Pages

March 14, 2009

என்னைக் கவர்ந்த சரித்திர நாயகர்கள்

மூன்று வாரங்களாக வேலை வேலை மேலும் வேலை. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேலாக ஆஃபிஸிலேயே முகாமிட்டிருக்கி்றேன். சனி ஞாயிறன்றும் வேலை. தூக்கத்தில் கூட கோட் தான் கண் முன்னே வருகிறது. தூக்கத்திலும் டெக்னிகல் டிஸ்கஷன் நடத்துகிறேனாம், காயத்ரி சொல்கிறாள். இந்தியா நியூசிலாந்து கி்ரிக்கெட் மாட்ச் கூட ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.  நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. எடுத்த புத்தகத்தை படிக்க முடியவில்லை. 

அதனால் நண்பர் மேவீ “என்னைக் கவர்ந்த  சரித்திர நாயகர்கள” பற்றி என்னை எழுதக் கேட்டுக் கொண்டதை சீக்கிரமே எழுத முடியவி்ல்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும் விசு. 

எனக்கு பள்ளிக்கூட நாட்களில் சரித்திரம் மிகவும் பிடித்த பாடம். வகுப்பில் எந்த பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறேனோ இல்லையோ, சரித்திரத்தில் முதல் மார்க். ஹிஸ்டரி வாத்தியாராப் போல என்று அப்பா பிரோக்ரஸ் ரிபோர்டில் கையெழுத்துப் போடும் போது திட்டுவார்.

சில நாட்களுக்கு முன் சரித்திரம் பழகு என்றொரு பதிவு கூட எழுதி வைத்திருந்தேன். ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை. சரி, என்னைக் கவந்த சரித்திர நாயகர்கள் பற்றிச் சொல்கிறேன். என்னைப் பொறுத்த வரை சரித்திரத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஆதிகால சரித்திரம். பெயர் தெரியாத ஆதி மனிதன் வாழ்ந்த காலம், அரசர்கள் ஆண்ட இடைக் கால சரித்திரம். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து நம்மை அடிமைப் படுத்தி பிறகு சுதந்திரம் கண்டு நேற்று வரை அரங்கேறியுள்ள நிகழ்ச்சிகள் யாவையும் தற்கால சரித்திரம் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் என்னை மிகவும் கவர்ந்தி்ருக்கிறார்கள். என்னைக் கவர்ந்த முதல் சரித்திர நாயகனுக்குப் பெயர் கிடையாது, அடையாளம் தெரியாது, என்ன மொழி பேசினானோ, என்ன வேலை செய்தானோ, அதுவும் அறியேன். ஆனால் உலகில் அறங்கேறியிருக்கும் பற்பல கண்டுபிடிப்புகளுக்கு விதை விதைத்தவன். அவன் தான் சக்கரத்தைக் கண்டு பிடித்த ஆதி மனிதன். சுழலும் சக்கரம் தான் என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானத்தின் உன்னதமான கண்டு பிடிப்பு. அதைக் கண்டுபிடித்தவன் தான் என்னைக் கவர்ந்த முதல் சரித்திர நாயகன். 

என்னைக் கவர்ந்த மற்றொரு சரித்திர நாயகர் சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவிற்கு இவரால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று இன்றளவும் நான் நம்புகிறேன்.   சும்மா சத்தியாகிரஹம் அது இது என்று காந்தி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த போது கருமமே கண்ணாக காரியத்தில் இறங்கிய செயல் வீரர் சுபாஷ் சந்திர போஸ். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அமைத்ததால், இவரு்க்கு சரித்திரத்தில் உரிய இடம் கிடைக்கவில்லை என்று நினைக்கி்றேன்.

என்னைக் கவர்ந்த இன்னொரு சரித்திர  நாயகரும் இருக்கிறார். இந்தியாவிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை ஜனதா அரசு விரட்டியடித்த சமையத்தில் ஒரு வெற்றிடம் உருவாயிருந்த நேரத்தில், இது தான் நேரம் என்று தான் நிர்வகித்து வந்த எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, இந்தியாவிலேயே கணினி மற்றும் மென் பொருள் தயாரிக்கும்  நிறுவனமாக மாற்றிய விப்ரோ அதிபர், திரு.அசிம் பிரேம்ஜி. பல கோடீஸ்வரர்களை உருவாக்கியதற்காக இன்ஃபோஸிஸ் நாரயண மூர்த்தி பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால் இன்று உலகத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் ஒரு மென்பொருள் வடிவமைக்கும் மையம் அமைக்கிறார்கள் என்றால் அதற்கு விதை வி்தைத்தவர் திரு. அசிம் பிரேம்ஜி. விப்ரோவில் கி்ட்டத்தட்ட 5 ஆண்டுகள் வேலை பார்த்த போது, நாணயத்துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் ஆச்சர்யப் படுத்தியது. நாணயமற்றவர்களை உடனே நீக்குவதில் எள்ளளவும் யோசிக்க மாட்டார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயமாகும். 

