Pages

February 16, 2009

நான்(உம்) கடவுள்

ஒரு வழியா நானும், “நான் கடவுள்” பார்த்தாச்சு. ஆரம்பிச்சுட்டான்யா இவனும் ஒரு விமர்சனத்தை என்று நினைத்து, மூடிவிட வேண்டாம். படம் எப்படி இருந்தது, என்று சொல்வதை விட, படம் பார்த்த போதும் பார்த்த பிறகும் நான் எப்படி இருந்தேன் என்பதைத் தான் சொல்லப் போகிறேன். அதனால், தைரியமாகப் படிக்கலாம். எனக்கொரு சந்தேகம், வேதத்தில் அஹம் பிரஹ்மாஸ்மி, அதாவது நான் கடவுள் என்று சொல்லப் பட்டிருக்கா, அல்ல்து, பிரம்மைவா அஹமஸ்மி, அதாவது நானும் கடவுள் என்று சொல்லப் பட்டிருக்கா?


“அசாவாதித்யோ பிரஹ்மா

பிரஹ்மைவா அஹமஸ்மி

பிரஹ்மைவா சத்யம்”

என்று தான் சந்தியா வந்தனத்தின் போது மந்திரம் வரும். அதாவது,
“எனக்குள் கடவுள் இருக்கிறான்;
நானும் ஒரு கடவுள்,
அதுவே சத்யம்”
இது தான் இந்த மந்திரத்தின் பொருள். அஹம் பிரஹ்ம்மாஸ்மி என்பதால் நான் கடவுள் என்று பெயர் வைத்தார்களா, இல்லை நான் கடவுள் என்ற பொருள் வர வேண்டும் என்பதற்காக மந்திரத்தையே மாற்றிவிட்டார்களா?? விஷயம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.
ஒகே ஒகே, ரொம்ப philosophical’ஆ போறேனா? என்ன பண்ணறது, படம் பார்த்த பாதிப்பு இன்னும் தீரவில்லை.

படத்தில் வரும் பிச்சைக் காரர்களின் உலகம் இப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் இப்படித் தான் இருக்குமா என்ற அச்சம் ஏற்படுகிறது. பிச்சை எடுப்பவர்களில் எத்தனை பேர் கட்டாயத்தின் பேரிலும் பயத்தாலும் பிச்சையெடுக்கிறார்களோ யாமறியேன். அதிலும் அந்த விஹாரமான முகம் கொண்ட ஆள், அப்பப்பா நினைத்தாலே குலை நடுங்குகிறது. நல்ல வேளை காயத்ரியைக் கூட்டிக் கொண்டு போகவில்லை.
அப்படி அவர்களை யாராவது கட்டாயப் படுத்தினாலோ, அவர்களுக்கு காவல்துறையும் உடந்தையாயிருப்பின், இவர்களை என்ன செய்தால் தகும். தர்மத்தைக் கட்டிக் காப்பவனே அதைத் தெரிந்தே அழித்தால், அவனுக்கு மரண தணடனை வழங்கவேண்டும், என்று மஹாபாரதத்தில் தருமர் சொல்கிறார். ஒரு போலீஸ்காரரே இப்படத்தில் காண்பிப்பது போல் நடந்து கொண்டால், அவனை கல்லாலேயே அடித்துக் கொன்று விட வேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. பிச்சைக் காரர்கள் மேல் பரிதாபப் பட்டு ஒன்றோ இரண்டோ கொடுப்பது கூட, இந்த மாதிரி தாதாக்களுக்குத் தான் போகிறது என்று எண்ணும் போது, பிச்சை போடும் எண்ணமே போய்விடுகிறது.
நேற்று மதியம் Fox History'யில் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் காண்பித்தார்கள். ஒரு இளவரசன் மக்களின் கஷ்டங்களுக்குக் கான காரணத்தைத் தேடியலைந்து தவம் செய்து, கடைசியில் இதுவே வாழ்க்கை என்ற தெளிவு பெறுகிறார். அப்படிப் பட்ட கௌதம புத்தரையே நிலை குலைய வைத்துவிடும், இப்படத்தில் பிச்சைக் காரர்கள் படும் அவஸ்தைக் காட்சிகள்.

படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது. பாட்டானாலும் சரி, பின்னணி இசையானாலும் சரி, கலக்கியிருக்கிறார் மனுஷன். இந்தப் பாழாப்போற ஆங்கிலத் திரையுலகுக்கு இந்த மாதிரியான் இசையெல்லாம் காதில் விழாது. நல்ல வேளை, இந்தப் படத்தில் பாடல் எதையும் இளையராஜா உணற்சி மிகுதியால் தாமே பாடவில்லை. இசையமைப்பதோடு நிறுத்திக் கொண்டது பாராட்டத்தக்கது.
இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆடாமல் அசையாமல் முதல் முறையாகப் படம் பார்த்திருக்கிறேன். தியேட்டரை விட்டு வெளியே வந்தும், மனம் ரொம்ப கனமாக இருந்தது, இன்னும் இருக்கிறது.

54 comments:

மேவி... said...

me th 1st

மேவி... said...

me th 2nd

மேவி... said...

"இல்லை நான் கடவுள் என்ற பொருள் வர வேண்டும் என்பதற்காக மந்திரத்தையே மாற்றிவிட்டார்களா?? விஷயம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது."
சாரிங்க ......
நான் கடவுள் department ல செம வீக் ......
அவங்க அதுக்கு தான் மந்திரம் எல்லாம் சொலவில்லை.....
சும்மா நான் கடவுள் ன்னு சொல்லிடாங்க......
செம உசார் அவங்க

மேவி... said...

"பிச்சை எடுப்பவர்களில் எத்தனை பேர் கட்டாயத்தின் பேரிலும் பயத்தாலும் பிச்சையெடுக்கிறார்களோ யாமறியேன்."
ஆநேகம் பேர்

மேவி... said...

"படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது. "
ஆமா ராஜா சார் பாட்டு தான் என்னை தினமும் தாலாட்டுது

மேவி... said...

விஜய் ..... பிச்சை பாத்திரம் பாடல் எப்படி

மேவி... said...

"தர்மத்தைக் கட்டிக் காப்பவனே அதைத் தெரிந்தே அழித்தால், அவனுக்கு மரண தணடனை வழங்கவேண்டும், என்று மஹாபாரதத்தில் தருமர் சொல்கிறார்."
விஜய் ... விராட பருவத்தில் தானே

மேவி... said...

"கௌதம புத்தரையே நிலை குலைய வைத்துவிடும், இப்படத்தில் பிச்சைக் காரர்கள் படும் அவஸ்தைக் காட்சிகள்."
ஏன் என்றால் அவர் காலதில் இல்லாத அரகர்கள் எல்லாம் இன்று உள்ளனர்

மேவி... said...

"இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆடாமல் அசையாமல் முதல் முறையாகப் படம் பார்த்திருக்கிறேன்"
அப்ப இரண்டு மணி நேரம் நீங்க யூத் அஹ இல்லை.....

மேவி... said...

என்னக்கும் படத்தை பார்த்த பின் எதோ செய்தது...
ஆனால் உங்கள் அளவுக்கு இல்லை

கிரி said...

//நல்ல வேளை, இந்தப் படத்தில் பாடல் எதையும் இளையராஜா உணற்சி மிகுதியால் தாமே பாடவில்லை//

பாடி இருக்கிறார். "ஒரு காற்றில்" என துவங்கும் பாடல் அவர் பாடியது ஆனால் படத்தில் (பெரும்பாலான பாடல்கள்) இல்லை.

M.Rishan Shareef said...

//நல்ல வேளை காயத்ரியைக் கூட்டிக் கொண்டு போகவில்லை.//

யாரது காயத்ரி ?

Divyapriya said...

காயத்ரியை விட்டுட்டு போனாலும், அதுக்கு ஒரு காரணம் வேற கண்டுபிடிச்சு, அடியில இருந்து தப்பிக்க இப்படி ஒரு பதிவையும் எழுதியிருக்கீங்க பாருங்க...அத கண்டிப்பா பாராட்டியே ஆகனும் விஜய் :)))

நசரேயன் said...

