Pages

April 06, 2010

மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் வெண்கலமா??

இந்தக் கட்டுரையை எழுதும் முன், ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எந்த மத்தத்தினர் மீதும் எனக்கு எந்த விரோதமோ
துவேஷமோ இல்லை. என் கோபமெல்லாம் போலித்தனமாகப் பேசுபவர்கள் மேல் தான். இந்த விஷயங்களை மனதில் நன்றாக வாங்கிக் கொண்டு
மேலே படிக்கவும்.

“எம்.எஃப். ஹுஸைன் கதார் நாட்டு பிரஜையாகிறார்” - இது சில நாட்களுக்கு முன் வந்த செய்தி. ஹிந்துக் கடவுள்களை நிர்வாணமாக்ப் படம் வரைந்தார்
என்பதற்காக சில ஹிந்து மத அடிப்படைவாதிகள் அவர் வீட்டைத் தாக்கியது, “இந்தியாவுக்குள் காலடியெடுத்து வைத்தால் காலை வெட்டுவேன்” இப்படி
பயமுறுத்தியதெல்லாம் பழைய கதை. அவருக்கு பார்வதியையும் சரஸ்வதியையும் அந்தக் கோலத்தில் பார்க்க வேண்டுமோ, இல்லை அவர்
கண்களுக்கு மட்டுமே கலையாகத் தெரியும் நிர்வாணம் மற்றவர்களுக்கெல்லாம் அறுவறுப்பாகத் தெரிந்ததா, தெரியவில்லையா, யாம் அறியோம். ஆனால் மனிதருக்கு தொண்ணூறு வயதில் நாட்டை விட்டே ஓடிப் போகும் அளவிற்கு நெருக்கடியான நேரம். மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.
“என்ன தெனாவட்டு இருந்தா இந்தால் இப்படி படம் வரைவான்” என்று கேட்பர்களுக்கு நான் சொல்வதெல்லாம், அவர் கண்களுக்குத் தெரியும் கலை நம்
போன்ற சாதாரண மனிதர்களுக்குத் தெரியவில்லையென்றால், அந்தப் பக்கம் திரும்பாமல் போக வேண்டியது தான். அதே சமயம், “எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும், அவரது கற்பனையை படமாக வரவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது” என்று வாதிடுபவர்களுக்கு ஒரு கேள்வி. தஸ்லிமா நஸ்ரின் என்றொரு வங்காளதேசத்து எழுத்தாளர் இருக்கிறாரே ஞாபகம் இருக்கிறதா? அவரது சொந்த நாடு அவரை நிராகரித்த போது, இந்தியாவே கதியென்று ஓடி வந்து பிச்சையெடுக்காத குறையாக அடைக்கலம் கேட்டாரே, அப்போது எங்கய்யா போச்சு, கருத்து சுதந்திரத்துக்கு நீங்க கொடுக்கும் மரியாதை?

ஹுஸைனுக்கு சரஸ்வதியை நிர்வாணமாக வரைவதற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே போல் தான் தஸ்லீமாவுக்கும் தன் மனதில் பட்டதை எழுத்துருவில் தனது கருத்துக்களை, அது விமர்சனமாக இருந்தாலும் சொல்வதற்கு, சுதந்திரம் இருக்கிறது. அவர் எழுதிய லஜ்ஜா என்ற
புத்தகத்தைப் படித்திருக்கிறேன். பங்களாதேசத்தில் ஹிந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை கண் முன்னே நிறுத்தும் புத்தகம். மதம்
என்ற பெயரால் அங்கு நடந்த இனப் படுகொலையின் சாட்சி. சொந்த நாடு, வீடு மக்கள் என அனைத்தும் துறந்து நடுத்தெருவில் கொலை கற்பழிப்பு
செய்யப்பட்ட லக்ஷோபலக்ஷம் மக்களின் ஓலக்குரல்களின் எதிரொலி.

இங்கே பெரியார் எப்படி ஹிந்து மத்திலுள்ள குறைகளை களைய முற்பட்டாரோ, அதே போல், இஸ்லாத்திலுள்ள குறைகளை எடுத்துக்கூறி கட்டுரைகள்
பல எழுதினார் தஸ்லீமா. இதற்காக அவருக்குக் கிடைத்தது என்ன? அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று இஸ்லாமிய மதத் தலைவர்களின் குமுறல்.
அவர் எழுதிய கருத்துககள் எடுத்து வைத்த வாதங்கள் சரி தவறு என்று சொல்லவில்லை. ஆனால், தன கருத்தை முன் நிறுத்தியதற்காக அவருக்குக்
கிடைத்தென்னவோ, நாட்டை விட்டே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

எம். எஃப். ஹுஸைனுக்குப் பாதுகாப்பு வழ்ங்க முடியவில்லையே என்று வருந்தும் காங்கிரஸ் அரசு, அடைக்கலம் வேண்டி மண்றாடிய தஸ்லீமாவுக்காக ஏன் பரிந்துகொண்டு வரவில்லை? அவர் மீது ஆந்திராவில் வன்முறை நடந்தது. இரு சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை மிரட்டும் புகைப்படங்கள் பல பத்திரிகைகளின் முன் பக்கத்தில் வந்தன. ஆனால், அவர்கள் மேல் ஒரு வழக்காவது பதிவானதா, தெரியவில்லை. இந்தியாவே கதி என்று நம்பி வந்தவரை, இந்த அரசு என்ன செய்தது? எங்கேயேன் போ, எக்கேடு கெட்டுப் போ ஆனால் இங்கே இருக்காதே என்று துரத்தி விட்டது. சரி, தஸ்லீமாவிற்குப் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம். அவர் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது. அதனால், அவர் உயிர் மீது இருந்த கரிசனத்தாலேயே அவர் இந்தியாவில் இருப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லும் இந்த அரசாங்கம்.

ஹுஸைன் வெளிப்படுத்தும் கற்பனையான சுதந்திரத்துக்கு சொம்பு தூக்கும் அரசு, தஸ்லீமா போன்ற எழுத்தாளர்கள் உண்மையை வெளிப்படுத்த அவருக்கு சுதந்திரம் இல்லையா?

அட, இந்த கேடு கெட்ட அரசாங்கம் தான் கண்டு கொள்ளவில்லை, காலணா காசு பிரயோசனமில்லாத சானியா மிர்சாவைக் கவர் பண்ணும் தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் கூடக் கண்டுகொள்லவில்லை. பிளாகோஸ்ஃபியரில் கூட அது பற்றி ஒரு கட்டுரை வந்ததா, தெரியவில்ல. ஏன் தஸ்லீமா விமர்சித்தது, இஸ்லாம் மத்தத்தை என்பதலா? இல்லை, அவர் அயல் நாட்டவர். அவரை ஆதரித்து உள்ளூர் முல்லாக்களை பகைத்துக் கொள்வானேன் என்ற எண்ணத்தினாலா? அதனால் ஐந்தாறு தீவிரவாதி உண்டு பண்ணுவானேன் என்ற நாட்டுபற்றினாலா?

அப்படி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஒரு அரசு எண்ணினால், எல்லா மக்களுக்கும் ஒரே அளவுகோலைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலரிடம், “உங்கள் நம்பிக்கைகள் எந்த விதத்திலும் புண் பட விட மாட்டோம்” என்றும் இன்னொருத்தரிடம், “உங்கள் நம்பிக்கை என்னவானால் எனக்கென்ன” என்று இருப்பதும், தமிழிலுள்ள பழமொழியைத் தான் ஞாபகப் படுத்துகிறது.

“மாமியார் உடைத்தால் அது மண்கலம், மருமகள் உடைத்தால் வெண்கலம்”

மீண்டும் சொல்கிறேன். நான் தஸ்லீமாவின் கருத்துக்களை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஹிபோக்ரடிக்காக போலித்தனத்துடன் நடந்து கொள்ளும் அரசும் ஊடகங்கள் மீதும் தான் என் கோபமெல்லாம். தஸ்லீமா மீது எனக்கு பரிவும் இல்லை, ஹுஸைன் மீது கோபமும் இல்லை. இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் பார்த்து என் எண்ணங்களும் நம்பிக்கைகளும் செண்டிமெண்டுகளும் மாறப்போவதில்லை.

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, தஸ்லீமாவின் இணையதளத்தின் அவர் பட்ட இன்னல்கள் பற்றிப் படிக்க நேர்ந்தது. அதுவே இப்பதிவை எழுதக் காரணம்.


5 comments:

Unknown said...

நல்ல பதிவு.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

(Mis)Chief Editor said...

Pottu Thaakumma...!

-MCE

kanagu said...

niyayamana kelvigal anna... aanal arasukku enna vishayam enpadhai vida yaar padhigapattular enabathe ingu mukkiyam :(

முகுந்தன் said...

//“என்ன தெனாவட்டு இருந்தா இந்தால் இப்படி படம் வரைவான்” என்று கேட்பர்களுக்கு நான் சொல்வதெல்லாம், அவர் கண்களுக்குத் தெரியும் கலை நம் போன்ற சாதாரண மனிதர்களுக்குத் தெரியவில்லையென்றால், அந்தப் பக்கம் திரும்பாமல் போக வேண்டியது தான்.//

அது மாதிரி இருக்க முடியவில்லை விஜய். எந்த ஒரு மதத்தின் அடையாளமும் இருக்க கூடாது. கலை என்ற பெயரில் அடுத்த மதத்தை கொச்சைபடுத்த நினைக்கிறார் ஹுசைன்.

குந்தவை said...

என்ன விஜய் ரெம்ப சூடா இருக்கீங்க எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ... இருந்தாலும் உங்கள் கோபம் நியாயமானதே .
இருக்கிற பிரச்சனை போதாதுன்னு ......
//இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் பார்த்து என் எண்ணங்களும் நம்பிக்கைகளும் செண்டிமெண்டுகளும் மாறப்போவதில்லை.
இது தான் என்னுடைய கருத்தும்.