என்னையும் மதிச்சு ரம்யா இந்தத் தொடர் அருந்து போகமலிருக்க என்னைப் பற்றிய சில விஷயங்களை உதிர்க்கும்படி செய்துட்டாங்க. அதனால் இதோ, என்னைப் பற்றின சில கேள்விகளும், அதன் பதில்களும்.....
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்க அம்மா அமிதாப் பச்சனின் விசிறி. அவர் நடித்த அநேக படங்களில் அவர் பெயர் விஜய். என் தாத்தா, முருக பக்தர். அதனால், குமாரும் சேர்ந்து கொண்டு விஜய் குமார் ஆனது.
Of Course எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அவ்வளவு எளிதாகக் கண்ணீர் விடும் ரகம் இல்லை. ரொம்ப யோசித்துப் பார்க்கையில் கடைசியாக அழுதது, இந்தியா T20 உலகக் கோப்பையை வென்ற போது, உணற்சி மிகுதியில் அழுதேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து என்றால் Signature'ஆ. அது கொஞ்சம் பிடிக்கும். ஆனால் கையால் எழுதும் எழுத்து அவ்வளவாகப் பிடிக்காது. எவ்வளவு முயன்றும் திருந்தவே இல்லை. என் எழுத்தை எங்கம்மா கொக்கு பறப்பது மாதிரி இருக்கு என்பாள்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சைவத்தில் எது வேணாலும் பிடிக்கும். இருந்தாலும், சாம்பார், உருளைக்கிழங்கு / அவியல்/ முட்டைக் கோஸ் கரி, தயிர் சாதம் தான் எப்போதுமே என் சாய்ஸ்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒரு ஆளிடம் உடனே என்னால் நட்பாகப் பேச முடியும். மேற்கொண்டு அவருடன் நட்பைத் தொடர்வது, அவருடைய குணாதிசையங்களைப் பொறுத்தது. என் வேவ்லெங்திற்கு இல்லையென்றால், முறைத்துக் கொள்ள மாட்டேன். கேட்ட கேள்விக்கு பதில்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எந்த நீர் நிலையிலும் குளிக்கப் பிடிக்கும். இருந்தால் கடல் அருவியில், இரண்டிலும் பிடித்தது, கடலே. நிந்திக் குளிப்பதென்றால் இன்னும் பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது. பிடிக்காததும் அதுவே.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ஆஹா, பொடி வச்சு கேக்கறாங்கப்பா. பிடித்த விஷயம், எப்பவுமே சுத்தமாக இருக்கணும் என்று நினைப்பாள்.
இந்த சுத்தம் தான் பிடிக்காத விஷயமும் கூட. வெளியில் போய்ட்டு உள்ளே வந்தால், முதல் வேலையாக கை கால் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால், (ஏற்கனவே கழுவிய) தட்டு ஸ்பூன், டம்ளர், எல்லாம் மீண்டும் ஒரு முறை கழுவ வேண்டும். கழுவாமல் பழங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. வாழைப் பழத்தைக் கூட கழுவித்தான் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போடுவாள். கொசு அடித்தால் கூட கையை சோப் போட்டுக் கழுவணும் :)
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தந்தை. கல்லூரியில் காலெடுத்து வைத்த அதே தினம், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அவர் உயிரிழந்தார். வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அவர் என்னோடு இல்லாதது பேரிழப்பு.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வேஷ்டி, முண்டா பனியன்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். கேட்பது, எஸ்.வி.ஷேகரின், தத்துப் பிள்ளை நாடகம். சும்மா கலந்து கட்டிக் கலாய்க்கிறார்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிங்க்.
14.பிடித்த மணம் ?
சாம்பார் / ரசம் கொதிக்கும் போது வரும் மணம். இந்த மணத்தை முகர்ந்தாலே பசி வந்துடும்.
மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கு :)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும், அது நல்லா இருக்கு என்பார்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவரது, கற்பனையில் உருவான, வடிவேல், விவேக் காமெடிப் பதிவுகள். அவர் சகோதரி பட்ட உடல் நல அவஸ்தைகளைப் படித்து விட்டு, ஒன்றுமே செய்ய முடியாமல் சில நேரம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். சில நாட்களுக்கு முன் அவர் இப்போது உடல் நலம் தேறி விட்டார் என்றதும் ரொம்ப சந்தோஷப் பட்டேன்.
17. பிடித்த விளையாட்டு?
என்றென்றும் கிரிக்கெட். 16 வயதுக்குட்பட்ட பிரிவில், நெல்லை மாநகருக்காக விளையாடியிருக்கிறேன். ஓபனிங்க் ஃபாஸ்ட் பவுலர்.
விப்ரோ, எல்.எஸ்.ஐ’க்காகவும் விளையாடியிருக்கிறேன். இப்போது தொப்பை போட்ட பின் 10 பந்து வீசினாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது.
ஸ்டெஃபி கிராஃப் விளையாடும் வரை டென்னிஸும் பிடித்தது.
இப்போது அன்னா இவாநோவிச், ஷரபோவா, சானியா மிர்சா, ஃபெடரர் விளையாடும் டென்னிஸ் ஆட்டங்களை மட்டும் பார்க்கிறேன்.
18.கண்ணாடி அணிபவரா?
அணிய ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது வரை கண்ணாடி அணியும் பாக்கியம் கிட்ட வில்லை. அலுவலகத்தில் கண்ணாடிக்காக வருஷத்திற்கு 3000 ரூபாய் சலுகை தருகிறார்கள். இது வரை 30000 ரூபாய் சலுகையை பெறவே இல்லை.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ஆங்கில அக்ஷன் படங்களும் பிடிக்கும். தமிழில் சூர்யா, விக்ரம், கமல், படங்கள் பிடிக்கும்.
மனதை நெருடும் படியான சமூகப்படங்களும் எப்போதாவது பார்ப்பேன்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
ம்ம்ம் திரையரங்கத்தில், ஹரிஹர் நகர் - பாகம் 2.
கல்யாணமாகி 4 வருஷமாகியும் மலையாளப் படம் பார்க்கவில்லை என்று காயத்ரிக்கு ஆதங்கம். என்ன பண்ண? பார்த்துத் தொலைக்க வேண்டியதாப்போச்சு.
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம். பெங்களூரில் இக்காலத்தில் ஊரெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண் கொள்ளாக் காட்சியாயிருக்கு.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஒரு புத்தகம் இல்லை. 3 புத்தகங்கள் படிக்கிறேன். ரம்யா அனுப்பிய விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், Men Are From Mars, Women Are From Venus. காயத்ரி செய்யும் சேஷ்டைகள் இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த பிறகு விளங்குவது போலிருக்கிறது.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
பார்த்துப் பார்த்து ரொம்ப போரடித்து விட்டால் மாற்றிவிடுவேன். மாதத்திற்கொரு முறை மாற்றுவேன் என்று வைத்துக் கொள்ளலாம்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
எந்த இசை வாத்திய ஓசையும் பிடிக்கும். குறிப்பாக வயலின், கிடார், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம்.
அலையின் ஓசையும், மரங்கள் காற்றில் ஏற்படுத்தும் சத்தமும் பிடிக்கும். நான் வளர்த்த தாந்தூ (நாய் என்றால் எனக்குக் கோபம் வந்துடும்) குறைக்கும் சத்தமும் பிடிக்கும்.
காது ஜவ்வு கிழியற மாதிரி டங்கு டக்கற டங்கு டக்கற’ங்கற குத்துப் பாட்டுச் சத்தம், சுத்தமாப் பிடிக்காது.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா. முதன் முதலில் வீட்டை விட்டு ரொம்ப நாட்களுக்கு நெடுந்தூரம் போனது, கொல்கத்தா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், அடுத்தவர் தயவில், ஒரு காரியத்தை செய்து கொள்வது.
சிகப்பு சிக்னல் இருந்தாலும், அதை மதியாமல் எகிரிச்செல்வது, சாலையில் துப்புவது, குப்பை போடுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வெளிநாட்டுக்குப் போனால், அங்கே தண்டனை கொடுத்து விடுவார்களே என்று பயந்து அவ்வாறு செய்யாத மக்கள், நம்மூர் மண்ணை மிதித்ததும், “நம்ம ஊர் தானே, எவன் கண்டுக்கப்போறான்” என்ற போக்கை என்னா ஏற்றுக் கொள்ளவே முடியாது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு வரும் கோபம். கோபம் வந்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போக நினைப்பது, இமய மலை. இது வரையில் போனதில், கோவா.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி இருக்கணும்’னா? நல்ல சூர்யா மாதிரி உடற்கட்டு, கமல்ஹாசன் மாதிரி கண்கள், மாதவன் மாதிரி சிரிப்பு, இப்படியெல்லாம் இருக்கணும்’னு தான் ஆசை. என்ன பண்ண முடியலியே :(
விஜய்’ஐ (என்னத் தான்) நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்கலாம் என்று மற்றவர்கள் நம்பும் படியாக இருக்கணும்.
31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன். கணவனாக என்ன செய்ய விரும்பணும், என்று. என் மனைவி அடைய விரும்பும் வெற்றிகளில் அவளுக்கு ஊக்கமும் உறுதுணையும் கொடுக்க வேண்டும். (காயத்ரி படித்துத் தொலைத்து விடக்கூடாது :( )
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு ஒரு ரோஜாச்செடி மாதிரி. அதில் முள்ளும் இருக்கும், அழகான பூக்களும் இருக்கும். முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும். கொஞ்சம் பெரீஈஈய வரியாகவே சொல்லிட்டேன்.
அப்பாடா, கொடுத்த வேலையை ஒழுங்கா செய்துட்டேன். இனி, இந்த விளையாட்டுல யாரை இழுத்து விடலாம். வேலை வேலை’ன்னு ரொம்ப உழைக்கற திவ்யாவையும், முகுந்தனையும் இந்தத் தொடருக்கு அழைக்கிறேன்.

47 comments:
me th 1st
naan escape
naan thaan secondaa?
ippa thaan ungale oru tag post la maatti vittrukken...adhayum pottudunga :)
wait maadi, padichittu varen...
//வாழ்வு ஒரு ரோஜாச்செடி மாதிரி. அதில் முள்ளும் இருக்கும், அழகான பூக்களும் இருக்கும். முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும்//
அட அட அட!!! ஏதோ விக்கரமன் படம் பாத்த மாதிரி இருக்கு :))
நல்லா இருந்துச்சு பதிவு...மறக்காம அந்த s.v.sekar drama வ அனுப்பி வச்சிடுங்க :)
கையெழுத்து என்றால் Signature'ஆ. அது கொஞ்சம் பிடிக்கும். ஆனால் கையால் எழுதும் எழுத்து அவ்வளவாகப் பிடிக்காது. எவ்வளவு முயன்றும் திருந்தவே இல்லை. என் எழுத்தை எங்கம்மா கொக்கு பறப்பது மாதிரி இருக்கு என்பாள்.
ஹ ஹ ஹ
ரசித்தேன் விஜய்
இந்த சுத்தம் தான் பிடிக்காத விஷயமும் கூட. வெளியில் போய்ட்டு உள்ளே வந்தால், முதல் வேலையாக கை கால் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால், (ஏற்கனவே கழுவிய) தட்டு ஸ்பூன், டம்ளர், எல்லாம் மீண்டும் ஒரு முறை கழுவ வேண்டும். கழுவாமல் பழங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. வாழைப் பழத்தைக் கூட கழுவித்தான் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போடுவாள். கொசு அடித்தால் கூட கையை சோப் போட்டுக் கழுவணும் :)
நல்லது தானே
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவரது, கற்பனையில் உருவான, வடிவேல், விவேக் காமெடிப் பதிவுகள். அவர் சகோதரி பட்ட உடல் நல அவஸ்தைகளைப் படித்து விட்டு, ஒன்றுமே செய்ய முடியாமல் சில நேரம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். சில நாட்களுக்கு முன் அவர் இப்போது உடல் நலம் தேறி விட்டார் என்றதும் ரொம்ப சந்தோஷப் பட்டேன்.
ஆம் ரம்யா டீச்சரின் பதிவுகள் அட போட வைக்கும்
தங்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.
\\சைவத்தில் எது வேணாலும் பிடிக்கும். இருந்தாலும், சாம்பார், உருளைக்கிழங்கு / அவியல்/ முட்டைக் கோஸ் கரி, தயிர் சாதம் தான் எப்போதுமே என் சாய்ஸ்.\\
முட்டை
கரி
இதெல்லாம் சாப்பிடுவீங்களா
உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
அய்யோ பாவம் மீண்டும் அந்த திறமையை ஆண்டவன் உங்களுக்கு நல்குமாறு வேண்டிக்கொள்கிறேன்
நட்புடன் ஜமால் said...