அப்பாடா, கொடுத்த வேலையை முடிச்சாச்சு. நான் யாரையு்ம் கோர்த்து விடப் போறதில்லை. இதைப் படிச்சுட்டு, உங்களையும் கவர்ந்த சரித்திர நாயகர்கள் பற்றி தாராளமா எழுதலாம். 
இப்போதைக்கு ஜகா வாங்கிக்கறேன். வர்டா!!!

35 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாள் ஆயிற்று போல

நட்புடன் ஜமால் said...

\\ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை. \\

உங்களுக்கு பிடித்திருந்தால் வெளியிடுங்கள்

நாங்கள் படிப்போம்

Anonymous said...

சுபாஷ் சந்திர போஸ் எனக்கும் ப்பிட்ட நாயகர்...
அப்புறம் மகாகவி பாரதி...

Karthik said...

கிரிக்கெட் கூட பார்க்க முடியாத அளவு வேலைன்னா கொஞ்சம் கஷ்டம்தான். வேலை முடிஞ்சப்புறம் கம்பெனி செலவுல யூரோப்புக்கு ஒரு டூர் அடிங்க. :)

//தாமதத்துக்கு மன்னிக்கவும் விசு.

வெட்டியாக உட்கார்ந்துக்கிட்டு நான் இன்னும் எழுதவில்லை. :(

Anonymous said...

வெல்கம் பேக் விஜய்!!

Anonymous said...

ம்ம்ம் எனக்கும் சரித்திரம் பிடித்தமான பாடம் இன்றும்..சரித்திர தகவல்களை படிப்பதிலும் அதீத ஆர்வமுண்டு ;-)

மேவி... said...

"அப்பாடா, கொடுத்த வேலையை முடிச்சாச்சு. நான் யாரையு்ம் கோர்த்து விடப் போறதில்லை."

yen intha kola veri????

மேவி... said...

wheels thaanunga ariya kandupidippu....
athu illati yethu munetram.....
athu oru thalaimuraiyin kuttu kandupidippu....

athanal athai thani nabar sathanaiyaga madippu seiya vendam...

மேவி... said...

subash chandra bose congress president ah 1940s starting la elect anaru...
anal gandhiji fasting irunthu chased subash....
then it was congress men who tried to make chandra bose as a dummy piece....
for earning

மேவி... said...

ya....
i have read many abt Asim Premji..
anyways u should more abt him and about wipro

மேவி... said...

me th 1st

மேவி... said...

"நட்புடன் ஜமால் said...
\\ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை. \\

உங்களுக்கு பிடித்திருந்தால் வெளியிடுங்கள்

நாங்கள் படிப்போம்"

vera vali...

மேவி... said...

"நட்புடன் ஜமால் said...
ரொம்ப நாள் ஆயிற்று போல"

innum oru 3 months kku vijay ippadi thaan iruppaaru

மேவி... said...

"இனியவள் புனிதா said...
வெல்கம் பேக் விஜய்!!"

pesama neenga office madi la stand panni...
oru 2 fgure side la stand panna vaichu...
billa ajith madiri "i am back" nnu sollunga

மேவி... said...

i am the 15th

மேவி... said...

neenga thaane history la 93/100 marks took u........

மேவி... said...

"Karthik said
//தாமதத்துக்கு மன்னிக்கவும் விசு.

வெட்டியாக உட்கார்ந்துக்கிட்டு நான் இன்னும் எழுதவில்லை. :("

athaane...soon writeunga boss

மேவி... said...

ellam en blogkku vanthu vittu pona padivu all kkum comment podunga boss

புதியவன் said...

//சுழலும் சக்கரம் தான் என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானத்தின் உன்னதமான கண்டு பிடிப்பு.//

உண்மை தான் விஜய்...ஆதிமனிதனின் முக்கியமான கண்டு பிடிப்பு சக்கரம் தான்...

சுபாஷ் சந்திர போஸ் - இவரை எனக்கும் பிடிக்கும்...

Lancelot said...

Thalai lateaa vanthalum latest...

//ரித்திரத்தில் முதல் மார்க்//
ithu unmaya???manasaatchiya thottu sollunga...

ennakum sarithiram romba pidicha paadam...

and Nettaji pathi neenga sonnatha 100% unmai...en thatha paatti rendu perum INA la irunthavanga...

உங்கள் ராட் மாதவ் said...

//வகுப்பில் எந்த பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறேனோ இல்லையோ, சரித்திரத்தில் முதல் மார்க்//

Vulkuththu No.1

//சும்மா சத்தியாகிரஹம் அது இது என்று காந்தி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த போது //

Vulkuththu No.2

//அப்பாடா, கொடுத்த வேலையை முடிச்சாச்சு. நான் யாரையு்ம் கோர்த்து விடப் போறதில்லை. //

Vulkuththu No.3

Idhu 'hostory' post aa, illa 'Vulkuththu' post aa??? :-))LOL

Poornima Saravana kumar said...

வாங்க விஜய்:)

ரொம்ப நாள் ஆயிற்று..

ஹிஸ்டரி எனக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பாடம்!

Poornima Saravana kumar said...

சில நாட்களுக்கு முன் சரித்திரம் பழகு என்றொரு பதிவு கூட எழுதி வைத்திருந்தேன். ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை.

அதைப் போடுங்க முதல்ல..

நசரேயன் said...

//சில நாட்களுக்கு முன் சரித்திரம் பழகு என்றொரு பதிவு கூட எழுதி வைத்திருந்தேன். ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை.//

படிக்க நான் இருக்கேன்..

நசரேயன் said...

நல்ல பகிர்வு

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை. \\

உங்களுக்கு பிடித்திருந்தால் வெளியிடுங்கள்

நாங்கள் படிப்போம்


reeeeppppeeettttuuuu

Vijay said...

\\ நட்புடன் ஜமால் said...
ரொம்ப நாள் ஆயிற்று போல\\
ஆமாம் பாஸ்.

\\உங்களுக்கு பிடித்திருந்தால் வெளியிடுங்கள்

நாங்கள் படிப்போம்\\

நீங்க இவ்வளவு நல்லவரா? :-)


\\ Sriram said...
சுபாஷ் சந்திர போஸ் எனக்கும் ப்பிட்ட நாயகர்...
அப்புறம் மகாகவி பாரதி...\\
பாரதியர் கவிதைகள் வாங்கி அது அலமாரியில் தூங்குகிறது. ஒரு நாள் எடுத்துப் படிக்கணும்.

\\ Karthik said...
வெட்டியாக உட்கார்ந்துக்கிட்டு நான் இன்னும் எழுதவில்லை. :(\\
காலேஜுக்கு போயிட்டிருக்கியே, அதுவே, பெரிய விஷயம் தான் :-)

\\ இனியவள் புனிதா said...
வெல்கம் பேக் விஜய்!!\\
Thanks a lot :-)

\\ இனியவள் புனிதா said...
ம்ம்ம் எனக்கும் சரித்திரம் பிடித்தமான பாடம் இன்றும்..சரித்திர தகவல்களை படிப்பதிலும் அதீத ஆர்வமுண்டு ;-)\\
வாவ் :-)


\\ MayVee said...
athanal athai thani nabar sathanaiyaga madippu seiya vendam...\\

ஒத்துக் கொள்கிறேன். அது ஒரு சமுதாயத்தின் கண்டுபிடிப்பு என்று கூட சொல்ல முடியாது. அது பல தலைமுறைகளின் பண்டுபிடிப்பு.

\\ புதியவன் said...
உண்மை தான் விஜய்...ஆதிமனிதனின் முக்கியமான கண்டு பிடிப்பு சக்கரம் தான்...

சுபாஷ் சந்திர போஸ் - இவரை எனக்கும் பிடிக்கும்...\\
உங்களைக் கோர்த்து விட்டிருக்கலாமே :-)

\\ Lancelot said...
Thalai lateaa vanthalum latest...

