ரயில் பயணங்களில்
பீஹாரில் இருந்த 10 நாட்களில் ஒரு தமிழ்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. சென்னைக்காரர், பொறியியல் படித்தவர். அவருடைய போறாத வேளை, இங்கு வந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கி்ருந்து கிளம்பும் போது, ஸ்டேஷனுக்கு வந்து வண்டி்யேற்றிவிட்டார்.
இந்த மாதிரி டூர் போகும் போது, எப்போது கிளம்ப வேண்டும் என்று தெரியும். ஆனால் எப்போது திரும்புவோம் என்று தெரியாது. அதனால் எப்போதுமே ரிடர்ன் டிக்கட் கையில் இருக்காது. இதைப் பற்றி ஆஃபீஸில் கேட்டதற்கு, “வேலை முடிந்து கிளம்ப வேண்டிய நாளன்று, ஸ்டேஷன் வந்து ஒரு ஹௌரா என்று டிக்கட் எடுத்துக் கொள், ஏதாவது ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்; டிக்கட் பரிசோதகர் வந்தவுடன், ரிசர்வேஷன் டிக்கட்டாக மாற்றிக் கொள். பெரும்பாலும் இரண்டாவது ஏ.ஸி. வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள். ஏ.ஸி. கிடைக்கவிட்டால் இரண்டாம் கிளாஸ் ஸ்லீப்பர் வாங்கிக்கோ” என்று ஞானோபதேசம் செய்தார்கள்.
ஆஹா, இப்படியெல்லாம் கூட செய்யலாமா என்று வியப்பாக இருந்தது. “சரி, அப்படி எதிலுமே ரிசர்வேஷன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது” என்று கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கூலாக பதில் சொன்னார்கள். நாங்கள் பயணித்த வழித்தடம் அப்படி. ரயிலில் கண்டிப்பாக சில இருக்கைகள் காலியாக இருக்கும் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை தான்.
பிப்பர்வார் ஊர் மார்க்கட்டிலேயே கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட் பாக்கெட்களும், தண்ணீர் பாட்டில்களும் சில வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டேன். அடுத்த 5 மணி நேரத்துக்கு ஒன்றும் கிடைக்காது என்பதால். ரயிலில் ஏறி இரண்டு ஸ்டேஷன் கழித்தே டிக்கட் பரிசோதகரிடம் பேசி, இரண்டாம் ஏ.ஸி. கிடைத்துவிட்டது.
கையிலிருந்த பிஸ்கட்டையும் பழத்தையும் எவ்வளவு தான் சாப்பிடுவது. பர்காகானா என்ற இடத்தில் வண்டி ஒரு 20 நிமிஷம் நிற்கும், அங்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று காத்திருந்தேன். அந்த ஸ்டேஷனும் வந்தது. இறங்கிப் பார்த்தால் கும்மிருட்டு. ஒரு தள்ளுவண்டியில் ஒருத்தன் சப்பாத்தியும் சன்னா சப்ஜியும் விற்றுக் கொண்டிருந்தான். 7 சப்பாத்தியும் சப்ஜியும் 5 ரூபாய். என்ன கணக்கோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். இதாவது கிடைக்கிறதே என்று வாங்கி வாயில் போட்டால், ஐயோ கொடுமையிலும் கொடுமை. உப்பு உவர்ப்பு புளிப்பு கசப்பு இனிப்பு காரம் என்ற எந்தவித சுவையிலும் அடங்காத அப்படி ஒரு ருசி. ஒரு வாய்க்கு மேல் உள்ளே போக வில்லை. அப்படியே தூக்கிப் போட்டு விட்டேன். இதைப்பார்த்து ஒரு நாய் நாக்கில் எச்சிலூற ஓடிவந்தது, நான் தூக்கியெறிந்ததை ஸ்வாஹா செய்ய. அந்தப் பொட்டலத்தை முகர்ந்து பார்த்து விட்டு, ஒரு வாய் கூட வைக்காமல் ஓடி விட்டது. மனதுக்குள் என்னை என்ன திட்டிக் கொண்டதோ. ம்ஹூம் இங்கு கிடைக்கும் சாப்பாட்டை நாய் கூட உண்ண மறுக்கிறது. மக்கள் எப்படித் தான் அதை உண்ணுகிறார்களோ??!!