தங்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.
\\சைவத்தில் எது வேணாலும் பிடிக்கும். இருந்தாலும், சாம்பார், உருளைக்கிழங்கு / அவியல்/ முட்டைக் கோஸ் கரி, தயிர் சாதம் தான் எப்போதுமே என் சாய்ஸ்.\\
முட்டை
கரி
இதெல்லாம் சாப்பிடுவீங்களா
கரியை வைச்சு கிறுக்க தானே முடியும் ஜமால் அண்ணா
\\
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது. பிடிக்காததும் அதுவே\\
எதார்த்தம் ...
\\கரியை வைச்சு கிறுக்க தானே முடியும்\\
அதாங்க
அதால தான்
சாப்பிடுவீங்களான்னு கேட்டேன் ...
\\எப்பவுமே சுத்தமாக இருக்கணும்\\
நல்ல விடயம் தான் சகோதரா ...
எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி இருக்கணும்’னா? நல்ல சூர்யா மாதிரி உடற்கட்டு, கமல்ஹாசன் மாதிரி கண்கள், மாதவன் மாதிரி சிரிப்பு, இப்படியெல்லாம் இருக்கணும்’னு தான் ஆசை. என்ன பண்ண முடியலியே :(
விஜய்’ஐ (என்னத் தான்) நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்கலாம் என்று மற்றவர்கள் நம்பும் படியாக இருக்கணும்.
ஹ ஹ ஹ
ரசித்தேன்
நட்புடன் ஜமால் said...
\\
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது. பிடிக்காததும் அதுவே\\
எதார்த்தம் ...
ரீப்பீட்டு
\\முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும்\\
மிக எளிமையா அழகா சொல்லியிருக்கீங்க
வாழ்த்துகள்
"எவ்வளவு முயன்றும் திருந்தவே இல்லை."
அப்ப நீங்களும் நாம கேஸ் தான்னு சொல்லுங்க
"கேட்பது, எஸ்.வி.ஷேகரின், தத்துப் பிள்ளை நாடகம்."
நான் மாது +2 கேட்கிறேன் .....
"எனக்கு வரும் கோபம். கோபம் வந்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாது."
வரும்.... ஆனா வராது...
"விஜய்’ஐ (என்னத் தான்) நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்கலாம் என்று மற்றவர்கள் நம்பும் படியாக இருக்கணும்."
ஆனா இப்ப இல்லை ன்னு சொல்லுரிங்கள ???
யூத் விஜய் அவர்களுக்கு .....
பதிவு கலக்கல்....
ஆனா விஜய் யின் ஸ்பெஷல் (காமெடி) மிஸ்ஸிங்
ம்ம்ம். நடத்துங்க:)
ஹாய் விஜய் இந்த சுறு சுறு விஜய்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
எவ்வளவு வேகம் மற்றும் விவேகமான பதில்கள்.
இருங்க முழுக்கப் படிச்சிட்டு வரேன்!!
//
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்க அம்மா அமிதாப் பச்சனின் விசிறி. அவர் நடித்த அநேக படங்களில் அவர் பெயர் விஜய். என் தாத்தா, முருக பக்தர். அதனால், குமாரும் சேர்ந்து கொண்டு விஜய் குமார் ஆனது.
Of Course எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.
//
அதானே அருமையா பெயர் வச்சிருக்காங்க அது பிடிக்காமல் போகுமா??
//
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அவ்வளவு எளிதாகக் கண்ணீர் விடும் ரகம் இல்லை. ரொம்ப யோசித்துப் பார்க்கையில் கடைசியாக அழுதது, இந்தியா T20 உலகக் கோப்பையை வென்ற போது, உணற்சி மிகுதியில் அழுதேன்.
//
அதுக்கு பேரு ஆனந்தக் கண்ணீர் விஜய் :-)
//
4.பிடித்த மதிய உணவு என்ன?
சைவத்தில் எது வேணாலும் பிடிக்கும். இருந்தாலும், சாம்பார், உருளைக்கிழங்கு / அவியல்/ முட்டைக் கோஸ் கரி, தயிர் சாதம் தான் எப்போதுமே என் சாய்ஸ்.
