Pages

November 10, 2004

என் கணினிக்குள் எதுவோ ஒளிந்திருக்கிறது

உயிர்க்கருவியாய் வைத்திருந்த
மடிக்கணினியின் மூளைக்குள்
வைரஸ் என்னும் "சேர்ந்ததைக் கொல்லி"
வரக் கண்டுமனதுக்குள் சினம் என்னும்
சேர்ந்தாரைக் கொல்லிசிறகடித்து முளைத்தது.

தற்காப்பிற்குத் துணை செய்யுமென்று
தூண்டி வைத்திருந்த கேடயங்கள் யாவும்
கேவலப்பட்டுப் போயின.
சேமித்து வைத்திருந்தகவிதைகள்
யாவும் சரித்திரம் ஆயின.

கண்ணுக்குத் தெரியாமல் போர்புரிய
வந்திருக்கும் அந்த
இந்திரஜித்து வைரஸை
அடையாளம் காண்பதெங்கே?
அழியவைத்துப் பார்ப்பதெங்கே?

புரியாமல் தவித்தபோது
பாக்கெட்டின் உள்ளிருந்து பேனாவின்
திமிர்ச்சிரிப்பு -"கண்ணுக்குத் தெரிகின்ற
பூச்சிகளின் போரிலிருந்து எந்நாளும்
காக்கலாம்,பேப்பரில் எழுதிப்படியெடுத்து
வைக்கும்பழைய கவிதைகளை..!!"

No comments: