Pages

October 12, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2


நாம் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகள் இப்படி திடீரென்று துண்டிக்கபடுவது இன்று ரொம்பவே இயல்பாகிவிட்ட நிலமை. பொதுவாக நாம் கேபிள் ஆபரேடர் ஒழுங்காக சந்தா செலுத்தாது தான் காரணம் என்று நாம் எண்ணுவொம். ஆனால், தனது லாபத்தைப் பெறுக்கிக் கொள்ள இந்த கட்டண தொலைக்காட்சிகள் செய்யும் தில்லுமுகளும் நிறைய. உதாரணத்திற்கு, ஒரு முக்கியமான விளையாட்டுத் தொடர் தொடங்குவதற்கு முன், வேண்டுமென்றே மாதச் சந்தாவை கூட்டி விடுவார்கள். கேபிள் ஆபரேடர்கள் இவ்வளவு தர முடியாது என்று பேரம் பேசுவார்கள். இந்த இழுபரியில் தத்தளிப்பவர்கள், நம் போன்ற சாதாரண மக்கள். இவர்கள் பேசி முடிவதற்குள் பாதி தொடர் முடிந்து விடும்.
சானல்களும் கேபிள் ஆபரேடர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை CAS மூலம் கட்டுப்படுத்தலாம். CAS என்றால் Conditional Access System. இந்த திட்டத்தை முதன் முதலில் அமல் படுத்திய பெருமை சென்னைக்குச் சேரும். இந்த திட்டத்தை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அதற்கு இப்போது எல்லோருக்கும் அறிமுகமாகிவிட்ட செட்-டாப்-பாக்ஸ் தேவை.

இந்த மூலம் கேபிள் ஆபரேடர்கள் செய்யும் தில்லுமுல்லுகளிடமிருந்து ஓரளவேனும் பிழைக்கலாம். "அதெப்படி செட்-டாப்-பாக்ஸ் வாங்கி டி.வி பார்ப்பது கூடுதல் செலவு தானே" என்று சிலர் கேள்வியெழுப்பலாம். நியாயம் தான். ஆனால், இந்த செட்-டாப்-பாக்ஸ் என்பது தற்காலிக தீர்வு இல்லையே. இது ஒரு Long term solution. இதன் பலன் மெதுவாகத்தான் தெரியும்.

இன்று நமது வீட்டுக்கு வரும் சானல்களின் எண்ணிக்கை நமக்கே தெரியாது. நாம் விரும்பிப்பார்ப்பதென்னவோ 10-15 தான். ஆனால் வருவதென்னவோ 100+ சானல்கள். இதில் பாதிக்குப் பாதி கட்டண சானல்கள் வேறு. இவ்வளவு சானல்களும் நாம் கேட்கவில்லையே. நாம் கேட்காமலேயே இவ்வளவு சானல்கள் இவ்வளவு சான்ல்கள் நன் வீடு தேடி வந்தாலும், கேபிள் ஆபரேடர் கட்டண சானல்களுக்கு சந்தா செலுத்தித் தான் ஆகவேண்டும். அதனால், அந்த தொகையை நம் மேல் சுமத்தி விடுவார்கள்.

சரி செட்-டாப்-பாக்ஸ் வைத்திருந்தால், இந்தத் தொல்லையிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்? செட்-டாப்-பாக்ஸோடு ஸ்மார்ட் கார்ட் என்ற கருவியும் இருந்தால் மட்டுமே கட்டண சானல்களைப் பார்க்க முடியும். எவ்வளவு செட்-டாப்-பாக்ஸ் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பேருக்குண்டான சந்தாவை கேபிள் ஆபரேடர்கள் கட்டண சானல்களுக்குச் செலுத்த வேண்டும். இதனால், கேபிள் ஆபரேடர்களால் தில்லுமுல்லுவில் ஈடுபட முடியாது. செட்-டாப்-பாக்ஸ் வைத்திருந்தால் இன்னொரு வசதி, துல்லியமான படங்களைப் பார்க்கலாம். செட்-டாப்-பாக்ஸிற்கு வருவது டிஜிடல் அலைகள். அதனால் படங்கள் மிகவும் துல்லியமாகத் தெரியும்.

செட்-டாப்-பாக்ஸ் இல்லாதவர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக ஒளிபரப்பப்படும் சானல்கள் மட்டும் கிட்டும். இந்திய ஆகாயத்தை உபயோகப்படுத்தும் அனைத்து சானல்களும் சில விதிமுறைகளுக்குட்பட வேண்டும். செய்திகள் போன்ற சானல்கள் கட்டணசானல்களாக இருக்க முடியாது.
சரி செட்-டாப்-பாக்ஸ் வைத்து விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விட்டதா? இன்னமும் நமக்கு வேண்டாத எத்தனையோ சானல்கள் நம் வீடு தேடி வந்து கொண்டிருப்பதை நம்மால் தடுக்க முடியவில்லையே. அது ஏன்?
கேபிள் ஆபரேடர்கள் சானல் ஒளிபரப்பாளர்களிடமிருந்து நேரடியாக சிக்னல் அலைகளை வாங்கி வீடுகளுக்குக் கொண்டு வருவதில்லை. இந்தக் கேபிள் ஆபரேடர்களுக்கும் சானல்காரர்களுக்கும் இடையில் ஒரு இடைத் தரகர் இருக்கிறார். அவர்கள் MSO என்று அழைக்ப்படுகிறார்கள். MSO என்றால் Multi Services Operator. இவர்கள் தான் சானல்களிடம் நேரடி தொடர்பு வைத்திருப்பவர்கள். இவர்கள் தான் டிஷ் ஆன்டென்னா பொருத்தி, செயற்கைக்கோளிலிருந்து சானல்களின் அலைகளை இறக்கம் செய்து, அவைகளை வீடுகளுக்கு சப்ளை செய்யும் கேபிள் ஆபரேடர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

