"யாரு யாரு பேசறது. நா தழ தழைக்க இரண்டொருமுரை எச்சிலை விழுங்கியவாறு கேட்கலானான் சுரேஷ்.
"க்ரீடிங் கார்ட் கிடைச்சதா?", பெண்குறல் ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டது. ஒவ்வொரு துடிப்புக்கும் இதயம் இலவசமாக இன்னொரு முறை துடித்தது. சுரேஷுக்கு தன் இதயம் அடிக்கும் சத்தம் தனக்கே கேட்டது.
உடம்பில் அட்ரினலின் எங்கும் பாய வியர்த்துக்கொட்டியது."வந்தது என்று சொல்" என்று இதயம் இசைந்து கொடுக்க, "எந்த கார்ட் யார் போட்டது என்று கேள்" என்று மூளை முந்திக் கொண்டு கட்டளையிட்டது. மூளைக்குப் பணிந்து அதன் சொல்படி நடந்தான்.
"நிஜமாகவே வரலியா?" குரலில் ஏமாற்றம் தொனித்தது.
சுரேஷ், "ஓ நிஜமாகவே அனு தான் கார்ட் அனுப்பியிருக்காளா?" என்று மனதிற்குள் பயம் கலந்த மகிழ்ச்சி கொண்டான். இதே பெண்ணை பல முறை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாலும், அவள் பால் காதல் இருக்கவில்லை. அவளும் தன்னை காதலிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கவில்லை. அப்படியிருக்க, திடீரென்று அவளே தன் காதலைச் சொல்வதால் திக்கு முக்காடிப் போய் நின்றான்.சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீங்க.... நீ, அனு தானே பேசறது?" அவன் கேட்டது தான் தாமதம், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
"ச இப்படியாகி விட்டதே. மறுபடியும் கூப்பிடலாமா வேண்டாமா" என்று தயக்கம். சரி அழைக்கப்பட்ட தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், 5 இலக்கம் மட்டுமே இருந்த எண் அது. சரி, இது VoIP மூலம் வந்த அழைப்பு. இது எங்கிருந்து வந்ததென்று துப்பறிய கணினியை இயக்கினான். அவன் தேடிய தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் தாளாமல், தூங்கவும் முடியாமல் நிலை தடுமாறிய போராட்டம். தொலைபேசியில் பேசிய பெண்ணின் குரலை மீண்டும் மனதினில் ஓட்டிப் பார்த்தான். "அது நிஜமாகவே அனு தானா, இல்லை யாரேனும் நம்மோடு விளையாடுகிறார்களா? சரி அனு பெயரைக்கொண்டு ஏதாவது நண்பன் கலாட்டா செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணே என்னோடு பேசுகிறாளே. இது அவள் தானா? எனக்கு அவள் குரல் கூட ஒழுங்காகத் தெரியாதே" என்று எண்ணிக்கொண்டிருந்த நேரம், மீண்டும் தொலைபேசி மணியடித்தது. அதே 5 இலக்க எண்ணிலிருந்து தான் அழைப்பு. இம்முறை நிதானமாகப் பேசவேண்டும் என்று மூளை காட்டளையிட்டிருந்தது. ஆனால் மனமோ மூளையைத்தூக்கி மூலையில் போட்டு விட்டு, "அனு. அனு தானே பேசறது" என்று உளறித் தொலைக்க, மறு முனையிலிருந்த பெருத்த சிரிப்பொலி.
"என்னடா அனுவா, யாரது புது Girl Friend'ஆ" என்றொரு பழக்கப்பட்ட குரல்.
"யார் யாரிது. நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்ட் கிடைச்சதான்னு கேட்டது"
"ஹ்ம்ம் ஆப்பக்கடை மூக்கன் பேசறேன். உங்களுக்கு நாங்க யாருன்னு தெரியலியோ. எங்க கிட்டேர்ந்தெல்லாம் கால் வந்தால் பேச மாட்டீங்களோ?"
