எவ்வளவு தான் பதிவு எழுதியிருந்தாலும் யாராச்சும் கவிதை எழுதும் போது பயங்கர inferiority complex வந்துடுது. "என்ன எழவுடா இது. நமக்கு மட்டும் இந்த கவிதை வந்து தொலைய மாட்டேங்குதே"என்ற ஆதங்கம். இருந்தாலும் மனச தேத்திகினு ஒரு கவிதை எழுதிப்புட்டேன். கவிஞர்கள் பலர் உள்ள வலைஞர்களே, இது மண்டபத்தில் யாரோ எழுதி நான் கட்டிங் ஒட்டிங் செஞ்சது இல்லை. நானே நானே எழுதினது. நக்கீரன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்காம படிச்சுட்டு, முடிஞ்சா ரெண்டு வார்த்தை நல்லதா எழுதினா புண்ணியமாப் போகும்.
நன்றி,
மீண்டும் கவியுரைப்பேன்
நன்றி,
மீண்டும் கவியுரைப்பேன்
பசுமை மிக்க கல்லூரி நாட்கள் முடிந்து
பயணப்பட்டேன் திரவியம் தேடி
வந்திறங்கினேன் சென்னையில்
ஏதாவதொரு வேலையை நாடி
அப்போது கேம்பஸ் இன்டர்வியூஎன்
கல்லூரியில் வந்திருக்கவில்லை
வந்திருந்த ஓரிரு கம்பெனிகளும்
என்னைக் கண்டு கொள்ளவில்லை
ஏறி இறங்கினேன் சில பல
கம்பெனிகளின் படிகளை
அப்பப்போ நொந்து கொண்டேன்
என்னோடு விளையாடும் விதிகளை
சில சமயம் கையிருப்பில்
குறைந்து விடும் பணம்
அப்போதெல்லாம் "நடையைக்கட்டுடா"
என்று சொல்லும் என் மனம்
கொடுத்தான் ஒரு புண்ணியவான்,
எனக்கென்றொரு வேலை
முதல் சம்பளத்தில் வாங்க
நினைத்தேன் அம்மாவிற்கோர் சேலை
வேலையென்னவோ டை கட்டிக்கொண்டு
நகரெங்கும் சுற்றும் விறபனையாளர்
தாம்பரம் முதல் தண்டையார்பேட்டை வரை
கிடைக்கவில்லை ஒரு வாடிக்கையாளர்
காசில்லா சில தினங்களின் முன் பாதி
கழியும் வள்ளுவர் கோட்டத்திலே
உண்ணாத மதிய மயக்கங்கள் அரங்கேறும்
தி.நகர் பனகல் தோட்டத்திலே
காலையில் தாம்பரம், மதியம் அடையார்
மாலை பாரிமுனை, இரவில் கொரட்டூர்
மறுநாள் பரங்கிமலை, பிறகு எழும்பூர்
மீண்டும் மயிலை, முடிந்தால் பெரம்பூர்
அப்பா கைப்பிடித்து நடக்கப்பழகிய
நாட்கள் நினைவிருக்கவில்லை
வாலிப வயது வந்த பிறகு
நடந்து பார்த்ததில்லை
வழித்தடங்கள் பல பழகியும் நடந்தே
கடந்தேன் சென்னை வீதிகளை
வாழ்வில் மீண்டுமொருமுறை
செலுத்தலானேன் என் கால்களை
கிலட்சையும் ஆக்சிலரேடரையும்
அழுத்திய கால்கள்
இன்று, மீண்டும்
நடக்கப்பழகும் நாட்கள்
சாலையிலே நடப்பவர்களைக்கண்டு
ஏங்குகின்றன என் இரு கண்கள்,
வராதா மீண்டும் அந்த
நடை பழகிய நாட்கள்
15 comments:
கவிதை முயற்சிக்கு முதல் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள் விஜய்!!
ஒரு ஆழமான உணர்வுமிக்க மலரும் நினைவையே கவிதை வடிவில் பதிவிட்டிருக்கிறீங்க......அருமை!!!
\\கொடுத்தான் ஒரு புண்ணியவான்,
எனக்கென்றொரு வேலை
முதல் சம்பளத்தில் வாங்க
நினைத்தேன் அம்மாவிற்கோர் சேலை\\
பிடிச்சிருக்கு இந்த பகுதி.....எந்த மகனுக்கும் முதல் மாத சம்பளத்தில் அம்மாவிற்கு ஏதாவது வாங்கி கொடுக்கனும்னு ஆசை இருக்கும் இல்ல:))
நல்லாயிருக்கு கவிதை!
\எவ்வளவு தான் பதிவு எழுதியிருந்தாலும் யாராச்சும் கவிதை எழுதும் போது பயங்கர inferiority complex வந்துடுது. "என்ன எழவுடா இது. நமக்கு மட்டும் இந்த கவிதை வந்து தொலைய மாட்டேங்குதே"என்ற ஆதங்கம். இருந்தாலும் மனச தேத்திகினு ஒரு கவிதை எழுதிப்புட்டேன். \\
Lol:))))
ஹாய் திவ்யா,
நன்றி நன்றி நன்றி.
என்னுடைய வேலை தேடிய நாட்களைப்பற்றி எழுதணும்னு ரொம்ப நாள் திட்டம். இப்போ தான் நிறைவேறியது. என்ன தான் கஷ்டங்கள் பல் ஆனுபவித்தாலும், இன்னிக்கு நினைத்துப் பார்க்கும்போது ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு.
அன்புடன்,
விஜய்
\\வேலையென்னவோ டை கட்டிக்கொண்டு
நகரெங்கும் சுற்றும் விறபனையாளர்
தாம்பரம் முதல் தண்டையார்பேட்டை வரை
கிடைக்கவில்லை ஒரு வாடிக்கையாளர்\\
அட பாவமே!Sales Reps ரொம்ப பாவம்ங்க
நல்ல முயற்சி!வாழ்த்துக்கள் விஜய் :)
Ramya Ramani said...
\\அட பாவமே!Sales Reps ரொம்ப பாவம்ங்க\\
அதனால தான் என் வீடு தேடி எந்த சேல்ஸ் ரெப் வந்தாலும் எரிஞ்சு விழாமாட்டேன். இந்த அனுபவம் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம். (ஆஹா இதைக் கூட வாழ்க்கைப்பாடம் Part - 2'னு எழுதலாமே)
Touchy lines of experience:(
Poem has come out really good,keep trying Vijay:-)
Vijay, It not seems like ur 1st poem. That's ur success as a poet, I think. This is not just a formal credit, for u ask to say such good words about ur poem. But it's really worth for it.
Karthika
Thank u for ur comments on my blog. That's not a Hi-Ku. U may refer more about that in that blog.
sooooooooooper
ஹைக்கூ குறித்த விளக்கத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி.
Nice one.... Rhyming words are nice... innum kavithuvamaana vaarhtaigala seththirukalaamnu nenachittu irukkumpothu, unga second half of the kavithai ellaathaiyum marakadikka vachidichu... Nice touchy one... enjoyed reading it and felt the sadness... :))
Keep writing :))
Thanks a lot Ji.
Vijay
Post a Comment