எல்லாரும் சொ(சோ)கமா இருக்கீயேளா? “இம்புட்டு நேரம் நல்லாத்தேம்ல இருந்தோம், நீ எளுதியத படிக்கோம்லா, இனி என்னாவப்போகுதோ, தெரியல”ங்கான் ஒரு கிறுக்குப் பய. அவன் சொல்லுறத கண்டுக்கிட வேண்டாம்.
ஊர்ப்பக்கம் போயி ரொம்ப நாளாச்சா, நம்மூர் ஆளுங்க கிட்ட பேசியும் ரொம்ப நாளாயிருச்சு. திருநெல்வேலியில பேசுத தமிளே மறந்து போயிருவனோன்னு பயம் வந்திருச்சின்னா பாத்துக்கிடுங்க. வீட்டம்மாகிட்ட இந்த மாறி பேசினா, அதுக்கு ஒரு எளவும் புரியலை. யார் கிட்டயோ பேசுதேன்னு நினைச்சுக்கிட்டு பேந்தப் பேந்த முளிக்கா. சில சமயம் முளிக்காளா மொறக்காளான்னே தெரியலை. யார்கிட்டயும் எங்கூர் தமிளுல பேச முடியல. அதனால தான் உங்களையெல்லாம் நெல்லைத் தமிளுல குளிப்பாட்டலாம்னு கிளம்பிட்டேன். நம்புங்க மக்கா, நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ்.
சரி மேட்டருக்கு வருதேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி, திவ்யா ஒரு பதிவு எளுதியிருந்தாங்க. அதாவது, பொண்ணு பார்க்க வருத ஆளுகிட்ட என்ன பேசுறதுன்னு. நல்லாத்தேன் எளுதியிருந்தாங்க. அப்பவே, இதுக்கு நாமளும் ஒரு எசைப் பாட்டு, சீ, எசைப்பதிவு எளுதிறணும் முடிவு பண்ணேன். ஆனாப் பாருங்க இந்த எளவெடுத்த ஆஃபீஸுல “கொடுக்க காசுக்கு கொஞ்சம் வேலையைப் பாருல”ன்னு சொல்லி உசுர வாங்கிப்புட்டானுங்க. இப்போத்தேன் எளுத முடியுது.
எல்லா வீட்டுலயும், சும்மாத் திரியுற பசங்களுக்கு, இந்த கல்யாணம்’ற கருமாதியப் பண்ணிருவாங்க. இதுலேர்ந்து தப்பிக்க வளி ரொம்ப கொறவு. “நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.
ஆனா, இந்த வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணி வைக்காங்க பார்த்தீயெளா, அந்தப் பசங்களுக்குத் தான் இந்தப் பொண்ணு பார்க்கற வைபவமெல்லாம். இந்த சடங்குலயும் ஒரு ‘இது’ இருக்குது’ங்கறத ஒத்துக்கிடணும்.

அம்மா அப்பா அங்கீகாரத்தோட சைட் அடிக்கறதுக்குப் பேரு தான் இந்தப் பொண்ணு பார்க்கற சடங்கு. முன்னெல்லாம் குடும்பத்தோட ஒரு பத்து பேர் போயித்தான் பொண்ண பார்ப்பாங்க. நம்மாளு இம்புட்டுப் பேத்துக்கு நடுவ ஒரு பொண்ணப் பார்த்துப் பளக்கமிருக்காது. என்ன பேசுறது ஏது பேசறதுன்னு ஒரே ஒதறலா இருக்கும். இந்த ஒதறல் தான் மவனே ஒனக்கு மொத எதிரி. இத மொதல்ல ஓதரித் தள்ளணும்.
இன்னொரு விஷயம், பொண்ணப் பார்க்கறதுக்கு முன்னாடியே, அந்தப் பொண்ணு பத்தியும் அது குடும்பத்தப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிடறது நல்லது. ஏன் சொல்லுதேம்னா, கிடைக்கப் போறதோ சில நிமிஷங்கள் தான். அந்த நேரத்துல இந்த அறி்முகப் படலம் வேண்டாம்லா. அதுக்குத் தேன் சொல்லுதேன்.
அப்புறம் இந்தப் பொண்ணப் பாடச் சொல்லறது, ஆடச் சொல்லறது, இதெல்லாம் வேண்டாம் மக்கா. இந்த மிரிண்டா விளம்பரம் மாதிரி ஆயிடுச்சின்னா, பொளப்பு நாறிறும். எம்புட்டு முடியுமோ, அம்புட்டு பேசுங்க. ஏன்னா கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது.