//
சூப்பர்! ம்ம்ம் பசிக்குதே!!
//
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒரு ஆளிடம் உடனே என்னால் நட்பாகப் பேச முடியும். மேற்கொண்டு அவருடன் நட்பைத் தொடர்வது, அவருடைய குணாதிசையங்களைப் பொறுத்தது. என் வேவ்லெங்திற்கு இல்லையென்றால், முறைத்துக் கொள்ள மாட்டேன். கேட்ட கேள்விக்கு பதில்.
//
விவேகமான பதில் !
//
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது. பிடிக்காததும் அதுவே.
//
இது ரொம்ப கொடுமையான விஷயம். நானும் முந்தி அப்படிதான் இருந்தேன் இப்போது திருந்திட்டேனாக்கும்.
//
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ஆஹா, பொடி வச்சு கேக்கறாங்கப்பா. பிடித்த விஷயம், எப்பவுமே சுத்தமாக இருக்கணும் என்று நினைப்பாள்.
//
அதான் நாலு வருடத்திற்கு முன்பே சிக்கிட்டீங்களே. ஹா ஹா பொடிக்கு பதிலா பொறின்னு (பொறி வச்சு பிடிப்பாங்களே அது) வச்சுக்கோங்க விஜய் :)
//
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தந்தை. கல்லூரியில் காலெடுத்து வைத்த அதே தினம், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அவர் உயிரிழந்தார். வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அவர் என்னோடு இல்லாதது பேரிழப்பு.
//
இதைப் படிக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சு விஜய் :(
//
14.பிடித்த மணம் ?
சாம்பார் / ரசம் கொதிக்கும் போது வரும் மணம். இந்த மணத்தை முகர்ந்தாலே பசி வந்துடும்.
மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கு :)
//
அருமை இரு வேறு பதில்கள்!
//
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவரது, கற்பனையில் உருவான, வடிவேல், விவேக் காமெடிப் பதிவுகள். அவர் சகோதரி பட்ட உடல் நல அவஸ்தைகளைப் படித்து விட்டு, ஒன்றுமே செய்ய முடியாமல் சில நேரம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். சில நாட்களுக்கு முன் அவர் இப்போது உடல் நலம் தேறி விட்டார் என்றதும் ரொம்ப சந்தோஷப் பட்டேன்.
//
நன்றி நண்பா! மிக்க நன்றி உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள்தான் எனது சகோதரி துயரில் இருந்து மீண்டதிற்கு முக்கிய காரணம்.
//
18.கண்ணாடி அணிபவரா?
அணிய ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது வரை கண்ணாடி அணியும் பாக்கியம் கிட்ட வில்லை. அலுவலகத்தில் கண்ணாடிக்காக வருஷத்திற்கு 3000 ரூபாய் சலுகை தருகிறார்கள். இது வரை 30000 ரூபாய் சலுகையை பெறவே இல்லை.
//
ரொம்ப நல்ல பிள்ளை :)
//
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், அடுத்தவர் தயவில், ஒரு காரியத்தை செய்து கொள்வது.
சிகப்பு சிக்னல் இருந்தாலும், அதை மதியாமல் எகிரிச்செல்வது, சாலையில் துப்புவது, குப்பை போடுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வெளிநாட்டுக்குப் போனால், அங்கே தண்டனை கொடுத்து விடுவார்களே என்று பயந்து அவ்வாறு செய்யாத மக்கள், நம்மூர் மண்ணை மிதித்ததும், “நம்ம ஊர் தானே, எவன் கண்டுக்கப்போறான்” என்ற போக்கை என்னா ஏற்றுக் கொள்ளவே முடியாது.
//
அருமையான சமுதாயச் சிந்தனை. நல்லா உணர்த்தி இருக்கீங்க. எவ்வளவு பேர் எடுத்துரைத்தாலும் அதுபோல் செய்பவர்கள் திருந்துவார்களா? விஜய்!
//
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு ஒரு ரோஜாச்செடி மாதிரி. அதில் முள்ளும் இருக்கும், அழகான பூக்களும் இருக்கும். முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும். கொஞ்சம் பெரீஈஈய வரியாகவே சொல்லிட்டேன்.
//
அருமை யதார்த்தமான உவமானம். அழகாச் சொல்லி இருக்கீங்க.
