Pages

August 20, 2008

மகிழ்ச்சிகரமான இல் வாழ்க்கைக்கு...

தலைப்பைப் பார்த்து விட்டு நான் ஏதாவது உபன்யாசம் செய்யப் போகிறேனோ என்று நினைத்து விட வேண்டாம். இந்த வருட பிறந்த நாள் பரிசாக எனக்கு வந்த ஒரு பரிசு, "மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு 10 கட்டளைகள்" என்ற புத்தகம்.
Too late!!! திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் கழிந்தாலும், திருமண வாழ்க்கையில் பெற்றது சில, கற்றது பல. "புத்தகத்தை எழுதியிருப்பவர் என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்போமே" என்ற யோசனையில் தான் படித்தேன்.

என்ன எழுதியிருக்கிறார் என்று சொல்லப் போவதில்லை. ஆனால், சொன்ன நிறைய வழிகள் கணவன்மார்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் தான் நிறைய இருக்கிறது. பெண்கள் மீது ஏனோ இவ்வளவு பாரபட்சம். அவர்களை மாற்ற முடியாது, அதனால் ஆண்களுக்குத்தான் நிறைய உபதேசம் செய்ய வேண்டும் ஆசிரியர் நினைத்து விட்டாரோ என்னவோ?
இந்தப் புத்தகத்தை திருமணம் செய்து கொள்ளப் போகும் எல்லா ஆண்களும் படிக்க வேண்டிய ஒன்று என்று சொல்ல மாட்டேன். ஆனால், படித்துப் பார்த்தால், மண வாழ்க்கையில் எவ்வளவு மணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலம். குறைந்த பட்சம், மண வாழ்விலுள்ள எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தை நிச்சயதார்த்தன்றே மணமகனின் கையில் கொடுத்து படிக்கச் சொல்வது இன்னும் சாலச் சிறந்தது.

ஆனால் பத்து வழிகளையும் படித்து மனப்பாடாம் செய்து அதன்படி வாழ்வது சற்றே சிரமமான விஷயம். அதனால், மகிழ்ச்சியான இல் வாழ்க்கைக்கு ஒரே தாரக மந்திரம் ஒன்றிருக்கிறது. அந்தத் தாரக மந்திரத்தை எல்லா கணவன்மார்களும் தினந்தோறும் சொல்ல வேண்டும். அதைப் பற்றி நான் ஏற்கனவே திருமணமான புதிதிலேயே எழுதிவிட்டேன். அதைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

25 comments:

Divyapriya said...

அப்டி என்ன தான் எழுதி இருக்கு அந்த புக்ல?

அன்பு, அப்புறம் சரி, சரி யா??? சரி, சரி LOL :-D

//ஆண்களுக்குத்தான் நிறைய உபதேசம் செய்ய வேண்டும் ஆசிரியர் நினைத்து விட்டாரோ//

100% கரைக்டா தான் நினைச்சுருக்காரு அந்த ஆசிரியர்...ஹா ஹா :-D

Anonymous said...

soodaana thalaippu;)

முகுந்தன் said...

//கணவன்மார்களும் தினந்தோறும் சொல்ல வேண்டும்.//

தூங்கும்போதும் :-)

//அதைப் பற்றி நான் ஏற்கனவே திருமணமான புதிதிலேயே எழுதிவிட்டேன்//

செம்ம ஷார்ப் விஜய் நீங்க :-)

ஜியா said...

Namakku ippothaikku thevai padaathu.. so romba naalaiku appuram paathukalaam :)))

@DivyaPriya
//100% கரைக்டா தான் நினைச்சுருக்காரு அந்த ஆசிரியர்...ஹா ஹா :-D//

--பெண்கள் மீது ஏனோ இவ்வளவு பாரபட்சம். அவர்களை மாற்ற முடியாது--

itha neenga vaasikalaiyaa?? ;)))

Divya said...

