Pages

June 05, 2008

வாழ்க்கைப் பாடம் - 1

ஆசிரியர்கள் பலர் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பாடம் நடத்தியதோடு தன் கடமை முடிந்ததென போயிருக்கிறார்கள். ஆனால் என் கூடவே இருந்து எனக்கு நிதமும் பாடம் நடத்தும் ஆசான் ஒருவர் இருக்கிறார். அவர் தான் 'வாழ்க்கை'. வாழ்க்கை எனக்கு நிறைய பாடங்கள் புகட்டியிருக்கிறது. நான் நினைவறிந்து நான் கற்ற முதல் பாடம் 'உணவைப் பழிக்காதே'
சிறு வயது முதல் சாப்பாட்டில் சில உணவு வகைகள் பிடிக்கும். பல பிடிக்காது. சாம்பார் வத்தக்குழம்பு முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு இப்படியெல்லாம் சமைத்துப் போட்டால் மறு பேச்சு பேசாமல் சாப்பிட்டுப் போய் விடுவேன். ஆனால் அம்மா எப்போதும் எனக்குப் பிடித்ததையே சமைத்துப் போடமாட்டாள். பல தடவை எனக்குப் பிடிக்காதது தான் வீட்டில் மெனுவாக இருக்கும். பாகற்காய் பிட்லா, கத்தறிக்காய் பிட்லா கற்ணக்கிழங்கு மசியல், இப்படி ஏதாவது எனக்கு சுத்தமா பிடிக்காததை சமைத்து விடுவாள். சாப்பிடப் பிடிக்காம அடித்துக் குதிப்பேன். "இந்த *(&@%*(&@*(#$%*(@& சமையலை யார் கண்டுபிடித்தர்கள்" என்று திட்டுவேன்.
ஆனாலும் அம்ம்விடம் என் பாச்சா பலிக்காது. ஒக்காத்தி வச்சு வாய்க்குள் திணித்து விடுவாள். எல்லாத்தியும் முழுங்கினப்பறம், "என்ன
இப்போ நன்னா இருக்கா இல்லையா?" என்று கேட்டால், "நன்னாத்தான் இருக்கு. ஆனா எனக்குப் பிடிக்கலை" என்பேன். (எங்களுக்கெல்லாம் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாதுல்லா). "பாரு பாரு இந்த சமையல் சாப்பிட என் காலில வந்து ஒரு நாள் வந்து விழுவே" என்பாள்.
படிப்பெல்லாம் முடிந்த பிறகு கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. ஆஹா என்ன ஊர்! சைவ சாப்பாடு கிடைக்கும் ஹோட்டலே கிடையாது. அப்படியே ஒன்றிரண்டிருந்தாலும் 10 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். அதுவும் சில நாட்களில் மூடி விடுவார்கள். அந்த ஊரில் பொழுது போகவில்லையென்றால் பந்த் நடத்திவிடுவார்கள். நிஜமாகவே சாப்பாட்டிற்கு லாட்டரி அடித்திருக்கிறேன். "எங்காவது அம்மா சமைத்துப் போட்ட மாதிரி டைக்காதா? அட இந்த பாழாப்போன பாகற்காய்ப்பிட்லா கிடைத்தால் கூடப் பரவயில்லை" என்று புலம்பர லெவெலுக்கு வந்துட்டேன்.
ஆறு மாதம் கழித்து லீவு எடுத்துக்க்கொண்டு வந்தவுடன் அம்மாவிடம், "நீ என்ன வேணா சமைத்து போடு. உன் சமையலைச் சாப்பிட வேண்டும்" என்று அழாத குறையாக சொன்னேன்.
கொல்கத்தாவில் ஒரு வருடம் கை நிறைய சம்பாதித்தாலும் வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்காமச்செய்து வாழ்க்கை எனக்குப் புகட்டிய பாடம் "உனவைப் பழிக்காதே". ஆஹா ஆத்திச்சூடி range'க்கு இருக்கே.
அங்கு நான் பெற்ற அனுபவம் தான் பிற்காலத்தில் என் மனைவி எது எப்படி சமைத்துப்போட்டாலும் மறு பேச்சு பேசாமல் சாப்பிட்டுப் பழக கற்றுக்கொடுத்தது.
பி.கு. என் மனைவி நன்றாகவே சமைப்பாள்.

6 comments:

Ramya Ramani said...

நீங்கள் சொல்வது 100% உண்மை . எனக்கு அம்மா பாத்தா பயம் So, Box-ல போட்டு குடுக்கறத அழுதுண்டே சாப்பிட்டிருவேன்! இப்ப நானே தத்தகா பித்தகானு சமைக்கரசே அடடேனு தோனும்:(

Vijay said...

