Pages

September 05, 2008

எங்களுக்கே மார்க்கா??

மனைவி மார்க் போட்டால் என்ற திவ்யாவின் பதிவிற்கு இது எதிர் பதிவு அல்ல. அதையும் மீறி திவ்யாவின் பதிவிற்கு ஏதாவதொரு சம்பந்தம் இருக்குமெனில், அது தற்செயலாக நடந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை. அம்மணி காபிரைட் டிரைட் எதுவும் செய்யவில்லையென்று நினைக்கிறேன்.

எப்போதுமே டிப்ஸ் பல கொடுக்கும் திவ்யா தன்னுடைய இந்தப் பதிவில் மனைவிமார்கள் இப்படி இப்படி மார்க் போடுவார்கள் என்று மொட்டையாக சொல்லி, கல்யாணமே செய்து கொள்ள வேண்டுமா என்று பல பிரம்மசாரிகளின் மனதில் சிந்தனையோட்டத்தை கிளறி விட்டதாக பட்சியொன்று சொல்லியது. அட மனைவிமார்களின் மார்க்குகளை எப்படி கையாள்வது என்பதை, அனுபவஸ்தன் நான் சொன்னால் ஒரு நாலு பேருக்காவது உபயோகமாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இந்தப் பதிவை எழுதுகிறேன்.

டிஸ்கி: மனைவியிடமிருந்து நல்ல பெயர் வாங்கியே தீருவந்தென்று அயராது உழைக்கும் / உழைத்துக்கொண்டிருக்கும் கர்ம வீர புருஷர்களுக்கு இந்தப் பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

சரி, இனி மனைவிமார்கள் போடும் மார்க்குகளிலிருந்து எப்படி டபாய்ப்பது எனபதைப் பார்ப்போம்.

1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....

நீங்க என்ன வீர தீர பராக்கிரமத்தைக் காட்டினாலும் உங்களைப் பாராட்டப் போரதில்லை.
யாராவது நல்ல தூங்கும் போது எழுப்பினா எப்படியிருக்கும்? ஆனால் நம்ம போறாத நேரம், எழுப்புவது மனைவியாக இருக்கறதுனால, வெளியே போயடா பார்க்கத்தான் வேணும். அதனால நம்மளோட எரிச்சலையும் காட்டிக்க முடியாது.
வெளியே போகும் போது மனைவி கால் மேல ஏறி மிதிச்சு நடந்து போங்க. "ஐயையோ"ன்னு அவங்க கத்தற கத்துல வந்திருக்கற திருடனும் துண்டக்காணோம் துணியக்காணோன்னு ஓடிப்போயிருவான். இனிமேல் ஜன்மத்திலும் உங்களை தூக்கத்தில் சத்தம் கேக்குதுன்னு எழுப்ப மாட்டாங்க.

சரி நீங்க மனைவி மீது அதீத பாசம் வைத்திருக்கீங்களா? எழுந்திரிச்சு வீட்டுல இருக்கற எல்லா விளக்கையும் போட்டு, ஃபானையும் ஆஃப் பண்ணிட்டு வெளியில போங்க. "ஏன் ஃபானை ஆஃப் பண்ணறீங்க"ன்னு கேட்டா, "அப்போ தான் சத்தம் கேக்குதா இல்லையான்னு தெரியும்" பதில் சொல்லுங்க. இதெல்லம் பண்ணின பெறவும் அவுங்க தூங்குவாங்கன்னு நினைக்கறீயளா? நீங்க அடிக்கற இந்த லூட்டிய பார்த்துட்டு, இனி உங்க பொஞ்சாதி, தூக்கத்துல எழுப்புவாங்கன்னு நினைக்கறீங்க?

