Pages

July 24, 2008

எங்கிருந்தாலும் வாழ்க

உன்னைப் பிரிந்த நாளன்று தானடி
உன் அருமை அறிந்தேன்
நீ இனிமேலும் என்னவள் இல்லை
என்ற உண்மை உணர்ந்தேன்

உனக்குத் தெரியுமா, நீ பிறந்த கணமே
என் மனதினுள் நுழைந்தாய்
உனை அடையவேண்டும் என்றெண்ணிய தினமே
என் மனையினுள் நுழைந்தாய்

நீ கறுத்த நிற உடையணியும்
வரை காத்திருந்தேன்
நீ கறுக்கும் வரை
பொருத்திருந்து பார்த்திருந்தேன்

தாய் மடி போக மீதி நேரமெல்லாம்
உன் மடி தானடி
ஒரு சேய் போல் எப்பொழுதும்,
என்னை நீ சுமந்தாயடி

யாரும் உன்னைத் தீண்டாதவாறு
உன்னை நான் காத்து வந்தேன்
தூசும் உன் மேல் படியாமலிருக்க
போர்வைகள் பல போர்த்தி வந்தேன்

எங்கு சென்றாலும் உன்னையும்
அழைத்துச் சென்றேன்
நேரம் தவறாமல்
சென்றது நான் சுமந்தது நீ

நான் மணக்கும் பெண் இவளென்றதும்
புன்முறுவல் புரிந்தாய்
ஏதும் சொல்லாமல் அவளையும்
சேர்த்தே சுமந்தாய்

காலங்கள் பல மாறிய போது
தேவைகள் பல கூடின
தேவைகள் பல கூடக்கூட
செலவுகள் பெருத்தன

செலவைக் குறைக்க
தேடினேன் ஒரு வழி
அதற்கு தேவையில்லாமல்
போட்டேன் உன் மீது பழி


உன் உடலிலும் வந்திருந்தன
சில சோதனைகள்
உன்னைப் பார்க்கையில்
உண்டானதுப் பல வேதனைகள்

பிரிய மனமுமில்லை
பிரியாமலிருக்க முடியவுமில்லை
மறக்க முடியவில்லை
மறந்து வாழ துணிவுமில்லை

முடிவு செய்தேன் உன்னை துறக்க
அழுதேன் ஒரு நாள் முழுவதும் உறக்க
தாரை வார்த்தேன் உன்னை இன்னொருவனுக்கு
எப்படி நான் பதிலுறைப்பேன் இறைவனுக்கு

உன் நினைவு வராமலிருக்கத்தான்
உன்னை எடுக்கலையோடி ஒரு படம்
இது கூட செய்யவில்லையே
நான் ஒரு ஜடம்

உன்னைப் பிரிந்த பொழுதே
கண்ணீர் சிந்தியது வானகம்
காதலி நீ தானடி என்
இரு சக்கர வாகனம்

இனியவளே உன் நினைவுகளில்
நான் இங்கு மூழ்க
மாற்றானோடு எப்போதும் நீ
எங்கிருந்தாலும் வாழ்க!

17 comments:

Divyapriya said...

அட, அட, அட...என்ன ஒரு பாசம்...பின்னிட்டீங்க விஜய்...கடசி வரைக்கும் யாரு அந்த அவள் ன்னு கண்டு பிடிக்கவே முடியல...சுப்பர்...

Divyapriya said...

btw, me the first commenter :-)
உங்க கதை என்ன ஆச்சு? அத பாக்க தான் வந்தேன்...

Vijay said...

\\Divyapriya said...
btw, me the first commenter :-)
உங்க கதை என்ன ஆச்சு? அத பாக்க தான் வந்தேன்...\\
கதை வெகு விரைவில் :)

முகுந்தன் said...

பின்னி பெடலெடுக்கறீங்க விஜய்..

Vijay said...

\\முகுந்தன் said...
பின்னி பெடலெடுக்கறீங்க விஜய்..\\

எல்லாம் நீங்க கொடுக்கும் தைரியம் தான். மனமார்ந்த நன்றி

Ramya Ramani said...

அட கதை தான் போட்டுடீங்களோனு வந்தா, ஒரு Sweet Surprise கல்க்கல்ஸ்:))))))

என்னோட சைக்கிள்ல எங்க அம்மா ஒரு பொண்ணுக்கு கொடுக்கறச்சே இப்படி தான் ஒரே feelings விட்டேன் :P

Vijay said...