நல்லா இருக்கு விமர்சனம்

முகுந்தன் said...

//மனம் ரொம்ப கனமாக இருந்தது, இன்னும் இருக்கிறது.
//

இதற்காக தான் நான் இன்னும் படம் பார்க்கவில்லை

Lancelot said...

2 anna

nammkkku antha vedham matter theriyaathu...but padam romba nalla padamnu vimarsanam mattum kettaen innum parkanum...and naan intha ichaikarargalai vechu tamilil eluthiya kathai iruku (yaasagam- http://lancelot-oneofakind.blogspot.com/2008/12/blog-post.html)neram iruntha padiyungal...atha oru short filmaa seekiramae edukka poren...

நட்புடன் ஜமால் said...

\\படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது. பாட்டானாலும் சரி, பின்னணி இசையானாலும் சரி,\\

சரியே

Anonymous said...

முடிவா என்ன சொல்ல வரீங்க படம் நல்லாருக்கா நல்லா இல்லையா...
ஆமா அது என்ன எல்லோரும் நான் கடவுள் விமர்சனத்தை மட்டும் மாஞ்சு மாஞ்சு எழுதுறீங்க?

Vijay said...

\\ MayVee said...
அவங்க அதுக்கு தான் மந்திரம் எல்லாம் சொலவில்லை.....
சும்மா நான் கடவுள் ன்னு சொல்லிடாங்க......
செம உசார் அவங்க\\

இல்லையே, அஹம் பிரஹ்ம்மாஸ்மின்னு மந்திரம் எல்லாம் சொல்லறாங்களே :-)

\\ MayVee said...
என்னக்கும் படத்தை பார்த்த பின் எதோ செய்தது...
ஆனால் உங்கள் அளவுக்கு இல்லை\\
ஹாஹா :-)

\\ கிரி said...
பாடி இருக்கிறார். "ஒரு காற்றில்" என துவங்கும் பாடல் அவர் பாடியது ஆனால் படத்தில் (பெரும்பாலான பாடல்கள்) இல்லை\\
அப்படியா? பெங்களூர் பி.வி.ஆர்’ல கட் பண்ணிட்டாங்க போலிருக்கு :-(
வந்து ஒரு குட்டு குட்டினதுக்கு ரொம்ப நன்றி, கிரி. அடிக்கடி வந்து குட்டிட்டுப் போங்க :-)

\\எம்.ரிஷான் ஷெரீப் said...
யாரது காயத்ரி ?\\

தங்கமணி :-)
வந்ததற்கு ரொம்ப நன்றி ரிஷான் :-)

\\Divyapriya said...
காயத்ரியை விட்டுட்டு போனாலும், அதுக்கு ஒரு காரணம் வேற கண்டுபிடிச்சு, அடியில இருந்து தப்பிக்க இப்படி ஒரு பதிவையும் எழுதியிருக்கீங்க பாருங்க...அத கண்டிப்பா பாராட்டியே ஆகனும் விஜய் :)))\\
நான் கூப்பிட்டேன். வர மறுத்துவிட்டாள் :-)

\\ நசரேயன் said...
நல்லா இருக்கு விமர்சனம்\\
நான் விமர்சனமா எழுதியிருக்கேன். நீங்க சொல்லறதப் பார்க்கும் போது, முன்னொரு நூற்றாண்டில் தூர்தர்ஷனில் ஃபிளாப் ஷோன்னு ஒண்ணு போடுவாங்க. அதுல வரும் ஜஸ்பால் பட்டி, ஒரு சோகப் படம் எடுக்கணும்’னு எடுப்பார். கடைசியில இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவைப் பட இயக்குனர்னு அவருக்கு விருது கொடுப்பாங்க. அப்போ அவர் சொல்லுவார், “காமெடி!! நான் டிராஜெடி படம்’ல எடுத்தேன்” என்பார்.