பெங்களூர் வந்த பிறகு அவ்வளவாக ரயிலில் பயணிக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை. திருநெல்வேலிக்கு உருப்படியாக ரயில் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஊருக்குப் போவதென்றால் பேரூந்து தான். மாலை 7.30 மணி வாக்கில் பேரூந்தில் ஏறி உட்கார்ந்தால் காலை 6.30 மணிக்குப் போய் விடலாம். ஏதாவது உறவினர் வீட்டிற்கு சென்னைக்குப் போகணும் என்றால் தான் ரயில் பயணம் என்றாகிவிட்டது. அப்படி வாய்த்தது தான் போன வாரம் சென்னைக்குச் சென்றது.
ஞாயிறு மாலை எனது கசினின் கல்யாண நிச்சயதார்த்தம் என்பதால், காலை ரயில் பிடித்து, சீட்டர் கிளாசில் சென்னைக்குப் பயணம் செய்தோம். வீட்டருகில் தான் கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன் இருப்பதால், அங்கேயே ஏறிக்கொள்ளலாம். ரயிலும் 6.50’க்கு வந்து விட்டது. என்ன கொடுமை பெட்டிக்குள்ளேயே போக முடியவில்லை, அவ்வளவு கூட்டம். கதவைக் கூடத் திறக்க முடியவில்லை, அவ்வளவு நெரிசல். அடித்துப் பிடித்து, முதலில் அம்மாவை உள்ளே அனுப்பி விட்டு, பிறகு ஏறிக் கொண்டேன். எங்களுடைய சீட்டிற்குப் போனால், அங்கே இருவர் உட்காரும் இடத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருக்கின்றனர். “எங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட சீட், தயவு செய்து வேறு இடத்திற்குப் போங்கள்” என்று கெஞ்சாத குறை.
அப்படியும் நான் சொல்வதை நம்பாமல், என் டிக்கட்டையெல்லாம் பார்த்த பிறகு வேண்டா வெறுப்பாக நகர்ந்து கொண்டனர். எங்கள் பெட்டியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. எல்லா ரிசர்வேஷன் பெட்டிகளுமே இதே நிலமை தான். ரிசர்வேஷன் செய்யாத டிக்கட் எடுத்துக் கொண்டு, ரிசர்வ்ட் பெட்டியில் ஏறிக் கொண்டு, கீழே நடக்கும் வழிகளில், ஏன் இரண்டு பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிபியூலிலும் உட்கார்ந்து கொண்டு அவ்வளவு பேர் பயணிக்கிறார்கள். காலைக் கூடே எங்கும் நீட்ட முடியாத நிலமை. அம்மா ரொம்பவே கஷ்டப் பட்டுப் போய்விட்டாள்.
ரிசர்வேஷன் செய்யப்படாத பெட்டிகளின் நிலை இன்னும் போசம். எங்களைச் சுற்றி ஒரே சல புல சல புலவென்று ஒரே சத்தம். சித்த நேரம் தூங்கக் கூட முடியவில்லை. டிக்கட் பரிசோதகர் வந்தார். முன் பதிவு செய்யாதவர்களெல்லாம் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். யாரும் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ரயிலில் முன் பதிவு செய்யாதவர்களெல்லாம் இப்படி அநாகரீகமாக ஏன் நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு முதலில் கோபம் வந்தது. பிறகு சற்று நேரம் கழித்து, பாவம், அவரவருக்கு என்னென்ன அவசரமோ, என்ன வேலையோ? இந்தப் பாழாப்போற பெங்களூர் சென்னை மார்க்கத்தில் எப்போதுமே முன் பதிவு டிக்கட் கிடைக்காது. அப்படியிருக்க, இந்த மார்க்கத்தில் இன்னும் அதிக ரயில் விட்டால் தான் என்ன என்று ரயில்வே அதிகாரிகள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இனி, பெங்களூர் சென்னை மார்க்கத்தில் பகல் நேரப் பயணம் கூடவே கூடாதடா சாமி என்று நினைத்துக் கொண்டேன்.

20 comments:
\\பிறகு சற்று நேரம் கழித்து, பாவம், அவரவருக்கு என்னென்ன அவசரமோ, என்ன வேலையோ?\\
ஆரோக்கியம்.
