அநியாயம், அக்கிரமம், அட்டுழியம்!! ஆஃபீஸில் வலைப்பதிவையெல்லாம் படிக்க விடாமல் வேலை வேலை என்று கடந்த இரண்டு வாரங்களாக கும்மு கும்மு என்று கும்மி விட்டார்கள். இதனால், நான் விரும்பிப் படிக்கும் பதிவுகளை வீட்டுக்கு வந்து படித்து, 20-25 பேர் பின்னுட்டம் எழுதிய பிறகு தான் என்னால் எழுத முடிகிறது.
வலையில் ஏதோ மேய்ந்து கொண்டிருந்தபோது, www.anyindian.com என்ற வலைத்தளம் கண்ணில் பட்டது. நிறைய தமிழ் புத்தகங்களை இணையதளத்திலேயே வாங்கலாம். சரி அப்படியென்ன தான் இருக்கிறது என்று நோட்டம் விட்ட போது 30 ஆண்டுகளாக கணையாழி என்ற பத்திரிகையில் சுஜாதா எழுதின கட்டுறைகளடங்கிய புத்தகம் கண்ணில் பட்டது. சுஜாதாவின் சீடரான தேசிகன் முப்பது வருடங்களாக சுஜாதா எழுதின கட்டுறைகளை (கணையாழியின் கடைசிப்பக்கங்கள் என்ற பெயரில்) சேகரித்து வெளியிட்டிருக்கிறார். உடனே ஆர்டர் செய்து விட்டேன். கூடவே சோ (துக்ளக் சோவே தான்) மஹாபாரதம் பேசுகிறது என்ற இரு புத்தகத்தையும் வாங்கி விட்டேன். ஆர்டர் செய்த இரண்டாவது தினமே வீட்டிற்கு கூரியர் வந்து விட்டது.
கணையாழியின் கடைசிப்பக்கங்கள் தான் எவ்வளவு ஸ்வாரஸ்யம். சுஜாதா பிளாக் எழுதியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். இன்னும் முழுதாகப் படிக்கவில்லை.
சோ எழுதிய மஹாபாரதம் பேசுகிறது கூட ஒரு வித்தியாசமான புத்தகம் தான். எனக்கு சிறு வயதில் ராஜாஜி எழுதிய மஹாபரதம் புத்தகம் பரிசாகக் கிடைத்தது. அதைப் படித்த போது பாரதக்கதை சொல்லிருந்தாரேயன்றி அதை ஆராயவில்லை. ஆனால் சோ தமக்கேயுரிய பாணியில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையோடு, அது நடந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறு பற்றியும் அலசுகிறார். அவ்வப்போது பகுத்தறிவாளர்களையும் வாருகிறார். பாரதம் படித்தால் வீட்டில் சண்டை வருமாமே??!! இதுவரை வந்ததற்கும் இனி வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
சுஜாதாவைப் படிப்பதா, சோவைப்படிப்பதா, அல்லது இந்த இரண்டு புத்தகத்தை வாங்குவதற்கு முன் படித்துக்கொண்டிருந்த ஆங்கிலப் புதினத்தைப் படிப்பதா, அல்லது அடுத்த வாரம் ஆஃபீஸில் எடுக்க வேண்டிய செமினாருக்காக எடுத்து வந்த தலையணை போன்ற புத்தகத்தைப் படிப்பதா? ஒன்றும் தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறேன்.
அடுத்த வாரம் செமினாரில், In Sujatha's writings we see a paradigm shift that took place in Tamil literature என்று சொல்லாமலிருக்க வேண்டும்.

நேற்று வீட்டில் ஓணம் பண்டிகை இனிதே கொண்டாடினோம். கேரளப் பெண்ணை மணந்ததனால் வருடத்தில் இன்னொரு நாள் nose dashing eating. அதாங்க மூக்கு முட்ட சாப்பிடறது. வீட்டம்மா பூக்கோலமெல்லாம் போட்டு அசத்திப்புட்டாங்க. பூக்கோலம் போடுவதற்கு நானும் ரொம்பவே உதவி செய்தேன். என்ன உதவி செய்தேன் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
19 comments:
நேனே பர்ஸ்டு ...