சுரேஷுக்கு எல்லாம் விளங்கிற்று. "ஏய் வத்சலா, இதெல்லாம் உன் விளையாட்டு தானா? விளையாடறதுக்கு ஒரு அளவே இல்லையா? இப்படி ஒரு பெண்ணோட பெயர் போட்டா கலாட்டா செய்வே"
வத்சலா சுரேஷின் பெரியப்பா மகள். அக்கா முறை.
வத்சலா, "ஏண்டா, நீ மட்டும் என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் ஃபோன் பண்ணுற மாதிரி பண்ணிட்டு, என்ன கலாட்டா பண்ணினே. நானும் அவர் தான் பேசறாரோன்னு நினைச்சுண்டு என்னல்லாமோ உளறித்தள்ளினேன். அதை வச்சுண்டு என்னல்லாம் கேலி பண்ணினே. அதான் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம். பாவம், அனு கார்ட் போடலியேன்னு ரொம்ப ஃபீலிங்க் ஆகிட்டியா?"
சுரேஷ், "அடிப்பாவி. ஒரு 4 மணி நேரம் என்னைப் புலம்ப வச்சுட்டியே. அம்மா அம்மா, இந்த கார்ட் விவகாரமெல்லாம் இந்த வத்சலா பண்ணின கூத்து. நாலு வாங்கு வாங்கு" அன்று அம்மாவிடம் ஃபோனைக்கொடுத்தான்.
"ஏண்டி அவன் பிறந்த நாள் அதுவுமா, இப்படியா கலாட்டா பண்ணுவாங்க" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
சுரேஷ் கை பேசியை வாங்கி, "ஆமாம், உனக்கு எப்படி என் காலேஜ் மேட் எல்லாம் தெரியும்"
"இவரோட கலீக் தங்கை தான் அனு. சில நாட்களுக்கு முன்னாடி தான் தெரிஞ்சது, அவளும் நீயும் ஒரே காலேஜில் படிக்கறது. உன்னைப் பற்றி வேற ரொம்ப பெருமையா பேசினா. அப்பவே முடிவு பண்ணிட்டேன், அவள் பெயர் போட்டு உன்னை இப்படி பழி வாங்க. இந்த பிறந்த நாளை உன்னால் மறக்கவே முடியாது" என்று முடித்தாள்.
"அப்பாடா, ஒரு வழியாக நிம்மதிடா சாமி. உருப்படியா தூங்கலாம்" என்றெண்ணி படுத்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை."ச, நிஜமாகவே அனு இந்த கார்ட் போட்டிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஹ்ம்ம் எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை இருக்கணும்" என்ற ஏக்கத்துடன் கண்ணயர்ந்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு....
"சுரேஷ் இல்லையா"
சுரேஷ் அம்மா, "அவன் மொபைல வச்சுட்டு எங்கேயோ வெளியில போயிருக்கானே.என்ன விஷயம்"
"இல்லை, நானும் சுரேஷும் ஒரே கம்பெனியில தான் செலக்ட் ஆகியிருக்கோம். எல்லாருக்கும் சென்னைல தான் ட்ரெயினிங்க். ஆனால் எனக்கும் சுரேஷுக்கும் மட்டும் தான் பூனவுல ட்ரெயினிங்க்'னு வந்திருக்கு. அதான் சுரேஷோட பிளான் பற்றி கேட்கலாம்னு ஃபோன் பண்ணினேன்"
சுரேஷ் அம்மா, "சுரேஷ் வந்ததும் உனக்கு ஃபோன் பண்ணச் சொல்லறேன். உன் பெயரைச் சொல்லவே இல்லையே?"
"அனு"
முற்றும்
14 comments:
அட நான் தான் ஃபரஸ்டு...சூப்பர்..காலேஜ்ல தொடங்கி கம்பெனில முடியுதா...ஜூப்பரு..ஆனா நீங்க இந்த பார்ட் அவசரமா எழுதினீங்களோ??
பாருங்க விஜய் இந்த கதைக்கு நான் தான் முதல்ல காமென்ட் போட்டிருக்கேன் எல்லா பார்டுக்கும்..ஸோ ஒரு ஸ்பெஷல் பார்சல் அனுப்பிடுங்க சரியா???