\\பெண்கள் மீது ஏனோ இவ்வளவு பாரபட்சம். அவர்களை மாற்ற முடியாது, அதனால் ஆண்களுக்குத்தான் நிறைய உபதேசம் செய்ய வேண்டும் ஆசிரியர் நினைத்து விட்டாரோ என்னவோ?\\

பெண்கள் மாற வேண்டியது, அல்லது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியது என்று எதுவும் இல்லை.......
ladies are ALWAYS very intelligent, and can lead to happy married life
னு ஆசிரியர் நினைச்சிருப்பார், அதான் உபதேசம் ஆண்களுக்கு மட்டும் பண்ணியிருக்கிறார்:))

Ramya Ramani said...

//ஆண்களுக்குத்தான் நிறைய உபதேசம் செய்ய வேண்டும் ஆசிரியர் நினைத்து விட்டாரோ//

அப்படியும் இருக்கலாம்.
ஆனால் பெண்களுக்கு சின்ன வயசுலேர்ந்தே நீ எப்படியும் இன்னொருத்தர் வீட்டுக்கு போக போற அதுனால இப்படி இரு அப்படி இருன்னு சொல்லிட்டே இருப்பாங்க. இதை 100% யாரும் மறுக்க முடியாது.

நீங்க சொல்லலாம் பெண்களுக்கும் செல்லம் தறோம்னு,ஆனா என்னதான் செல்லமா வளர்ந்தாலும் பெண்களின இயல்பாலேயே situationla easyah Accustom பண்ணிப்பாங்க.அதுனால ஆண்களுக்கு அறிவுரை சொன்னா இல்லறம் சிறப்பா இருக்கும்னு நினைச்சிருப்பாரு..

நீங்களே சொல்லுங்க விஜய் உங்க Wife கல்யாணத்துக்கு அப்பறம் நல்லா இரண்டு வீட்டையும் மேனேஞ் பண்ணலியா? அவங்க வீட்ல இப்படித்தான் எல்லா பொறுப்பும் முழுக்க முழுக்க எடுத்து பண்ணாங்களா? இல்லையே? இப்ப பண்றாங்க இல்லியா??

நீங்க உடனே கேக்கலாம் நான் மட்டும் என்ன பண்ணலியான்னு ?ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் உங்களை விட அவங்களுக்கு பொறுப்பு அதிகம்கிறதை நீங்க மறுக்க முடியாது..

Vijay said...

\\Divyapriya said...

//ஆண்களுக்குத்தான் நிறைய உபதேசம் செய்ய வேண்டும் ஆசிரியர் நினைத்து விட்டாரோ//

100% கரைக்டா தான் நினைச்சுருக்காரு அந்த ஆசிரியர்...ஹா ஹா :-D\\

எனக்கு பதிலா ஜி உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி விட்டார். :-)

Vijay said...

\\omsathish said...
soodaana thalaippu;)\\

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ஓம்சதீஷ். அடிக்கடி வாங்க

Vijay said...

\\முகுந்தன் said...
//கணவன்மார்களும் தினந்தோறும் சொல்ல வேண்டும்.//

தூங்கும்போதும் :-)\\

அனுபவம் பேசுகிறதா?


\\செம்ம ஷார்ப் விஜய் நீங்க :-)\\

நீங்க தான் சொல்லணும்

Vijay said...

\\ ஜி said...
Namakku ippothaikku thevai padaathu.. so romba naalaiku appuram paathukalaam :)))\\

You can still give a try. You never know, when marriage would stare at you :-)

எனக்கு பதிலாக திவ்யப்ரியாக்கு பதில் சொன்னதற்கு ரொம்ப நன்றி

Vijay said...

\\Divya Said..
பெண்கள் மாற வேண்டியது, அல்லது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியது என்று எதுவும் இல்லை....... \\

ஆஹா, வந்துட்டாங்கயா பெண்ணியக்க விற்பன்னர்கள் :-)
இப்படித் தான் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் :-)

Vijay said...

