Pages

June 29, 2008

பெங்களுரு உலா

வேலை வேலை அப்படியோரு வேலை சென்ற வாரம். (அப்படியும் நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளுக்கெல்லாம் போய் பின்னூட்டம் மட்டும் போட்டுட்டுவேன்) அதிலும் இந்த வாரம் கொரியாவிலிருந்து ஓர் அழையா விருந்தாளி வருகிறானாம். என் தலையெழுத்து, அவனை நான் தான் என்டெர்டைன் செய்யணும். அப்பாடா ஒரு வழியா வெள்ளிக்கிழமை முடிட்ந்ததே. இரண்டு நாள் நிம்மதியா வீட்டிலேயே இருக்கலாம் என்று வந்தால், காத்திருந்தது ஒரு இடி. நான் வீட்டுக்கடன் வாங்கியிருக்கற வங்கியிலிருந்து ஒரு ஓலை. "நீங்க கட்டும் பணம், வட்டிக்கே போதவில்லை. அசல் குறையவேயில்லை, ஏறத்தான் செய்கிறது. நேரில் வந்து சரி செய்யவும்". இல்லையேல் விளைவுகள் விபரீதம் என்று சொல்லாத குறை.
வீட்டுக்கடன் பற்றிய விஷயங்களிலெல்லாம் என் மைத்துனர் பெரிய ஜாம்பவான். அவரையும் அழைத்துக் கொண்டு ஓடினேன். வங்கியிருக்கும் இடம் மல்லேஷ்வரம். என் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர்.வங்கிக்குச் சென்று செலுத்த வேண்டிய எக்ஸ்ட்ரா பணத்தை (மனதிற்குள் திட்டிக்கொண்டே) செலுத்த வேண்டியானது. "சரி இவ்வளவு தூரம் வந்தாச்சே, அப்படியே புதுசா கட்டியிருக்கும் விமான நிலையம் இன்னாமாத் தான் இருக்குன்னு" பார்க்க ஒரு ஆர்வம். மேகரி சர்கிள் அடைந்தவுடனே, தேவனஹள்ளி 31 கிலோமீட்டர் என்று போர்ட் பார்த்ததுமே திரும்பியிருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு அசட்டு தைரியத்தில் மேலும் பயணித்தோம். நல்ல வேளை, டூ வீலரில் வந்திருந்ததால் நெளிந்து நெளிந்து செல்ல முடிந்தது. ஹெப்பால் மேம்பாலம் சென்றடையும் வரை போராட்டம் தான். முன்னால் ஒரு 200-300 மீட்டருக்கு எதுவுமே நகரவில்லை. ஹெப்பால் மேம்பாலம் தாண்டிய பிறகு தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.
என்ன தான் நமக்கு பெங்களுருவில்லுள்ள டிராஃபிக்கில் ஓட்டுவது சிரமமாக இருந்தாலும் சில அதிசயமான விஷயங்கள் சாலையில் காண முடிந்தது. பாவம் படிக்க வேண்டிய ஒரு பையன், இப்படி உழைத்து ஓய்வெடுக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை போலும். பாருங்கள் இவன் ஓய்வெடுக்கும் இடத்தை. வருமைக்கோட்டுக்குக் கீழே கூட மக்கள் வாழ்கிறார்கள். இவன் வாழும் கோட்டை என்னவென்று சொல்வது?
ஹெப்பால் பாலம் மீதேறியவுடன், அதற்கப்பால் பெட்ரொனஸ் டவர் போல் ஒரு கட்டிடம். என்ன கட்டிடம் என்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு அந்தக்காட்சி ரம்மியமாக இருந்தது. இது என்ன கட்டிடம் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும்.

