Pages

July 28, 2008

கூட்டாஞ்சோறு

தசாவதாரம் இரண்டாம் முறை பார்த்தபோது இன்னும் நிறைய ரசிக்க முடிந்தது. சென்ற முறை பார்த்த போது கவனிக்காத வசனங்களை இம்முறை கவனிக்கவும் ரசிக்கவும் முடிந்தது.
உதாரணத்திற்கு, புஷ் பேசும் ஒரு வசனம்.
புஷ் தனது உதவியாளரிடம்: "Could you please explain it to me?"
உதவியாளர்: "Mr. President, it is a bit complicated:
புஷ் : "Don't explain it to me if it is complicated"
இன்னும் அசினையும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் விட்டுக்களையும் ரசிக்க இன்னும் 2 தடவை பார்க்க வேண்டும். அது வரை பெங்களூருவில் படம் ஓட வேண்டும்.

பெங்களூருவில் வெடி குண்டு பற்றிய பீதி அடங்குவதற்கு முன்பாகவே அஹமதாபாத் வெடி குண்டு வெடித்து இன்னும் நெஞ்சில் புளியைக் கரைத்துவிட்டது. அஹமதாபாதிலுள்ள எனது மாமா நலமாகவே இருக்கிறார்.

எல்லாவற்றையும் விட மிக மோசமான கொடுமையான செயல், இலங்கைக்கு எதிராக இந்தியா சந்தித்த படு தோல்வி. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், முரளிதரனும் மென்டிஸும் செய்த சூழ்ச்சிக்கு நிஜமாகவே ஆட்டம் போட்டனர். இனிமேலும் தொடரில் விளையாடாமல், "போங்கடா நீங்களும் உங்க ஸ்பின்னும்" என்று சொல்லிவிட்டு "மற்ற இரண்டு போட்டிகளிலும் நீங்களே ஜெயித்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு வந்து விடலாம். ஏதோ அம்பயர் பரிதாபப்பட்டு கையைத் தூக்காமலிருந்தாலும் இந்த மூன்றாவது அம்பயர் வந்து ரொம்பவே படுத்தி விட்டார். முதலில் இந்த அப்பீல் முறையை ஒழித்தாக வேண்டும்.
"ஆமாம், சொல்லறதுல ஒண்ணும் குறைச்சலே இல்லை. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கட்டும், எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்" என்று என் மேலிடம் புலம்புவதை நான் யருக்கும் சொல்ல மாட்டேன்.
அலுவலகத்தில், சக உழைப்பாளினி(!!!) (அதாங்க colleague) கொடுத்த "மிஸ்டர் கிச்சா" என்ற கதைகளடங்கிய கிரேஸி மோஹன் எழுதிய புத்தகம் படித்தேன். புண்பட்ட நெஞ்சை இப்படித்தான் ஆற்ற வேண்டியிருந்தது. கிச்சா வந்து மூட்டிய கிச்சு கிச்சுவில் விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது.
வாய் விட்டு சிரித்தால் நோய் மட்டும் தான் போகுமா? நம்மை சூழ்ந்த துன்பங்கள் கூட பறந்து போயிடும். கிச்சாவால் இந்திய கிரிக்கெட் வீரர்களைத் திட்டித் தீர்ப்பதை கொஞ்சமேனும் குறைக்க முடிந்தது.
இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. தமிழில் வேறு வார்த்தைகளே இல்லையா?

19 comments:

Divyapriya said...

hey...me the first commentor :))
haa haa..ramya, நான் முந்திகிட்டேன் :-))

Divyapriya said...

//அது வரை பெங்களூருவில் படம் ஓட வேண்டும்.//


இது வாஸ்தவமான பேச்சு...

Divyapriya said...

//எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்//

ஹா ஹா....பாவம் எந்த தீத்தாலாண்டியோ??

Divyapriya said...

//இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. //

Good Question :))

Divyapriya said...

btw, super post title ngo :))

Vijay said...

இவ்வளவு சீக்கிரமா என் புலம்பல்களுக்கு பின்னூட்டமும் எழுதியதற்கு ரொம்ப Thanks :)

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

கூட்டாஞ்சோறு அருமை..