அப்படியும் சில கும்பகர்ணினிகள் தூங்குச்சுன்னா, நல்ல பெரிசா ஒரு தடியெடுத்துகிட்டு கதவுலயும் தரையிலயும், நாலு நாலு தட்டு தட்டி, "டாய், ஒக்கா மக்கா எவன் டா அவன். தைரியம் இருந்தா முன்னாடி வாடா பன்னாடை". இப்படி மனைவியைத் திட்ட முடியாத வார்தைகளெல்லாம் வைத்து அவனை துதிபாடுங்கள். இதற்கப்புறம் என்றைக்குமே சத்தம் கேட்குதுன்னு உங்க மனைவி எழுப்பவே மாட்டாங்க.

2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....
எந்த நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் அவங்களுக்குப் புடிச்சதை, வாங்கிக் கொடுத்தாலும் உங்களைப் புகழப் போறதில்லை. "ஏன் நான் சமைச்சுப் போடறது ஐயாவுக்குப் புடிக்கலையோ"ன்னு தான் கேட்கப் போறாங்க. "இல்லை இன்னிக்காவது வெளிய கூட்டியாந்தீங்களே. வீட்டுக்குள்ளேயே கிடந்து வெந்து சாகறேன்" என்று அலுத்துக்கொள்ளவோ தான் போறாங்க. "இல்லாட்டி, என்னவோ டாஜ் ஹோட்டலுக்கா கூட்டியாந்துக்கீங்க"ன்னு குறை சொல்லப்போறாங்க. அதனால முடிந்த அளவிற்கு மனைவியின் பொறந்தநாளைக்கு வீட்டிலயே சமைக்க சொல்லிடறது பெட்டர். "என்ன தான் இருந்தாலும் நீ சமைக்கறது மாதிரி வருமா"ன்னு இரண்டு வார்த்தை சொல்லிப்பாருங்க, அவ்வளவு தான். ஜில்லுனு ஆகிடுவாங்க.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

அப்படின்னு வள்ளுவரே சொல்லிப்புட்டாரு. அடுத்த பொறந்த நாளைக்கு நீங்களே வெளியே போகலாம்னு சொன்னாக் கூட, "வீட்டுலயே சாப்பிடலாம்"னு சொல்லிடுவாங்க.

3.உங்கள் உடலமைப்பு எப்படி????
பொம்பளைங்க இந்த விஷயத்துல பயங்கர தெளிவு. நாமதான் பொஞ்சாதி ஐஷ்வர்யா ராயாகவும் அசினுக்கு கசினாகவும் இருக்கணும்னு விரும்பரோம். ஆனா, மனைவிகள் தன்னுடைய புருஷன் ஷாருக்காவோ ஹ்ரித்திகாவோ இருந்தே ஆகணும்னு எதிர்பார்க்கறது இல்லை. அப்படியேதும் இருந்தா மத்த பொண்ணுங்க தன் புருஷனை பார்த்து சைட் அடிப்பாங்களேன்ற பொஸஸிவ்னெஸ் அவங்களுக்கு அதிகம்.
அப்படியும் உங்க மனைவி உங்களைப் பார்த்து தொப்பை வந்திடுச்சி, வெயிட் போட்டுட்டீங்க அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லறாங்களா? கவலையே படாதீங்க. "எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்டீ இப்படி ஆகிட்டேன்"னு அவங்க மேலயே பிளேட்டத் திருப்பிடணும். அதுக்கப்புறம் நீங்க S.P.B மாதிரி ஆனாக்கூட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....


இது கொஞ்சம் டேஞ்சரான கேள்வி. எல்லா மனைவிகளுக்கும் தெரியும், அவங்க குண்டாகிட்டாங்கன்னு. ஆனால், அதை புருஷன் சொல்லக்கூடாது. என்ன தான் உண்மையே சொல்லுவேன்னு ஹரிசந்திரனுக்குத் தம்பியா சபதமெடுத்திருந்தாலும், "கல்யாணத்தன்னிக்கு எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்கேன்னு" சொல்லிடணும். மேலே சொன்ன குரளை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…
மனைவி பிரச்னை என்று கொண்டு வந்தாலே அது 99.9999% உங்களுடைய சொந்த பந்தஙளுடன் ஏற்பட்ட மனஸ்தாபமாயிருக்கும். நீங்கள் யார் பக்கம் தீர்ப்பு சொன்னாலும் டேஞ்சர் தான். அதனாலே பிரச்னையென்று வந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் அடைத்துக் கொள்ளவும். முழுங்கி விட வேண்டாம். மௌன விரதம் மேற்கொள்ள இதுவொரு எளிய வழி. இப்படி ஒவ்வோர் தடவையும் பிரச்னையென்று உங்கள் மனைவி வரும்போதெல்லாம் நீங்கள் மௌன விரதம் இருந்து விட்டீர்களெனில், அடுத்த பிரச்னையை உங்கள் மனைவி உங்கள் கவனத்திற்கு கொண்டு வரமாட்டார்.

