Pages

February 14, 2009

வேற ஏதாவது எழுதுங்கப்பா

காலையிலிருந்து எந்தப் பக்கத்துக்குப் போனாலும் காதலர் தினம் பற்றித்தான் எழுதித் தள்ளியிருக்காங்க. சரி இணையதளத்துல இப்படி எழுதியருக்காங்கன்னா, நம்ம பதிவுலக நண்பர்களும் ஆளாளுக்க ஒரே காதல் கவிதையா எழுதி தள்ளியிருக்காங்க. எல்லாம் சூப்பராகீதுப்பா. கவிதை தவிர, காதலர் தினத்தைக் கொண்டாடலாமா வேண்டாமா, யார் யார் காதலர் தினத்தைக் கொண்டாடலாம், கல்யாணமவர்களெல்லாம் காதலர் தி்னத்தை எப்படிக் கொண்டாடணும், அவர்களுக்கும் காதலர் தினம் சொந்தமானதா, காதலர்கள் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ளணும், காதலர் தினம் நம்ம கலாசாரமா இல்லையா, கலாசாரப் பாதுகாவலர்கள் செய்வது சரியா தவறா, கலாசாரப் பாதுகாவலர்களின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அவர்கள் மேற்கொண்ட விதம் தப்பு, கலாசாரப் பாதுகாவலர்களை எப்படி எதிர்கொள்ளணும், பின்க் ஜ...... விவகாரக் காம்பெயின், யப்பப்பா,எத்தனை பதிவுகளடா, அதில் தான் எத்தனை சுவாரஸ்யமடா. ஒரு கட்டத்தில் அலுத்தே போய் விட்டேன். அடேய் வேறெதாவது எழுதுங்கடான்னு கத்தணும் போலிருந்தது.
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே இந்த பிளாகெல்லாம் தெரிஞ்சிருந்தா, இந்தக் கவிதையில் ஏதாவது சுட்டு, ஏதாவது ஃபிகரைத் தேத்தியிருக்கலாம். திருநெல்வேலி கோவில்பட்டியில் ஏதாவது பொண்ணு கிட்ட பொது இடத்துல நின்னு சிரி்ச்சு பேசினாலே அவங்கப்பனோ அண்ணனோ அரிவாள தூக்கியாந்துருவானுங்க. இந்த லக்ஷணத்துல காதலர் தினமெல்லாம் ம்ஹும், அதெல்லாம் எங்க அகராதியில கெட்ட வார்த்தை. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் காதலர் தினம் பிப்ரவரி 14 அன்று என்று தெரியவந்தது. முதலாம் ஆண்டில் ஏதோ காதலர் தினம் வந்து போனது, ஆனால் என்று என்ற ஞாபகம் இல்லை. மூன்றாம் ஆண்டு காதலர் தினத்தன்று மாரியம்மன் கோவி்லுக்குச் செல்லும் கூட்டம் மாதிரி நிறைய சிகப்புச் சட்டைகள். ஆனால் அன்றைய தினம் மறக்க முடியாதது. அன்று தான் கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்து நாட்டையே உலுக்கி எடுத்தது. எத்தனை காதலர்கள் இதனால் பாதிகப்பட்டார்களோ, யாமறியேன்.
பெங்களூர் வந்த பிறகு காதலர் தினமென்றால் ப்ரிகேட் ரோட் போய்விடுவது. காதல் ஜோடிகளைப் பார்ப்பதுமே ஒரு தனி கிக் தான். பெங்களூரில் காதல் செய்வது சற்றே காஸ்ட்லியான சமாசாரமானதால், யாருக்கும் பூ கொடுக்கவில்லை. (அப்படியே கொடுத்துட்டாலும், இவரு பின்னாடியே வந்துருவாங்க’ன்னு பி்ன்னாலிருந்து காயத்ரி குரல் கொடு்க்கிறாள்)
சரி சரி, நானும் இந்தக் காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லிட்டுப் போறேன். காதலிப்பது தப்பா இல்லையான்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்.