அப்புறம் இன்னொரு விஷயம். பொண்ணு பார்க்கப் போறது, நம்ம மேல பொண்ணு இம்ப்ரெஸ் ஆவணும்’ங்கறுதுக்காக. முன்னெல்லாம் நிலம வேற மாதிரி இருந்தது. ஆனா இப்போ நெலம தலை கீழ். அதனால மேன்லியா நடந்துக்குங்க. தன்னப் பத்தி நல்லவன் வல்லவன், அப்படி இப்படின்னு சொல்லுங்க. எப்படியும் கல்யாணமாயி வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகுது. அது வரைக்குமாவது, அவங்க மனசுல ராசா மாதிரி ஒரு இமேஜ் பில்ட் அப் கொடுக்கலாம்லா, என்ன நான் சொல்லுறது?
அப்புறம், இந்த சொஜ்ஜி பஜ்ஜி, ஸ்வீட் காரம் காஃபி இதெல்லாம் கொடுப்பாங்க. நமக்குத்தான் எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டியே பளக்கம்’னுட்டு, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்க, ரெண்டு பஜ்ஜி வைங்க, அது இதுன்னு கேட்டுத் தொலையாத. நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும்.

ஓவரா கேள்வியெல்லாம் கேட்டு வைக்காதீங்க. பெறவு நினைத்தேன் வந்தாய் தேவ்யானி கணக்கா அவுங்க எதிர் கேள்வி கேட்டா, தொலைஞ்சோம். நாம வேலைக்கு ஆள் எடுக்கறதில்லை. உங்களுக்கு வேலையில் அயல்நாடு போகு்ம் வாய்ப்பு இருந்தால் அவங்ககிட்ட பாஸ்போர்ட் எல்லாம் இருக்குதான்னு கேட்டு வச்சுக்க்கிடுங்க. அப்படியே அவங்க வேலையில் அயல்நாடு போகும் வாய்ப்பு இருக்குதான்னும் தெரிஞ்சு வச்சுக்கிடுங்க. ஊர் உலகத்துல நெலமை சரியா இல்லைல்லா, அதேன்.
இன்னொரு முக்கியமான விஷயம். சில வீட்டுல வரதக்ஷணை எதிர்பார்ப்பாங்க. அம்மா அப்பா கிட்ட வரதக்ஷணை ஏதும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லிப்பாருங்க. அப்படி அவங்க மசியலைன்னா, அதைப் பத்தி முன் கூட்டியே வீட்டுப் பெரியவங்களை பேசிக்கிடச் சொல்லுங்க. இந்த பொண்ணு பார்க்கப் போறன்னிக்கு அதப் பற்றிப் பேச வேண்டாம். ஏன்னா நாம போறது, சந்தோஷமா(???!!!!) வாழறதுக்கு ஒரு துணையைத் தேடி. வியாபாரம் பேசுறதுக்கில்லை.
அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம்டே. பொண்ணு பாக்கப் போறதுக்கு முன்னாடி, பொண்ணோட ஃபோடோவெல்லாம் வூட்டுல காட்டுவாய்ங்க. அதுல பொண்ணு புடிச்சிருந்தா மட்டும், இந்த பொண்ணு பார்க்கப் புறப்புடுங்க. குடும்பத்தோட போய் பொண்ணயும் பார்த்துட்டு, நாங்க அப்புறமா சொல்லியனுப்பறோம்னு சொல்லிப்புட்டு வராதீங்க. ஒரு பொண்ண பார்த்தோமா, அதையே கட்டினமான்னு இருக்கணும். அத விட்டுப்புட்டு, நாலஞ்சு பொண்ண பார்த்துப்புட்டு நல்லா சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் தின்னுப்புட்டு, இருக்கறதுல எது தேருதுன்னு யோசிக்காதீங்க. எங்கூரு பக்கத்துலயெல்லாம், கல்யாணம் கட்டுதேன்னு சொன்னாத்தேன், பொண்ணெயே காட்டுவாங்க . பொண்ணையும் பார்த்துப்புட்டு, பிடிக்கலைன்னா, பெறவு உங்க உசுருக்கு நாங்க உத்தரவாதம் கிடையாது’ன்னுடுவாங்க.
“ஆமாம், இம்புட்டுச் சொல்லுதியே, பொண்ணப் பார்க்கயில, என்னாத்த பேசுறதுன்னு, ஒண்ணுமே சொல்லலியேல்ல, திவ்யா, எம்புட்டு சொல்லியிருக்காங்க”ன்னு கேக்குதீயேளா?