விஜய, சூப்பர் பாஸ்ட் பதில் கொடுத்த விஜய்க்கு ஒரு ஓ போட்டுக்கறேன்.
அத்தனை பதில்களும் அருமை.
நன்கு ரசிச்சுப் படிச்சேன்.
உடனே இடுகை இட்டதிற்கு நன்றி நண்பா!
\\15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும், அது நல்லா இருக்கு என்பார்.\\
LOL:))
will continue the tag shortly Vijay:))
Post asusuall ........rocking with ur wonderful flow of writing;))
almost ella questions kum superrrr doooooopera answer panirukireenga.
give me some time to post, ok a:)
//நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும், அது நல்லா இருக்கு என்பார்.
//
This (the whole post not only this answer) is really good :)
Super Vijay,
Really good one.I guess we have some similarities. will post about me on Sat.
adade as usual rocking vijay.. romba naal kazhichu inda pakkam vandha.. kalakkareenga ..
Esp I liked your reply for "எப்படி இருக்கனும்னு நினைக்கறீங்க ?"
உங்களுடைய பதில்களில் அம்பி, ரெமோ அந்நியன் மூணு பேருமே தெரியுறாங்க விஜய்.
விஜய் பதில்கள் அனைத்துமே அருமை :)
@.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம். பெங்களூரில் இக்காலத்தில் ஊரெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண் கொள்ளாக் காட்சியாயிருக்கு.@
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் குல்முகர் பூக்களோடு பெங்களூர் சாலைகள் வாவ் சான்ஸே இல்லை
//
அலுவலகத்தில் கண்ணாடிக்காக வருஷத்திற்கு 3000 ரூபாய் சலுகை தருகிறார்கள்.
//
சார் போன மாசம் தான் நான் கண்ணாடி மாத்தினேன். அதுகூட 3000 ரூபாய்தான் அதுக்கு வேணா நாம reimburse பண்ணிக்கலாம்(50-50 டீல் ஓகேவா??)
//கையெழுத்து என்றால் Signature'ஆ. //
குறும்பு...
//மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கு :)//
பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கும் வாசம் இந்த மண் வாசம்...
//கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன். //
வித்தியாசமான தனித் திறமை தான் விஜய்...
//விஜய்’ஐ (என்னத் தான்) நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்கலாம் என்று மற்றவர்கள் நம்பும் படியாக இருக்கணும்.//
அருமையான பதில்...
//வாழ்வு ஒரு ரோஜாச்செடி மாதிரி. அதில் முள்ளும் இருக்கும், அழகான பூக்களும் இருக்கும். முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும். //
வாழ்க்கையைப் பற்றி நல்ல புரிதல்...
அனைத்தும் யதார்த்தமான பதில்கள் விஜய்...
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
ஹி ஹி .. இது சாதனை அல்லவோ
வேர எதாவது திறமை ஒழிஞ்சிட்டு இருக்குதா ?
\\ MayVee said...
me th 1st\\
Congrats !!
\\ Divyapriya said...
அட அட அட!!! ஏதோ விக்கரமன் படம் பாத்த மாதிரி இருக்கு :))\\
ரொம்ப யோசித்து ஒரு தத்துவம் சொன்னா இப்படிச் சொல்லிட்டீங்களே :-(
\\மறக்காம அந்த s.v.sekar drama வ அனுப்பி வச்சிடுங்க :)\\
அது 70 MB. எப்படி அனுப்ப??? உங்களுக்கு ஏதாவது சைட் தெரிந்தால் சொல்லுங்க. அப்லோட் பண்ணறேன் :-)
\\sakthi said...
ஹ ஹ ஹ
ரசித்தேன் விஜய்\\
ரொம்ப நன்றி ஷக்தி :-)
\\ நட்புடன் ஜமால் said...
முட்டை
கரி
இதெல்லாம் சாப்பிடுவீங்களா\\
நான் சைவம் தான் சாப்பிடுவேன். கேக் வடிவத்தில் முட்டை உள்ளே போகும். ஆனால் முட்டை நிறைய போட்ட கேக் பிடிக்காது :-)
\\MayVee said...
நான் மாது +2 கேட்கிறேன் .....\\
அட !!!!