\\ஒவ்வொரு துடிப்புக்கும் இதயம் இலவசமாக இன்னொரு முறை துடித்தது. சுரேஷுக்கு தன் இதயம் அடிக்கும் சத்தம் தனக்கே கேட்டது.\\
:))
\\எல்லாருக்கும் சென்னைல தான் ட்ரெயினிங்க். ஆனால் எனக்கும் சுரேஷுக்கும் மட்டும் தான் பூனவுல ட்ரெயினிங்க்'னு வந்திருக்கு. அதான் சுரேஷோட பிளான் பற்றி கேட்கலாம்னு ஃபோன் பண்ணினேன்\\
அப்படிப்போடு அருவாள :))
சரிதான் ஒரு தேர்ந்த கதாசிரியர் கிடைச்சாச்சு... இதே போல் நீங்கள் மேன்மேலும் கதைகள் எழுத பாரட்டுக்கள்
arumaiyana mudivu. ana adutha part thodaralam pola. punevil irundu adutha kadai thodaruma.
//ஒவ்வொரு துடிப்புக்கும் இதயம் இலவசமாக இன்னொரு முறை துடித்தது.//
இது வரைக்கும் இப்டி ஒன்ன படிச்சதும் இல்ல, கேட்டதும் இல்ல...கலக்குங்க விஜய்...
//ஆனால் மனமோ மூளையைத்தூக்கி மூலையில் போட்டு விட்டு//
அட, அட, அட...Refer to previous comment, எத்தன தடவ தான் சொல்றது...கலக்கறீங்க போங்க...
தொடரும் போட வேண்டிய இடத்துல, முற்றும் போட்டுடீங்களே விஜய்...இதெல்லாம் நியாயமா? :-(((
கதாசிரியர் விஜய்!!! வாழ்க...வாழ்க :)) மென்மேலும் கதைகள் தொடர வாழ்த்துக்கள்...
Super
கதாசிரியர் விஜய்க்கு பெருசா ஒரு ஒ போட்டுட்டேன்.......
Ramya, DivyaPriya, Mukundan, TharaniPriya,
Thanks Thanks .... Thanks.
நான் இந்த பாகத்தை எழுதும் போது தூங்கிக்கொண்டே தான் எழுதினேன். படித்துப் பார்த்தபிறகு எனக்கு அவ்வளவாக திருப்திகரமா இல்லை.
முடிவும், 'பொசுக்கு'ன்னு முடிஞ்சுட்ட மாதிரி இருந்தது. அதனால இன்னொரு முடிவும் எழதணும்னு நினைத்திருந்தேன்.
"மணி 3 ஆயாச்சு இன்னும் என்ன blog வேண்டிக்கிடக்கு?" என்று வூட்டம்மா ஒரு போடு போட்டதால் போட்டது போட்டபடி தூங்க வேண்டியதாப்போச்சு. :)
கதையின் இன்னொரு version'ஐயும் படிச்சுப் பாருங்க.
அன்புடன்,
விஜய்
\\Ramya Ramani said...
ஸோ ஒரு ஸ்பெஷல் பார்சல் அனுப்பிடுங்க சரியா???\\
கண்டிப்பாக :)
\\"மணி 3 ஆயாச்சு இன்னும் என்ன blog வேண்டிக்கிடக்கு?" என்று வூட்டம்மா ஒரு போடு போட்டதால் போட்டது போட்டபடி தூங்க வேண்டியதாப்போச்சு. :)\
அய்யோ.....:(((
ஒரு கதைக்கு இரண்டு முடிவெல்லாம் யோசிச்சு எழுதுறீங்க, !!
நிஜம்மா இந்த தொடர் கதையில் உங்கள் எழுத்து மிக மிக.......அருமை!!
கதையோடு ஒன்றிபோக வைத்தடு விஜய்!!
தொடர்ந்து நிறைய கதை எழுதுங்க!!
Post a Comment