Pages

August 04, 2008

எங்கே என் ஜீவனே

அவளை முதன்முதலில் சுனிதாவோடு உடுப்பி கார்டனில் தான் பார்த்தேன். கண்டதும் காதல் என்பார்களே அது இது தானோ? அவள் முகம் என் அகக்கண்ணிலிருந்து மறையவே இல்லை. உறக்கத்திலும் அவள் முகம் தான்.

சுனிதா, என் நண்பனின் கிளாஸ்மேட். பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள். நண்பனின் கிளாஸ்மேட்டாக இருந்தாலும் எல்லோரிடமும் ரொம்ப சகஜமாகப் பேசும் குணம். BTM Layout'ல் 2-3 பெண்களாக ஒரு வீட்டில் இருக்கிறார்கள். என்னைப் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே. நான் ராஹுல், மென்பொருள் நிறுவனம் ஒன்றில், வேலை பார்ப்பது என்ற போர்வையில் வலைத்தளங்கள் பல மேய்பவன். நானும் BTM Layout'ல் எனது நண்பர்களோடு தான் இருக்கிறேன்.

ஓர் மாலை நேர மழைப்பொழுதில் BTM'ல் உள்ள உடுப்பி கார்டன் ஹோட்டலில் ஒதுங்க நேர்ந்தது. அப்போது தான் சுனிதாவும் அவளும் அங்கே உணவருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

"ஹாய் சுனிதா. சும்மாவா இடியும் மழையுமா பெய்யுது? என்ன தான் வாய்க்கு வைக்க முடியாட்டாலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவே? என்ன இது இந்த மாதிரியெல்லாம் ஹோட்டலில் சாப்பிடறே?"

"ஹாய் ராஹுல். இங்க ராகே கூடா கோயிலுக்குப் போயிட்டு திரும்பி வரதுக்கு இவ்வளவு நேரம் ஆயிடிச்சு. மழையும் நல்லா பெய்யுத. எப்போதும் நாங்களே சமைத்துச் சாப்பிட்டு போர் அடிச்சுடிச்சு. அதான்
, ஒரு சேங்ஜ்சுக்கு வெளியில சாப்பிடலாம்னு வந்தோம். நீயும் ஜாயின் பண்ணிக்கிறயா?"
"இல்லைப்பா. You carry on"

நாங்கள் இருவரும் இவ்வளவு பேசும் போது கூட அவள் எங்கள் பக்கம் திரும்ப வில்லை.
"ஆங்க் சொல்ல மறந்துட்டேனே. இவள் எங்க ரூம்ல நியூ என்ட்ரி"
சுனிதா அவளை எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது தான் முகத்தை உயர்த்தி ஒரு புன்னகை புரிந்தாள். அப்போது நானும் அவளைப் பார்த்தேன். என் முகத்தின் முன்னே ஓர் மின்னல் வெட்டியது போன்ற உணர்வு.

"விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும், இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி" என்று வைரமுத்து இவளை வைத்துத்தான் பாடினாரோ?

நேர்த்தியான முகம். நீளமும் அடர்த்தியான கூந்தலைப் பின்னி முன்னால் போட்டிருந்தாள். கடுகளவு சிறியதாகவும் துவரம் பருப்பளவு பெரிதாகவும் இல்லாத ஒரு பொட்டு. அதற்கு மேல் குங்குமமும் விபூதியும் இட்டுக்கொண்டிருந்தாள். கோவிலில் இட்டுக்கொண்டிருப்பாள். வலது மூக்கில் சிறியதாக ஒரு மூக்குத்தி.

நான் அவளிடம் "ஹாய்" என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்து விட்டாள். என்னால் அவள் மீது வைத்த பார்வையை விலக்க மனமில்லாமல் சுனிதாவிடமிருந்து விடை பெற்றுச் சென்றேன்.

உன்னைப் பார்த்த பின்பு தான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று இது நாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்

எனக்கென ஏற்கனவே பிறந்தவளிவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
உயிர் சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் இரு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்ற பாடல் வரிகள் என்னையறியாமலேயே என் உதடுகள் முணுமுணுத்தன.