32 comments:

நசரேயன் said...

காதலிக்க நேரமில்லை, காதலித்தல்.... நினைக்கவே பயமா இருக்கு

Poornima Saravana kumar said...

ஊரெங்கும் இதே பேச்சு..

Poornima Saravana kumar said...

எப்பிடி விஜய் இவ்வளவு சுவாரசியமா எழுதறிங்க...

Poornima Saravana kumar said...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..

Divyapriya said...

//ஆனால், காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்.//

செம கருத்து விஜய்...சூப்பரா எழுதியிருக்கீங்க

மேவி... said...

"ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே இந்த பிளாகெல்லாம் தெரிஞ்சிருந்தா, இந்தக் கவிதையில் ஏதாவது சுட்டு, ஏதாவது ஃபிகரைத் தேத்தியிருக்கலாம். "
நான் கூட காலேஜ் ல ....... லஞ்ச் டைம் ல ஒரு நாள் ஹோச்டேல் மெஸ் க்கு கூட போகம ஒரு கவிதை எழுதி ஒரு பொண்ணு கிட்ட கொடுத்தேன்..... ஆனா அவங்க அந்த பேப்பரை வேஸ்ட் பேப்பர் ன்னு நினைச்சு ..... சாப்பிட்ட பின் பெஞ்ச் துடைக்க உஸ் பண்ணிடாங்க.......

தாரணி பிரியா said...

எல்லாம் சரிதான். ஆனா இப்படி எழுதலைன்னா பதிவர் இல்லையாமே என்ன செய்ய :)? அதுதான்.

ஹை நானும் நீங்களும் ஒரே செட் (சேவிங் செட்டான்னு கேட்காதீங்க :). எங்க ஊருல குண்டு வெடிப்பு நடந்தப்ப நான் காலேஜ் பைனல் இயர்.

மேவி... said...

"திருநெல்வேலி கோவில்பட்டியில் ஏதாவது பொண்ணு கிட்ட பொது இடத்துல நின்னு சிரி்ச்சு பேசினாலே அவங்கப்பனோ அண்ணனோ அரிவாள தூக்கியாந்துருவானுங்க."
எங்க ஊர் பரவல போல ......
திருச்சி ல பொண்ணுக்கு அண்ணன்கள் எல்லாம் ஹாக்கி stick ஓட வந்து ......
நாம உடம்பை வச்சி MBBS படிச்சிட்டு போயிருவாங்க.....

மேவி... said...

tharani priyaa u there

மேவி... said...

"ஹை நானும் நீங்களும் ஒரே செட் (சேவிங் செட்டான்னு கேட்காதீங்க :). எங்க ஊருல குண்டு வெடிப்பு நடந்தப்ப நான் காலேஜ் பைனல் இயர்."
நான் அப்ப 7th நு நினைக்குறேன்

மேவி... said...

"மூன்றாம் ஆண்டு காதலர் தினத்தன்று மாரியம்மன் கோவி்லுக்குச் செல்லும் கூட்டம் மாதிரி நிறைய சிகப்புச் சட்டைகள். "
ஹ ஹ ஹ
பச்சை சட்டை தானே போட்டு இருக்குனும்....
என் சிகப்பு சட்டை

மேவி... said...

"காதல் ஜோடிகளைப் பார்ப்பதுமே ஒரு தனி கிக் தான்."
ஒத்து கொள்ளகிறேன் ... நீங்க யூத் தான்

மேவி... said...

"பெங்களூரில் காதல் செய்வது சற்றே காஸ்ட்லியான சமாசாரமானதால், யாருக்கும் பூ கொடுக்கவில்லை."
நானும் இங்க விலை விசாரிச்சேன்....
ஒரு ரோஜா 30 ரூபாய் யாம் ......

மேவி... said...