விமர்சனம் எழுதக்கூடாது என்று நினைத்துத் தான் எழுதினேன். ஆனால் இதுவே ஒரு விமர்சனம் ஆகிடுத்தோ? :-)

\\ முகுந்தன் said...
இதற்காக தான் நான் இன்னும் படம் பார்க்கவில்லை\\
பாஸு, இதுக்கெல்லாம் கவலைப் பட்டால் தொழில் செய்ய முடியுமா?

\\and naan intha ichaikarargalai vechu tamilil eluthiya kathai iruku (yaasagam- http://lancelot-oneofakind.blogspot.com/2008/12/blog-post.html)neram iruntha padiyungal...atha oru short filmaa seekiramae edukka poren...\\
கண்டிப்பா படிக்கறேன். குறும்படம் எடுக்க வாழ்த்துக்கள் :-)

\\ நட்புடன் ஜமால் said...
\\படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். \\

சரியே\\

நீங்களும் நம்ம கட்சிதானா :-)

\\ Sriram said...
முடிவா என்ன சொல்ல வரீங்க படம் நல்லாருக்கா நல்லா இல்லையா...
ஆமா அது என்ன எல்லோரும் நான் கடவுள் விமர்சனத்தை மட்டும் மாஞ்சு மாஞ்சு எழுதுறீங்க?\\
பின்னணி இசைக்காகவும் , சிவோஹம் பாட்டுக்காகவும் படம் பார்க்கலாம்.

நான் விமர்சனம் எழுதலையே. படம் பார்த்துட்டு எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைத் தானே எழுதியிருக்கேன். இல்லனு சொல்லறீங்களா?

SurveySan said...

//படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது. //

:) இது தேவையில்லா சேர்கை.
ராஜாவுக்கு முன்னால் நின்னு, அவரையும் ஓவர் டேக் பண்ணிட்டு எப்பவோ போயிட்டாரே ஏ.ஆர்.ஆர். கசந்தாலும் அதுதான் உண்மை.

M.Rishan Shareef said...

ஓஹ்..காயத்ரி உங்கள் மனைவியா?

//அதிலும் அந்த விஹாரமான முகம் கொண்ட ஆள், அப்பப்பா நினைத்தாலே குலை நடுங்குகிறது. நல்ல வேளை காயத்ரியைக் கூட்டிக் கொண்டு போகவில்லை.//

இதனைத் தொடர்ச்சியாகப் படித்துவிட்டு அம்சவல்லியைத்தான் காயத்ரி எனத் தவறாகக் குறிப்பிடுகிறீர்கள் என நினைத்தேன். அந்த விகாரமுகம் கொண்டவர்தானே அம்சவல்லியை அழைத்துப் போகவந்தார்.

மன்னியுங்கள் நண்பரே !

Vijay said...

\\ SurveySan said...
:) இது தேவையில்லா சேர்கை.
ராஜாவுக்கு முன்னால் நின்னு, அவரையும் ஓவர் டேக் பண்ணிட்டு எப்பவோ போயிட்டாரே ஏ.ஆர்.ஆர். கசந்தாலும் அதுதான் உண்மை.\\

அப்படீங்கறீங்களா? நான் இளையராஜா பாட்டு கேட்டு வளர்ந்தவன். ஏ.ஆர்.ஆர் பாட்டுக்கள் சில பிடித்தாலும் இளையராஜா தான் மனதில் நிற்கிறார். எங்கப்பாக்கு எப்பவுமே கண்டசாலாவையும் தியாகராஜ பாகவதரையும் தான் பிடிக்கும். என்ன பண்ண? இப்படி பலதரப்பட்ட ரசனை தான் சுவாரஸ்யமான விஷயம்.

உங்க கருத்தைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி. அடிக்கடி வந்து கிராஸ் பண்ணுங்க நண்பரே :-)

\\ எம்.ரிஷான் ஷெரீப் said...
ஓஹ்..காயத்ரி உங்கள் மனைவியா? \\
ஆமாம். என்னுடைய நிறைய பதிவுகளில் அவளைப் பற்றி எழுதியிருக்கேன். சில பதிவுகளுக்கு அவளே மையக்கறு. :-)

\\மன்னியுங்கள் நண்பரே !\\
நண்பனிடம் மன்னிப்புக் கேட்கலாகாது :-)

Anonymous said...