//ஆமாம், சொல்லறதுல ஒண்ணும் குறைச்சலே இல்லை. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கட்டும், எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்" என்று என் மேலிடம் புலம்புவதை நான் யருக்கும் சொல்ல மாட்டேன்.//

அதானே பார்த்தேன்....

//இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. தமிழில் வேறு வார்த்தைகளே இல்லையா? //

நெறைய இருக்கு ஆனால் அதை ப்ளாக்ல எழுத முடியாது அவ்வளவும்
கெட்ட வார்த்தைகள் :-)

Ramya Ramani said...

\\Divyapriya said...
hey...me the first commentor :))
haa haa..ramya, நான் முந்திகிட்டேன் :-))\\

சமத்து :((

//எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்//

தீத்தாலாண்டியோ - அப்படின்னா??

//இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. //

இதுக்கு காரணம் சரியான ஓய்வு இல்லாமை,Over Confidence,Over Expectation+Peer Pressure அப்படிங்கிறது என்னோட தாழ்மையான கருத்து

ஜியா said...

//அடிக்கும் விட்டுக்களையும் //

aahaa... nammoorla use panra vaarthaiya paakka embuttu santhosama irukku.... :)))

Vijay said...

\\Ramya Ramani said...
தீத்தாலாண்டியோ - அப்படின்னா??\\

ஊர் பேர் தெரியாத ஒருத்தனைத் திட்டணும்னா, எங்க ஊர்'ல உபயகப்படுத்தும் வார்த்தை :) திருநெல்வேலி பக்கத்து வட்டாரத்துப் பேச்சு

Vijay said...

ஜி,
ஒரு சிறிய வேண்டுகோள்!
நீங்க, நம்மூர் வட்டாரத்தமிழிலே ஒரு கதை எழுதுங்களேன் :)

Divya said...

vijay...
got ur comment....

unga porumai yin ellai evlonga??

konjam porumaiya wait panunga plsss:((

weekend cudnt find time to finish off the next part,
kandippa......seekiram......next part potudurein,seringla!!

Divya said...

\\இன்னும் அசினையும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் விட்டுக்களையும் ரசிக்க இன்னும் 2 தடவை பார்க்க வேண்டும்.\\

விட்டுகள் னா....ஜோக்தானே???

Divya said...

\\ விஜய் said...
ஜி,
ஒரு சிறிய வேண்டுகோள்!
நீங்க, நம்மூர் வட்டாரத்தமிழிலே ஒரு கதை எழுதுங்களேன் :)\\

உங்கள் வேண்டுகோளை 'கதாசிரியர்' நிறைவேத்துகிறாரான்னு பார்க்கலாம்:)))


விஜய்....ஜி யோட இந்த போஸ்ட் படிச்சிருக்கிறீங்களா??
one of my fav posts of G ......check this out if u hv not yet

http://veyililmazai.blogspot.com/2008/02/blog-post.html

Vijay said...

\\Divya Said...
விட்டுகள் னா....ஜோக்தானே???\\

அதே தான் :)

எங்க ஊர்ல "ஜோக் அடிக்காதே"ன்னு சொல்லறதுக்கு "எலேய்! விட்டடிக்காதல" அப்படின்னு ரொம்ப சொல்லுவோம்

ஜியா said...

//விஜய் said...

ஜி,
ஒரு சிறிய வேண்டுகோள்!
நீங்க, நம்மூர் வட்டாரத்தமிழிலே ஒரு கதை எழுதுங்களேன் :)//

அட... ரெண்டு மூனு கத எழுதிருக்கேனே.. இருங்க சுட்டி தர்றேன்... (இலவசமா விளம்பரம் பண்றதுன்னா நமக்கு வலிக்கவா செய்யும் ;)))

http://veyililmazai.blogspot.com/2007/04/1.html

http://veyililmazai.blogspot.com/2007/01/26.html

http://veyililmazai.blogspot.com/2008/04/blog-post_22.html

Ramya Ramani said...

ஒ நன்றி விஜய்..

ஜி என்ன முதல் கதை ரொம்பவே வயலன்டா இருக்கு

Vijay said...

Ji,
Thanks for the reference. கண்டிப்பாகப் படிக்கிறேன்.