மேலே சொன்ன செய் முறை விளக்கங்கள் எல்லாவற்றையும் தவறாது கடைபிடித்தால், மனைவிமார்கள் நமது திறமைகளுக்கு பரீட்சை வைக்க மாட்டார்கள். பரீட்சையே இல்லைன்னா அப்புறம் மார்க் எப்படி? அப்படியும், அடாது வெறுப்பேத்தினாலும் விடாது பரீட்சை வைப்பேன் என்ற மனைவிகளின் கணவர்களுக்கு ஒரு அறிவுரை. "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்று கணவர்களைப் பற்றி ரொம்பவே நெகடிவ் இமேஜ் உருவாக்கிட்டாங்க. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். வெளில சொல்லிடாதீங்க. "பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒண்ணும் இல்லை.

39 comments:

Divya said...

me the firstuuuuuu

Divya said...

wait karo vijay saab.....post padichutu commenturein:))

Divya said...

\\அதனால நம்மளோட எரிச்சலையும் காட்டிக்க முடியாது.
வெளியே போகும் போது மனைவி கால் மேல ஏறி மிதிச்சு நடந்து போங்க. "ஐயையோ"ன்னு அவங்க கத்தற கத்துல வந்திருக்கற திருடனும் துண்டக்காணோம் துணியக்காணோன்னு ஓடிப்போயிருவான். இனிமேல் ஜன்மத்திலும் உங்களை தூக்கத்தில் சத்தம் கேக்குதுன்னு எழுப்ப மாட்டாங்க.
\\


ஹா ஹா:))

எப்படி விஜய் இப்படி எல்லாம் டகால்டி ஐடியா உங்களுக்கு தோனுது,

நக்கல்ஸ் & கிண்டல்ஸோட பதிவு பட்டய கிளப்புது!!

Divya said...

\\அப்படியும் சில கும்பகர்ணினிகள் தூங்குச்சுன்னா, நல்ல பெரிசா ஒரு தடியெடுத்துகிட்டு கதவுலயும் தரையிலயும், நாலு நாலு தட்டு தட்டி, "டாய், ஒக்கா மக்கா எவன் டா அவன். தைரியம் இருந்தா முன்னாடி வாடா பன்னாடை". இப்படி மனைவியைத் திட்ட முடியாத வார்தைகளெல்லாம் வைத்து அவனை துதிபாடுங்கள். இதற்கப்புறம் என்றைக்குமே சத்தம் கேட்குதுன்னு உங்க மனைவி எழுப்பவே மாட்டாங்க.\\


இந்த வரிகள் வாசிக்கிறப்போ சிரிப்பு கண்ட்ரோல் பண்ணவே முடியல...:))

Divya said...

இப்படி கால மிதிச்சு டகால்டி பண்றது, திருடனை திட்டுற மாதிரி ஜாடைல திட்டுறதெல்லாம் பண்ணினீங்கன்னு வைங்க.......அடுத்த தடவை சத்தம் கேட்டா உங்களை எழுப்பமாட்டாங்க நிச்சயம்.......