"(அப்படியே கொடுத்துட்டாலும், இவரு பின்னாடியே வந்துருவாங்க’ன்னு பி்ன்னாலிருந்து காயத்ரி குரல் கொடு்க்கிறாள்)"
ஹி ஹி ஹி ....
என் அண்ணியும் அண்ணன்கிட்ட இதே தான் சொன்னார்கள்

மேவி... said...

"ஆனால், காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்."
உண்மை தான்.... ஒத்துக்குறேன் ....
ஆமா இதுக்கு தியரி கிளாஸ் எல்லாம் உண்டா ?????

மேவி... said...

நல்ல பதிவு...... செம ஸ்பீட் ஆ இருக்கு பா

Anonymous said...

கடைசி நாலு லைன் நச் வார்த்தைகள் அண்ணே...

Anonymous said...

காதலா?!!! கல்யாணமுன்னு சொன்னாலே கட்டை விளக்கமாத்த தூக்கிகிட்டு வராளுக... இதுல காதலைப் பத்தி யோசிக்கறது கிடையாதுங்க...

Karthik said...

short and sweet.. thats vijay style!!!

Karthik said...

en bloga paarthu thaan inda comment ah?? :P

Karthik said...

ஸாரி விஜய், நானும் கவிதைதான் எழுதியிருக்கேன்.

superb post. :))

Anonymous said...

//காதலிப்பது தப்பா இல்லையான்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும்//

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க :-)
உங்களுக்கும் காய்த்ரிக்கும் அன்பர் தின நல்வாழ்த்துகள்!!!!

Vijay said...

\\ நசரேயன் said...
காதலித்தல்.... நினைக்கவே பயமா இருக்கு\\

காதலிப்பதனால் ஏற்படும் பின்விளைவை நினைத்தாலா?? :-)

\\Poornima Saravana kumar said...
எப்பிடி விஜய் இவ்வளவு சுவாரசியமா எழுதறிங்க...\\
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?

\\ Divyapriya said...
செம கருத்து விஜய்...சூப்பரா எழுதியிருக்கீங்க\\
பூர்ணிமாவுக்கு சொன்னது தான் உங்களுக்கும் :-)

\\MayVee said...
நான் கூட காலேஜ் ல ....... லஞ்ச் டைம் ல ஒரு நாள் ஹோச்டேல் மெஸ் க்கு கூட போகம ஒரு கவிதை எழுதி ஒரு பொண்ணு கிட்ட கொடுத்தேன்..... ஆனா அவங்க அந்த பேப்பரை வேஸ்ட் பேப்பர் ன்னு நினைச்சு ..... சாப்பிட்ட பின் பெஞ்ச் துடைக்க உஸ் பண்ணிடாங்க......\\
ரொம்ப நாகரீகமான பொண்ணு :-)

\\தாரணி பிரியா said...
ஹை நானும் நீங்களும் ஒரே செட் (சேவிங் செட்டான்னு கேட்காதீங்க :). எங்க ஊருல குண்டு வெடிப்பு நடந்தப்ப நான் காலேஜ் பைனல் இயர்.\\
ஓ அப்படியா??

\\MayVee said...
"மூன்றாம் ஆண்டு காதலர் தினத்தன்று மாரியம்மன் கோவி்லுக்குச் செல்லும் கூட்டம் மாதிரி நிறைய சிகப்புச் சட்டைகள். "
ஹ ஹ ஹ
பச்சை சட்டை தானே போட்டு இருக்குனும்....
என் சிகப்பு சட்\\
பசங்கள்லாம் சிகப்பு சட்டை தான் போடணுமாமே? அது தான் புரோடோகாலாமே :-)

\\MayVee said...
"காதல் ஜோடிகளைப் பார்ப்பதுமே ஒரு தனி கிக் தான்."
ஒத்து கொள்ளகிறேன் ... நீங்க யூத் தான்\\
யப்பா நீ ஓத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் நான் யூத்து தான்பா :-)

