Pages

August 04, 2005

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...

நேற்று ஆடிப்பெறுக்கு. அதனால் என்ன என்கிறீர்களா?? பள்ளிக்கூடம் சென்ற காலங்களில் ஆடிப்பெறுக்கு என்றால், மூன்று மணிக்கெல்லாம் பள்ளியை மூடி விடுவார்கள். அன்றைய தினம் அம்மா பல தரப்பட்ட சமையல் செய்வாள். சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சம்பழம் சாதம், எள்ளுஞ்சாதம், புளியோதரை, தக்காளிச்சாதம், தயிர் சாதம், வடகம், அப்பளம், மோர் மிளகாய், ஊர்காய் (இப்போ தான் புரியுது, நீ ஏன் இப்படி இருக்கேன்னு) எல்லாம் செய்திருப்பாள். எல்ல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆற்றங்கரை மணலில் அமர்ந்தவாறு சாப்பிடுவோம். எங்கள் ஊரில் குறுக்குத்துறை என்ற இடத்திற்குச் செல்வோம். அங்கு தாமிரபரணி சாந்த ஸ்வரூபிணியாக இருப்பாள். அவ்வளவு எழில் மிகு ஆற்றங்கரை. படிக்கட்டெல்லாம், நிறைய இருக்கும். ஏதோ நூற்றாண்டில் ஏதோ புண்ணியவான் கட்டியது. எங்கள் குடும்பம் மட்டுமல்லாது ஊரே திரண்டு வந்திருக்கும்.
மங்கையர் பாவாடை தாவணியெல்லாம் அணிந்து, கூந்தலில் தாழம்பூ குஞ்சலம் வைத்து பின்னியிருப்பர் (இப்போ எவளும் பாவாடை தாவணிகூட போடுறதில்லை, இதுல குஞ்சலம் வேறயா!!!!) அன்னாளில் சைட் அடிப்பதை ஒரு பாவச்சஎயலாக நினைத்திருந்தலால், எவளையும் லுக்கு விட வில்லை. ( நீ சரியான மாங்காட விஜய்)

கால வெள்ளோட்டத்தில் நகரத்துக்கு குடி பெயர்ந்த பிறகு ஆடியாவது பெறுக்காவது. எல்லாம் வீட்டில் தான். நேற்றும் அம்மா வீட்டில் எல்லாம் பண்ணியிருந்தாள், ஆனால் .....

3 comments:

Subbu said...

Vijay,
Enakku.. Naakila Jalam Urarthu.. tension pannitengale..For All sathams.. i am coming soon.

Hmm..Pavadai Thavani.. lost seen in 19 century..Ipoo ellam
"Naanga Ujala-kku Marittom" mathiri.. Nanga Chudiku marittom nu solranga..

-Subbu

ஜோ/Joe said...

விஜய்,
தற்செயலாக உங்கள் பதிவுகளை வாசித்தேன் .நன்றாக உள்ளது .நீங்கள் ஏன் உங்கள் வலைப்பதிவை http://www.thamizmanam.com -முடன் தொடர்பு கொடுத்து வைத்துக்கொள்ளலாமே? அப்போது நிறைய பேர் படிக்க வாய்ப்பு இருக்கிறது.

-ஜோ
http://cdjm.blogspot.com

Ramachandranwrites said...

Hi,

Are you from Tirunelveli ?

Where did you study and the year ?

B K Ramachandran

ramachandran.bk@gmail.com