“எலேய் முட்டாப்பயலே, கெடைக்க பத்து நிமிஷத்துல என்னத்தலே பேச முடிவு செய்ய முடியும்? தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும். சும்மாவா சொன்னாங்க, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”னு. அமையலைன்னா, தலைவிதிய நொந்துகிட்டு, டஸ்மாக்’ல ஒரு கட்டிங்க் அடிச்சிக்கிட வேண்டியது தான்”.
வாழ்க்கைத் துணை தேடுறது, ரொம்ப ஸ்வாரஸ்யமானது, ஆனா கவனமா இருக்கணும். வாழ்த்துக்கள்.
டிஸ்கி: மேலே எழுதினதுல என்னென்ன நான் பண்ணேன்னெல்லாம் பின்னூட்டத்துல கேக்கப்படாது. அதெல்லாம் தொளில் ரகசியம்.

47 comments:
ஹா ஹா ஹா
நல்ல சுவாரஸயம்
அதிலேயும் அந்த டிஸ்கி மேட்டரு தூள்
நகைச்சுவையோடு உண்மையில் சில விஷயங்களை யோசிக்கும் விதத்தில் சொல்லி உள்ளிர்கள்.
முக்கியமாக பல பேர் பெண் பார்க்கும் சடங்கை எதோ கேலி கூத்து போல் பண்ணி விட்டு வருவார்கள்..
ஆனால் நிறைய பேருக்கு தெரியாது அது நிராகரிப்பின் வலி என்பது..
அண்ணாச்சி நான் ஒருத்தன் பக்கத்துல இருக்கிறது ஞாபகம் இல்லியா ?
நீங்க பொண்ணு போட்டோ வந்தவுடனே Gym எல்லாம் போனது ஞாபகம் இருக்கா ?
Hmm சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் சினிமால தான் பார்த்தேன், என்னக்கு அந்த opportunity கிடைகல :(
:) ஹா ஹா நல்ல காமெடி
சூப்பரு போஸ்டு விஜய்!!
கலக்கல்ஸா எழுதியிருக்கிறீங்க:))
\\அம்மா அப்பா அங்கீகாரத்தோட சைட் அடிக்கறதுக்குப் பேரு தான் இந்தப் பொண்ணு பார்க்கற சடங்கு. \\
அது சரி....!
\\“நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.\\
LOL:))
\\இன்னொரு விஷயம், பொண்ணப் பார்க்கறதுக்கு முன்னாடியே, அந்தப் பொண்ணு பத்தியும் அது குடும்பத்தப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிடறது நல்லது.\\
எப்படி தெரிஞ்சுக்கிவிய??
\\ஆனா இப்போ நெலம தலை கீழ். அதனால மேன்லியா நடந்துக்குங்க. தன்னப் பத்தி நல்லவன் வல்லவன், அப்படி இப்படின்னு சொல்லுங்க.\\
சொன்னா மட்டும் .......அப்படியே நம்பிடப்போறாங்களாக்கும்:))
\அப்புறம், இந்த சொஜ்ஜி பஜ்ஜி, ஸ்வீட் காரம் காஃபி இதெல்லாம் கொடுப்பாங்க. நமக்குத்தான் எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டியே பளக்கம்’னுட்டு, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்க, ரெண்டு பஜ்ஜி வைங்க, அது இதுன்னு கேட்டுத் தொலையாத. நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும்.\\
ஹா ஹா:))
ச்சே ச்சே அப்படி சொஜ்ஜி பஜ்ஜி கேட்டு வாங்கி சாப்பிட்டா......இண்டீஜண்டுன்னு எல்லாம் நினைக்கமாட்டாக,
'ரெண்டு பஜ்ஜி,ஒரு கரண்டி கேசரி'லயே பையன முந்தானைல முடிஞ்சுரலாம் போலிருக்குதேன்னு, ஓகே சொல்லிடுவா பொண்ணு:))
\இன்னொரு முக்கியமான விஷயம். சில வீட்டுல வரதக்ஷணை எதிர்பார்ப்பாங்க. அம்மா அப்பா கிட்ட வரதக்ஷணை ஏதும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லிப்பாருங்க.\\
நல்ல பாயிண்ட்:))
\\டிஸ்கி: மேலே எழுதினதுல என்னென்ன நான் பண்ணேன்னெல்லாம் பின்னூட்டத்துல கேக்கப்படாது. அதெல்லாம் தொளில் ரகசியம்.\\
டிஸ்கி போட்டு எஸ்கேப்பா??
பதிவு ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க விஜய்!!