//ரித்திரத்தில் முதல் மார்க்//
ithu unmaya???manasaatchiya thottu sollunga...

ennakum sarithiram romba pidicha paadam...\\
ஆமாம். பத்தாம் வகுப்பில் நான் தான் சரித்திரத்தில் முதல் மார்க். உண்மையிலேயே சரித்திரம் படிப்பதற்கு ரொம்ப ஸ்வாரஸ்யமாக இருக்கும். சில வாத்தியார்கள் தான் அதை ஒழுங்காகக் கற்றுத் தருகிறார்கள்.

\\RAD MADHAV said...
Idhu 'hostory' post aa, illa 'Vulkuththu' post aa??? :-))LOL\\
என்னப்பா உள்குத்து கண்டுபிடிச்சிட்டீங்க?? :-)

\\ நசரேயன் said...
//சில நாட்களுக்கு முன் சரித்திரம் பழகு என்றொரு பதிவு கூட எழுதி வைத்திருந்தேன். ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை.//

படிக்க நான் இருக்கேன்..\\
சொல்லிட்டீங்கள்ல, அடுத்தது அது தான் :-)



\\ Poornima Saravana kumar said...
வாங்க விஜய்:)
ஹிஸ்டரி எனக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பாடம்!\\

பரவாயில்லையே. நிறைய பேருக்கு சரித்திரம் பிடிச்சிருக்கு :-)

\\ gayathri said...
நட்புடன் ஜமால் said...
\\ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை. \\

உங்களுக்கு பிடித்திருந்தால் வெளியிடுங்கள்

நாங்கள் படிப்போம்
\\
இவ்வளவு நல்லவர்கள் இருக்கும் போது எனக்கென்ன பயம்? :-)

முகுந்தன் said...

Welcome back Vijay..


//மூன்று வாரங்களாக வேலை வேலை மேலும் வேலை. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேலாக ஆஃபிஸிலேயே முகாமிட்டிருக்கி்றேன். சனி ஞாயிறன்றும் வேலை. தூக்கத்தில் கூட கோட் தான் கண் முன்னே வருகிறது.//

நம்ம கதையும் இதே மாதிரி தான்.

மேவி... said...

"முகுந்தன் said...
Welcome back Vijay..


//மூன்று வாரங்களாக வேலை வேலை மேலும் வேலை. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேலாக ஆஃபிஸிலேயே முகாமிட்டிருக்கி்றேன். சனி ஞாயிறன்றும் வேலை. தூக்கத்தில் கூட கோட் தான் கண் முன்னே வருகிறது.//

நம்ம கதையும் இதே மாதிரி தான்."


pesama neenga oru MBA+MS pannittu vanga ....
officela super ah OB adikkalam boss

மேவி... said...

me th 30th

Anonymous said...

வாங்க விஜய் (பாருங்க உங்க வீட்டுக்கு வந்து நான் வாங்கன்னு சொல்றேன்)
நாள் முழுக்க வேலை பார்த்தால் தூக்கத்தில் டிஸ்கஸ் பண்ணுவீங்களா?
பார்த்துங்க ... எங்க (வெளியே) போனாலும் காயத்திரியை கூட்டி செல்லுங்கள், அப்புறம் யாரையாச்சும் பார்த்துவிட்டு தூக்கத்தில் எதுனாச்சும் பேசிட போறீங்க.

காந்திஜியின் கொள்கையை இப்படி சொல்லாதீங்க விஜய்... ஒன்றும் வேண்டாம் வீட்டில் நீங்க சண்டை போடுவதை விட , கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க effect அதிகமா இருக்கும்.

Rajalakshmi Pakkirisamy said...

வாங்க சார். ரொம்ப நாளா உங்க பதிவுக்கும் பிரியா அக்கா பதிவுக்காகவும் காத்து கிடந்து, ஒரு வழியா நீங்க தலைய காட்டியாச்சு.

"அப்பாடா, கொடுத்த வேலையை முடிச்சாச்சு. நான் யாரையு்ம் கோர்த்து விடப் போறதில்லை."

இவ்வளவு நல்லவரா நீங்க?

prabhu said...

மூன்று காலங்களிலும் என்னை கவர்ந்த நாயகர்கள் என்று சொல்லி, கவர்ந்துவிட்டீர் என்னையும்...

பிரபு ஜெ

Divyapriya said...

வாங்க விஜய் :)

//ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை.//

எங்களுக்கெல்லாம் பிடிக்கும் :)

kanagu said...

nalla post.. innum konjam vivarama irundhu irundha nalla irundhu irudhu irukkum..
yenna enaku sarithiram romba pidikkum :)