இரவு படுத்த பிறகும் அவள் என்னை நோக்கி புன்னகை புரிந்த காட்சி என் அகத்திரையில் ரிபீட் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டேயிருந்தது. "சுனிதா அவளை அறிமுகம் செய்யும் போது "எங்கள் ரூமுக்கு நியூ என்ட்ரி" என்று தானே சொன்னாள். அதைத்தவிர வேறெதுவும் சொல்லவில்லையே. அவள் பெயர் கூடச் சொல்லவில்லையே. நானே அவளிடம் ஃபோன் போட்டுக் கேட்கட்டுமா? அது அவ்வளவு நல்லா இருக்காது. அவளைப் பற்றி எப்படித்தான் தெரிந்து கொள்வது?" அவளைப் பற்றிய நினைவிலேயே எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

மறு நாள் அலுவலத்தில் என்னிக்குமே இல்லாத அளவிற்கு வேலை. முந்தைய நாள் நடந்த எதுவுமே நினைவில் இல்லை. மதியத்திற்கு மேல் சுனிதாவிடமிருந்து மெயில். தங்கிலீஷில் எழுதியிருந்தாள். நண்பர்கள் எல்லோருக்கும் பொதுவாக எழுதியிருந்தாள்.

Hai Friends,
We have a new room mate, who has come to Bangalore in search of a job.
unga company'la vacancy iruntha sollunga.
avaloda resume attach pannirukkeen.
Please forward pannunga.

Sunitha

ஆஹா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுன்னு சொல்லறது இது தானா என்று மனதிற்குள்ளே சிறித்துக் கொண்டு படிக்கலானேன். மெயிலில் வந்த ரெஸ்யுமைத் திறந்து பார்த்தேன். அவள் பெயர் ஷாந்தி. "அமைதிக்குப்பெயர் தான் ஷாந்தி" என்று பழைய சிவாஜி படப் பாடல் ஞாபகம் வந்தது. பெயருக்கேற்றார் போல் எவ்வளவு அமைதி அவள் முகத்தில்? சொந்த ஊர் மதுரை. OCPM'ல் பள்ளிப் படிப்பு முடித்து விட்டு, M.Sc Computer Science படித்திருக்கிறாள்.

எதற்கும் சுனிதாவைக் கூப்பிட்டு நேற்று பார்த்தவள் தானா என்று கன்ஃபர்ம் பண்ணிக்கோடா கண்ணா என்று மூளை உத்தரவு கொடுக்க, சுழற்றினேன், சுனிதாவின் கைபேசி எண்ணை.
"ஹாய் சுனிதா. இந்த ரெஸ்யூம் நேற்று உடுப்பி கார்டன்'ல உன் கூட இருந்தாளே. அவளோட ரெஸ்யூமா?"
"ஆமாம் ராஹுல். அவளோடது தான். உங்க கம்பனிலதான் நிறைய recruit பண்ணறாங்களே. கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யேன்" என்றாள்.
"பண்ணிட்டாப் போச்சு" என்று அவளிடம் சொல்லாமல், "ஓகே. பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன். மீண்டும் ரெஸ்யூமைப் படிக்கலானேன். அதில் அவளுடைய மெயில் ஐ.டி கைப்பேசி எண் எல்லாமே இருந்தது. இருந்தாலும் ஒரு முறை புன்னகைத்த பெண்ணிற்கு எப்படி மெயில் அனுப்புவது. ஐடியா, அவள் ரெஸ்யூமை கம்பனி இன்ட்ரா நெட்டில் upload செய்தேன். ரெஸ்யூமை உள்வாங்கிக்கொண்ட கம்பனி database, "Thank you for referring Miss. Shanthi. Please note down the referral ID and the login password. In case you want to modify your resume in future, you can login using this ID and password" என்றொரு உபரித்தகவல் வேறு கொடுத்தது. எனக்கும் ஷாந்தியின் மெயில் ஐ.டி.க்கும் ஒரு மெயிலும் அனுப்பியது.
அவளுக்கும் மெயில் போயிருக்கிறதென்பது எனக்குத்தெரிந்திருந்தாலும், அவள் மெயில் ஐ.டி.க்கு இந்தத் தகவலை ஃபார்வார்ட் செய்தேன், அவளிடமிருந்து ஒரு தாங்க்ஸ் மெயில் ஒன்று வரும் என்ற எதிர்பார்ப்பில்.
அன்று மாலை தான் அவளிடமிருந்து மெயில் வந்தது. எழுதியிருந்தது நாலே நாலு வார்த்தை தான்.

Thanks for referring

Shanthi
அவ்வளவு தான்.