எனக்கு எதிர்காலத்தில் நல்ல usefull ஆ இருக்கும்....
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம் இருந்து ....
உங்க அனுபவத்தையும் சொன்ன என்னை போல் உள்ளவர்களுக்கு ஒரு case study மாதிரி இருக்கும் ல ....
சொல்லுங்க .....
ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கு ....
என்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுவாள் ன்னு .....
லவ் பண்ணி கலயாணம் பண்ணிக்க வேண்டும் ன்னு ......
அப்படியே ஒரு கேர்ள் லை impress பண்ண வேண்டிய பொருகள் என்ன என்ன என்று சொன்னால் நல்ல இருக்கும்
nalla padivu vijay....
intha link yai en friend ellorukkum email panna poren
என்ன அண்ண சொல்லுததீக நீங்க... இப்டி பல மேட்டர் ஆ ஒண்ணா சொல்லிப்புதீங்களே....
நல்ல பதிவுந்க அண்ண.. அற்புதம் :)
டிஸ்கீ ய போட்டு எங்க வாய எப்டி அடச்சி புத்தீங்களே :(
thamirabarani vaasanai super appu...
appuram mella sonna matterla neenga enna enna pannuneenganu ketka kudathungreenga - but Kartik, Kanangu, Naanu ellam intha line la nikkirom - thambigalluku konjam advise panrathu (anna enna pannuneenganu therinja athayae naangalum pannuvomla)ennapa naan solrathu??
நல்ல சுவாரசியமான பதிவு விஜய்...
மிகவும் ரசித்தேன்...
அந்த டிஸ்கி மேட்டர் அருமை...
சூப்பர் பதிவு விஜய்...கலக்கிட்டீங்க :)) டிஸ்கி மேட்டர இன்னொரு பதிவா போடலாமே? ;)
//\அப்புறம், இந்த சொஜ்ஜி பஜ்ஜி, ஸ்வீட் காரம் காஃபி இதெல்லாம் கொடுப்பாங்க. நமக்குத்தான் எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டியே பளக்கம்’னுட்டு, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்க, ரெண்டு பஜ்ஜி வைங்க, அது இதுன்னு கேட்டுத் தொலையாத. நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும்.//
LOL :D பதிவு முழுக்க நல்ல காமடியா இருக்கு :)
:)))
\\நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா
நல்ல சுவாரஸயம்
அதிலேயும் அந்த டிஸ்கி மேட்டரு தூள்\\
ரொம்ப நன்றி ஜமால்!!!!
\\ vinoth gowtham said...
நகைச்சுவையோடு உண்மையில் சில விஷயங்களை யோசிக்கும் விதத்தில் சொல்லி உள்ளிர்கள்.
முக்கியமாக பல பேர் பெண் பார்க்கும் சடங்கை எதோ கேலி கூத்து போல் பண்ணி விட்டு வருவார்கள்..
ஆனால் நிறைய பேருக்கு தெரியாது அது நிராகரிப்பின் வலி என்பது..\\
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி, வினோத் கௌதம்.
\\ Subbu said...
அண்ணாச்சி நான் ஒருத்தன் பக்கத்துல இருக்கிறது ஞாபகம் இல்லியா ?\\
ஆஹா, கவுத்திவிடக் கிளம்பிட்டாங்கய்யா :-)
\\நீங்க பொண்ணு போட்டோ வந்தவுடனே Gym எல்லாம் போனது ஞாபகம் இருக்கா ? \\
அப்படியா? எனக்கே ஞாபகம் இல்லை. :-)
\\Hmm சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் சினிமால தான் பார்த்தேன், என்னக்கு அந்த opportunity கிடைகல :( \\
அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் :-)
\\Suresh said...
:) ஹா ஹா நல்ல காமெடி\\
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சுரேஷ் :-)
\\Divya said...
சூப்பரு போஸ்டு விஜய்!!
கலக்கல்ஸா எழுதியிருக்கிறீங்க:))\\
நன்றி ! :-)
\\ Divya said...
\\இன்னொரு விஷயம், பொண்ணப் பார்க்கறதுக்கு முன்னாடியே, அந்தப் பொண்ணு பத்தியும் அது குடும்பத்தப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிடறது நல்லது.\\
எப்படி தெரிஞ்சுக்கிவிய?? \\
ரொம்ப ஈஸி. ஆனா நான் சொல்ல மாட்டேன் :-)
\\
சொன்னா மட்டும் .......அப்படியே நம்பிடப்போறாங்களாக்கும்:))\\
சில பொண்ணுங்களுக்கு பிறக்கும்போதே சந்தேகப் புத்தியும் சேர்ந்து பிறக்குது. அதுக்கு என்ன பண்ண ? :-)
\\ MayVee said...