ஆனா, நல்ல பெரிய தடியா எடுத்துண்டு வந்து தூங்கிட்டிருக்கிற உங்க கால்மேலயே போடுவாங்க,


சத்தமே கேட்கலீனாலும்....."சத்தம் கேட்டு எழுந்தேங்க, உங்களை எழுப்பி டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு நானே லைட் போட்டு பார்த்தேன், உங்க கால் பக்கம ஏதோ போறமாதிரி இருந்ததுங்க அதான் ஓங்கி ஒரே போடா போட்டுட்டேன்......உங்க கால் மேல பட்டுடிச்சாங்க????"
அப்படின்னு மனைவி சொல்லுவாங்க -> இதெப்படி இருக்கு:))

Divya said...

\\ஆனா, மனைவிகள் தன்னுடைய புருஷன் ஷாருக்காவோ ஹ்ரித்திகாவோ இருந்தே ஆகணும்னு எதிர்பார்க்கறது இல்லை. அப்படியேதும் இருந்தா மத்த பொண்ணுங்க தன் புருஷனை பார்த்து சைட் அடிப்பாங்களேன்ற பொஸஸிவ்னெஸ் அவங்களுக்கு அதிகம்.\\

இது உண்மை ஒத்துக்கொள்கிறோம்:-))


[அதான் பார்க்க கேனை மாதிரி இருந்தாலும் பெருந்தன்மையா பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்க, எம்புட்டு நல்ல மனசு பாருங்க அவங்களுக்கு!!]

Divya said...

\\என்ன தான் உண்மையே சொல்லுவேன்னு ஹரிசந்திரனுக்குத் தம்பியா சபதமெடுத்திருந்தாலும், "கல்யாணத்தன்னிக்கு எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்கேன்னு" சொல்லிடணும். \\


அட......நீங்க பாஸாகிட்டீங்க போலொருக்குதே:))

'bitu' போட்டு பாஸ் ஆகும் ரகசியமெல்லாம் இப்பதான் வெளியில வருது:)))

Divya said...

\இப்படி ஒவ்வோர் தடவையும் பிரச்னையென்று உங்கள் மனைவி வரும்போதெல்லாம் நீங்கள் மௌன விரதம் இருந்து விட்டீர்களெனில், அடுத்த பிரச்னையை உங்கள் மனைவி உங்கள் கவனத்திற்கு கொண்டு வரமாட்டார்.\


யாரு சொன்னா கொண்டுவரமாட்டங்கன்னு???

மனைவிக்கு தேவை தான் சொல்றதை லிஸன் பண்ணும் good listner மட்டும் தான்,

குறுக்கவோ, எதிர்த்தோ பேச கூடாது அவ்வளவுதான்:-)

ஸோ , மெளனமா கேட்டுட்டு இருந்தா, கண்டிப்பா 1 மணி நேரம் பேச வேண்டிய மேட்டரை 2 மணி நேரம் கூட பேசுவாங்க!!!

Divya said...

\\வெளில சொல்லிடாதீங்க. "பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒண்ணும் இல்லை.\\


ROTFL:)))

Super post Vijay, kalakiteil pongo:))

Divya said...

Late night முழிச்சிருந்து , சொன்ன மாதிரி போஸ்ட் போட்ட விஜய்க்கு ஒரு பெரிய 'ஓ' போட்டுக்கிறேன்!!

முகுந்தன் said...

//மனைவியிடமிருந்து நல்ல பெயர் வாங்கியே தீருவந்தென்று அயராது உழைக்கும் உழைத்துக்கொண்டிருக்கும் கர்ம வீர புருஷர்களுக்கு //


நடக்காத ஒன்ன பத்தி நாம எதுக்கு கவலை படனும் ?

முகுந்தன் said...

//யாராவது நல்ல தூங்கும் போது எழுப்பினா எப்படியிருக்கும்? ஆனால் நம்ம போறாத நேரம், எழுப்புவது மனைவியாக இருக்கறதுனால, //

பளார்னு அறையலாம்னு இருக்கும் .. ஆனா ... இருக்காது ...