ச என்னடா இது. "நம்மளை இவ்வளவு பெரிய கம்பனியில் ரெஃபர் பண்ணியிருக்கானே. எக்ஸ்ட்ராவா ஒரு நாலு வார்த்தை எழுதலாமே"ன்னு இந்தப் பொண்ணுக்கு நினைப்பு வந்திருக்கா. இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான்பா என்று பொறுமிக்கொண்டேன். அவளைக் கூப்பிடலாமா வேண்டாமா. சுனிதாவிற்குத் தெரிந்து விட்டால் என்னை ஓட்ட ஆரம்பித்துவிடுவாள். அவளிடம் எப்படிப் பேசத் தொடங்குவது? இந்த எழவெடுத்த கம்பனில ஷாந்தி ரெஸ்யூம் மாதிரி ஓராயிரம் ரெஸ்யூம் இருக்கும். இவளுக்கு எப்போது இன்டர்வியூ வந்து எப்போது இவளிடம் மறுபடியும் பேச?

அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மறந்திருக்க மனமும் ஒத்து வரவில்லை.
என் ஜீவனையே அவளோடு எடுத்துச் சென்று விட்டாள் அவள்.
"எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னைத் தந்தேனே"
என்ற உயர்ந்த உள்ளம் பாடல் தான் ஞாபகம் வந்தது.

சில நாட்கள் அவள் ஞாபகம் இருந்தது. இன்னொரு நாள், சுனிதாவை மீண்டும் சந்திக்கலானேன். இப்போது ஷாந்தி அவள் கூட வந்திருக்கவில்லை. ஷாந்தியைப் பற்றிக் கேட்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் ஒரு பட்டி மன்றமே நடந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹே உன் ஃப்ரண்டு வேலை தேட்டிட்டு இருந்தாளே, ஏதாவது கிடைத்ததா?" என்றேன்.
"அவள் போன வாரம் தான் சென்னையில் வேலை கிடைத்துப் போய் விட்டாள்" என்று பதில் சொன்னாள் சுனிதா.
என் மனதிற்குள் வெடித்த எரிமலையை யாராலும் பார்த்திருக்க முடியாது. அது ஏற்படுத்திய தாக்கத்தை என்னைத்தவிற யாரும் உணர்ந்திருக்க முடியாது. ஏமாற்றத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அங்கேயிருந்து நகர்ந்து விட்டேன்.

சில நாட்கள் என் மனதினுள்ளே வாடகைக்கு இருந்து விட்டு,
இன்று இதயத்தையும் திருடிச் சென்று விட்டாள்

"சரி, நமக்குக் கொடுத்து வச்சது அவ்வளவு தான்" என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, அம்மாவிடமிருந்து ஃபோன். "ராஹுல், உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம்"
"அம்மா ஆரம்பிச்சுட்டியா, அதே பல்லவியைப் பாட?"
"டேய், இந்தப் பொண்ணை பார்த்தே, நீ உடனே சரின்னு சொல்லிடுவே"
"அம்மா! ஏம்மா படுத்தறே. இப்போ எனக்கெதுக்கு கல்யாணம்?"
"நீ எவளையாவது இழுத்துட்டு வரதுக்கு முன்னாடி நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது better. பொண்ணுக்கு சொந்த ஊர் மதுரை. இப்போ சென்னையில் வேலை பார்க்கறாளாம். பொண்ணு பெயர் ஷாந்தி"

"என்னது??"


20 comments:

Ramya Ramani said...

விஜய் கலக்கறீங்க புது டெம்ப்லேட்..இது என்ன புதுசு கண்ணா புதுசு காலமா???

கண்டதும் காதலா!! பாட்டு எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு.
நீங்க கதை சொல்லும் விதம் அருமை ..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :))

BTW அது என்னங்க Page கீழ புரியாத பாஷை??

Vijay said...

மீண்டும் ரம்யா தான் first'ஆ?

Thanks a lot Ramya

முகுந்தன் said...

விஜய்,
நேத்து படிச்சேன் ஆனா இப்போ தான் கமெண்ட் போட முடிந்தது .

//வேலை பார்ப்பது என்ற போர்வையில் வலைத்தளங்கள் பல மேய்பவன்.//

இப்படியெல்லாம் சபைல மானத்த வாங்கப்டாது :-)

//இந்த எழவெடுத்த கம்பனில ஷாந்தி ரெஸ்யூம் மாதிரி ஓராயிரம் ரெஸ்யூம் இருக்கும்.
இவளுக்கு எப்போது இன்டர்வியூ வந்து எப்போது இவளிடம் மறுபடியும் பேச?//


ரெஸ்யூம் அனுப்பும்போது இது நல்ல கம்பெனியா இருந்ததா?

ரொம்ப இயல்பா இருக்கு உங்க கதை, அதுவும் சரியான பாடல்கள்
உபயோகபடுத்தி இருக்கிறீர்கள். சூப்பர்...