Divya and Ramya,
கதை எழுத நிறைய யோசிக்க வேண்டியிருக்கு. நான் பைக் ஓட்டுவது போல் கனவு கண்டேன். பைக் பற்றிய நினைவுகள் வந்து ரொம்பவே பெஜார் பன்ணிடுச்சு. அதான் அதைப் பற்றி ஒரு கவிதை எழுதலாம்னு ஒரு யோசனை. இப்படி ஒரு மொக்கை கவிதை எழுதினதுக்கு நிறைய பேர் கிட்ட செருப்படி வாங்கப் போறேன்னு நினைச்சேன். பரவாயில்லையே, இது கூட உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா?

பி.கு. கதையின் அடுத்த பாகம் சீக்கிரமே வரும்.
நன்றியுடன்,
விஜய்

ஜி said...

avvvvv.... aarambikkumpothu appa-magal uravunnu nenachen... second para padicha udane illa vera yaaronnu nenachen.. paathila vandiyaathaan irukkanumnu nenachen.. athe maathiri vanthidichu... :))

kalakkal kavithai.... amaam... ithu kavithai thaane??

Ramya Ramani said...

\\ ஜி said...

kalakkal kavithai.... amaam... ithu kavithai thaane??
\\

Thala neenga solliteenga illa idhu kavuja kavuja kavuja dhan...

\\ விஜய் said...
Divya and Ramya,
கதை எழுத நிறைய யோசிக்க வேண்டியிருக்கு. நான் பைக் ஓட்டுவது போல் கனவு கண்டேன். பைக் பற்றிய நினைவுகள் வந்து ரொம்பவே பெஜார் பன்ணிடுச்சு. அதான் அதைப் பற்றி ஒரு கவிதை எழுதலாம்னு ஒரு யோசனை. இப்படி ஒரு மொக்கை கவிதை எழுதினதுக்கு நிறைய பேர் கிட்ட செருப்படி வாங்கப் போறேன்னு நினைச்சேன். பரவாயில்லையே, இது கூட உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா?
\\

Vijay nijamave nalla words ellam pottu ezhudirukeenga..manadara parattaren :))

Vijay said...

\\ ஜி said...

kalakkal kavithai.... amaam... ithu kavithai thaane??\\
திருநெல்வேலி காரர் ஒருத்தர் வருவது ரொம்ப மகிழ்ச்சி.
கவிதையா கட்டுறையான்னெல்லாம் தெரியாது. என்னுடைய பைக் மேல் நான் வைத்திருந்த காதலின் வெளிப்பாடுன்னு வேணா சொல்லலாம் :)

Vijay said...

\\ Ramya Ramani said...

Vijay nijamave nalla words ellam pottu ezhudirukeenga..manadara parattaren :))\\
Thanks Thanks Thanks.......... Thanks

தாரணி பிரியா said...

kadaiyilathan pinnaringanu patha kavithaiyilum kalakaringa. vazhthukal vijay

unga two wheeler pasam super.

Divya said...

சான்ஸே இல்லீங்க.....வார்த்தைகள் எல்லாம் சும்மா புகுந்து விளையாடுது,

ரொம்ப நல்லாயிருக்கு!

கடைசில ஏதோ பல்பு கொடுக்க போறீங்கன்னு புரிஞ்சாலும்.....கவிதை படிக்க இண்ட்ரஸ்டிங்கா இருந்தது விஜய்!!

Vijay said...

ச இந்த பாம்ப் பற்றியே இரண்டு நாளா பேசிக்கொண்டிரந்ததில் நம்மளையும் பாராட்டி நாலு பேர் எழுதினதுக்கு நன்றி கூட சொல்லலைன்னா தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது.

திவ்யா, திவ்யப்ரியா, தாரணிப்ரியா, முகுந்தன், ஜி, எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனிமேல் நிறைய கவிதையா எழுதித் தள்ளி உங்களையெல்லாம் மண்டை காய வைப்பதை விட வேறு வேலை இனிமேல் இல்லை.

Anonymous said...

நான் ரெம்ப லேட்,
அடாடா என்ன ஒரு பாசம்.
கவிதையின் பாதியில் தான் வாகனம் என்று தெரிந்தது.
எங்கண்ணன் சிறு வயதில் ஒரு சைக்கிள் வைத்திருந்தான். அதை மினுக்கிறத பாக்கிறதுக்கே நிறைய கண்ணு வேணும். நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கு போல.

நட்புடன் ஜமால் said...

ஆஹா ஆஹா.

நல்லா இருக்குங்க.

பைக்குக்கே இப்படியா - அதுவும் கனவுள வந்த பைக்.

ஹீம்ம்ம் ...

Vijay said...

\\அதிரை ஜமால் said...
பைக்குக்கே இப்படியா - அதுவும் கனவுள வந்த பைக்.\\

ஐயையோ கனவுல வந்த பைக் இல்லைங்க. நான் நிஜமாவே காசு குடுத்து வாங்கின பைக்கு.
Thanks for showing up!!