கல்லூரியில் படித்த காலத்தில் கவிதை எழுதுபவர்களைக்கண்டால் அப்படி ஒரு பொறாமை எரிச்சல். செ! நமக்கு இப்படி எதையாவது எழுதி எவளையாவது டாவடிக்க முடியலைன்னு ஒரு ஆதங்கம் வேற! ஒரு நாள் மனசு ரொம்ப நொந்து போய் ஒரு கவிதை எழுதுரதுன்னு தீர்மானமே பண்ணிட்டேன். நாமளோ அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் தான் தமிழ் படிச்சிருக்கேன். சரி இந்த ஆனந்த விகடன் கல்கி குமுதம் இதுல படிச்ச கவிதையெல்லாம் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி ஒரு அவியல் பண்ணலாம்ன்னு பேனாவை எடுத்தேன். சரி, எதைப்பதி கவிதை எழுதறது. எல்லாரும் முதல் கவிதையா கடவுள் வாழ்த்துதான் எழுதுவாங்க. ஆனா, நான் என்னை வித்தியாசமாய் காட்டிக்கொள்ள எழுதினேன் ஒரு காதல் கவிதை. அதை கவிதைன்னு கூட சொல்ல முடியாது. ஒரு மாதிரியான ஹைகூன்னு சொல்லலாம்.
முத்தம்: குழந்த்தைக்கு கொடித்தால் பாசம்!
குமரிக்கு கொடுத்தால் மோசம்!
எப்படி இருக்கு. எதுகையும் மோனையுமாய். எழுதிட்டு சும்மாவும் இருக்கலை. பக்கத்தில் இருந்தவன் கிட்ட என் முதல் கன்னி படைப்பைக்காட்டினேன். பார்த்துட்டு மெல்ல சிரிச்சுட்டு விட்டுட்டான். அத்தோடவிட்டானா? என் கையை வேற குலுக்கினான். இருவர் கிளாஸில் கை குலுக்குவதை பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தி சும்மா விடுவாரா?? அதுவும் அந்த வாத்தியின் கண்ணிலிருந்து தப்புவது ரொம்ப கஷ்டம். ஏன்னா, அவர் எங்க பார்கிராறோ, அங்கு அவர் பார்வை இல்லை. அந்தாளு எங்கே பார்க்கறார் என்று கண்டு பிடிப்பதே ஒரு பெரிய கலை. என்னிடம் வந்தார். கை குலுக்கியதன் காரணம் கேட்டார். இருவரும் மரியாதையாக முழித்தோம். அதாங்க திரு திருன்னு. கிளாஸை விட்டே வெளியே அனுப்பிவிட்டார். நான் ஒன்றும் இதற்காகவெல்லாம் கவலைப்படும் மாணவன் இல்லைதான். ஆனால் முதன் முதலில் கவிதை எழுதிய முஹூர்த்தம் இப்படியா இருக்க வேண்டும்? அதற்குப்பிறகு இன்று வரை, ஒரு கவிதை கூட எழுத மனம் வரவில்லை. அப்பப்போ இந்த வரிகள் தான் நினைவில் வந்து போகிறது.
வருவது வராமல் போகாது.
வராமல் இருப்பது வரவே வராது.
ஆஹ்! இது கூட கவிதை தானே!!!!!!
1 comment:
" எழுதி எவளையாவது டாவடிக்க முடியலைன்னு ஒரு ஆதங்கம்"
எழுதினாலும்..... எங்க பார்க்குறாங்க
Post a Comment