பொழுதுபோக்கிற்காக சென்னையிலே மார்கெட்டிங்க் வேலை செய்துகொண்டிருந்த எனக்கு மும்பைக்கு வந்து நேர்காணலில் பங்கேற்குமாறு ஒரு மடல் வந்தது. அது இ-கொசு மெயில் இல்லாக்காலம். தபாலில் தான் கடிதம் வந்தது. நேர்காணல் நடத்தும் கம்பெனியின் பெயர் வோல்டாஸ் (Voltas). அன்றைய காலகட்டத்தில் வோல்டாஸின் ஃப்ரிட்ஜைத்தவிர வேறெதுவும் கேள்விப்பட்டிராத நான் மும்பை வரை செல்ல ரொம்பவே தயங்கினேன். அதற்கு முன் நடந்த ஓரிரண்டு நேர்காணல்களில் அவ்வளவாக சாதிக்காத நான் மும்பை வரை சென்று என்னத்தைச் சாதித்துவிடப் போகிறேன்? ஒரு வேளை வேலை கிடைக்காவிட்டால் தற்சமயம் வேலைபார்க்கும் கம்பெனியில் விடுமுறை எடுத்ததற்காக சம்பளைத்தைக் குறைத்து விடுவார்கள்.
கிடைத்தால் நல்ல வேலை போனால் 5 நாள் சம்பளம். போனால் போகிறது என்று ஒரு முடிவிற்கு வந்து மும்பைச் செல்ல ரயில் பயணச்சீட்டெல்லாம் வாங்கியாச்சு. என்னை மும்பைக்கு வழியனுப்ப அம்மா ஊரிலிருந்து வந்திருந்தாள். என் மாமா ஒருவர் அப்போது பணியில் மாற்றலாகி மும்பைக்குச் சென்றிருந்தார். அவரே ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துச் சென்றார்.
நேர்காணலுக்கு முந்தைய தினமே மும்பைக்குச் சென்றதால், ஒரு நாள் முழுக்க வீட்டிலிருந்த படியே கொஞ்சம் படித்துக் கொண்டேன். என்ன கேடுத்தொலைக்கப் போகிறார்களோ? எதிலிருந்து கேட்கப்போகிறார்களோ, ஒன்றும் தெரியவில்லை.எதற்கும் இருக்கட்டும் என்று R.S.Aggarwal'இன் Aptitutude வினாக்கள் அடங்கிய புத்தமும் B.L.Theraja எழுதியிருக்கும் Electrical Engineering புத்தகத்தையும் கொஞ்சம் புரட்டிப் பார்த்துக்கொண்டேன். குளிர் சாதனம் தயாரிக்கும் நிறுவனத்தில் என் திறமையைச் சோதிக்க என்ன கேட்டு தொலைப்பார்களோ என்று பெரும் குழப்பம். ஒரு வேளை thermal engineering'லிருந்து கேட்பார்களோ? ஐயையோ கல்லூரி நாட்களில் thermal நடத்தும் லெக்சரர் மீதிருந்த கோபத்தால் அதை ஒழுங்காகப் படிக்காமப் போயிட்டோமே. மூன்றாம் செமஸ்டரில் வந்த thermal engineering பற்றி இப்போது என்ன செய்தாலும் மண்டையில் ஏறப் போவதில்லை. ஆஹா இந்த யோசனை முன்னமேயே வந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம். சரி, இவ்வளவு பணம் செய்து வந்தது ஒரு காரியத்துக்கும் ஆகப்போறதில்லை.
மறு நாள் மாமாவே வோல்டாஸ் ஆபீஸில் இறக்கி விட்டுச் சென்றார். சரி இவ்வளவு தூரம் வந்தாயிட்டது. என்ன தான் நடக்குதுன்னு ஒரு கை பார்ப்போம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே போனேன். என்னையும் சேர்த்து 7-8 பேர் வந்திருந்தனர். நான் மட்டும் தான் ஃப்ரெஷர். மற்ற எல்லோரும் 2-3 வருட அனுபவஸ்தர்கள். அவர்களுக்கு என்ன கேட்கப்போகிறார்கள் என்ற உதறல் இருந்ததாகத் தெரியவில்லை. என்னையும் இன்னொரு பெங்காலி பையனையும் மட்டும் ஓர் அறைக்குக் கூட்டிச் சென்று ஒரு வினாத்தாள் கொடுத்தார்கள். எந்த நூற்றாண்டிலோ அச்சடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. நிறைய electronics பற்றித்தான் கேள்விகள் இருந்தன. டிரான்ஸிஸ்டர் பற்றித் தான் நிறைய கேள்விகள். "டிரான்ஸிஸ்டரா, யார் sister?" என்று நக்கல் அடிக்காமல் ஒழுங்காகப் பதில் எழுதினேன். அது முடித்து பத்தே நிமிடங்களில் நேர்காணல் ஆரம்பித்தது.
பிரமாதமாக ஒன்றும் கேட்கவில்லை. என்ன படித்திருக்கிறாய், என்ன செய்ய விரும்புகிறாய் இப்படிப்பட்ட general கேள்விகள் தான். "உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது" என்று சொல்லத்தான் தோன்றியது. இருந்தாலும், "ரொம்ப சவாலான வேலைகள் செய்ய ஆசை" என்றேன்.
"சரி, நீ வேலை செய்யப் போகும் இடம் கொல்கத்தா. என்ன O.K.வா" என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னது கொல்கத்தாவா? நான் சென்னையல்லவா கேட்கலாம் என்றிருந்தேன். அப்போதைக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. சரி என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்."நல்லது. நீ வேலை பார்க்கப் போவது வோல்டாஸின் Mining Equipment டிவிஷனில் என்று மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "என்னது mining'ஆ. மண்டையில் டார்ச் லைட் மாட்டிக்கோண்டு சுரங்கத்தில் அழுக்கு ஷூவும் அழுக்குச் சட்டையும் போட்டுக் கோண்டு போவார்களே, அப்படிப்ப் பட்ட வேலையா. ஆண்டவா, இதுக்கா என்னை இவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு வந்தாய்?". இவ்வளவும் மனதில் ஓடினாலும் தலை மட்டும் Y-Axis'இலேயே O.K O.K என்று மேலும் கீழுமாக ஆடியது.
"You are selected. கொஞ்சம் பொறுத்திருந்து offer லெட்டரை வாங்கிக் கொண்டு போ" என்று சொன்னார். என் தலையெழுத்தை நொந்து கொண்டு வெளியே வந்தேன். 15 நிமிடங்களில் ஆஃபர் லெட்டரும் கையில் தந்து சென்னையிலிருந்து மும்பைக்கு வந்து போக 2nd A.C டிக்கட்டுக்கான பணமும் கொடுத்தார்கள். "அடப்பாவிங்களா, இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நான் A.C.யிலேயே வந்திருப்பேனேடா. இப்போ திரும்பிப் போவதற்குகூட second class ஸ்லீப்பரில் தானே முன் பதிவு செய்திருக்கிறேன்" என்று நொந்து கொண்டேன்.
சம்பளத்தைப் பார்த்ததும் தான் கொஞ்சம் தெம்பு வந்தது. மாதம் 7500 ரூபாய். இதை வைத்துக்கொண்டு கொல்கத்தாவில் காலம் தள்ளி விடலாம். "என்றைக்கு கொல்கத்தாவெல்லாம் பார்க்க? அதும் தான் எப்படியிருக்கிறதென்று பார்த்துவிடுவோமென்ற உத்வேகம் மனதிற்குள் வந்து சேர, குதூகலத்துடன் அம்மாவிற்கு ஃபோன் போட்டு எனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை அம்மாவிடம் கூறினேன். வேலையில் சேர 30 நாட்கள் அவகாசம் கேட்டுக் கொண்டு, கொல்கத்தா கனவுகளுடன் சென்னை நோக்கிப் பயணப்பட்டேன்.
டிஸ்கி: இன்றைய தேதியில் என் வாழ்க்கையில் ஏதாவது நடந்திருக்கிறதா என்ற எண்ணம் சில தினங்கள் தோன்றும். இன்று (Aug 18)அதிகாலையும் அந்த எண்ணம் உதிக்க யோசித்துப் பார்க்கையில், 9 வருடங்களுக்கு முன் (August 18 1999) எனக்கு இதே நாளில் Voltas வேலை கிடைத்தது ஞாபகம் வந்தது.