//
நான் விமர்சனம் எழுதலையே. படம் பார்த்துட்டு எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைத் தானே எழுதியிருக்கேன். இல்லனு சொல்லறீங்களா? //

இல்லைன்னு சொல்ல முடியல அண்ணே...

Anonymous said...

// பிச்சைக் காரர்கள் மேல் பரிதாபப் பட்டு ஒன்றோ இரண்டோ கொடுப்பது கூட, இந்த மாதிரி தாதாக்களுக்குத் தான் போகிறது என்று எண்ணும் போது, பிச்சை போடும் எண்ணமே போய்விடுகிறது. //

இதே மாதிரி சம்பவம் இன்னும் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன குழந்தைகளை ஊனமாக்காமல், பசியை காரணம் காட்டி பிச்சை எடுக்க வைக்கின்றனர் என்பது ஒரு ஆறுதல். நான் நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். பிச்சை போடப் படுகின்ற காசு வேறு ஒரு ஆள் அந்த சிறுவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதை.
நீங்கள் அவர்களுக்கு பசிக்காக உண்ணுவதற்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள் பார்க்கலாம். அதைஅந்த சிறுவர்கள் வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு தேவை சில்லறை மட்டுமே. இல்லை எனில் அவர்களின் தலைமை ஆளிடம் இருந்து அடி விழுமே

Karthik said...

reviewvil Aarya, Pooja nadippai patri edhuvum sollavillaiye?? Ean pa azhagaana pengal Deepika Padhukone nadithaal thaan nadippai paarathuveengala???

Film doesnt have a strong story... and as usual bala killing the lead, so an expected climax... has the shade of PITHAMAGAN for the hero... :P


ennalayum 2 mani neram elundhukka mudila.. theatre iruthu verya... payama irundhuchu.. iruthula yaaradhu nambhala kadathithu poi picha edhukka vacha....

IT sir has sung a song.. Maada un kovilil madhi theebam endinen.... Chk fr audio if possible anna... www.tamilbeat.com

உங்கள் ராட் மாதவ் said...

விஜய், நீங்கள் சொன்னதில் தொண்ணூறு சதவீதம் ஒத்துக்கொள்ள வேண்டியது.
ஒத்துக்கொள்கிறேன். அது காலத்தின் கட்டாயம். இது போல் நல்ல படங்களை புரிந்து ரசிப்பது எல்லாவராலும் முடியாத ஒன்று.

பாலாவின் படங்கள் எல்லாமே கடுத்த விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கமான நிகழ்வுதானே. பின்னணி இசையில் ராஜா கிளப்பு கிளப்பியிருப்பார். கேமரா பல இடங்களில் புகுந்து விளையாடியிருக்கும்.

சரி, எல்லாமே சரியா சொல்லிட்டு, கார்த்திக் சொன்ன மாதிரி, அதென்ன 'ஆர்யா, அதும் குறிப்பா.... பூஜா,
அதும் எங்க பூஜா... பத்தி ஒரு வார்த்த..... ஒரு வார்த்த... ஒரு வார்த்த கூட போடாம விட்டுட்டீங்களே. ஏன், ஏன், ஏன், ஏன்... எங்க பிஞ்சு மனச கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க....

Vijay said...

\\ Karthik said...
reviewvil Aarya, Pooja nadippai patri edhuvum sollavillaiye?? Ean pa azhagaana pengal Deepika Padhukone nadithaal thaan nadippai paarathuveengala???
\\
பூஜாவை எனக்கும் ரொம்ப ரொம்ப.... பிடிக்கும். ஆனால் நான் புதுசா எழுதுவும் சொல்லிடப் போவதில்லை, என்பதால் விட்டு விட்டேன்.

Vijay said...