\\Sriram said...
கடைசி நாலு லைன் நச் வார்த்தைகள் அண்ணே.\\
ஸ்ரீ ராம், ஏதேது போறபோக்குல எல்லாரும் “எங்கள் அண்ணா” விஜய்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவீங்க போலிருக்கே. விஜய்னே கூப்பிடலாம் :-)

\\Sriram said...
காதலா?!!! கல்யாணமுன்னு சொன்னாலே கட்டை விளக்கமாத்த தூக்கிகிட்டு வராளுக... இதுல காதலைப் பத்தி யோசிக்கறது கிடையாதுங்க.\\
காதலிக்கணுமேன்னு காதலிக்கக் கூடாது. காதலும் வராது. It should happen. எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அது ரொம்ப சுவாரஸ்யமானதொரு உணர்வு. என்ன நான் காதலிக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே என் காதலி இறந்து போய்விட்டாள் :-)

\\ Karthik said...
short and sweet.. thats vijay style!!\\
அப்படியா? நன்றிபா :-)

\\Karthik said...
ஸாரி விஜய், நானும் கவிதைதான் எழுதியிருக்கேன்.

superb post. :)\\
கார்த்திக், இந்த வயசுல கவிதை தான் எழுதணும் :-)

\\ இனியவள் புனிதா said...
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க :-)
உங்களுக்கும் காய்த்ரிக்கும் அன்பர் தின நல்வாழ்த்துகள்!!!!\\
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி புனிதா.

Ramya Ramani said...

\\ காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்\\

நெத்தி அடி :) Vijay -ishtyle ;)

Karthik said...

Naan ungal tag inda maasa endkulla poduren.. vaarthaikal kidaikka kastama irukku.. ippa thaan konja konjama thethi ullen!! thadangalukku varutham thozhare!!

Vijay said...

\\Ramya Ramani said...
\\ காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்\\

நெத்தி அடி :) Vijay -ishtyle ;)\\

ஹாய் ரம்யா, எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சு நீங்க பிளாக் எழுதி. ஏன் இந்த அஞ்ஞாத வாசம்???

புதியவன் said...

//காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்.//

காதல ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க விஜய்...

ஜியா said...

எப்போதுமே ப்ராக்டிக்கலா இருந்தா ஒரு சுவாரஷ்யம், கிக்லாம் இருக்காதுல்ல ;))

நான் கூட காதலர் தின போஸ்ட் போட்டிருக்கேன் என்று இங்கே சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :))

Lancelot said...

he he he he...nnaanum oru kavithai (tamil) oru post(english)la pottu iruken...ithu ellam saravana stores technic mathiri appo appo antha antha timekku thanguntha mathiri blog pottathan..mokkai valarum paarunga :P

உங்கள் ராட் மாதவ் said...

விஜய், காதலர் தினத்துக்கு நானும் ஒரு போஸ்ட் போட்டிருக்கேன். ஆனா நீங்க நினைக்குற மாதிரி இல்ல, வித்தியாசமா????????

kanagu said...

/*காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும்.*/

Sooooooooper.. arpudama solliteenga..

/*பெங்களூரில் காதல் செய்வது சற்றே காஸ்ட்லியான சமாசாரமானதால், யாருக்கும் பூ கொடுக்கவில்லை. (அப்படியே கொடுத்துட்டாலும், இவரு பின்னாடியே வந்துருவாங்க’ன்னு பி்ன்னாலிருந்து காயத்ரி குரல் கொடு்க்கிறாள்)*/

Unmai... Unmai... LOL... Kidding

முகுந்தன் said...

//(அப்படியே கொடுத்துட்டாலும், இவரு பின்னாடியே வந்துருவாங்க’ன்னு பி்ன்னாலிருந்து காயத்ரி குரல் கொடு்க்கிறாள்)
//

வெறும் குரல் தானா ? நான் மண்டை பொளந்திருக்கும்னு நினைத்து ஏமார்ந்தேன் :)