//"ஐயையோ"ன்னு அவங்க கத்தற கத்துல வந்திருக்கற திருடனும் துண்டக்காணோம் துணியக்காணோன்னு ஓடிப்போயிருவான். இனிமேல் ஜன்மத்திலும் உங்களை தூக்கத்தில் சத்தம் கேக்குதுன்னு எழுப்ப மாட்டாங்க.//

Sooper

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

//சரி நீங்க மனைவி மீது அதீத பாசம் வைத்திருக்கீங்களா? எழுந்திரிச்சு வீட்டுல இருக்கற எல்லா விளக்கையும் போட்டு, ஃபானையும் ஆஃப் பண்ணிட்டு வெளியில போங்க. "ஏன் ஃபானை ஆஃப் பண்ணறீங்க"ன்னு கேட்டா, "அப்போ தான் சத்தம் கேக்குதா இல்லையான்னு தெரியும்" பதில் சொல்லுங்க. இதெல்லம் பண்ணின பெறவும் அவுங்க தூங்குவாங்கன்னு நினைக்கறீயளா? நீங்க அடிக்கற இந்த லூட்டிய பார்த்துட்டு, இனி உங்க பொஞ்சாதி, தூக்கத்துல எழுப்புவாங்கன்னு நினைக்கறீங்க?
//

நம்மள எழுப்ப ஃபானை தானே மொதல்ல அனைக்கறாங்க :-)

முகுந்தன் said...

//அப்படியும் சில கும்பகர்ணினிகள் தூங்குச்சுன்னா, நல்ல பெரிசா ஒரு தடியெடுத்துகிட்டு கதவுலயும் தரையிலயும், நாலு நாலு தட்டு தட்டி, "டாய், ஒக்கா மக்கா எவன் டா அவன். தைரியம் இருந்தா முன்னாடி வாடா பன்னாடை". இப்படி மனைவியைத் திட்ட முடியாத வார்தைகளெல்லாம் வைத்து அவனை துதிபாடுங்கள். இதற்கப்புறம் என்றைக்குமே சத்தம் கேட்குதுன்னு உங்க மனைவி எழுப்பவே மாட்டாங்க.
//

அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைகள்ளல் திட்டினால் தாங்காது சாமி .

முகுந்தன் said...

//"எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்டீ இப்படி ஆகிட்டேன்"//

ரொம்ப ரிஸ்க் விஜய்,
நீங்களே சமைச்சு சாப்பிடுங்க உடம்பு இளைக்கும்னு சொல்லிடுவாங்க

முகுந்தன் said...

//இப்படி ஒவ்வோர் தடவையும் பிரச்னையென்று உங்கள் மனைவி வரும்போதெல்லாம் நீங்கள் மௌன விரதம் இருந்து விட்டீர்களெனில், அடுத்த பிரச்னையை உங்கள் மனைவி உங்கள் கவனத்திற்கு கொண்டு வரமாட்டார்.
//

அப்படி இல்லை , ஒரு டம்ளர் தண்ணியோட வருவாங்க

முகுந்தன் said...

//"பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். //

சாரி , பத்தினியானாலும் பேய் அப்படின்னு படிச்சுட்டேன் :-)

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

டிஸ்கி:மேலே சொன்ன எதுவும் என் சொந்த அனுபவம் இல்லை

Ramya Ramani said...

ஹா ஹா ஹா :D ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

உங்க Bday எப்போ விஜய்??
இப்பதிவின் English Translation வீட்டுக்கு பாரசல் அனுப்பட்டுமான்னு யோசிக்கறேன் :P (Just Kidding)

உங்க ஹாஸ்யத்தை மிகவும் பாராட்டுகிறேன்..உண்மையில் இப்படி வெளிப்படையா பேசுபவர்கள் தான் Caring + Understanding Husbandsன்னு எங்க அப்பாவ பார்த்தே புரிஞ்சுகிட்டேன்..

Divyapriya said...