/nose dashing eating. அதாங்க மூக்கு முட்ட சாப்பிடறது. //
சான்சே இல்லை, "You are playing in English", நீங்க இங்கிலிஷ்ல விளையாடரீங்கோ:-)
//என்ன உதவி செய்தேன் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
//
கோலம் போடும்போது ஒரு ஓரமா உக்காந்திருந்தீங்கள இல்ல தூங்கிட்டீங்களா?
கோலம் சூபர்
please check desikan.com if you have not seen earlier. good site.
திருமதி விஜய் சேச்சிக்கு எண்ட ஓணம் விஷஸ் :))
பூ கோலம் சூப்பரோ சூப்பர்!!
கோலம் போடுறப்போ ஒவ்வொரு பூவா எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணினீங்களோ???
\\ முகுந்தன் said...
கோலம் போடும்போது ஒரு ஓரமா உக்காந்திருந்தீங்கள இல்ல தூங்கிட்டீங்களா?\\
\\Divya said...
கோலம் போடுறப்போ ஒவ்வொரு பூவா எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணினீங்களோ???\\
இது கூட ஒரு மாதிரியான உதவி தான். ஆனால் நான் நிஜமாகவே இன்னொரு உதவியும் செய்தேன். வேற யாரு சரியா பதில் சொல்லறாங்கன்னு பார்ப்போம்?
ஓ!! அண்ணி கேரளாவா? அதான் அண்ணிக்கு எழுதுறது புரியாதுன்னு அண்ணாச்சி 'எங்களுக்கே மார்க்கா'னு பட்டைய கெளப்பிட்டு இருக்கீங்களா? நல்லா இருங்கண்ணே!!!
//இன்னொரு உதவியும் செய்தேன். வேற யாரு சரியா பதில் சொல்லறாங்கன்னு பார்ப்போம்?//
அண்ணி வச்ச பூக்கோலத்த களச்சி விட்டதுதானே?? ;)))
"Happy Onam" கோலம் போட்டது விஜய், சரியா?
ஜி,
பொஞ்சாதியை எவ்வளவு கலாய்ச்சாலும் எழுதினதை படிச்சுக்காடிருவேன்லா.
முகுந்தன்,
ம்ஹும், நீங்க சரியா கண்டு பிடிக்கலை. ஓகே. ஒரு க்ளூ தரேன்.
"குரங்கு கையில பூமாலை கொடுதத்து நல்லதாப்போச்சு"
இப்பவாச்சும் யாராச்சும் கண்டுபுடியுங்கப்பா!!
பூக்களை உதிர்த்து
தூவினீங்களா :-) சூபர்
நான் முந்தின நாள் ராத்திரி உட்கார்ந்து செவ்வந்தி புவெல்லாம் உதிர்த்துக் கொடுத்தேன். இல்லைன்னா, வீட்டம்மாவால பூக்கோலம் போட்டிருக்க முடியுமா??? :-)
//Divya said...
திருமதி விஜய் சேச்சிக்கு எண்ட ஓணம் விஷஸ் :))//
ரிப்பீட்டு..
//விஜய் said...
நான் முந்தின நாள் ராத்திரி உட்கார்ந்து செவ்வந்தி புவெல்லாம் உதிர்த்துக் கொடுத்தேன். இல்லைன்னா, வீட்டம்மாவால பூக்கோலம் போட்டிருக்க முடியுமா??? :-)//
கலக்கல்..
//nose dashing eating//
Haa haa haa :-D hilarious :-)
//என்ன உதவி செய்தேன் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்//
குளு குடுத்த அப்புறமும் கண்டு பிடிக்காட்டா எப்படி?
மாலைல இருந்த பூவ பிச்சு, பிச்சு குடுத்தீங்க, சரியா? ;-)
அண்ணி கேரளாவா? Belated ஓனம் wishes சொல்லிடுங்க…
வாவ் அருமையான கோலம் :)
Belated Onam Wishes :)
வருடத்தில் இன்னொரு நாள் nose dashing eating.
:D
வலைத்தளம் வந்து மேய்ந்து போன திவ்யா, முகுந்தன் ரம்யா, திவ்யப்ரியா, ஜி , சரவணகுமார் எல்லோருக்கும் நன்றி!!
Post a Comment