சன் டி.வி நடத்தும் சுமங்கலி கேபிள் விஷன், ஹாத்வே, இப்போது அழகிரி ஆரம்பித்திருக்கும் ராயல் கேபிள் விஷன், அரசு கேபிள் எல்லோருமே MSOக்கள் தான். சில கட்டண தொலைக்காட்சிகள் தெரியாதிருப்பதற்கு இந்த MSO'க்களே காரணம். இவர்கள் தான் கட்டண சானல்களிடம் பேரம் பேசுபவர்கள். வீடுகளுக்கு சிக்னல்களை ஆம்ப்ளிஃபை செய்து கொண்டு செல்லும் கேபிள் ஆபரேடர்கள் இவர்களின் சப்-டீலர்கள் என்று சொல்லலாம்.

இந்த MSO'க்கள் மனது வைத்து கொடுக்கும் சானல்களைத் தான் பார்த்தாக வேண்டும். அரசியல் ரீதியாக, அவர்களுக்கு ஒரு சானல் பிடிக்கவில்லையென்றல், அதைத் தர மாட்டார்கள். சில தினங்களுக்கு முன் மதுரையில் சன் டி.வி சுத்தமாக இருட்டடித்துப் போனதற்குக் காரணம், ஒரு குறிப்பிட்ட MSO தனது அரசியல் ஆதாயத்திற்காக சன் டி.வி.யின் சிக்னல்களை கேபிள் ஆபரேடர்களுக்குக் கொடுக்காதது தான் காரணம். அதே போல் 2 வருடங்களுக்கு முன் தமிழகம் முழுவதிலும் ESPN Start Sports தெரியாதிருக்கக் காரணம், மொத்தத் தமிழ் நாட்டின் கேபிள் ஆபரேடர்களுக்கு சிக்னல் சப்ளை செய்த சுமங்கலி கேபிள் விஷனுக்கும் அந்த சானல்களுக்கு நடந்த சந்தா பேரம் தோல்வியடைந்ததால் தான். சென்னையில் யார் யார் வீட்டில் செட்-டாப்-பக்ஸ் வைத்திருந்தார்களோ அவர்கள் மட்டும் பிழைத்தார்கள்.


செட்-டாப்-பாக்ஸ் வைத்திருந்தாலும் நமக்கு வேண்டாத சானலெல்லாம் நம் வீடு தேடி அழையா விருந்தாளியாக வந்து விடும். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நாம் கேபிள்காரர்களுக்கு அழ வேண்டும். "அப்போ செட்-டாப்-பாக்ஸ் வச்சிருந்தா, கேபிள் சந்தா குறையும்னு சொல்லறாங்களே அதெல்லாம் புருடா தானா"ன்னு கேக்கறீயளா? அதுல ஒரு டெக்னிகல் சிக்கல் இருக்கு. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

[தொடரும்]

9 comments:

தாரணி பிரியா said...

hai me the first

தாரணி பிரியா said...

எனக்கு பொதுவா டெக்னிக்கல் விஷயம்னா கண்ணை கட்டும். ஆனா நீங்க தெளிவா எல்லாத்துக்கும் புரியற மாதிரி ஈஸியா சொல்லறீங்க விஜய்.

Vijay said...

\\தாரணி பிரியா said...
எனக்கு பொதுவா டெக்னிக்கல் விஷயம்னா கண்ணை கட்டும். ஆனா நீங்க தெளிவா எல்லாத்துக்கும் புரியற மாதிரி ஈஸியா சொல்லறீங்க விஜய்\\

தாரணி ப்ரியா,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

Divyapriya said...

MSO கள் பண்ணும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை :((
அருமையா இருக்கு உங்க தொடர்…வாழ்த்துக்கள்

Vijay said...

\\ divyapriya said...
MSO கள் பண்ணும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை :((
அருமையா இருக்கு உங்க தொடர்…வாழ்த்துக்கள்\\

உண்மை தான். என்ன பண்ணுவது? இந்த க்கள் இல்லாமல், எப்படி டெக்னாலஜி நமக்கு உதவ முடியும் என்று சொல்லுவது தான் இந்தத் தொடரின் நோக்கம். ப்ளீஸ் தொடர்ந்து படியுங்க. படிச்சு உங்க எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முகுந்தன் said...

Vijay ,

எளிய நடையில் அற்புதமான தொடர்!!!

Vijay said...

முகுந்தன் கருத்துக்கு நன்றி!!

ஜியா said...

Annaachi... technical details semaiyaa irukkuthu... thodarnthu kalakkunga :))

Vijay said...

\\ஜி said...
Annaachi... technical details semaiyaa irukkuthu... thodarnthu kalakkunga :)\\

கருத்துக்கு நன்றி ஜி.