// வெளியே போகும் போது மனைவி கால் மேல ஏறி மிதிச்சு நடந்து போங்க. "ஐயையோ"ன்னு அவங்க கத்தற கத்துல வந்திருக்கற திருடனும் துண்டக்காணோம் துணியக்காணோன்னு ஓடிப்போயிருவான். … ஜன்மத்திலும் உங்களை தூக்கத்தில் சத்தம் கேக்குதுன்னு எழுப்ப மாட்டாங்க.//

முடியல…என்னால முடியல…சிரிச்சுகிட்டே இருக்கேன் :-D

// பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்//

அடப்பாவமே, திருவள்ளுவர வேற இதுல இழுக்கறீங்களா?

விஜய்…chance less…சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது :-)

விஜய் said...

\\Divya said...
ஆனா, நல்ல பெரிய தடியா எடுத்துண்டு வந்து தூங்கிட்டிருக்கிற உங்க கால்மேலயே போடுவாங்க\\

ஆஹா டிப்ஸ் மஹாராணி போட்டு கொடுத்துடுவாங்க போலிருக்கே!!

\\Divya Said...
wait karo vijay saab.....\\
அட ஹிந்தியெல்லாம் போட்டுத் தாக்கறீங்க!!

திவ்யா, முதல் வாசகியாக வந்து கமெண்டிட்டதற்கு நன்றி!!

விஜய் said...

\\Divya said...
\\வெளில சொல்லிடாதீங்க. "பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒண்ணும் இல்லை.\\


ROTFL:)))

Super post Vijay, kalakiteil pongo:))\\

Thanks a lot.

விஜய் said...

\\முகுந்தன் said...
நடக்காத ஒன்ன பத்தி நாம எதுக்கு கவலை படனும் ?\\
என்ன இது, நாமன்னு சொல்லி என்னையும் சேர்த்துக்கறீங்க??

\\முகுந்தன் said...
பளார்னு அறையலாம்னு இருக்கும் .. ஆனா ... இருக்காது ...\\

ஹா ஹா

\\அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைகள்ளல் திட்டினால் தாங்காது சாமி\\
மனைவிகள் அந்த விஷயத்துல ரொம்ப நல்லவங்கப்பா. அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க.
சில வேளைகளில் உண்மை கசந்தாலும் ஒத்துக்கணும்.

விஜய் said...

\\Ramya Ramani said...
உங்க Bday எப்போ விஜய்??
இப்பதிவின் English Translation வீட்டுக்கு பாரசல் அனுப்பட்டுமான்னு யோசிக்கறேன் :P (Just Kidding)\\

ஆஹா இப்படியல்லவா ஒரு ப்ரெசன்ட் கிடைக்கணும். கண்டிப்பா அடுத்த பிறந்த நாளைக்கு சொல்லறேன்.

\\உண்மையில் இப்படி வெளிப்படையா பேசுபவர்கள் தான் Caring + Understanding Husbandsன்னு எங்க அப்பாவ பார்த்தே புரிஞ்சுகிட்டேன்..\\
ரொம்ப நன்றிங்க!!

விஜய் said...

\\Divyapriya said...

முடியல…என்னால முடியல…சிரிச்சுகிட்டே இருக்கேன் :-D

// பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்//

அடப்பாவமே, திருவள்ளுவர வேற இதுல இழுக்கறீங்களா?

விஜய்…chance less…சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது :-)\\

நேற்று இதை எழுதும்போது தான், திருவள்ளுவரே வாய்மையுடமையில் இரண்டாவது குரளா தனது சொந்த அனுபவத்தை வச்சு எழுதியிருப்பாரோன்னு தோணித்து.

பார்த்து, அப்புறம் உங்க ரூம் மேட் பொண்ணுக்கு ஏதோ ஆயிடுச்சு போலன்னு நினைச்சுக்க போறாங்க.

Saravana Kumar MSK said...