16 comments:
ஓ Electrical Engineerah நீங்க..பலகலைவித்தகர் போல ;)
Tortoise suthitteenga !!
மலரும் நினைவுகள்:)
\அது இ-கொசு மெயில் இல்லாக்காலம். \
ROTFL:)
\ஒரு வேளை thermal engineering'லிருந்து கேட்பார்களோ? ஐயையோ கல்லூரி நாட்களில் thermal நடத்தும் லெக்சரர் மீதிருந்த கோபத்தால் அதை ஒழுங்காகப் படிக்காமப் போயிட்டோமே. \\
lecturer mela kopamna, antha subj padika mateengla???
// கொல்கத்தா கனவுகளுடன் சென்னை நோக்கிப் பயணப்பட்டேன்.//
வேலையில JOIN பண்ணுணீங்களா இல்லையா??
//என்ன செய்ய விரும்புகிறாய் இப்படிப்பட்ட general கேள்விகள் தான். "உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது" என்று சொல்லத்தான் தோன்றியது.//
ஹி ஹி ஹி..
சூப்பர் flashback...
//இவ்வளவும் மனதில் ஓடினாலும் தலை மட்டும் Y-Axis'இலேயே O.K O.K //
ஹா ஹா ஹா :-D
\\Ramya Ramani said...
ஓ Electrical Engineerah நீங்க..பலகலைவித்தகர் போல ;)
Tortoise suthitteenga !!\\
Electrical Engineering படித்திருந்தால் பல்கலை வித்தகரா?
நல்ல ஐடியாவா இருக்கே. கொசுவர்த்திச் சுருள் சுற்றீயே ஒரு ஐந்தாறு பதிவு எழுதலாமே. எழுதிருவோம் :)
\\Divya said...
lecturer mela kopamna, antha subj padika mateengla???\\
லெக்சரர் மேல் கோபம் இருந்ததால் பிடித்த சப்ஜெக்ட்டையே படிக்காமல் இருந்து, study லீவில் தான் ஐயையோ இவ்வளவு நல்ல பாடத்தை படிக்காம விட்டுட்டோமே என்று எண்ணியதுண்டு :-)
\\M.Saravana Kumar said...
வேலையில JOIN பண்ணுணீங்களா இல்லையா??\\
வருகைக்கு ரொம்ப நன்றி சரவணகுமார். கொல்கத்தா போனேன்.
இதையே ஒரு தொடரா எழுத ஐடியா கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. இனி அடுத்த பதிவிலிருந்து கொல்கத்தா பற்றிய அனுபவம் தான் :)
\\Divyapriya said...
ஹா ஹா ஹா :-D\\
அம்மணி கோவையிலிருந்து திரும்பியாச்சா?
superaa irukku :-)
mathavanga kashtam unakku
superaa appadeenu kekkapdadhu
aamaam :-)
/
என்னது mining'ஆ. மண்டையில் டார்ச் லைட் மாட்டிக்கோண்டு சுரங்கத்தில் அழுக்கு ஷூவும் அழுக்குச் சட்டையும் போட்டுக் கோண்டு போவார்களே, அப்படிப்ப் பட்ட வேலையா. ஆண்டவா,
/
:))
/
2nd A.C டிக்கட்டுக்கான பணமும் கொடுத்தார்கள். "அடப்பாவிங்களா, இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நான் A.C.யிலேயே வந்திருப்பேனேடா. இப்போ திரும்பிப் போவதற்குகூட second class ஸ்லீப்பரில் தானே முன் பதிவு செய்திருக்கிறேன்" என்று நொந்து கொண்டேன்.
/
:)))
நல்லா ஹ்யூமரா எழுதியிருக்கீங்க நிறைய எழுதுங்க!
\\மங்களூர் சிவா said...
நல்லா ஹ்யூமரா எழுதியிருக்கீங்க நிறைய எழுதுங்க!\\
உங்களுடைய ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி சிவா.
hi Vijay,
lots of new visitors from blog world to ur page itseems:))
glad to c it!!
keep writing Vijay:)))
\\Divya said...
hi Vijay,
lots of new visitors from blog world to ur page itseems:))
glad to c it!!\\
Ellaam neenga seytha marketting thaan :)
:))) Malarum Ninaivugal...
Post a Comment