Pages

October 09, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1

தினைந்து இருபது வருடங்களுக்கு முன் வந்த கேபிள் தொலைக்காட்சி, எல்லோரையும் திகைக்க வைத்தது. தூர்தர்ஷனின் தயவிலேயே பொழுது போக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒரு பெரிய வரப்பிரசாதம். கிரிக்கெட் மேட்சா தூர்தர்ஷன் மனது வைத்தால் தான் பார்க்க முடியும். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியா, ஒளியும் ஒலியையும் ஞாயிற்றுக்கிழமை அவர்களாக மனது வைத்து ஏதாவது நல்லதொரு படத்தைப் போட்டால் தானுண்டு. ஒன்பது மணிக்கெல்லாம் டில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைத் தான் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரி மக்களை தனது விருப்பத்திக்கேற்ப பொழுது போக்குமாறு தூர்தர்ஷன் நாட்டையே கட்டுப்படுத்தி வைத்திருந்தபோது தான் சாடிலைட் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, கேபிள் மூலம் அதை வீடுகளுக்குக் கொண்டு சென்று மக்களின் தொலைக்காட்சி பர்க்கும் அனுபவத்திற்கு புதிய பரிணாமம் கொடுக்கத் துவங்கினார்கள். இருபத்திநாலு மணி நேரமும் தொலைக்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், செய்திகளுக்காக, சினிமாப் படங்களுக்காக, பல்சுவை நிகழ்ச்சிக்காக என நிறைய சானல்கள் கொண்டு வந்தார்கள்.
அப்பாடா இனிமேல் இந்த தூர்தர்ஷனை நம்பி பொழுது போக்க வேண்டாம் என்று நாமெல்லாம் நினைத்த போது தான், பேரிடியாக வந்தது பே (pay) சானல்கள். வீடொன்றிற்கு இவ்வளவு ரூபாய் சந்தா செலுத்தவேண்டுமென கேபிள் ஆபரேடர்களை நிர்பந்திக்க ஆரம்பித்தார்கள். கேபிள் ஆபரேடர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி இது போன்ற கட்டண சானல்களுக்கு அல்வா கொடுப்பர்கள். அதாவது, ஒரு கேபிள் ஆபரேடர் 100 வீடுகளுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறார்களென்றால், 60-70 வீடுகளுக்குத்தான் இணைப்பு கொடுத்திருக்கிறோம் என்று சொல்லிவிடுவார்கள். ESPN வீடொன்றிற்கு 10 ரூபாய் வேண்டுமென்று சொன்னால், கேபிள் ஆபரேடர்கள், 1000 ருபாய்க்கு பதில் வெறும் 600-700 ரூபாய் தான் செலுத்துவார்கள். இப்படி நேயர்களுக்கும் சானல்களுக்கும் நடுவில் இருந்து கொண்டு இவர்கள் செய்யும் தில்லு முல்லுக்கு அளவே கிடையாது. சில சமயம் சந்தா செலுத்தாமல் இழுத்தடிப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், கட்டணம் செலுத்தாத கேபிள் ஆபரேடர்களுக்கு தங்களது சிக்னலை இந்த கட்டண தொலைக்காட்சிகள் துண்டித்துவிடுவார்கள்.