புதிய விமான நிலையத்திற்கு உருப்படியா சாலைகளில்லை என்று செய்தித்தாள்களிலே பத்தி பத்தியாக எழுதினாலும், சாலைகள் அகலமாகவும் விசாலமாகவும் ஆறுவழிப் பாதைகளாக இருக்கிறது. நிஜமாகவே அயல்நாட்டில் பயணம் செய்யும் ஃபீலிங்க் தான்.
அதிலும் NH-4 லிருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வெளிப்பாதை(exit route) Simply Superb.

இருந்தாலும் இந்த ஆறுவழிப்பதையில் 4-5 சிக்னல் இருப்பது தான் உறுத்தலான விஷயம். 90 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென சிக்னல் வருவது சற்றே சிரமமான விஷயம்.

ஒரு வழியாக 90 கிலோமீட்டர் வேகத்தில் வண்டியைச் செலுத்தி ஒரு மணி நேரத்தில் புதிய விமான நிலையம் வந்தடடைந்தோம். வந்த பிறகு தான் தெரிந்தது விமான நிலையத்தைப்பற்றி நாளிதழ்களெல்லாம் ஓவர் பில்ட் அப் கொடுத்திருக்கிறார்கள் என்று. அப்படியொன்றும் ஆஹா ஓஹோ விமான நிலையம் ஒன்றும் இல்லை. பாங்காக்கில் இருக்கும் விமான நிலையம் கூட இதை விட
நன்றாக இருக்கும். இது ஒன்றும் சிங்கபூரோ அல்லது
மலேசிய விமான நிலையத்திற்கு ஈடு
இணையானதில்லை.
இருந்தாலும் பழைய விமான நிலையத்திற்கு இது நன்றாகவே இருக்கிறது. அவ்வளவு தான்.

வெளியிலேயே நின்று இங்கே அங்கே கொஞ்சம் நோட்டம் விட்டு, திரும்பலானோம்.
வரும் வழியில் தான் விதி டிராஃபிக் என்னும் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் 15 நிமிடத்திற்கு ஒன்றுமே நகரவில்லை.
ஆனாலும் இந்த லாரிக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு பழுதடைந்த லாரியை இன்னொன்று எப்படி இழுத்துச் செல்கிறது பாருங்கள்?
ஒரு வழியாக முட்டி மோதி 4 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

சொல்லிக்காம கொள்ளிக்காம ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு வந்ததால் மேலிடத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டது வேறு கதை.

பெங்களுரில் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு சில டிப்ஸ். (ச, நானும் டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டேன்).
  • ஹெப்பால் பாலத்திலிருந்து விமான நிலையம் 28 கிலோ மீட்டர். இங்கிருந்து விமான நிலையம் சென்றடைய 1 மணி நேரம் ஆகிறது. பெங்களுருவில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் போக்குவரத்து நெரிசலில் ஹெப்பால் வரை செல்வது பிரம்மப் பிரயத்னம் தான்.
  • பெங்களூரிலிருந்து அநேகமாக எல்லா இடத்திலிருந்தும் விமான நிலையம் செல்ல வொல்வோ பேரூந்து விட்டிருக்கிறது BMTC.
  • பேரூந்து நிலையம் வரை செல்ல முடியவில்லையென்றால் Airlift என்ற நிறுவனத்தார் (Innova கார்) டாக்ஸி சேவை செய்கிறார்கள். ஆறு பேர் செல்லலாம். www.airlift.com என்ற இணையதளத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். நபர் ஒருவருக்கு 340 ரூபாய். உள்ளே அளுக்கொரு LCD மானிடரில் படம் பார்க்கலாம். Wi-fi வசதியும் உள்ளது. அனைத்தும் இலவசம். விட்டிற்கு அருகில் வந்து ஏற்றிச் சென்று இறக்கி விடுகிறார்கள்.
  • அயல் நாடு செல்லும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னரே வீட்டை கிளம்பிவிடுவது நல்லது. பெங்களுரில் போக்குவரத்து நெரிசல் எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
Happy Flying from Bengaluru International Airport

14 comments:

Ramya Ramani said...

உபயோகமான உங்கள் பாணியில் நக்கல் பதிவு :)

விஜய் said...