ஒரு நண்பன் உபயத்தால், சில காமெடி நாடகங்களின் MP3 கிடைத்தது. அலுத்துப் போகும் வரை கேட்க உள்ளேன் :-)
\\வித்யா said...
ம்ம்ம். நடத்துங்க:)\\
ஓகே. தாங்க்யூ :-)
\\RAMYA said...
ஹாய் விஜய் இந்த சுறு சுறு விஜய்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
எவ்வளவு வேகம் மற்றும் விவேகமான பதில்கள்.\\
Thanks a Zillion Ramya :-)
\\ Divya said...
Post asusuall ........rocking with ur wonderful flow of writing;))\\
அப்படியா :-))
almost ella questions kum superrrr doooooopera answer panirukireenga.
give me some time to post, ok a:)\\
Take your own time :-)
\\ முகுந்தன் said...
Super Vijay,
Really good one.I guess we have some similarities. will post about me on Sat.\\
Am eagerly awaiting to know about the similarities we do have :-)
\\Ramya Ramani said...
adade as usual rocking vijay.. romba naal kazhichu inda pakkam vandha.. kalakkareenga ..
Esp I liked your reply for "எப்படி இருக்கனும்னு நினைக்கறீங்க ?"\\
ரொம்ப நன்றி ரம்யா. என்ன நீங்க ரொம்ப நாளா ஆளே காணோம்.
\\S.A. நவாஸுதீன் said...
உங்களுடைய பதில்களில் அம்பி, ரெமோ அந்நியன் மூணு பேருமே தெரியுறாங்க விஜய்.\\
அம்பி அந்நியன் ஓகே. இந்த ரெமோவை எங்கே பிடிச்சீங்க? காயத்ரிக்க்குத் தெரிந்தால் டின்னு கட்டிடுவாள் :-)
\\Arun Kumar said...
விஜய் பதில்கள் அனைத்துமே அருமை :)\\
ரொம்ப நன்றி அருண் :-)
\\வாழவந்தான் said...
சார் போன மாசம் தான் நான் கண்ணாடி மாத்தினேன். அதுகூட 3000 ரூபாய்தான் அதுக்கு வேணா நாம reimburse பண்ணிக்கலாம்(50-50 டீல் ஓகேவா??)\\
ஆஹா. கிளம்பிட்டாங்கய்யா. அப்படியென்றால், நான் தினமும் ஆஃபீஸுக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். உங்க கண்ணாடியைத் தரீங்களா???
\\புதியவன் said...
அனைத்தும் யதார்த்தமான பதில்கள் விஜய்...\\
நன்றி புதியவன் :-)
\\Subbu said...
கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
ஹி ஹி .. இது சாதனை அல்லவோ
வேர எதாவது திறமை ஒழிஞ்சிட்டு இருக்குதா ?\\
தேடிக் கண்டுபிடிக்கணும் :-)
\\
interesting!
//
\\வாழவந்தான் said...
சார் போன மாசம் தான் நான் கண்ணாடி மாத்தினேன். அதுகூட 3000 ரூபாய்தான் அதுக்கு வேணா நாம reimburse பண்ணிக்கலாம்(50-50 டீல் ஓகேவா??)\\
ஆஹா. கிளம்பிட்டாங்கய்யா. அப்படியென்றால், நான் தினமும் ஆஃபீஸுக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். உங்க கண்ணாடியைத் தரீங்களா???
//
reimburse செஞ்சத இவ்ளோ கிராஸ் செக் பண்றாங்களா?
அவ்வ்...
ஆன்.. டீல் ஓகே. அனா அதுக்கு ஏன் என்னோட கண்ணாடி. எதாவது ஒரு திருவிழால வாங்கின கண்ணாடி மாதிரி ஒன்னு போட்டுபோங்க. நான் வேணா பில் ஒரு xerox அனுப்பறேன், அத வெச்சு ட்ரை பண்ணுங்க டீல் ஓகீனா ஒரிஜினல்(பில்) அனுப்பிவைக்கப்படும்.
குறிப்பு: கண்ணாடியை உங்களுக்கு அனுப்பிட்டா இப்படி பாலோ பண்ணி பின்னூட்டமெல்லாம் போடா முடியாது பரவாலையா?? ;-)
//விஜய்//
இளைய தளபதின்னு ஒருத்தர் இருக்கார் தெரியுமா?
Post a Comment