Pages

May 24, 2008

ஒரு சகாப்தம் நிறைவடைகிறது

முட்டி மோதி, தட்டித் தடுமாறி பெங்களூரு சர்வதேச விமான நிலைத்தை ஒரு வழியா திறந்துட்டாங்க. வந்து போகும் பயணிகளும் விமானிகளும் புதிய விமான நிலையத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுறாங்க. ஆனா, எனக்கென்னவோ பழைய விமான நிலையத்தை நினைத்தால் தான் பாவமா இருக்கு. ஒரு வயதான ஊழியன், தனது ஆயுட்காலம் முழுதும் ஒரு கம்பெனிக்காக உழைத்து ஓய்ந்து ரிடையர் ஆகி வீடு திரும்புவது போலத்தான் இருக்கு. பழைய விமான நிலையத்தை மூடக்கூடாது என்ற ஓலக்குரல்கள் பல எழுந்த வண்ணம் இருக்க, தனது கடமையை நாட்டிற்காக இவ்வளவு நாள் செய்து விட்டு, "போதும்டா சாமி! இவ்வளவு நாள் உழைச்சது போதும். இனிமேலும் முடியாது" என்று அந்த பழைய விமான நிலையம் கூறுவது இருக்கிறது.

பம்பாய் டெல்லி அளவு பெரிய நிலையமாக இல்லாவிட்டாலும், அவைகளுக்கு ஈடு கொடுத்து ஒரு நாளில், பல விமானங்கள் வந்து போக அனுமதித்திருக்கிறது. பழைய விமான நிலையமட்டுமன்றி, பெங்களுர் வானமே வெறிச்சோடிப்போய் விட்டது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கொரு விமானத்தைப் பார்த்த கண்கள், வெறிச்சோடிக்கிடக்கும் வானத்தைப்பார்க்கவே சகிக்கவில்லை. ஆகாயத்திற்கே இதைப் பொறுக்கமுடியவில்லை போலும். நேற்று மாலை கோடை வெப்பத்திலும், பெங்களுர் வானம் அழுது தீர்த்தது. பெங்களுர் வரும் வெளியூர் குழந்தைகள், விமானங்களைப் பார்த்து மகிழ்ந்து சிரிக்க ஒரு காரணாமாயிருந்திருக்கிறது. இனி பெங்களுர் வானில் விமானங்களைக் காண்பது அரிதாகிவிடும். விமானங்களைக்காட்டி குழந்தைகளுக்குச் சோறுட்டும் தாய் மார்கள் வேறு வழி தேட வேண்டும். பந்த் செய்ய முனைவோர் விமான நிலையத்தை முற்றுகையிட 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். சென்னை மாதிரி அக்கம் பக்கத்திலுள்ள நகரத்திற்குச் செல்வோர் விமானப் பயணங்களை மறக்க வேண்டி வரும்.

ஆரவாரமிழந்து ஆர்பாட்டமிழந்து யாரும் கவனிப்பாரின்றிக் கிடக்கும் அந்த கிழட்டு பழைய விமான நிலையத்தைப் பார்க்கவே மனம் சங்கடமாக இருக்கிறது. ஒரு கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றவரின், அனுபவத்தை நாடி பல கம்பெனிக்கள் அவர்களுக்கு கௌரவ பதவி கொடுக்கின்றன. சில முக்கிய முடிவுகளை அவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அதே மாதிரி முக்கியமான வி.ஐ.பிக்கள் வந்து போகவும், அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லும் விமானங்களையும் இங்கிருந்து இயக்கினால், நல்லது. எனினும் பல வருடங்களாய் நாட்டிற்குப் பணியாற்றிய ஒரு ஊழியனின் சகாப்தம் நேற்றோடு இனிதே நிறவடைந்தது.

2 comments:

Divya said...

\\ஆரவாரமிழந்து ஆர்பாட்டமிழந்து யாரும் கவனிப்பாரின்றிக் கிடக்கும் அந்த கிழட்டு பழைய விமான நிலையத்தைப் பார்க்கவே மனம் சங்கடமாக இருக்கிறது. ஒரு கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றவரின், அனுபவத்தை நாடி பல கம்பெனிக்கள் அவர்களுக்கு கௌரவ பதவி கொடுக்கின்றன. சில முக்கிய முடிவுகளை அவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அதே மாதிரி முக்கியமான வி.ஐ.பிக்கள் வந்து போகவும், அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லும் விமானங்களையும் இங்கிருந்து இயக்கினால், நல்லது.\\

கரிசனை நல்லாதான் இருக்கு விஜய்:))

BTW, என் வலைதளம் வந்தமைக்கு நன்றி!!

Vijay said...

Divya, Thanks for the comments