Pages

July 30, 2008

ஆடிக்காலம்

எந்தச் சானல் திருப்பினாலும் சதாவோ, ஸ்நேஹாவோ ஷ்ரியாவோ இல்லை மீரா ஜாஸ்மினோ ஏதாவதொரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களைப் பார்க்கும் பொழுது விகடனில் வந்த ஒரு ஜோக் தான் ஞாபத்திற்கு வருகிறது.

நீதிபதி: பக்கிரி, நீ ஏன் சரவணா ஸ்டொர்ஸில் உன் கை வரிசையைக் காட்டினாய்.
பக்கிரி: எஜமான், நான் அங்கே திருடினதுக்கு நடிகை சதா தான் காரணம்
நீதிபதி: அதெப்படி?
பக்கிரி: அவங்க தானே எல்லா சானலிலும் எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு பாடறாங்க. அதான் அங்கே திருடினேன். நீங்க தண்டனை கொடுக்கறதா இருந்தா அவங்களுக்குத் தான் கொடுக்கணும்

என் மனைவி ஜூலை முதல் தேதியிலிருந்தே "எனக்கு ஆடிக்கென்ன வாங்கித்தராப்புல ஐடியா" என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். அப்படியென்ன தான் ஆடிமாதத்திற்கும் ஜவுளிக்கடைகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஒரு முறை என் அப்பா, ஜவுளி கடை அதிபரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "சார், ஆடியில் எந்த வீட்டுலயும் விசேஷம் ஏதும் இருக்காது. பண்டிகையும் கிடையாது. ஸ்கூலும் திறந்துடுவாங்க. எங்க வியாபாரமெல்லாம் ரொம்பவே சுணங்கிப் போயிடும். வியாபாரத்தைப் பெருக்கத்தான் இந்த தள்ளுபடி விற்பனை அது இதுன்னு ஏதாவது ஏற்றி விட்டால், நம்மூர் பொம்பளைங்க கியூல வந்துடுவாங்க" என்று சொன்னாராம். இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை.

எங்கள் ஊரில் ஆடி மாசம் என்றால் காற்று பிய்த்துக் கொண்டு போகும். குற்றால சீஸனும் களை கட்டி விடும். இந்த வருடமாவது சீஸனுக்கு குற்றாலம் போகமுடியுமா என்று தெரியவில்லை. ஆடி மாசத்தில் தான் நானும் அவதாரம் எடுத்தேன் என்பதால் எனக்கிது கொஞ்சம் ஸ்பெஷல் மாசம். ஆடி அம்மாவாசை அன்று வானதீர்த்தம் அருவியில் (சின்ன ஆசை சின்ன ஆசை என்று மதுபாலா ஆடுவாறே) நல்ல கூட்டம் இருக்கும். ரோஜா படத்தில் மதுபாலா சொல்லுவாரே "பூக்குடையெல்லாம் எடுத்துக் கொண்டு வண்டி கட்டிக்கொண்டு செல்வோம் "என்று, அந்தத் திருவிழா நடக்கும் ஊர்.
ஆடிப் பெருக்கும் படு அமர்க்களமாக இருக்கும். இனி அதெல்லாம் எந்த ஜன்மத்திலோ?

11 comments:

Ramya Ramani said...

\\இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை.\\

ஆஹா இதுவும் நீங்க உங்க மனைவிக்கு சொல்ற பதில தானோ??? Mrs.Vijay கவனிக்கவும் ;)

நீங்க சொன்ன "வானதீர்த்தம்" அதுதான் பானதீத்தமா??அம்பாசமுத்திரம் கிட்டக்க இருக்கே? நான் ஒரு தரம் வந்தேங்க ரொம்ப ப்ரசாந்தமா மனசுக்கு ஒரு அமைதி வந்தாப்ல இருக்கும் இடம்..மறுபடியும் திரும்ப எப்ப வருவோம்னு நினைக்க வைக்கும் இடம் :))

Vijay said...

\\ramya ramani said...
ஆஹா இதுவும் நீங்க உங்க மனைவிக்கு சொல்ற பதில தானோ??? Mrs.Vijay கவனிக்கவும் ;)\\
ஐயையோ என் எதிரி லிஸ்டு எகிறிக்கிட்டே போகுதே? ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி. ஆனால், பெங்களுரில் இந்த ஆடி கீடியெல்லாம் கிடையாது. எப்போதும் கடைகளில் கூட்டம் அலை மோதும் :)

முகுந்தன் said...

//ஆடி மாசத்தில் தான் நானும் அவதாரம் எடுத்தேன் என்பதால் எனக்கிது கொஞ்சம் ஸ்பெஷல் மாசம்.//

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

//சதாவோ, ஸ்நேஹாவோ ஷ்ரியாவோ இல்லை மீரா ஜாஸ்மினோ
ஏதாவதொரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.//

இது தான் ஆடிக்காலமோ என்னவோ?


//இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை.//

அம்மாவையும் வாரிட்டீங்களே ?

// இனி அதெல்லாம் எந்த ஜன்மத்திலோ?//

எனக்கு சீக்கரம் ஊருக்கு திரும்ப வேண்டும் என்றிருக்கிறது.
விரைவில் வருகிறேன்.....

Divyapriya said...

//ஆடி மாசத்தில் தான் நானும் அவதாரம் எடுத்தேன் என்பதால் எனக்கிது கொஞ்சம் ஸ்பெஷல் மாசம். //

appa romba nalla maasam thaan :))

// இனி அதெல்லாம் எந்த ஜன்மத்திலோ?//

idhu ennavo unmai thaan :(

ஜியா said...

//இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை//

ada.. athu 100% unmainga...

//இனி அதெல்லாம் எந்த ஜன்மத்திலோ?//

ithellaam overu.. bengalurula irunthukitte ippadi feel panna eppadi?? appa Naangellaam??? :(((

Divya said...

\\ஆடி மாசத்தில் தான் நானும் அவதாரம் எடுத்தேன் என்பதால் எனக்கிது கொஞ்சம் ஸ்பெஷல் மாசம். \\

bracket ல தேதியும் போட்டிருந்தா.......வாழ்த்து சொல்ல வசதியா இருந்திருக்கும்,

anyways......advance Birthday wishes Vijay!!

தாரணி பிரியா said...

இது திருமதி விஜய்க்கு,

"சரி துணி எல்லாம் வேண்டாமுன்னுட்டு ரெண்டு பவுன் நகை கேளுங்க"


இது விஜய்க்கு,

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்புறம் வீட்டுலயே எல்லா சமையலையும் செய்ய சொல்லி பெங்களூரிலேயே ஆடி பெருக்கு கொண்டாடிங்க. ஏன்னா எந்த இடத்தில கொண்டாடுறோம் அப்படின்றது முக்கியமில்லை. எவ்வளவு சந்தோஷமா கொண்டாடுறோம் அப்படின்றதுதான் முக்கியம்.

Vijay said...

\\முகுந்தன் said...
அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் \\

நன்றி நன்றி Actually Belated :)
ஆடி மாசம் ஆரம்பிச்சு 17 நாள் ஆச்சு :)

\\முகுந்தன் said...
எனக்கு சீக்கரம் ஊருக்கு திரும்ப வேண்டும் என்றிருக்கிறது.
விரைவில் வருகிறேன்.....\\
நேரா எங்க வீட்டுக்கு வாங்க :)

-----------------

\\ Divyapriya said...
appa romba nalla maasam thaan :))

idhu ennavo unmai thaan :( \\

என்ன பண்ணறது. பணம் பண்ணுவதற்கு நாம் கொடுக்கும் விலை !!

---------------------------

\\ஜி said...
ithellaam overu.. bengalurula irunthukitte ippadi feel panna eppadi?? appa Naangellaam??? :((( \\
ஜி, உங்க நிலைமை புரியுது. இருந்தாலும் ஊர்'ல ஆற்றங்கரை மணலில் சாப்பிடும் சுகம் வருமா? இங்கே ஆற்றங்கரையே 130 கி.மீ தூரம்.

------------------------------

\\Divya said...
bracket ல தேதியும் போட்டிருந்தா.......வாழ்த்து சொல்ல வசதியா இருந்திருக்கும்,

anyways......advance Birthday wishes Vijay!!\\
முகுந்தனுக்குக் கொடுத்த பதில் தான் உங்களுக்கும் :)


\\தாரணி பிரியா said...
இது திருமதி விஜய்க்கு,

"சரி துணி எல்லாம் வேண்டாமுன்னுட்டு ரெண்டு பவுன் நகை கேளுங்க"\\

"உனக்குப் புன்னகையிருக்கப் பொன் நகை எதற்கு" என்று சொல்லி டபாய்த்து விடுவேன். இந்நாள் வரை எப்படியோ ஓட்டியாச்சு :)

முகுந்தன் said...

//நேரா எங்க வீட்டுக்கு வாங்க :)//

Thank you so much.

முகுந்தன் said...

Vijay,

யானை படம் சூப்பரோ சூப்பர்

மங்களூர் சிவா said...

/
ஒரு முறை என் அப்பா, ஜவுளி கடை அதிபரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "சார், ஆடியில் எந்த வீட்டுலயும் விசேஷம் ஏதும் இருக்காது. பண்டிகையும் கிடையாது. ஸ்கூலும் திறந்துடுவாங்க. எங்க வியாபாரமெல்லாம் ரொம்பவே சுணங்கிப் போயிடும். வியாபாரத்தைப் பெருக்கத்தான் இந்த தள்ளுபடி விற்பனை அது இதுன்னு ஏதாவது ஏற்றி விட்டால், நம்மூர் பொம்பளைங்க கியூல வந்துடுவாங்க" என்று சொன்னாராம். இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை.
/

ROTFL
:)))))))))))