\\Blogger Ramya Ramani said...

உபயோகமான உங்கள் பாணியில் நக்கல் பதிவு :)\\
என்ன பண்ணறது ரம்யா. உங்களை மாதிரி எல்லாருடைய சிந்தனையையும் தட்டி எழுப்பற மாதிரியெல்லாம் எனக்கு எழுதத் தெரியாது. சரி, ஏதோ நம்மால முடிஞ்சது, நாலு பேருக்கு உபயோகப்படும்படியான ஒரு செய்தியாவது சொல்லுவோம்.
நான் எங்கே நக்கல் அடிச்சிருக்கேன்?

Divya said...

\\(ச, நானும் டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டேன்).\\

ஹலோ....அதென்ன 'ச' ன்னு சலிச்சுக்கிட்டு டிப்ஸ்???

டிப்ஸ் கொடுக்கிறது எவ்வளவு பெரிய நல்ல காரியும் தெரியுமோ:)))

நக்கல் நையாண்டியுடன் பதிவு ஜூப்பரு விஜய்!!!

Divya said...

BTW, உங்க வீட்டு தங்கமணி ரொம்ப ஹோம்லி & கியூட் ஆ இருக்காங்க மூனார் ஆல்பத்தில், என்னோட கமெண்ட்ஸ் சொல்லிடுங்க அவங்க கிட்ட மறக்காம, சரியா!

விஜய் said...

\\ஹலோ....அதென்ன 'ச' ன்னு சலிச்சுக்கிட்டு டிப்ஸ்???\\
I know you will shoot this furious question :)

\\நக்கல் நையாண்டியுடன் பதிவு ஜூப்பரு விஜய்!!!\\
திவ்யா மாதிரி ஜாம்பவிகள் நம்ம வலைப்பக்கம் வந்து அதை சூப்பர்னு சொல்லறது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கற மாதிரி.

விஜய் said...

\\என்னோட கமெண்ட்ஸ் சொல்லிடுங்க அவங்க கிட்ட மறக்காம, சரியா!\\
சொல்லியாச்சு

முகுந்தன் said...

//நீங்க கட்டும் பணம், வட்டிக்கே போதவில்லை//

நல்ல உபயோகமான பதிவு.
ஆனால் நான் படித்தும் என் மனதில் ஓடுவது இந்த பாழாய் போன
home loan தான்.

same blood:-))

Divyapriya said...

//சொல்லிக்காம கொள்ளிக்காம ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு வந்ததால் மேலிடத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டது வேறு கதை.//

ROTFL :-D

விஜய் said...

\\முகுந்தன் said...
நல்ல உபயோகமான பதிவு.
ஆனால் நான் படித்தும் என் மனதில் ஓடுவது இந்த பாழாய் போன
home loan தான். \\
முகுந்தன்,
நீங்கள் எல்லாம் இப்படிச் சொல்லலாமா?

விஜய் said...

// Divyapriya said...
சொல்லிக்காம கொள்ளிக்காம ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு வந்ததால் மேலிடத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டது வேறு கதை.//

ROTFL :-D//

நான் வாங்கிகட்டிக்கிறது சில பேருக்கு காமெடியா இருக்கு. ஹய்யோ ஐய்யோ

முகுந்தன் said...

//முகுந்தன்,
நீங்கள் எல்லாம் இப்படிச் சொல்லலாமா?
//

நீங்க எதுக்கு இப்படி
சொன்னீங்கனு
எனக்கு புரியல ,
வெளிநாட்டில் இருப்பதாலையா ? அப்படி நினைக்கதீங்கன்னா....

விஜய் said...

ஏதோ தெரியாமச் சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோங்க

முகுந்தன் said...

என்ன விஜய் இது,
நான் சும்மா சொன்னேன் :-)

விஜய் said...

\\ முகுந்தன் said...
என்ன விஜய் இது,
நான் சும்மா சொன்னேன் :-)\\
Ok Thanks dude :)