Pages

July 26, 2008

இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும்

உதயகீதம் படத்தில் கௌண்ட மணி தேங்காயில் பாம்ப் என்றொரு புரளியைக் கிளப்பி விடுவார். அதற்கு ஒரு அர்ச்சகர், "கோயில்ல வச்சா. பஸ் ஸ்டாப்புல வச்சா, தியேட்டர்ல வச்சா, இப்படி தேங்காயில பாம்ப் வைக்கலோமோ?" என்று கேட்பார். அதற்கு கௌண்டர், தனக்கேயுரிர்ய நக்கலில் "வச்சுட்டாளே" என்பார்.
அது மாதிரி , "ஜம்முல வச்சா, காஷ்மீர்ல வச்சா, டில்லில வச்சா மும்பையில வச்சா. இப்ப பெங்களூரிலும் வைக்கலோமோ"

"வச்சுட்டாளே" என்று நக்கலிடித்து பதில் சொல்ல முடியவில்லை. குண்டு வெடிப்பின் சேதமென்னவோ பெரியதாக இல்லை. இருந்தாலும், நாம் தினமும் போய்க்கொண்டிருக்கும் இடத்திலேயே பாம்ப் வெடித்திருக்கிறதென்று நினைத்தாலே கிலி ஏற்படுகிறது. இதைத் தான் பாம்ப் வைத்தவன் எதிர்பார்த்தானோ? பாம்ப் வெடித்த கோரமங்களா பஸ் நிறுத்தத்தில், எத்தனையோ முறை என் மனைவியை இறக்கி விட்டிருக்கிறேன். இனி் அதே பேரூந்து நிலையத்தில் அவளை இறக்கி விடும் போது எனக்கு இந்த குண்டு வெடிப்பு தான் நினைவில் வரும்.
இன்னொரு குண்டு வெடித்த இடமான மடிவாலா என் அலுவலகத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. என் நண்பர்கள் நிறைய பேர் அங்கே சென்று மதிய உணவிற்குச் செல்வார்கள். அங்கேயே உள்ள விப்ரோ அலுவலகத்தில் 3 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். ஏதோ ஆண்டவன் கருணையால் குண்டு வெடித்த இடங்களில் எங்கேனும் நான் இல்லை என்று தான் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.
குண்டு வெடிப்பில் பலியான அந்தப் பெயர் அறியாத நபரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நான் நாலமா, என்று விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும், "நாங்கள் எல்லோரும் இங்கு தற்சமயம் நலமாக இருக்கிறோம். தொடர்ந்து நலமாக இருப்பது கடவுள் கையில் தான் இருக்கிறது". அவர் தான் குண்டு வைக்கும் நபர்களின் மனதை மாற்ற வேண்டும். வேறென்னத்தைச் சொல்ல.

தொலைக்காட்சி ஊடகங்கள் ஆருஷி தல்வார் கொலையில் காட்டிய ஆவலை இந்த குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதிலும் காட்டினால், நிஜமாகவே இவர்களுக்கு நாட்டு நலனில் அக்கரையிருக்கிறது என்று ஒற்றுக்கொள்ளலாம்.
கர்னாடகா அரசுக்கு இது ஒரு wake up call. புலி வருது புலி வருது என்று சொல்லியே இவ்வளவு நாள் கடத்தியவர்கள் இன்று புலியை நேரிலேயே பார்த்தாயிற்று. இனிமேலாவது இவர்கள் ஒரு Anti-Terrorist Squad அமைப்பது உசிதம். நேற்று நடந்த குண்டு வெடிப்பின் அளவு மாட்டும் ஜாஸ்தியாகிருந்தால், It is completely unimaginable.

என் மேல் அக்கறை கொண்டு என் நலம் பற்றி விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி........ நன்றி.

8 comments:

Divya said...

நீங்களும் உங்கள் மனைவியும் பத்திரமாக இருப்பது அறிந்து.......மகிழ்ச்சி விஜய்;)))

தொடர்ந்து அங்கு அமைதி நிலவ....மீண்டும் எவ்வித அசம்பாவிதமும் நிகழாதிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பதிவிட்டு உங்கள் நலனை சொன்னதிற்கு நன்றி விஜய்.

Divya said...

\\ஏதோ ஆண்டவன் கருணையால் குண்டு வெடித்த இடங்களில் எங்கேனும் நான் இல்லை என்று தான் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.\\

God will protect you & ur fmly Vijay, will uphold in my prayers.

முகுந்தன் said...

I was shocked to hear the news.
I feel no place is safe on the earth because of these cowardly acts of the so called terrorists....

Ramya Ramani said...

நீங்க,Family Safeah இருக்கீங்களா அப்பா..நமக்கு தெரிஞ்ச/தெரியாத மக்கள் எல்லாருமே இருக்கனுமேனு வேண்டிக்கிட்டே இருந்தேன்...

Divyapriya said...

ஒரு மனுஷனுக்கும் இன்னொரு சக மனுஷன கொல்ல நினைக்குற அளவுக்கு என்ன தான் வெறியோ??? ஒரு உயிரோட மதிப்பு தெரியாதவங்கள Human ன்னே ஒத்துக்க முடியாது...இது மாதிரி பண்றது கொடூரத்தின் உச்ச கட்டம்...

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

கோவையில் நடந்த குண்டு வெடிப்பின் கோரங்களை நேரில் பார்த்தவள் நான். எங்கள் தெருவிலேயே ஒரு குண்டு வெடித்தது. அது வெடிப்பது என்னவோ ஒரு முறைதான். ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தும் காயங்களும், பயமும் சொல்ல முடியாத அளவு. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கும் மேலேயே அந்த இடத்தை கடக்கும் போது மனதில் பயம் பரவும்.

இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையவும், இறந்தவர்களின் எண்ணிக்கை கூடாதிருக்கவும் , இனிமேல் குண்டுகள் வெடிக்காமல் இருக்கவும் ஆண்டவனை பிராத்திப்பதை தவிர வேறு வழியில்லை.

Vijay said...

தாரணிபிரியா,
உங்கள் தெருவிலேயே குண்டு வெடிப்பா? தெய்வமே !