அப்படியே ஒரு கேர்ள் லை impress பண்ண வேண்டிய பொருகள் என்ன என்ன என்று சொன்னால் நல்ல இருக்கும்\\
அந்த சிதம்பர ரகசியம் எனக்குத் தெரிந்திருந்தால் நானே அதைச் செய்திருக்க மாட்டேனா??? :-)
\\ MayVee said...
nalla padivu vijay....
intha link yai en friend ellorukkum email panna poren\\
பண்ணுங்க!!
\\ kanagu said...
என்ன அண்ண சொல்லுததீக நீங்க... இப்டி பல மேட்டர் ஆ ஒண்ணா சொல்லிப்புதீங்களே....
நல்ல பதிவுந்க அண்ண.. அற்புதம் :)
டிஸ்கீ ய போட்டு எங்க வாய எப்டி அடச்சி புத்தீங்களே :(\\
எல்லாரும் ஏம்பா இப்படி டிஸ்கியிலேயே நிக்கறீங்க??? :-)
\\Blogger Lancelot said...
thamirabarani vaasanai super appu...\\
நன்றி லான்ஸ்லாட் :-)
\\appuram mella sonna matterla neenga enna enna pannuneenganu ketka kudathungreenga - but Kartik, Kanangu, Naanu ellam intha line la nikkirom - thambigalluku konjam advise panrathu (anna enna pannuneenganu therinja athayae naangalum pannuvomla)ennapa naan solrathu??\\
சொல்லப்போனா எனக்கு நான் பொண்ணு பார்த்தன்னிக்கு என்ன நடந்ததுன்னே ஞாபகம் இல்லை :-)
\\புதியவன் said...
நல்ல சுவாரசியமான பதிவு விஜய்...
மிகவும் ரசித்தேன்...
அந்த டிஸ்கி மேட்டர் அருமை...\\
நன்றி பாஸ்!!
\\Blogger Divyapriya said...
சூப்பர் பதிவு விஜய்...கலக்கிட்டீங்க :)) டிஸ்கி மேட்டர இன்னொரு பதிவா போடலாமே? ;)\\
மேலே லான்ஸ்லாட் சொன்னது தான் உங்களுக்கும். அன்னிக்கு என்ன நடந்ததுன்னே ஞாபகம் இல்லை. இன்னொரு விஷயம், நான் பொண்ணு பார்த்த வைபவத்தை பதிவாக எழுதினேன்னா, அதற்கு ஒரு எதிர்பிரசாரம் செய்வேன்னு காயத்ரி மிரட்டுகிறாள் :-)
\\Blogger Karthik said...
:)))\\
;-) (நானும் ஸ்மைலி தான் போடுவேன்)
//;-) (நானும் ஸ்மைலி தான் போடுவேன்)
nellai thamizh is superb. didnt know u r so good in it.
will check once again before i go to see the bride if i got one. ;)
ok?
//சொல்லப்போனா எனக்கு நான் பொண்ணு பார்த்தன்னிக்கு என்ன நடந்ததுன்னே ஞாபகம் இல்லை :-)//
ean na kanna kathi kaatula vitta maadhiri aayidicha?? SNACKS la saapteengala??
TASMAC pakkam poroom na ungalukku oru msg.. neenga vanda udane SMS hero maadhiri "MACHI ORU QUARTER SOLLEN"
செம கலக்கல்ண்ணே..
:)
\\ Saravana Kumar MSK said...
செம கலக்கல்ண்ணே..
:)\\
நன்றி சரவணா :-))
//தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும்.//
அட்டகாசம் விஜய்..
\\“நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க.\\
:))
\\அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம்டே. பொண்ணு பாக்கப் போறதுக்கு முன்னாடி, பொண்ணோட ஃபோடோவெல்லாம் வூட்டுல காட்டுவாய்ங்க. அதுல பொண்ணு புடிச்சிருந்தா மட்டும், இந்த பொண்ணு பார்க்கப் புறப்புடுங்க. குடும்பத்தோட போய் பொண்ணயும் பார்த்துட்டு, நாங்க அப்புறமா சொல்லியனுப்பறோம்னு சொல்லிப்புட்டு வராதீங்க. ஒரு பொண்ண பார்த்தோமா, அதையே கட்டினமான்னு இருக்கணும்.\\
நேரம் காலம் எல்லோருக்கும் மிச்சம் :))
\\ Divyapriya said...
