இருக்கு. என்ன இது வரைக்கும் டைட்டில் தெரியாம பார்த்த படங்களே ஒரு நாலு தேறும். இருந்தாலும் suspense/comedy flicks are good. என்ன இந்த கமன்டை மலையாள திரையுலகுக்கு என்னை அறிமுகபடுத்தின(என்னை மலையாள படங்கள் பார்கவெச்சதைதான் சொன்னேன்)நண்பன் பார்த்தான். கொஞ்ச நஞ்சம் ஓடுற சண் மியூசிக்,விஜய் எல்லாத்தையும் நிப்பாட்டிடுவான்
//
பாடகர் ஆலாபனை செய்யும் போது, இது கல்யாணியா காம்போதியா என்று தெரியாது. அட்டானா போலிருக்கும், ஆனந்த பைரவியும் எட்டிப் பார்க்கும்.
//
நமக்கு அந்த பிரச்சனையே இல்லை சங்கீதத்துக்கும் நமக்கும் ரொம்ப நெருக்கம். எவ்ளோ தெரியுமா? நான் வயலின் கத்துகறேனு சொன்ன அன்னிக்கே குன்னக்குடி இறையடி சேர்ந்தார். எனக்கு தெரிஞ்ச கான சரஸ்வதி சங்கீத சிரோன்மணி எங்கம்மா தான்.
Post a Comment