//So, Box-ல போட்டு குடுக்கறத அழுதுண்டே சாப்பிட்டிருவேன்! //

எனக்குப் பிடிக்காததை அம்மா என்றுமே பாக்ஸில் போட்டுத்தரமாட்டாள். தூற போட்டுவிடுவேன்னு தெரியும். அதனால வீட்டிற்கு வந்ததும் ஒக்காத்தி வச்சு வாயில் திணிச்சு விட்டுவிடுவாள்.

முகுந்தன் said...

விஜய்,
இதை படித்ததும் எனக்கு என் அனுபவங்கள்(பழைய மற்றும் தற்போதைய ) ஞாபகம் வருகிறது.
நீங்கள் சொல்வது போல ,நானும் ரொம்ப அம்மாவை படுத்துவேன் . சென்ற வருடம் மூன்று மாதங்கள் பாங்காக்கில் தங்கி இருந்தபொழுது முதலில் சைவ உணவு கிடைக்காமல் திண்டாடி விட்டேன். ஆபீஸ் அருகிலேயோ தங்கி இருந்த அபார்ட்மென்ட் அருகிலேயோ ஒரு இந்திய உணவகமும் இல்லை.
சில நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக கண்டு பிடித்தேன்.அதன் பின் இந்தியா வந்ததும் நான் என்ன செய்தேருப்பேன் என்று நீங்களே யூகிக்கலாம்.

இப்பொழுது அதே கதி தான் மாட்ரிடில் (மனைவி மற்றும் மகனுடன் தான் வந்திருக்கிறேன்). இந்தியஉணவகங்கள் ஒரு சில உள்ளன ஆனால் நம் ஊரில் கிடைக்கும் பல உணவு பொருட்கள்
இங்கே கிடைப்பதில்லை. நான் கிடைப்பதை சாப்பிட பழகி கொண்டுவிட்டேன்.
அவல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஆனால் இப்பொழுது போஹா சாபிடுகிறேன்!!!
இது போல நிறைய....

எப்படா இந்தியா போவோம் என்று இருக்கிறது. நான் இப்பொழுதெல்லாம் உணவை பழிப்பதே இல்லையே.....

உங்கள் பதிவிற்க்கு "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று கூட தலைப்பு வைக்கலாம் :-))

Vijay said...

முகுந்தன்,
வாழ்க்கைப்பாடம் இன்னும் நிறைய இருப்பதால், இதற்கு இப்படி ஒரு தலைப்பு கொடுத்தேன்.
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. இருந்தாலும் உங்களுக்கு துணிவு ஜாஸ்தி. பின்ன மனைவியுடன் இருக்கும் போது சாப்பாடு சரியா கிடக்கலைன்னு சொல்லறீங்களே :) இது உங்க மனைவிக்குத் தெரியுமா? :)
அன்புடன்,
விஜய்

முகுந்தன் said...

//இருந்தாலும் உங்களுக்கு துணிவு ஜாஸ்தி. பின்ன மனைவியுடன் இருக்கும் போது சாப்பாடு சரியா கிடக்கலைன்னு சொல்லறீங்களே :) இது உங்க மனைவிக்குத் தெரியுமா? :)
//



விஜய்,
நன்றாக படியுங்கள்
"//ஆனால் நம் ஊரில் கிடைக்கும் பல உணவு பொருட்கள் இங்கே கிடைப்பதில்லை. நான் கிடைப்பதை சாப்பிட பழகி கொண்டுவிட்டேன்.அவல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஆனால் இப்பொழுது போஹா சாபிடுகிறேன்!!!இது போல நிறைய...."

நான் சொல்ல வந்தது கிடைப்பதை சாப்பிட பழகி கொண்டு விட்டேன்... தென் இந்திய உணவு விடுதிகளே கிடையாது. அதே போல் இட்லி அரிசி,முழு உளுந்து கிடைப்பதில்லை அதனால் இட்லி தோசை செய்ய முடியாது. மேலும் சைவ உணவகங்கள் ஒரு சிலதே உள்ளன.

சமையல் என் மனைவி தான் சாப்பாட்டிற்கு கஷ்டபடுவதில்லை.

நம்புங்கள் நிஜமாக இப்பொழுது என் மனைவி என் அருகில் இல்லை:-))

தாரணி பிரியா said...

எல்லோருமே அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்திருக்கோம். இப்ப எல்லாம் எது சமைச்சு போட்டாலும் சரின்னு சாப்பிட ஆரம்பிச்சாச்சு.