சூப்பர் பதிவு விஜய்...கலக்கிட்டீங்க :)) டிஸ்கி மேட்டர இன்னொரு பதிவா போடலாமே? ;)\\
அதானே!!
//
எல்லாரும் சொ(சோ)கமா இருக்கீயேளா? “இம்புட்டு நேரம் நல்லாத்தேம்ல இருந்தோம், நீ எளுதியத படிக்கோம்லா, இனி என்னாவப்போகுதோ, தெரியல”ங்கான் ஒரு கிறுக்குப் பய. அவன் சொல்லுறத கண்டுக்கிட வேண்டாம்.
//
ஆஹா ஆரம்பிச்சுட்டாறையா ஆரம்பிச்சுட்டாறு :))
//
வீட்டம்மாகிட்ட இந்த மாறி பேசினா, அதுக்கு ஒரு எளவும் புரியலை. யார் கிட்டயோ பேசுதேன்னு நினைச்சுக்கிட்டு பேந்தப் பேந்த முளிக்கா. சில சமயம் முளிக்காளா மொறக்காளான்னே தெரியலை. யார்கிட்டயும் எங்கூர் தமிளுல பேச முடியல.
//
ஹா ஹா ரொம்ப சிரிப்பா இருந்தது
நல்ல ஹாஷ்யம் உங்களுக்கு :)
//
அதனால தான் உங்களையெல்லாம் நெல்லைத் தமிளுல குளிப்பாட்டலாம்னு கிளம்பிட்டேன். நம்புங்க மக்கா, நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ்.
//
அதெல்லாம் சரி நெல்லை இருக்கு வெல்லம் எங்கே :))
//
எசைப்பதிவு எளுதிறணும் முடிவு பண்ணேன். ஆனாப் பாருங்க இந்த எளவெடுத்த ஆஃபீஸுல “கொடுக்க காசுக்கு கொஞ்சம் வேலையைப் பாருல”ன்னு சொல்லி உசுர வாங்கிப்புட்டானுங்க. இப்போத்தேன் எளுத முடியுது.
//
வரேன் உங்க ஆபிசுக்கு ஏன் அதுகுள்ளாரே வெட்டிவம்பை
வெளியே விட்டீங்கன்னு கேக்கறேன் :))
//
“நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.
//
இதுலே உள்குத்து ஒன்னும் இல்லையே விஜய் :))
//
ஆனா, இந்த வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணி வைக்காங்க பார்த்தீயெளா, அந்தப் பசங்களுக்குத் தான் இந்தப் பொண்ணு பார்க்கற வைபவமெல்லாம். இந்த சடங்குலயும் ஒரு ‘இது’ இருக்குது’ங்கறத ஒத்துக்கிடணும்.
//
அதென்னா ஒரு "இது" ?? அது சரி :)
//
என்ன பேசுறது ஏது பேசறதுன்னு ஒரே ஒதறலா இருக்கும். இந்த ஒதறல் தான் மவனே ஒனக்கு மொத எதிரி. இத மொதல்ல ஓதரித் தள்ளணும்.
//
இது சூப்பர் நண்பர்களுக்கு உதவியா இருக்கும் இந்த ஐடியா :))
//
இந்த மிரிண்டா விளம்பரம் மாதிரி ஆயிடுச்சின்னா, பொளப்பு நாறிறும். எம்புட்டு முடியுமோ, அம்புட்டு பேசுங்க. ஏன்னா கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது.
//
பாவம் நீங்க ரொம்ப கஷ்டப் படுறீங்க போல இருக்கு :))
//
அது வரைக்குமாவது, அவங்க மனசுல ராசா மாதிரி ஒரு இமேஜ் பில்ட் அப் கொடுக்கலாம்லா, என்ன நான் சொல்லுறது?
//
SUPER IDEA.
பாவம் காயத்ரி இப்படி எல்லாம் பண்ணிதான் கல்யாணம் பண்ணிகிட்டீங்களா :))
//
“எலேய் முட்டாப்பயலே, கெடைக்க பத்து நிமிஷத்துல என்னத்தலே பேச முடிவு செய்ய முடியும்? தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும். சும்மாவா சொன்னாங்க, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”னு. அமையலைன்னா, தலைவிதிய நொந்துகிட்டு, டஸ்மாக்’ல ஒரு கட்டிங்க் அடிச்சிக்கிட வேண்டியது தான்”.
//
கட்டிங்க் :)
இதெல்லாம் வேறே ஐடியாவா??