//அதனாலே பிரச்னையென்று வந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் அடைத்துக் கொள்ளவும். முழுங்கி விட வேண்டாம். மௌன விரதம் மேற்கொள்ள இதுவொரு எளிய வழி.//


திவ்யாவின் பதிவிற்கு பின் அவசியம் கல்யாணம் பண்ணிக்கனுமோன்னு நெனச்சேன்..
ஓகே. உங்களோட இந்த ஐடீயாவ பாலோ பண்ணிக்கலாம்னு தைரியம் வந்துருச்சி..
:)))))

விஜய் said...

சரவணகுமார், வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

Let me a bit serious.
மண வாழ்க்கை என்பது ஒரு தவம் மாதிரி. தவம் செய்து பெறும் பயன் எவ்வளவு நன்றாக இருக்குமோ, அந்தளவு மணவாழ்வின் பயன்களும் அவ்வளவு நன்மை பயக்குபவை. தவம் செய்வது எவ்வளவு கடினமோ மணவாழ்க்கையும் அவ்வளவு கடினம். ஆனால் அதனால் உண்டாகும் அனுபவங்கள் ரொம்ப ஸ்வாரஸ்யமானவை.
So don't get dejected. When time comes, get married.

ஜி said...

//பேயானாலும் பத்தினி//

anni padichittaangala?? ;)))

ultimate post thala.. kalakkitteenga :)))

Divya said...

Vijay, intha post ku title ye iliya?
or
enaku than post title page la display agaliya???

Divya said...

விஜய், உங்க கவுண்ட்டர் போஸ்ட்டை கோர்த்து விட்டாச்சு என் பதிவில்:))

விஜய் said...

திவ்யா,
நிறைய பேர்கிட்டேர்ந்து
அடி வாங்கிக் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க!! :-(

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்ல வேலை உங்கள் மனைவிக்கு தமிழ் தெரியாது. சரியான கிண்டலும் நக்கலும் எடக்கும் நிறைத்த ஆளாக இருப்பியே போல. நீங்க திருநெல்வேலில எந்த ஊர்.

விஜய் said...

\\ முஹம்மது ,ஹாரிஸ் said...
நல்ல வேலை உங்கள் மனைவிக்கு தமிழ் தெரியாது. சரியான கிண்டலும் நக்கலும் எடக்கும் நிறைத்த ஆளாக இருப்பியே போல. நீங்க திருநெல்வேலில எந்த ஊர்.\\

நக்கல் அடித்து நிறைய எழுதுகிறேன் என்று என் மனைவி , இப்போது எழுத்துக் கூட்டி தமிழ் படிக்கிறாள் :)

நெல்லையில் எங்கள் வீடு இருப்பது பெருமாள் புரம் பக்கத்துல அன்பு நகர். நீங்களும் திருநெல்வேலியா?

முஹம்மது ,ஹாரிஸ் said...

நான் திருநெல்வேலி high ground...
நிங்கள் பெங்களுருவில் எங்கு வசிக்கிறிர்கள் நானும் இப்போது பெங்களுருவில் தன் இருகின்றேன்

Anonymous said...

ரெம்பவே சிரித்தேன் ........

// "எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்டீ இப்படி ஆகிட்டேன்"//
இப்படி எல்லாம் புருடா விடுவீங்கன்னு தான் நான் சமையலே கத்துக்கல ( வீட்டுக்காரர் என் சமையலை பாத்து முறைத்தால் இப்படி சொல்லி தப்பிச்சுக்கலாம்)

விஜய் said...

எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியோம் பராபரமே

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி குந்தவை

gayathri said...

\\அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைகள்ளல் திட்டினால் தாங்காது சாமி\\
மனைவிகள் அந்த விஷயத்துல ரொம்ப நல்லவங்கப்பா. அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க.
சில வேளைகளில் உண்மை கசந்தாலும் ஒத்துக்கணும்

ippadilam solla kudathu ennga thogatha kedutha naanga enna venumnalum pesuvom.oru naal ungala thetama vettuta apparam matha naal nt yarachi vantha naanga than poi kathava therathu pakanum.nangala ntla seriyal pathuthu dayarda paduthu thongetu irukum pothu engala elupuna naanga thettama enna panuvoma