;-)
//அப்படியும் நான் சொல்வதை நம்பாமல், என் டிக்கட்டையெல்லாம் பார்த்த பிறகு வேண்டா வெறுப்பாக நகர்ந்து கொண்டனர்.//
:)
உம் ரிசர்வேசன் கம்பார்ட்மெண்ட் எல்லாம் இப்ப அன்ரிசர்வ் மாதிரிதான் இருக்கு.
என்னக்கு தெரியலங்க.... என்ன நான் எப்பொழுதுமே இரவு பயணம் தான்.....
இரவு பயணத்தில் ஒரு தொல்லை என்றால் இந்த அங்கிள் எல்லாம் துக்கம் வராம....
நம் துக்கத்தையும் கெடுத்து..... அவங்க கதையை சொல்ல்வங்க.....
"இனி, பெங்களூர் சென்னை மார்க்கத்தில் பகல் நேரப் பயணம் கூடவே கூடாதடா சாமி என்று நினைத்துக் கொண்டேன்."
எங்க அண்ணன் பெங்களூரில் பல வருடங்கள் முன் இருந்தபோதும் இதே தான் சொல்லி கொண்டு இருப்பார். இன்னுமா அந்த நிலைமை அப்படியே இருக்கு....
அது என்ன நாம் ட்ரெய்னில் போகும்போது மட்டும் 'மேக்னா' மாதிரி பொண்ணுங்க வர மாட்டேங்குறாங்க? கிடார் எடுத்துட்டு போகனுமோ?
ம்ஹூம் இங்கு கிடைக்கும் சாப்பாட்டை நாய் கூட உண்ண மறுக்கிறது. மக்கள் எப்படித் தான் அதை உண்ணுகிறார்களோ??!!
:-)
// ம்ஹூம் இங்கு கிடைக்கும் சாப்பாட்டை நாய் கூட உண்ண மறுக்கிறது. //
அண்ணே ... நாயை விஷம் வைத்து கொன்ன பாவத்துக்கு ப்ளூ கிராஸ் அமைப்பிடமிருந்து மாடிக் கொள்ளாமல் வேறு தப்பித்து சாகசம் செய்திருக்கிறீர்கள் போங்க...
//பிறகு சற்று நேரம் கழித்து, பாவம், அவரவருக்கு என்னென்ன அவசரமோ, என்ன வேலையோ?//
வசூல்ராஜா MBBS பார்த்த effect!!
:)))
\\ இனியவள் புனிதா said...
:-)\\
ரொம்ப மொக்கையைப் போட்டுட்டேனோ. கஷ்டப்பட்டு ஒரு ஸ்மைலீ போட்டிருக்கீங்க! :-(
\\அமைதி ரயில் said...
pls visit and give your feedback
http://peacetrain1.blogspot.com/\\
வருகைக்கு ரொம்ப நன்றி. உங்கள் வலைதளத்திற்கு சீக்கிரமே விசிட் செய்கிறேன்.
\\ நட்புடன் ஜமால் said...
\\பிறகு சற்று நேரம் கழித்து, பாவம், அவரவருக்கு என்னென்ன அவசரமோ, என்ன வேலையோ?\\
ஆரோக்கியம்.\\
நன்றிங்கண்ணா :-)
\\ தாரணி பிரியா said...
//அப்படியும் நான் சொல்வதை நம்பாமல், என் டிக்கட்டையெல்லாம் பார்த்த பிறகு வேண்டா வெறுப்பாக நகர்ந்து கொண்டனர்.//
:)
உம் ரிசர்வேசன் கம்பார்ட்மெண்ட் எல்லாம் இப்ப அன்ரிசர்வ் மாதிரிதான் இருக்கு.\\
எப்போதும் அப்படி இருக்கறதில்லை. சில நாட்கள் அதுவும் பகல் நேர ரயில்களில் தான் இப்படி என்று நினைக்கிறேன்.
\\ MayVee said...
"இனி, பெங்களூர் சென்னை மார்க்கத்தில் பகல் நேரப் பயணம் கூடவே கூடாதடா சாமி என்று நினைத்துக் கொண்டேன்."
எங்க அண்ணன் பெங்களூரில் பல வருடங்கள் முன் இருந்தபோதும் இதே தான் சொல்லி கொண்டு இருப்பார். இன்னுமா அந்த நிலைமை அப்படியே இருக்கு....\\
சில நாட்கள் தான் இப்படி கூட்டம் ஜாஸ்தியா இருக்குமாம். கூட வந்தவர் சொன்னார்.