\\ RAD MADHAV said...
சரி, எல்லாமே சரியா சொல்லிட்டு, கார்த்திக் சொன்ன மாதிரி, அதென்ன 'ஆர்யா, அதும் குறிப்பா.... பூஜா,
அதும் எங்க பூஜா... பத்தி ஒரு வார்த்த..... ஒரு வார்த்த... ஒரு வார்த்த கூட போடாம விட்டுட்டீங்களே. ஏன், ஏன், ஏன், ஏன்... எங்க பிஞ்சு மனச கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க....\\

ஆஹா பூஜா ரசிகர் கூட்டத்தின் செண்டிமெண்டை புரிஞ்சுக்காம விட்டுட்டேனே. பூஜாவுக்காகவே பிரத்யேகமா ஒரு பதிவு எழுதிருவோமா? :-)

Karthik said...

// பூஜாவுக்காகவே பிரத்யேகமா ஒரு பதிவு எழுதிருவோமா? :-)//

neenga thaan pa en manasa purinja blogger.. :)))))

Arun Kumar said...

நல்லா எழுதி இருக்கீங்க..
வர வர நான் கடவுள் இன்னமும் பார்க்கவில்லை என்றால் மனுசனா கூட மதிக்கமாட்டேங்கறாங்க

Vijay said...

\\Arun Kumar said...
நல்லா எழுதி இருக்கீங்க..
வர வர நான் கடவுள் இன்னமும் பார்க்கவில்லை என்றால் மனுசனா கூட மதிக்கமாட்டேங்கறாங்க\\

சீக்கிரம் பார்த்துடுங்க.

உங்கள் ராட் மாதவ் said...

//Vijay arasiyalluku varuvaara??? :P//

Idhu Karthick ketta kelvi. thayavu seithu unmaya sollidunga. Pls :)))

Vijay said...

\\ RAD MADHAV said...
//Vijay arasiyalluku varuvaara??? :P//

Idhu Karthick ketta kelvi. thayavu seithu unmaya sollidunga. Pls :)))\\
எந்த விஜய்?? :-)

Anonymous said...

// Vijay arasiyalluku varuvaara??? எந்த விஜய்?? :-) //

சந்தேகமென்ன உங்களுக்கு? வெட்டிவம்பு விஜயே தான்...
நாங்க கோர்த்துவிடுவோமுள்ள... :-)

Vijay said...

\\Sriram said...
சந்தேகமென்ன உங்களுக்கு? வெட்டிவம்பு விஜயே தான்...
நாங்க கோர்த்துவிடுவோமுள்ள... :-)\\

ஆஹா!!! கிளம்பிட்டாங்கய்யா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே கெடந்தேன். ஏன் ஏன்பா ஏன்???

Poornima Saravana kumar said...

அப்பாட பயந்த மாதிரி ஏதும் நடக்கலை !!!

Poornima Saravana kumar said...

எப்பவும் போல் உங்க ஸ்டைலில் போட்டு இருப்பது அருமை !!

வாழ்த்துக்கள்:)

Anonymous said...

சிவனேன்னு கெடந்தீங்களா?
அப்ப நீங்களும் நான் கடவுள் ருத்ரன் கேரக்ட்டர் ஆகா ட்ரை பண்றீங்க போல...
வளைச்சு வளைச்சு மடக்குவோம்ல...
:-)

Vijay said...

\\ Poornima Saravana kumar said...
எப்பவும் போல் உங்க ஸ்டைலில் போட்டு இருப்பது அருமை !!

வாழ்த்துக்கள்:)\\
என்ன அம்மணி, பரீக்ஷித் ரொம்ப படுத்தறானா?

\\ Sriram said...
சிவனேன்னு கெடந்தீங்களா?
அப்ப நீங்களும் நான் கடவுள் ருத்ரன் கேரக்ட்டர் ஆகா ட்ரை பண்றீங்க போல...
வளைச்சு வளைச்சு மடக்குவோம்ல...
:-)\\

ஆஹா, நானாத் தான் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா. விஜய், விடுடா ஜூட் :-)

உங்கள் ராட் மாதவ் said...

