Pages

June 11, 2008

பொட்டி போணியாகுமா??


நாளைக்கு தசாவதாரம் ரிலீஸ். எனக்கு இப்பவே மனசு படபட'ன்னு அடிக்க ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா முட்டி மோதி உருண்டு புரண்டு ஒரு வழியா ஜூன் 12 ரிலீஸ்'னு சொல்லிட்டாங்க. இன்னும் ஒரு கேஸு நிலுவையில் உள்ளதா அரசல் புரசலா பேசிக்கிறாங்க.
பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்காகக் காத்துக்கிடக்கும் மாணவன் மாதிரி படம் எப்படி வரப்போகுது என்ற ஆவல் என்னை ரொம்பவே வாட்டுது.

"ஏண்டா வெண்ணை, கமலே படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குமோன்னு கவலைப்படலை. நீ ஏண்டா இப்படி அலுத்துக்கறேன்னு" எல்லாரும் கேக்கறது காதுல விழுது. ஆனா இந்த பாழாப்போன பெங்களூர்'ல எந்த தியேட்டர்'ல இதை திரையிடப்போராங்கன்னு இன்னும் தெரியவேஇல்லை. INOX'னு சொல்லறாங்க. ஆனால், INOX வலைதளத்துல இதைப்பற்றி ஒண்ணுமே போடலை. PVR'ல "பூத்நாதுக்கு" கொடுத்திருக்கிற விளம்பரம் கூட தசாவதரத்துக்கு கொடுக்கலை. ஹ்ம்ம் படம் பார்க்க ஹோசூர் தான் போகணும் போலிருக்கு.
நாளைக்கு விடிஞ்சாத் தெரிஞ்சுடும், படம் பொட்டியை விட்டு வெளிய வந்துச்சா இல்லையான்னு.

7 comments:

Divya said...

\ஏண்டா வெண்ணை, கமலே படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குமோன்னு கவலைப்படலை. நீ ஏண்டா இப்படி அலுத்துக்கறேன்னு" எல்லாரும் கேக்கறது காதுல விழுது. \\

Mind reading ellam nalla therinju vaichirukireenga Vijay:)))

Ramya Ramani said...

\\ஹ்ம்ம் படம் பார்க்க ஹோசூர் தான் போகணும் போலிருக்கு.
நாளைக்கு விடிஞ்சாத் தெரிஞ்சுடும், படம் பொட்டியை விட்டு வெளிய வந்துச்சா இல்லையான்னு. \\

neenga ivvalo sramapadaradhukku padam nalla irundha seri dhan :)
pathuttu oru review podunga..nangalum poi pakkarom

Vijay said...

ரம்யா,
கமல்ஹாஸன் படத்தை விமர்சிக்கும் அறுகதை எனக்குக் கிடையாது. வேறு யார் படம்னாலும் பிரித்து மேய்ந்துவிடலாம்.
இருந்தாலும் படம் பார்த்துட்டு என்னுடைய உணர்வுகளை வேணும்னாலும் பகிர்ந்து கொள்கிறேன்.
என்ன ஒரு சின்ன நெருடல், கடந்த முறை மிகுந்த build-up'க்குப் பிறகு வந்தது ஆளவந்தான். ஆனா, படம் ஏனோ சாதாரண மக்கள் மனதை வசீகரிக்கத் தவறி விட்டது.
கே.எஸ். ரவி குமார் அப்படி பண்ணிட மாட்டர் என்றூ நம்புகிறேன்.
அன்புடன்,
விஜய்

Vijay said...

திவ்யா,
நான் பேசறதுக்கு என் மனைவியிடமிருந்து என்ன மாதிரி ரெஸ்பான்ஸ் வரும் என்று எண்ணிப்பார்ப்பேன். அதுவே நிரைய பேரின் ரெஸ்பான்ஸாக்கூட இருக்கும். அதை அப்படியே போட்டுட வேண்டியது தான். So Simple :)
நமக்காவது மைண்ட் ரீடிங்காவது. அதெல்லாம் நமக்கெங்கே?

Ramya Ramani said...

Oh Sureah pakirndukonga Vijay!

Shwetha Robert said...

what a flow of writing you have!!!

your writing makes me feel asif your talking in person, excellent Vijay:)

Vijay said...

நன்றி நன்றி நன்றி ஷ்வேதா. நான் பிறந்த ஊர் மதுரை என்பதால், மதுரை மீது எனக்கு ஒரு தனி பாசமுண்டு. மதுரை'ல 2-3 நாளா சன் டி.வி யெல்லாம் தெரியலையாமே. அப்படியா?