\\ Karthik said...
அது என்ன நாம் ட்ரெய்னில் போகும்போது மட்டும் 'மேக்னா' மாதிரி பொண்ணுங்க வர மாட்டேங்குறாங்க? கிடார் எடுத்துட்டு போகனுமோ?\\
ஆமாம் பா. நானும் எப்ப ட்ரெயின்ல போனாலும் ஒரு ஃபிகர் கூட சிக்கியதில்லை. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை இருக்கணும் :-(
\\ Sriram said...
அண்ணே ... நாயை விஷம் வைத்து கொன்ன பாவத்துக்கு ப்ளூ கிராஸ் அமைப்பிடமிருந்து மாடிக் கொள்ளாமல் வேறு தப்பித்து சாகசம் செய்திருக்கிறீர்கள் போங்க...\\
ஆஹா, இப்படி கூட யோசிப்பாய்ங்களோ :-(
ஸ்ரீ ராம், உங்க வலைப்பதிவு படித்தேன். ENjoyed a lot :-)
\\முகுந்தன் said...
//பிறகு சற்று நேரம் கழித்து, பாவம், அவரவருக்கு என்னென்ன அவசரமோ, என்ன வேலையோ?//
வசூல்ராஜா MBBS பார்த்த effect!!\\
இப்படி என்னை தாதா ஆக்கியிருக்க வேண்டாம் :-(
\\ gayathri said...
:)))\\
ரொம்ப கஷ்டபட்டு படிச்சிருக்கீங்க போலிருக்கு. மொக்கை போட்டதற்கு மன்னிக்கவும்.
பயணம் நல்லா இருக்கு
//ஒரு வாய் கூட வைக்காமல் ஓடி விட்டது//
ஹா ஹா :D உண்மையிலேயே கொடுமை தான் :)
//இனி, பெங்களூர் சென்னை மார்க்கத்தில் பகல் நேரப் பயணம் கூடவே கூடாதடா சாமி//
சதாப்தியில் போகலாமே…
\\ நசரேயன் said...
பயணம் நல்லா இருக்கு\\
கருத்துக்கு ரொம்ப நன்றி, நசரேயன். உங்க பதிவுகள் நிறைய படித்திருக்கேன்.
\\Blogger Divyapriya said...
சதாப்தியில் போகலாமே…\\
அம்மணி, இது ரிசெஷ்ஷன் நேரம். அதனால் சுவல்ப சிக்கன, அஷ்டே :-)
ungaloda podhu nalatha paaratugiren.. aana avanga panrathu epdi panrathu romba thappunga...
To be frank.. mudhal pagudhi la irundha viruviruppu ithula illanga.. innum knjam suvarasiyamana nigalvugala potturukkalam :)
\\kanagu said...
To be frank.. mudhal pagudhi la irundha viruviruppu ithula illanga.. innum knjam suvarasiyamana nigalvugala potturukkalam :)\\
You are 200% correct. :-)
நான் எழுதுவதை (சரி புலம்புவதை) கொஞ்சம் நேரம் செலவழித்துப் படிப்பவர்களின் நேரத்தை மதித்து எழுதணும், (சாரி புலம்பணும் :-)
Vaaranam aayiram maadiri edhavadhu ponnu paartheengala??
Hi.. I'm Vijay... naa idha solliye aaganum... neenga avalavu alagu....
//7 சப்பாத்தியும் சப்ஜியும் 5 ரூபாய். //
idhulaye ungalukku milda oru sandegam vandu irukka venaam??
//இதைப்பார்த்து ஒரு நாய் நாக்கில் எச்சிலூற ஓடிவந்தது, நான் தூக்கியெறிந்ததை ஸ்வாஹா செய்ய. அந்தப் பொட்டலத்தை முகர்ந்து பார்த்து விட்டு, ஒரு வாய் கூட வைக்காமல் ஓடி விட்டது. மனதுக்குள் என்னை என்ன திட்டிக் கொண்டதோ.//
Ha ha.. typical Vijay's touch
Naa rayil payaname seidadilla... bus thaan
\\ Karthik said...
Naa rayil payaname seidadilla... bus thaan\\
YOu have missed a lot in life :-)
Post a Comment