\\Ramya Ramani Said...
நீங்களே சொல்லுங்க விஜய் உங்க Wife கல்யாணத்துக்கு அப்பறம் நல்லா இரண்டு வீட்டையும் மேனேஞ் பண்ணலியா? \\

நான் clean bowled. !!!! :-))
இப்போதெல்லாம் எல்லா கேள்விகளுக்கும் ஆமாம் சரி என்று பதில் சொல்கிறேன்.
அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் அதே பதில், "ஆமாம்" :-)

Ramya Ramani said...

\\ விஜய் said...
\\Ramya Ramani Said...
நீங்களே சொல்லுங்க விஜய் உங்க Wife கல்யாணத்துக்கு அப்பறம் நல்லா இரண்டு வீட்டையும் மேனேஞ் பண்ணலியா? \\

நான் clean bowled. !!!! :-))
\\

Thats It you have accepted that Ladies do manage things well.Thereby explain how the Author had realized it and hence given tips for gents alone :)

Divya said...

\\Thats It you have accepted that Ladies do manage things well.Thereby explain how the Author had realized it and hence given tips for gents alone :)\\

apdi podunga Ramya:))
Superu!!

முகுந்தன் said...

//அனுபவம் பேசுகிறதா?//


எனக்கு இந்த அனுபவம் இல்லை ,
என் மாமனாருக்கு உண்டு. சொன்னா வீட்டுல டின்னு தான் :-)

Vijay said...

திவ்யா ரம்யா,
ஏன் உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு கொலை வெறி

Divyapriya said...

@Ramya Ramani

கலக்குற ரம்யா...அப்டி போடு!!! very proud of u :-)

Divyapriya said...

@விஜய்
// திவ்யா ரம்யா,
ஏன் உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு கொலை வெறி//

Please change the names to விஜய், ஜி :-D

Ramya Ramani said...
This comment has been removed by the author.
Ramya Ramani said...

\\ Divyapriya said...
@விஜய்
// திவ்யா ரம்யா,
ஏன் உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு கொலை வெறி//

Please change the names to விஜய், ஜி :-D
\\
இதை நான் கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன் :)))

Vijay said...

திவ்யப்ரியாவும் இந்த ஆட்டத்துல சேர்ந்துட்டாங்களா? நான் அப்படியென்ன தப்பா சொல்லிட்டேன். இப்படிப் போட்டு தாக்கறீங்களே?

ஜியா said...

//நான் அப்படியென்ன தப்பா சொல்லிட்டேன். இப்படிப் போட்டு தாக்கறீங்களே?//

இங்க வாங்க பாஸ்... நாம அடி வாங்குறது சகசந்தானே... பயந்தா தொழில் பண்ண முடியுமா? இவிங்க எப்பவுமே இப்படித்தான் அடிச்சிட்டு இருப்பாங்க... வாங்க பாஸ்...

[வின்னர் வடிவேலுவ ஒருத்தன் திருடன்னு மாட்டி விடுவானே... அந்த ஸீன் டையலாக கொஞ்சம் பேக்ரவுண்ட்ல ஓட விடுங்க :))]

முகுந்தன் said...

//இதை நான் கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன் :)))
//

ரம்யா,

இப்படி தான் பாதி வீட்டில் கணவன்மார்கள் மனைவி சொல்வதை வழி மொழிகிறார்கள் :-)

Vijay said...

ஜி,
நீங்கள் சொல்ல்றது உண்மை தான். :-)

வின்னர் படத்துல வரும் திருடன் டோனில் தான் இக்டிஅப் படித்தேன்.

முகுந்தன்,
இப்படியெல்லாம் உண்மையை போட்டு உடைக்கப்படாது :)

Anonymous said...

//இப்போதெல்லாம் எல்லா கேள்விகளுக்கும் ஆமாம் சரி என்று பதில் சொல்கிறேன்.
அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் அதே பதில், "ஆமாம்" :-)//

எப்படி ஆம்பிளைங்க எல்லோரும் இப்படி வாய்பந்தல் போடுறதுல கில்லாடியா இருக்காங்கன்னு எனக்கு தெரியலை.