அதெப்படி, செயற்கைக்கோளிலிருந்து நேராக ஒரு கேபிள் ஆபரேடர் பொருத்தியிருக்கும் டிஷிற்குச் செல்லும் சிக்னலை எப்படிச் செயலிழக்கச் செய்ய முடியும்?
ஒவ்வொரு கட்டண சானலும் தனது சிக்னல்களை என்க்ரிப்ட் செய்து செயற்கைக்கோள் மூலமாக அலைபரப்புவார்கள். சாதாரண டிஜிடல் டிகோடர் கொண்டு அவைகளை டிகோட் செய்து கேபிள் மூலமாக வீடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது. தங்களது சிக்னல்களை டிகோட் செய்வதற்கு அவர்களிடமிருந்து பிரத்தியேகமாக ஒரு இயந்திரம் வாங்கியாக வேண்டும். இது செட்-டாப்-பாக்ஸ் போன்றதொரு கருவியாகும். கொஞ்சம் அதிக ஆற்றல் படைத்த செட்-டாப்-பாக்ஸ் என்று வைத்துக்கொள்ளலாம். அதன் கூட ஒரு ஸ்மார்ட் கார்டும் கொடுத்து விடுவார்கள். இந்த கேபிள் ஆபரேடருக்கு இந்த ஸ்மார்ட் கார்ட் என்று ஒரு டேடாபேஸ் வைத்திருப்பார்கள். அந்த ஸ்மார்ட் கார்டில் தான் இந்த சிக்னல்களை டி-க்ரிப்ட் செய்ய வேண்டிய சாவிகள் இருக்கும். மேலும் இந்த பாக்ஸ் அந்த சிக்னல்களை டி-க்ரிப்ட் செய்யலாமா வேண்டாமா என்ற விவரமும் இருக்கும்.
ஒரு கேபிள் ஆபரேடர் ஒழுங்காக சந்தா செலுத்தவில்லையென்றால், அந்த செட்-டாப்-பாக்ஸிற்காக பிரத்தியேகமாக ஒரு அலையை உண்டு பண்ணி, இந்த சிக்னலை இந்த பாக்ஸ் டிகோட் செய்யக்கூடாது என்ற விவரத்தை அந்த ஸ்மார்ட் கார்டிலே பதிந்து வைத்து விடுவார்கள். இப்படி செய்த பிறகு, அந்த செட்-டாப்-பாக்ஸால், கட்டண சானல்களின் அலைகளை டிகோட் செய்ய முடியாது. இந்த கேபிள் இணைப்புக் கொடுத்திருக்கும் வீடுகள் அந்த சானல்களைப் பார்க்கவும் முடியாது. கேபிள் ஆபரேடர் செய்யும் தவறுக்கு மக்கள் பணயமாக்கப்படுகிறார்கள்.
நாம் இது ஒன்றும் தெரியாமல் கேபிள் ஆபரேடரிடம் போய், "அண்ணேன், ESPN தெரியமாட்டேங்குதுண்ணே. மேட்ச் நடக்குத்துண்ணே" என்று சொல்லுவோம். "தம்பி, திடீர்னு ESPN சந்தாத் தொகை கூடுதலா கேக்கறான். அதான் தெரியமாட்டேங்குது. நான் என்ன பண்ணட்டும்" என்று பழியை ESPN மீது போட்டு விடுவார்கள்.
இப்படி நாம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் செய்வது கேபிள் ஆபரேடர் மட்டும் தானா? தங்களது லாபம் பெருகுவதற்காக கட்டண சானல்கள் செய்யும் தில்லும்முல்லுகளென்னென்ன? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

14 comments:

Divyapriya said...

me the first :))

Divyapriya said...
This comment has been removed by the author.
Divyapriya said...

ஹா...என்ன ஒரு தொடர்...வாழ்த்துக்கள்...நாங்க 250 rs pay பண்றோம் :(

முகுந்தன் said...

Vijay,

very good article and informative.

Saravana Kumar MSK said...

இந்த மாதிரியான பதிவு எழுத ஆரம்பிச்சிடீங்க.. கிரேட் விஜய்.. கண்டினியு.. கண்டினியு..

Saravana Kumar MSK said...

வாழ்த்துக்கள் :)

ஜி said...

:))) Technical explanation is awesome...

விஜய் said...

\\ divyapriya said...
ஹா...என்ன ஒரு தொடர்...வாழ்த்துக்கள்...நாங்க 250 rs pay பண்றோம் :( \\

This is the bane of Indian consumers. Thanks to Government Apathy :(

விஜய் said...

\\முகுந்தன் said...
Vijay,

very good article and informative\\

Thanks a lot for your support Mukundan.

விஜய் said...

\\saravana kumar msk said...
இந்த மாதிரியான பதிவு எழுத ஆரம்பிச்சிடீங்க.. கிரேட் விஜய்.. \\

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சரவணகுமார் :)

\\ஜி said...
:))) Technical explanation is awesome...\\

At times, the engineer in wakes up and prompts me to write something like this. Thanks for your Appreciation Ji.

தாரணி பிரியா said...

எங்க ஊருல எல்லாம் எங்க கேபிள் ஆபரேட்டருக்கு பிடிச்ச சேனல்தான் நாங்களும் பார்க்கமுடியும். :(

புனித் கைலாஷ் said...

ஹாய் விஜய்!
நல்ல இருக்கு... இது வரை தெரியாத விஷயங்கள்..
என்னங்க விஜய், சன் டிவி ல வர "சிறப்பு பார்வை" (அதன் நியூஸ் ரொம்ப இல்லேன்னா போடுவாங்களே) லெவல் க்கு அசத்துறீங்க!

அன்புடன்,
புனித்

விஜய் said...

ரொம்ப நன்றி புனீத். இது ஒரு பெரிய தொடரா வரப்போகுது. தொடர்ந்து படிங்க.

Subbu said...

Vijay,
Enna officela panre velaya ezhuthittenga...

I remember DD days.. if a leader dies during Diwali/NewYear.. 3-4 days ore Soga geetham than.. Thank god we have overcome that problem.

But recently i am watching DD for quality programs while channel surfing ;)