//Sriram said...
// Vijay arasiyalluku varuvaara??? எந்த விஜய்?? :-) //
சந்தேகமென்ன உங்களுக்கு? வெட்டிவம்பு விஜயே தான்...
நாங்க கோர்த்துவிடுவோமுள்ள... :-)//

// Poornima Saravana kumar said...

அப்பாட பயந்த மாதிரி ஏதும் நடக்கலை !!!//

'saami' style

தலைவா, கலர் கலரா kodi ஏத்துறீங்க, எல்லாருக்கும் மிட்டாய் கொடுக்குறீங்க, Koottatha kootirukkeenga,
புதுசு புதுசா போஸ்ட் போடுறீங்க. நீங்க eppa கட்சி aarampikka poreenga....

Ippave Advance Booking.
Naanthan Ko.Pa.Se (Koklai Parappu Cheyalaalar)

kanagu said...

nalla vimarasanam... ilayaraja endrume raja than.. A.R.Rahman ai naan kuraithu solla villai aanal Illayarajavirku sariyana oru angigaaram kedaikavillai endru than solla vendum :(

Vidhya Chandrasekaran said...

\\"படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது\\

:))))))

Vijay said...

\\வித்யா said...
\\"படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது\\

:))))))\\
வாங்க வித்யா. ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துட்டுப் போயிட்டீங்க?? :-)

gayathri said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//நல்ல வேளை காயத்ரியைக் கூட்டிக் கொண்டு போகவில்லை.//

யாரது காயத்ரி ?

எம்.ரிஷான் ஷெரீப் said...
ஓஹ்..காயத்ரி உங்கள் மனைவியா?

first ungalum unga gayathrikum kalyanam aidichinu oru vemarchanam podunga pa.

முகுந்தன் said...

//பாஸு, இதுக்கெல்லாம் கவலைப் பட்டால் தொழில் செய்ய முடியுமா?
//

இல்லை விஜய்,
கொஞ்ச நாட்களுக்கு இந்த சோக படம் எல்லாம் வேண்டாம்னு இருக்கேன்.
எனக்கு ரொம்ப இளகிய மனசு (நம்போனும்!!)

MSK / Saravana said...

// Divyapriya said...
காயத்ரியை விட்டுட்டு போனாலும், அதுக்கு ஒரு காரணம் வேற கண்டுபிடிச்சு, அடியில இருந்து தப்பிக்க இப்படி ஒரு பதிவையும் எழுதியிருக்கீங்க பாருங்க...அத கண்டிப்பா பாராட்டியே ஆகனும் விஜய் :)))//

இது சூப்பரு.. ரிப்பீட்டு.. :)

Rajalakshmi Pakkirisamy said...

பூஜாவின் நடிப்பு அருமை. :) :)

Poornima Saravana kumar said...

//என்ன அம்மணி, பரீக்ஷித் ரொம்ப படுத்தறானா?
//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்ச.. வர வர சேட்டைகள் அதிகமாயிட்டே போகுது.. குறைவதற்கு வாய்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை:))

Karthik said...

Done ur tag atlast!!!!!!!!!!!

Karthik said...

http://lollum-nakkalum.blogspot.com/2009/02/blog-post_24.html

This s the link na!!

Karthik said...

http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_06.html

Idhu thaan nga naan ungala TAG seidha padhivu!!

Karthik said...

ஸாரிங்க விஜய்..நான் லேட். :(

நல்ல பதிவு. ஏ ஆர் ரஹ்மான் பத்தி சொன்னதுதான் கொஞ்சம்....

அவங்க ரெண்டு பேரையும் கம்ப்பேர் பண்ண வேணாம்னு நினைக்கிறேன்.

kanagu said...

enanga chetan bhagat ah kaila eduthutinga... unga vegathuku ore naal la moonu book ah yum padichu muchiduveengale :)

Anonymous said...

தலைவா புக்கையே பட்சிகினு இருந்தா எப்படி?
அப்பப்ப உங்க கடை பக்கமும் வந்து போங்க...
கல்லா கட்டனுமுள்ள..