Pages

October 15, 2008

எப்போது காதல் வந்தது

எண்ணிப் பார்க்கிறேன் நான், எப்போதடி
உன் மேல் எனக்குக் காதல் வந்ததென்று
என்னை மிகவும் பிடிக்கும் என்றாயே
அப்போதுன்மேல் காதல் வந்ததா
என் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
வசீகரமான உன் முகத்தைப் பார்த்த நாளன்று
உன் மேல் கண்டதும் காதல் வந்ததா
எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடித்திருக்கிறதே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
என் தாயை 'அம்மா' என்றழைத்தாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
என் நலனுக்காக நீ வேண்டிக்கொண்டாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
என் வேலையில் நீ எனக்கு உதவினாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
இல்லையடி இல்லை.
என் விருப்பத்திக்கேற்ப நீ நடந்த போதெல்லாம்
உன் மேல் காதல் வரவில்லை
உன் விருப்பத்திக்கேற்ப நானும் இருக்க
வேண்டும் என்றெண்ணிய போது உணர்ந்தேனடி
உன் மேல் எனக்கு காதல் வந்ததென்று

17 comments:

தாரணி பிரியா said...

அழகான கவிதைவரிகள்.
எனக்கு கவிதையே எழுத தெரியாதுன்னு சொல்லவேண்டியது. அப்புறம் சூப்பரா கவிதை எழுத வேண்டியது.

Vijay said...

தாரணி ப்ரியா,
ட்சத்தியமா எனக்கு கவிதையெல்லாம் எழுதத் தெரியாதுங்க.
இது திடீர்னு என் மனசுல தோணிச்சு, அதான் எழுதிப்புட்டேன்.

பாராட்டுக்கு நன்றி. என்ன சூப்பரா கவிதை எழுதறவங்க இதைப் படிச்சா, "இது ஒரு கவிதை, இதுக்கு ஒரு பாராட்டு வேற. என்ன கொடுமி சரவணன் இது"ன்னு நினைச்சுபாங்க.

Divyapriya said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கே!!! சொந்த கதையோன்னு தோனுற அளவுக்கு நல்லா இருக்கு ;)

Divyapriya said...

//இது ஒரு கவிதை, இதுக்கு ஒரு பாராட்டு வேற. என்ன கொடுமி சரவணன் இது//

கொடுமி? என்ன கொடுமை விஜய் இது ;)

Vijay said...

பாராடுக்களுக்கு நன்றி திவ்யப்ரியா. இது சொந்தக் கதை சோகக்கதையெல்லாம் இல்லை. கற்பனைக்கவிதை. அவ்வளவு தான். இருந்தாலும் உங்களை மாதிரியெல்லாம் கவிதையெழுத முடியாது.

முகுந்தன் said...

Amazing Vijay.....

இதை போய் மொக்கை கவிதைனு label போட்டிருக்கீங்களே ....

கார்த்திகா said...

I agreed with Mukundhan.

Vijay said...

முகுந்தன்,
இதுல கவித்துவமா எதுவுமே இல்லை. எதுகை மோனை, யாப்பு இதெல்லாம் எதுவுமே இல்லை. அப்படியிருக்க இது மொக்கை கவிதை இல்லாம வேறென்ன.

நேராக எழுதுவதை மடிச்சு மடிச்சு எழுதினா, கவிதையாகிவிடும்'னு ஒரு வலையுலக நண்பர் தான் சொன்னார். அதான் ட்ரை பண்ணிப்பார்த்தேன். பரவாயில்லை, சுமாராவே இருக்கு.

Vijay said...

\\karthika said...
I agreed with Mukundhan.\\

ஹலோ மேடம்,எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளா ஆளே காணோம். செமஸ்டர் லீவு விட்டாச்சா? கருத்துக்கு நன்றி.

ஜியா said...

:))) hmmm... aduththa kavujar ready.... pottu thaakkunga..

MSK / Saravana said...

//ஜி said...

:))) hmmm... aduththa kavujar ready.... pottu thaakkunga..//

RIPPEETTU.. :))

MSK / Saravana said...

//தாரணி பிரியா said...

அழகான கவிதைவரிகள்.
எனக்கு கவிதையே எழுத தெரியாதுன்னு சொல்லவேண்டியது. அப்புறம் சூப்பரா கவிதை எழுத வேண்டியது.//

ரிப்பீட்டு..

MSK / Saravana said...

//முகுந்தன் said...
Amazing Vijay.....
இதை போய் மொக்கை கவிதைனு label போட்டிருக்கீங்களே ....//

ரிப்பீட்டு..

Vijay said...

ஜி, கருத்துக்கும் வருகைக்கு நன்றி.

Vijay said...

சரவணகுமார், நீங்க சொன்னா சரி தான்.

Divya said...

Varey vahhhhhhhhhhhhhh!!!!!!!!!!!!!

kavithai superuuuuuuuuuuuuuuu Vijay:)))

ivlo nalla kavithiramai vaichindu than ivlo naal kavithai eluthama iruntheengla???


keep writing such kavithais Vijay,

Kavithai romba romba nala iruku:))

Vijay said...

\\divya said...
Varey vahhhhhhhhhhhhhh!!!!!!!!!!!!!

kavithai superuuuuuuuuuuuuuuu Vijay:)))

ivlo nalla kavithiramai vaichindu than ivlo naal kavithai eluthama iruntheengla???


keep writing such kavithais Vijay,

Kavithai romba romba nala iruku:))\\

ரொம்ப நன்றி திவ்யா.