உங்க பேரு விஜய் இல்லே
ஐடியா திலகம் சரியா :))
//
டிஸ்கி: மேலே எழுதினதுல என்னென்ன நான் பண்ணேன்னெல்லாம் பின்னூட்டத்துல கேக்கப்படாது. அதெல்லாம் தொளில் ரகசியம்.
//
படிக்கும்போதே நினைச்சேன் வில்லங்கம் வீணா அரங்கேறி இருக்குன்னு
பாவம் காயத்ரி.
விஜய் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
ரொம்ப சிரிப்பா வந்திச்சு, உங்க பதிவை எங்க அக்காவை உக்கார வச்சு படிச்சு காட்டினேன், அவங்களும் நாளா ரசிச்சு சிரிச்சாங்க.
ரொம்ப குறும்பு விஜயிக்குன்னு சொன்னாங்கபா :))
அனுபவம் பேசுது:)
அப்புறம் இந்தப் பொண்ணப் பாடச் சொல்லறது, ஆடச் சொல்லறது, இதெல்லாம் வேண்டாம் மக்கா. இந்த மிரிண்டா விளம்பரம் மாதிரி ஆயிடுச்சின்னா, பொளப்பு நாறிறும்.//
நல்லா சிரிச்சேன்:))
எம்புட்டு முடியுமோ, அம்புட்டு பேசுங்க. ஏன்னா கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது. //
உண்மைதான்..... ஆனாலும் நாங்க எல்லாம் இதை ஏத்துக்கமாட்டோம்..
//நம்மாளு இம்புட்டுப் பேத்துக்கு நடுவ ஒரு பொண்ணப் பார்த்துப் பளக்கமிருக்காது. என்ன பேசுறது ஏது பேசறதுன்னு ஒரே ஒதறலா இருக்கும்.
ஒதரலா.... நிஜமாவா எங்கூட்டுகாரர்கிட்ட கேட்டுபார்க்கிறேன். (அப்படி இருந்தா அந்த பயமெல்லாம் எங்க போச்சுன்னு தெரியணும்மில்ல)
//ஏன்னா கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது.
சரி... பேசினாதானே கேட்பதற்க்கு... அது என்னமோ தெரியல , கல்யாணம் நிச்சயமான பிறகு ரெம்ம்ம்ப பேசுராங்க.... ஆனா கல்யாணம் ஆனப்பிறகு ரெம்ம்ம்ப வேலை செய்யறாங்க. என்ன.... நான் சொல்றது சரிதானே அண்ணாச்சி.
///இந்த ஞாயிற்றுக் கிழமை தான் Three Mistakes of my life படித்து முடித்தேன். நான் முதலில் விமர்சனம் போட்டுடட்டுமா?? :-)))///
ஆஹா...விஜய்... 5 points someone' review எழுதற்துக்கு முன்னால உங்க ப்ளாக் வந்து பார்த்துட்டு,அப்புறமாதான் ரிவியூ எழுதினேன்...ஏற்கனவே நான் கடவுள்,one night@ call center'ku நான் ரிவியூ எழுதும்போதே நீங்களும் எழுதியிருந்தீங்க.... இப்போ 3mistakes of my life'கு போட்டியா...
\\ Ramya Ramani said...
அதானே!!\\
எழுதலாம், எதுக்கு வீண் ரிஸ்க் :-)
\\ RAMYA said...
எல்லாரும் சொ(சோ)கமா .....\\
ரொம்ப பொறுமையா படிச்சிருக்கீங்க போலிருக்கு. உங்களுடை டீடெயில்ட் அனாலிஸிஸுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :-)
\\Poornima Saravana kumar said...
உண்மைதான்..... ஆனாலும் நாங்க எல்லாம் இதை ஏத்துக்கமாட்டோம்..\\
என்னிக்கு பெண்கள் உண்மையை ஒத்துக்கிட்டிருக்காங்க??? :-)
படித்ததற்கு நன்றி :-)
\\kunthavai said...
சரி... பேசினாதானே கேட்பதற்க்கு... அது என்னமோ தெரியல , கல்யாணம் நிச்சயமான பிறகு ரெம்ம்ம்ப பேசுராங்க.... ஆனா கல்யாணம் ஆனப்பிறகு ரெம்ம்ம்ப வேலை செய்யறாங்க. என்ன.... நான் சொல்றது சரிதானே அண்ணாச்சி.\\
நீங்க சொன்னா சரி தான் :-)
\\ உங்கள் நண்பன் said...