Divyapriya said...

கதை சூப்பர்...அத விட டெம்ப்லேட்...chance less...
நடுல பாட்டோட கதை படிக்க ரொம்ப நல்லா இருக்கு...தொடர்ந்து கதைக்க வாழ்த்துக்கள்...

Divyapriya said...

//விஜய் said...
மீண்டும் ரம்யா தான் first'ஆ?//

:-((

Vijay said...

\\முகுந்தன் said...
அதுவும் சரியான பாடல்கள்
உபயோகபடுத்தி இருக்கிறீர்கள். சூப்பர்...\\
என்ன பண்ணறது? நமக்கா கவிதையெல்லாம் எழுத வரலைன்னா, இந்த மாதிரி மத்தவங்க எழுதிய கவிதையை நாம use பண்ணிக்க வேண்டியது தான் :)

\\Divyapriya said...
கதை சூப்பர்...அத விட டெம்ப்லேட்...chance less...\\

ரெம்ப நன்றிங்கோ :)

Sivakumar Muthiah said...

hello enna idu...? wonderful..excellent..great..!

ஜியா said...

:)))

Template is also good...

Divya said...

கதையின் நடை ......அருமையிலும் அருமை!!

கதைக்கு நடுவே..பொருத்தமான பாட்டு எல்லாம் போட்டு அசத்திப்புடீக அன்னாச்சி:)))
ரொம்ப நல்லாயிருக்கு!

Divya said...

நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லாயிருக்கு விஜய்.....ஸோ.....தொடர்ந்து நிறைய கதை எழுதுங்க.

உங்க கிட்ட இருந்து நிறைய அழகான கதைகளை எதிர்பார்க்கிறேன்!!

Divya said...

புது டெம்ப்லேட்......அசத்தல்!!சூப்பரா இருக்கு:))

Vijay said...

\\ஜி said...
:)))

Template is also good...\\

நன்றி ஜி :)

Vijay said...

\\Sivakumar Muthiah said...
hello enna idu...? wonderful..excellent..great..!\\
Siva, Thanks for your comments Siva. என்னைப் போன்ற கத்துகுட்டிகளெல்லாம் பிளாக் எழுதும் போது, உன்னைப் போன்ற நிஜ கவிஞர்கள், நிறைய எழுத வேண்டும். இது எனது கண்டிப்பான கோரிக்கை.

Vijay said...

\\Divya said...
நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லாயிருக்கு விஜய்.....ஸோ.....தொடர்ந்து நிறைய கதை எழுதுங்க.

உங்க கிட்ட இருந்து நிறைய அழகான கதைகளை எதிர்பார்க்கிறேன்!!\\

எல்லாம் உங்க கிட்டேர்ந்து கற்றுக்கொண்டது தான்.

\\கதைக்கு நடுவே..பொருத்தமான பாட்டு எல்லாம் போட்டு அசத்திப்புடீக அன்னாச்சி:)))\\

நன்றி தங்கச்சி. பாட்டெல்லாம் நாமள எழுதினது. இருக்கறதை உபயோகப்படுத்திக்க வேண்டியது தான் :)


\\புது டெம்ப்லேட்......அசத்தல்!!சூப்பரா இருக்கு:))\\
அந்த யானைக்கு மேல் உட்கார்ந்திருப்பது நானில்லை

PK said...

ஹாய் ங்க!

ச்சோ cute காதல் கதை.
இது உண்மை கதை தான என்று உறுதி பண்ணி சொன்னிங்கனா நா இன்னொரு வாட்டி கதையை உனிப்பா படிப்பேன் :)

அன்புடன்,
புனித்

Vijay said...

ஹாய் புனீத்,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. இது சத்தியமா ஒரு கற்பனை கதை தாங்க. :)

அன்புடன்,
விஜய்

MSK / Saravana said...

கலக்கீட்டீங்க்னா..
:)

ஆனா இந்த மாதிரியெல்லாம் கதையில் மட்டுமே நடக்கும்..
:(

மங்களூர் சிவா said...

/
Labels: கதைக்களம்
/

அதகளம் பண்ணீட்டீங்க சூப்பர்.

Vijay said...

\\M.Saravana Kumar said...
கலக்கீட்டீங்க்னா..\\

படித்ததற்கு ரெம்ப நன்றி சரவணகுமார்.

Vijay said...

\\மங்களூர் சிவா said...
அதகளம் பண்ணீட்டீங்க சூப்பர்.\\

Thanks a lot Siva.