ஆஹா...விஜய்... 5 points someone' review எழுதற்துக்கு முன்னால உங்க ப்ளாக் வந்து பார்த்துட்டு,அப்புறமாதான் ரிவியூ எழுதினேன்...ஏற்கனவே நான் கடவுள்,one night@ call center'ku நான் ரிவியூ எழுதும்போதே நீங்களும் எழுதியிருந்தீங்க.... இப்போ 3mistakes of my life'கு போட்டியா...\\
மோஹன், சீக்கிரம் படிச்சுட்டு நீங்களே எழுதுங்க. உங்க விமர்சனத்துக்கு நால் லின்க் கொடுக்கறேன் :-)
மக்கா, நல்லா எழுதுறீகளே!
//அதுல பொண்ணு புடிச்சிருந்தா மட்டும், இந்த பொண்ணு பார்க்கப் புறப்புடுங்க//
வெறும் ஃபோட்டாவ மட்டும் பாத்து எப்படிங்க முடிவு பண்றது? அப்ப லுக்ஸ் தான் முதல பாக்கனுமா என்ன? அவ்வ்வ்....
\\ Thamizhmaangani said...
வெறும் ஃபோட்டாவ மட்டும் பாத்து எப்படிங்க முடிவு பண்றது? அப்ப லுக்ஸ் தான் முதல பாக்கனுமா என்ன? அவ்வ்வ்....\\
அப்படிச் சொல்லலை. ஆனால் ஒரு பெண் நிராகரிக்கப்படுவதற்கு லுக் ஒரு முக்கிய காரணம். எனக்கு வேண்டிய உறவினர்கள் இரண்டு பேரை, வந்து பார்த்து விட்டு, பொண்ணுக்கு அது சரியில்லை இது சரியில்லன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க.
//எங்கூரு பக்கத்துலயெல்லாம், கல்யாணம் கட்டுதேன்னு சொன்னாத்தேன், பொண்ணெயே காட்டுவாங்க //
Ammam'ne... Ithu onnuthaan en manasa uruttikittu kedakkku... namooru thamila alagaa solliyirukkiye...
//ஆனால் நிறைய பேருக்கு தெரியாது அது நிராகரிப்பின் வலி என்பது..//
I completly agree with this.. :)
நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ். //
கண்டிப்பா விஜய்.
எளவெடுத்த ஆஃபீஸுல “கொடுக்க காசுக்கு கொஞ்சம் வேலையைப் பாருல”ன்னு சொல்லி உசுர வாங்கிப்புட்டானுங்க //
இதுக்கு இவ்ளோ சடவாயா....
கல்யாணம்’ற கருமாதியப் பண்ணிருவாங்க //
வீட்டம்மா நம்பர் கொஞ்சம் தாரீயளா...
அம்மா அப்பா அங்கீகாரத்தோட சைட் அடிக்கறதுக்குப் பேரு தான் இந்தப் பொண்ணு பார்க்கற சடங்கு //
இது நல்லாருக்கே.
கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது. //
வாஸ்தவமான பேச்சு.
நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும். //
:))))))))))
நாம போறது, சந்தோஷமா(???!!!!) வாழறதுக்கு ஒரு துணையைத் தேடி. வியாபாரம் பேசுறதுக்கில்லை. //
சல்யூட் சார்.
\\ ஜி said...
Ammam'ne... Ithu onnuthaan en manasa uruttikittu kedakkku... namooru thamila alagaa solliyirukkiye...
//ஆனால் நிறைய பேருக்கு தெரியாது அது நிராகரிப்பின் வலி என்பது..//
I completly agree with this.. :)\\
வாங்க ஜி. எப்படி இருக்கீய!!! பார்த்து ரெம்ப நாளாச்சு :)
\\ விக்னேஷ்வரி said...
நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ். //
கண்டிப்பா விஜய்.\\
வாங்க விச்னேஷ்வரி. உங்க வருகைக்கு ரொம்ப நன்றி. கருத்துக்கு இன்னொரு நன்றி :-) அடிக்கடி வாங்க
//
எலேய் முட்டாப்பயலே, கெடைக்க பத்து நிமிஷத்துல என்னத்தலே பேச முடிவு செய்ய முடியும்? தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும்.
//
கடைசி கடைசியா நாம பேசி அவங்க கேக்குற ஒரே சந்தர்பம் இதுதான். இதுலயும் எதுவும் பேசாட்டி நம்ம ஊரு எம்.பி பார்லிமெண்டுல உட்கார்ந்த மாதிரி வாழ்கை முழுக்க கம்முனு இருக்க வேண்டிதனா?
ஆனா பயபுள்ள அனுபவஸ்தங்க எல்லாம் இதைதானையா சொல்றீங்க?!
Post a Comment